GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 1 to 25

1.  எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக:
பட்டியல் ஒன்று பட்டியல் இரண்டு
(a) ஓரம் 1. வறுமை
(b) வேற்றுமை 2. தீது
(c) நன்று 3. மையம்
(d) செழுமை 4. ஒற்றுமை
Answer: D.   3 4 2 1
2.  பிரித்தெழுதுக.
நாத்தொலையவில்லை
Answer: D.   நா + தொலைவு + இல்லை
3.  நோக்கினான் - வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க.
Answer: D.   நோக்கு
4.  பொருந்தா இணையைக் கண்டறிக:
Answer: B.   இரைதேர்தல் – வினைத்தொகை
5.  பெறு – இச்சொல்லுக்கான வினைமுற்றைத் தேர்ந்தெடு:
Answer: A.   பெற்றான்
6.  கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக:
Answer: D.   கலம்பகம், குறிஞ்சி, குறுநகை, தோற்றம்
7.  பட்டியல் I ல் உள்ள தொடர்களைப் பட்டியல் II இல் உள்ள தொடர் வகைகளோடு பொருத்தி, உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
பட்டியல் I பட்டியல் II
(a) என்னே, மயிலின் அழகு! 1. எதிர்மறைத் தொடர்
(b) கண்ணன் பாடம் படித்திலன் 2. உணர்ச்சித் தொடர்
(c) மணிமொழி பரிசு பெற்றாள் 3. கட்டளைத் தொடர்.
(d) உழைத்துப்பழை 4. உடன்பாட்டுத் தொடர்
Answer: C.   2 1 4 3
8.  பட்டியல் I இல் உள்ள சொல்லை, பட்டியல் II இல் உள்ள பொருளுடன் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு.
பட்டியல் I பட்டியல் II
சொல் பொருள்
(a) தேநீர் 1. மூன்று நாள்
(b) மூந்நாள் 2. தேன்போலும் இனிய நீர்
(c) சேணீர் 3. முந்தைய நாள்
(d) முன்னாள் 4. தேயிலை நீர்
Answer: B.   4 1 2 3
9.  சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்கி, சரியான தொடரைக் குறிப்பிடுக.
Answer: B.   பேகன் கொடைமடம் படுதல் அல்லது படைமடம் படான்
10.  விடை தேர்க :
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்.
– இக்குறட்பாவில் பயின்றுவரும் அணி
Answer: D.   சொற் பின்வருநிலையணி
11.  தவறான மரபுச் சொல்லைத் தேர்க
Answer: D.   முருங்கைப் பிஞ்சு – முருங்கை மொட்டு
12.  'கொள்' என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்று
Answer: A.   கொண்டான்
13.  பொருந்தாத சொல்லைக் கண்டறிக.
Answer: C.   ஆழி
14.  பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
பட்டியல் ஒன்று பட்டியல் இரண்டு
(a) கனகம் 1. மோதிரம்
(b) மேழி 2. ஆடை
(c) கலிங்கம் 3. பொன்
(d) ஆழி 4. கலப்பை
Answer: D.   3 4 2 1
15.  கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக.
Answer: D.   பாண்டியன் நெடுஞ்செழியன், கபிலர்
16.  பின்வருவனவற்றுள் தவறான இணையைச் சுட்டுக.
Answer: B.   திண்ணிது × வலிது
17.  திருக்குறள் – பொருட்பாலின் இயல்கள்
Answer: B.   அரசியல், அங்கவியல், ஒழிபியல்
18.  நடுவண் அரசு பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்ட ஆண்டு
Answer: D.   1978
19.  குறுந்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர்
Answer: A.   பாரதம் பாடிய பெருந்தேவனார்
20.  'நாரதர் வருகிறார்' என்ற தொடர் என்ன ஆகுபெயர்?
Answer: D.   உவமையாகு பெயர்
21.  'தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்' என்று பாராட்டப்படுபவர்
Answer: D.   வாணிதாசன்
22.  அதியமான் நெடுமானஞ்சியின் அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர்
Answer: B.   ஔவையார்
23.  கீழே தரப்பெறுவனவற்றுள் எவை சரியற்றவை?
I. குறுந்தொகைச் செய்யுட்கள் குறைந்த அளவாக மூன்று அடிகளையும், அதிக அளவாக ஏழு அடிகளையும் கொண்டு இருக்கின்றன
II. குறுந்தொகைச் செய்யுட்களைத் தொகுத்தவர் பூரிக்கோ
III. குறுந்தொகைக்கு நக்கீர தேவநாயனார் கடவுள் வாழ்த்துச் செய்யுளைப் பாடியுள்ளார்
IV. குறுந்தொகையில் கடவுள் வாழ்த்துடன் நானூற்றொரு பாடல்கள் உள்ளன
Answer: C.   I, III சரியற்றவை
24.  'புலவரேறு' என்று சிறப்பிக்கப் பெற்றவர்
Answer: C.   வரத நஞ்சையப் பிள்ளை
25.  'தோடுடைய செவியன், விடைமுண்ட கண்டன்' என்ற தொடரால் குறிக்கப்படுபவர்
Answer: A.   உமையொரு பாகனாம் சிவபெருமான்
;