TNPSC Group 2 2015 Preliminary Examination
General Tamil Questions 51 to 75
51.
பொருட்டன்று — பிரித்து எழுதுக. உரிய விடையைக் குறிப்பிடுக
Answer:
C.
பொருட்டு + அன்று
52.
பொருத்துக:
| (a) ஆய்தக் குறுக்கம் | 1. வௌவால் |
| (b) ஐகாரக் குறுக்கம் | 2. மருண்ம் |
| (c) ஔகாரக் குறுக்கம் | 3. கஃறீது |
| (d) மகரக் குறுக்கம் | 4. கடலை |
Answer:
D.
3 4 1 2
53.
அகரவரிசைப்படி அமைந்துள்ளதைக் கண்டறிக.
Answer:
B.
மனத்துயர், மீமிசை, முந்நீர், மேடு பள்ளம், மொழிபெயர்ப்பு
54.
பின்வருவனவற்றைப் பொருத்துக:
| (a) விரிநகர் | 1. பண்புத்தொகை |
| (b) மலரடி | 2. வினைத்தொகை |
| (c) மா பலா வாழை | 3. உவமைத்தொகை |
| (d) முதுமரம் | 4. உம்மைத்தொகை |
Answer:
B.
2 3 4 1
55.
பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தெரிவு செய்க
| பட்டியல் ஒன்று | பட்டியல் இரண்டு |
|---|---|
| (a) மூன்று காலங்களில் ஒன்றனை உணர்த்துவது | 1. பெயரெச்சம் |
| (b) முக்காலத்தையும் உணர்த்துவது | 2. வினைமுற்று |
| (c) படித்தல், கற்பித்தல், எழுதுதல் | 3. வினையெச்சம் |
| (d) முற்றுப்பெறாத வினைச்சொல் பெயரில் முடிவது | 4. தொழிற்பெயர் |
Answer:
C.
2 3 4 1
56.
பொருந்தாத இணையினைக் கண்டறிக
திணை - தொழில்
திணை - தொழில்
Answer:
D.
மருதம் - மீன்பிடித்தல், உப்பு விற்றல்
57.
அகரவரிசைப்படி சரியாக அமைந்த சொல்வரிசையைக் குறிப்பிடுக
Answer:
C.
கண், கண்டம், கண்டு, கண்ணி
58.
'அப்பிசி மாசம் அடமள இம்பாங்க' -இத்தொடரின் பிழைநீங்கிய வடிவம்
Answer:
D.
ஐப்பசி மாதம் அடைமழை என்பார்கள்
59.
கீழே தரப்பெறுவனவற்றுள் சரியானவை எவை?
I. நான், யான் என்பவை தன்மை ஒருமைப் பெயர்கள்
II. நாம், யாம் என்பவை தன்மைப் பன்மைப் பெயர்கள்
III. வேற்றுமை உருபேற்கும் போது, 'யான்' என்பது 'என்' என்றும், 'யாம்' என்பது 'எம்' என்றும், 'நாம்' என்பது 'நம்' என்றும் திரியும்
IV. நீ, நீர், நீவிர், நீயிர், நீங்கள் என்பன முன்னிலை ஒருமைப் பெயர் ஆகும்

I, II, III
60.
'கூவா முன்னம் இளையோன் குறுகிநீ' கொடுக்கப்பட்டுள்ள செய்யுளில் அடிக்கோடிட்ட சொற்களுக்கு பொருத்தமான இலக்கணக் குறிப்பைக் கண்டறிக
Answer:
C.
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம், வினையெச்சம்
61.
பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க:
| பட்டியல் ஒன்று | பட்டியல் இரண்டு |
|---|---|
| (a) வாலை | 1. தயிர் |
| (b) உளை | 2. சுரபுன்னை மரம் |
| (c) விளை | 3. இளம்பெண் |
| (d) வழை | 4. பிடரிமயிர் |
Answer:
D.
3 4 1 2
62.
'இன்மையுள் இன்மை விருந்தொரால்' - இதில் விருந்து என்பதன் இலக்கணக் குறிப்பு தருக
Answer:
C.
பண்பாகு பெயர்
63.
'காந்தியடிகளால் தத்தெடுக்கப்பட்ட மகள்' என்று அழைக்கப்பட்டவர் யார்?
Answer:
A.
அம்புஜத்தம்மாள்
64.
கீழே காணப்பெறுவனவற்றுள் பொருத்தமற்ற கூற்றைத் தெரிவு செய்க:
Answer:
D.
நாட்டு வளம், செல்வ வளம், செங்கோல் மாண்பு உரைக்கும் அரசு ஆவணமாக, 'காவடிச் சிந்து' திகழ்கிறது
65.
பொருத்துக:
| நூல் | ஆசிரியர் |
|---|---|
| (a) பாண்டியன் பரிசு | 1. பாரதியார் |
| (b) குயில் பாட்டு | 2. நாமக்கல் கவிஞர் |
| (c) ஆசிய ஜோதி | 3. பாரதிதாசன் |
| (d) சங்கொலி | 4. கவிமணி |
Answer:
C.
3 1 4 2
66.
'தொண்டர்சீர் பரவுவார்' என்று போற்றப்படுபவர்
Answer:
C.
சேக்கிழார்
67.
எட்டுத்தொகை நூல்களுள் அகப் புறப்பாடல்களைக் கொண்ட நூல் எது?
Answer:
B.
பரிபாடல்
68.
'முத்தொள்ளாயிரம்' பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
I. மூன்று + தொள்ளாயிரம் = முத்தொள்ளாயிரம். சேர, சோழ, பாண்டிய வேந்தர்களைப் பற்றிய மூன்று தொள்ளாயிரம் பாடல்கள் அடங்கிய தொகுப்பு நூல் 'முத்தொள்ளாயிரம்'
II. முத்தொள்ளாயிரத்தில் இரண்டாயிரத்து எழுநூறு பாடல்கள் உள்ளன
III. முத்தொள்ளாயிரத்தின் ஆசிரியர் புகழேந்திப் புலவர்
IV. சேர, சோழ, பாண்டியரின் ஆட்சிச் சிறப்பு, வீரம், நாட்டு வளம் பற்றிப் பாடிய பாடல் தொகுப்பே முத்தொள்ளாயிரம்

I, IV சரியானவை
69.
திருக்கோட்டியூர் நம்பியால் 'எம்பெருமானார்' என்று அழைக்கப்பட்டவர் யார்?
Answer:
C.
இராமாநுசர்
70.
மூன்றடிச் சிறுமையும் ஆறடிப்பெருமையும் கொண்ட சங்க அகநூல்
Answer:
C.
ஐங்குறுநூறு
71.
நந்திக் கலம்பகத்தின் ஆசிரியர் பெயர்
Answer:
D.
பெயர் தெரியவில்லை
72.
பட்டியல் I உடன் பட்டியல் II-ஐப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து உரிய விடையினைத் தேர்ந்து எழுதுக.
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) கொண்டல் | 1. மாலை |
| (b) தாமம் | 2. வளம் |
| (c) புரிசை | 3. மேகம் |
| (d) மல்லல் | 4. மதில் |
Answer:
A.
3 1 4 2
73.
'முக்கூடற்பள்ளு' பற்றிய கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?
I. முக்கூடலில் வாழும் பள்ளி மூத்த மனைவி, மருதூர்ப் பள்ளி 'இளைய மனைவி' என்று இருவரை மணந்து திண்டாடும் பள்ளன் வாழ்க்கை பற்றிய நூல் முக்கூடற்பள்ளு
II. முக்கூடற்பள்ளு நூலில் தஞ்சை மாவட்ட பேச்சு வழக்கைக் காணலாம்
III. முக்கூடற்பள்ளுவின் ஆசிரியர் எவர் எனத் தெரிந்திலது
IV. பள்ளமான நீர் நிறைந்த சேற்று நிலத்தில் (நன்செய் நிலத்தில்) உழவுத்தொழில் செய்து வாழும் பாமரர்களாகிய பள்ளர்களின் வாழ்க்கையைச் சித்திரிக்கும் நூல், 'சதகம்'

I மற்றும் III
74.
'விற்பெருந் தடந்தோள் வீர!"
இப்பாடலடி யாரைக் குறிக்கிறது?
இப்பாடலடி யாரைக் குறிக்கிறது?
Answer:
B.
இராமன்
75.
திருவேங்கடத்தந்தாதி என்னும் நூலை இயற்றியவர்
Answer:
C.
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்