GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 2 2015 Preliminary Examination

General Studies Questions 1 to 25

1.  கீழ்க்கண்டவற்றை பொருத்துக:
தொழில்நுட்பம் அறிவியல் தத்துவம்
(a) விமானம் 1. நியூட்டனின் விதி
(b) காற்று பலூன் 2. பெர்னாலிஸ் தத்துவம்
(c) ராக்கெட் 3. வெப்ப இயக்க விதி
(d) நீராவி எந்திரம் 4. பையாண்ட் விசை
A.   1 3 2 4
B.   3 1 4 2
C.   4 2 3 1
D.   2 4 1 3
Answer: D.  2 4 1 3
2.  தண்ணீர் தானாக சிதைவு அடையும் போது கிடைப்பது
A.   H₃O⁺
B.   OH⁻
C.   H⁺
D.   H₃O⁺ மற்றும் OH⁻
Answer: D.  H₃O⁺ மற்றும் OH⁻
3.  கீழ்க்காண்பவைகளை அவற்றின் pH மதிப்புகளின் அடிப்படையில் ஏறுவரிசையில் அமைக்கவும் :
I. மனித குருதி
II. இரைப்பை அமிலம்
III. தூய நீர்
IV. பால்
A.   II, III, IV மற்றும் I
B.   II, I, III மற்றும் IV
C.   II, IV, III மற்றும் I
D.   I, III, IV மற்றும் II
Answer: C.  II, IV, III மற்றும் I
4.  தாவர மரபுத் தொழில்நுட்பவியலில் அதிக அளவில் பயன்படுத்தப்படும் பாக்டீரியம்
A.   கிளாஸ்ட்ரிடியம் செப்டிகம்
B.   சேந்தோமோனாஸ் சிட்ரை
C.   பேசில்லஸ் கோயாகுலன்ஸ்
D.   அக்ரோபாக்டீரியம் ட்யூமிபேசியன்ஸ்
Answer: D.  அக்ரோபாக்டீரியம் ட்யூமிபேசியன்ஸ்
5.  கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக:
(a) ரிபோபிளேவின் 1. வைட்டமின் பி6
(b) தையமின் 2. வைட்டமின் பி2
(c) பெரிடாக்ஸின் 3. வைட்டமின் பி12
(d) சயனோகோபாலமைன் 4. வைட்டமின் பி1
A.   2 4 3 1
B.   2 3 4 1
C.   2 4 1 3
D.   1 3 4 2
Answer: C.  2 4 1 3
6.  காற்றுள்ள மற்றும் காற்றில்லா சுவாசம் இரண்டிற்கும் பொதுவான வினைகள் யாவை?
A.   கிளைக்காலிஸிஸ்
B.   கிரெப்ஸ் சுழற்சி
C.   ஆல்கஹால் உருவாதல்
D.   லாக்டிக் அமிலம் உருவாதல்
Answer: A.  கிளைக்காலிஸிஸ்
7.  பினியல் உறுப்பு சுரக்கும் ஹார்மோனின் பெயர்
A.   மெலடோனின்
B.   தைமோசின்
C.   ரிலாக்ஸின்
D.   தைரோடிராபின்
Answer: A.  மெலடோனின்
8.  எந்த மாநிலம் ஏழை எளிய மக்களுக்கு ஆகர் என்னும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது?
A.   ராஜஸ்தான்
B.   ஒடிசா
C.   பிகார்
D.   ஜார்க்கண்ட்
Answer: B.  ஒடிசா
9.  19 மே 2015 அன்று கொல்கத்தாவில் இயக்கப்பட்ட எதிர்ப்பு நீர்மூழ்கி போர் கப்பலின் பெயர் என்ன?
A.   ஐ.என்.எஸ். — ராஜாலி
B.   ஐ.என்.எஸ். — கவராட்டி
C.   ஐ.என்.எஸ். — விக்ராந்த்
D.   ஐ.என்.எஸ். — கருடா
Answer: B.  ஐ.என்.எஸ். — கவராட்டி
10.  2018-ல் நடைபெறும் சர்வதேச தகவல் தொழில்நுட்ப மாநாடு நடைபெற உள்ள இந்திய நகரம்
A.   டெல்லி
B.   சென்னை
C.   ஹைதராபாத்
D.   கொச்சி
Answer: C.  ஹைதராபாத்
11.  அக்ரமான்-II என்ற ஒத்திகையை இந்திய ராணுவம் நிகழ்த்திய மாநிலம்
A.   கோவா
B.   ஒடிசா
C.   காஷ்மீர்
D.   ராஜஸ்தான்
Answer: D.  ராஜஸ்தான்
12.  ஜனவரி 10, 2015 விக்ரம் சாராபாய் நினைவு விருது ___________ க்கு வழங்கப்பட்டது.
A.   M.Y.S. பிரசாத்
B.   சைனா நேக்வால்
C.   டெண்டுல்கர்
D.   தோனி
Answer: A.  M.Y.S. பிரசாத்
13.  யோகா விரைவு வண்டி என பெயர் மாற்றம் செய்யப்பட்ட ரயில்
A.   காவேரி விரைவு வண்டி
B.   வாரணாசி விரைவு வண்டி
C.   ஹரிதுவார் விரைவு வண்டி
D.   ஜென்மபூமி விரைவு வண்டி
Answer: C.  ஹரிதுவார் விரைவு வண்டி
14.  நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்துக்கு இந்தியா செய்யும் துயர்துடைப்பு மற்றும் மீட்பு பணி எவ்வாறு அழைக்கப்படுகிறது?
A.   ஆப்ரேஷன் புளூஸ்டார்
B.   ஆப்ரேஷன் விராத்
C.   ஆப்ரேஷன் வுட்ரோஸ்
D.   ஆப்ரேஷன் மைத்ரி
Answer: D.  ஆப்ரேஷன் மைத்ரி
15.  மதன் மோகன் மாளவியா தேசிய திட்டத்தின் நோக்கம் எதை சார்ந்தது?
A.   காவல்துறை மற்றும் காவலர்கள்
B.   ஆசிரியர் மற்றும் பாடம் நடத்துதல்
C.   மாணவர் மற்றும் பெற்றோர்
D.   இராணுவம் மற்றும் தேசம்
Answer: B.  ஆசிரியர் மற்றும் பாடம் நடத்துதல்
16.  பெண் குழந்தைகளுக்கான புதிய சேமிப்பு திட்டத்தின் சரியான பெயரை கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றிலிருந்து தேர்வு செய் :
A.   சுரக்ஷா சம்ரித்தி திட்டம்
B.   சுகன்யா சம்ரித்தி திட்டம்
C.   சுகன்யா பீமா திட்டம்
D.   சுரக்ஷா பீமா திட்டம்
Answer: B.  சுகன்யா சம்ரித்தி திட்டம்
17.  சர்ச்சைக்குரிய மேகி நூடுல்ஸ் தயாரிப்பில் கலந்துள்ளதாகக் கூறப்படும் உலோகம்
A.   அலுமினியம்
B.   இரும்பு
C.   ஈயம்
D.   பொட்டாசியம்
Answer: C.  ஈயம்
18.  கீழ்க்காணும் இமயமலைச் சிகரங்களை உயரத்தின் அடிப்படையில் இறங்கு வரிசைப்படுத்துக :
I. எவரெஸ்ட்
II. நந்தா தேவி
III. தௌலகிரி
IV. நங்கா பர்பத்
A.   I, II, IV, III
B.   I, III, IV, II
C.   I, IV, III, II
D.   IV, I, II, III
Answer: B.  I, III, IV, II
19.  கீழே கொடுக்கப்பட்டுள்ள புரட்சிகளை தொடர்புடைய புலங்களோடு பொருத்துக:
புரட்சி புலம்
(a) வெள்ளி 1. எண்ணெய் வித்துக்கள்
(b) இளஞ்சிவப்பு 2. உரம்
(c) மஞ்சள் 3. முட்டை
(d) சாம்பல் 4. இறால்
A.   4 3 2 1
B.   3 4 1 2
C.   1 2 4 3
D.   3 1 2 4
Answer: B.  3 4 1 2
20.  இம்மாநிலங்களை தனியாக பிரிப்பதற்கு முன்பு, அவை எம்மாநிலத்துடன் இணைந்திருந்தது என்பதை அடையாளம் கண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு :
A — B
(a) ஹரியானா — i. உத்திர பிரதேசம்
(b) ஜார்கண்ட் — ii. மத்திய பிரதேசம்
(c) உத்தராஞ்சல் — iii. பஞ்சாப்
(d) சட்டீஸ்கர் — iv. பீகார்
A.   iv iii i ii
B.   iii ii i iv
C.   iii iv i ii
D.   i iii ii iv
Answer: C.  iii iv i ii
21.  சம்ஜௌதா விரைவு இரயில் போக்குவரத்து இந்தியா பாகிஸ்தான் இடையே ஓடுகிறது. இருநாட்டிலும் அதன் இலக்கை அடையாளம் காட்டுக.
A.   இந்தியாவின் அட்டாரியில் இருந்து பாகிஸ்தானில் லாகூர் வரை
B.   இந்தியாவின் குர்தாஸ்பூரில் இருந்து பாகிஸ்தானில் கராச்சி வரை
C.   இந்தியாவின் பிரோஸ்பூரில் இருந்து பாகிஸ்தானில் லாகூர் வரை
D.   இந்தியாவின் டெல்லியில் இருந்து பாகிஸ்தானில் லாகூர் வரை
Answer: A.  இந்தியாவின் அட்டாரியில் இருந்து பாகிஸ்தானில் லாகூர் வரை
22.  இந்தியாவின் முதல் இயற்கணித மேதை யார்?
A.   வராகமிஹிரா
B.   பிரம்மகுப்தா
C.   ஆரியபட்டா
D.   பாஸ்கரா
Answer: C.  ஆரியபட்டா
23.  'நாட்டிய சாஸ்திரம்' எழுதிய ஆசிரியர் யார்?
A.   சச்சின் சங்கர்
B.   அஸ்வகோஷர்
C.   பாரதமுனி
D.   காளிதாசன்
Answer: C.  பாரதமுனி
24.  எத்தனை வருடங்களுக்கு ஒரு முறை தேசிய கல்வி ஆணையம் ஏற்படுத்தப்பட வேண்டும் என பழங்குடி இன மக்களுக்கான தேசிய ஆணையம் பரிந்துரை செய்துள்ளது?
A.   வருடம் ஒரு முறை
B.   மூன்று வருடங்களுக்கு ஒரு முறை
C.   இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை
D.   ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை
Answer: D.  ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை
25.  முதலில் பாரத ரத்னா விருதினைப் பெற்றவர் யார்?
A.   டாக்டர் எஸ். இராதாகிருஷ்ணன்
B.   ஸ்ரீ. ராஜகோபாலாச்சாரி
C.   பண்டிட் ஜவஹர்லால் நேரு
D.   டாக்டர். இராஜேந்திர பிரசாத்
Answer: B.  ஸ்ரீ. ராஜகோபாலாச்சாரி
;