TNPSC Group 2 2016 Preliminary Examination
General Tamil Questions 1 to 25
1.
எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக:
| பட்டியல் ஒன்று | பட்டியல் இரண்டு |
|---|---|
| (a) ஓரம் | 1. வறுமை |
| (b) வேற்றுமை | 2. தீது |
| (c) நன்று | 3. மையம் |
| (d) செழுமை | 4. ஒற்றுமை |
A.
4 3 1 2
B.
2 3 1 4
C.
3 2 1 4
D.
3 4 2 1
Answer:
D.
3 4 2 1
2.
பிரித்தெழுதுக.
நாத்தொலையவில்லை
நாத்தொலையவில்லை
A.
நா + தொலையவில்லை
B.
நாத்தொலைவு + இல்லை
C.
நா + தொலை + இல்லை
D.
நா + தொலைவு + இல்லை
Answer:
D.
நா + தொலைவு + இல்லை
3.
நோக்கினான் - வேர்ச்சொல்லைத் தேர்வு செய்க.
A.
நோக்குதல்
B.
நோக்கி
C.
நோக்கியவன்
D.
நோக்கு
Answer:
D.
நோக்கு
4.
பொருந்தா இணையைக் கண்டறிக :
A.
வெண்மதிர் – பண்புத்தொகை
B.
இரைதேர்தல் – வினைத்தொகை
C.
நாழிகைவாரம் – உம்மைக் தொகை
D.
கயிலாய வெற்பு – இருபெயரொட்டுப் பண்புத்தொகை
Answer:
B.
இரைதேர்தல் – வினைத்தொகை
5.
பெறு – இச்சொல்லுக்கான வினைமுற்றைத் தேர்ந்தெடு :
A.
பெற்றான்
B.
பெற்றவன்
C.
பெற்று
D.
பெற்றவர்
Answer:
A.
பெற்றான்
6.
கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக :
A.
கேணி, குளம், குட்டை, ஏரி, ஊருணி, பொய்கை, தடாகம்
B.
செந்தமிழ், பைந்தமிழ், வண்டமிழ், முத்தமிழ், அமுதத்தமிழ்
C.
ஞாலம், வையம், அவனி, உலகு, தரணி
D.
கலம்பகம், குறிஞ்சி, குறுநகை, தோற்றம்
Answer:
D.
கலம்பகம், குறிஞ்சி, குறுநகை, தோற்றம்
7.
பட்டியல் I ல் உள்ள தொடர்களைப் பட்டியல் II இல் உள்ள தொடர் வகைகளோடு பொருத்தி, உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| (a) என்னே, மயிலின் அழகு! | 1. எதிர்மறைத் தொடர் |
| (b) கண்ணன் பாடம் படித்திலன் | 2. உணர்ச்சித் தொடர் |
| (c) மணிமொழி பரிசு பெற்றாள் | 3. கட்டளைத் தொடர். |
| (d) உழைத்துப்பழை | 4. உடன்பாட்டுத் தொடர் |
A.
3 4 2 1
B.
3 4 1 2
C.
2 1 4 3
D.
2 3 1 4
Answer:
C.
2 1 4 3
8.
பட்டியல் I இல் உள்ள சொல்லை, பட்டியல் II இல் உள்ள பொருளுடன் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடு.
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| சொல் | பொருள் |
| (a) தேநீர் | 1. மூன்று நாள் |
| (b) மூந்நாள் | 2. தேன்போலும் இனிய நீர் |
| (c) சேணீர் | 3. முந்தைய நாள் |
| (d) முன்னாள் | 4. தேயிலை நீர் |
A.
4 3 2 1
B.
4 1 2 3
C.
2 3 4 1
D.
3 4 1 2
Answer:
B.
4 1 2 3
9.
சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்கி, சரியான தொடரைக் குறிப்பிடுக.
A.
படைமடம் பேகன் படான் கொடைமடம் படுதல் அல்லது
B.
பேகன் கொடைமடம் படுதல் அல்லது படைமடம் படான்
C.
பேகன் படைமடம் படுதல் அல்லது கொடைமடம் படான்
D.
கொடைமடம் பேகன் படுதல் அல்லது படைமடம் படான்
Answer:
B.
பேகன் கொடைமடம் படுதல் அல்லது படைமடம் படான்
10.
விடை தேர்க :
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்.
– இக்குறட்பாவில் பயின்றுவரும் அணி
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்ல தில்லை பொருள்.
– இக்குறட்பாவில் பயின்றுவரும் அணி
A.
சொற்பொருள் பின்வருநிலையணி
B.
பொருள் பின்வருநிலையணி
C.
உவமையணி
D.
சொற் பின்வருநிலையணி
Answer:
D.
சொற் பின்வருநிலையணி
11.
தவறான மரபுச் சொல்லைத் தேர்க
A.
மாம் பிஞ்சு – மாவடு
B.
இளந் தேங்காய் – வழுக்கை
C.
வாழைப் பிஞ்சு – வாழைக்கச்சல்
D.
முருங்கைப் பிஞ்சு – முருங்கை மொட்டு
Answer:
D.
முருங்கைப் பிஞ்சு – முருங்கை மொட்டு
12.
'கொள்' என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்று
A.
கொண்டான்
B.
கொள்க
C.
கொண்ட
D.
கொண்டு
Answer:
A.
கொண்டான்
13.
பொருந்தாத சொல்லைக் கண்டறிக.
A.
கப்பல்
B.
அம்பி
C.
ஆழி
D.
திமில்
Answer:
C.
ஆழி
14.
பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
| பட்டியல் ஒன்று | பட்டியல் இரண்டு |
|---|---|
| (a) கனகம் | 1. மோதிரம் |
| (b) மேழி | 2. ஆடை |
| (c) கலிங்கம் | 3. பொன் |
| (d) ஆழி | 4. கலப்பை |
A.
2 4 3 1
B.
1 3 2 4
C.
3 2 4 1
D.
3 4 2 1
Answer:
D.
3 4 2 1
15.
கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக.
A.
சிலப்பதிகாரம், மணிமேகலை
B.
இன்னா நாற்பது, இனியவை நாற்பது
C.
இராமாயணம், மகாபாரதம்
D.
பாண்டியன் நெடுஞ்செழியன், கபிலர்
Answer:
D.
பாண்டியன் நெடுஞ்செழியன், கபிலர்
16.
பின்வருவனவற்றுள் தவறான இணையைச் சுட்டுக.
A.
சிறிது × பெரிது
B.
திண்ணிது × வலிது
C.
உயர்வு × தாழ்வு
D.
நன்று × தீது
Answer:
B.
திண்ணிது × வலிது
17.
திருக்குறள் – பொருட்பாலின் இயல்கள்
A.
பாயிரவியல், துறவறவியல், ஒழிபியல்
B.
அரசியல், அங்கவியல், ஒழிபியல்
C.
அரசியல், இல்லறவியல், களவியல்
D.
பாயிரவியல், அங்கவியல், கற்பியல்
Answer:
B.
அரசியல், அங்கவியல், ஒழிபியல்
18.
நடுவண் அரசு பெரியாரின் உருவம் பொறித்த அஞ்சல் தலையை வெளியிட்ட ஆண்டு
A.
1968
B.
1988
C.
1958
D.
1978
Answer:
D.
1978
19.
குறுந்தொகையின் கடவுள் வாழ்த்துப் பாடலைப் பாடியவர்
A.
பாரதம் பாடிய பெருந்தேவனார்
B.
பெருங்குன்றூர்க் கிழார்
C.
பொருந்தில் இளங்கீரனார்
D.
காக்கைப் பாடினியார்
Answer:
A.
பாரதம் பாடிய பெருந்தேவனார்
20.
'நாரதர் வருகிறார்' என்ற தொடர் என்ன ஆகுபெயர்?
A.
காரியவாகு பெயர்
B.
கருத்தாவாகு பெயர்
C.
கருவியாகு பெயர்
D.
உவமையாகு பெயர்
Answer:
D.
உவமையாகு பெயர்
21.
'தமிழகத்தின் வேர்ட்ஸ்வொர்த்' என்று பாராட்டப்படுபவர்
A.
சுரதா
B.
சிற்பி
C.
பாரதிதாசன்
D.
வாணிதாசன்
Answer:
D.
வாணிதாசன்
22.
அதியமான் நெடுமானஞ்சியின் அவைக்களப் புலவராகத் திகழ்ந்தவர்
A.
வெள்ளிவீதியார்
B.
ஔவையார்
C.
காக்கைப் பாடினியார்
D.
நக்கண்ணையார்
Answer:
B.
ஔவையார்
23.
கீழே தரப்பெறுவனவற்றுள் எவை சரியற்றவை?
I. குறுந்தொகைச் செய்யுட்கள் குறைந்த அளவாக மூன்று அடிகளையும், அதிக அளவாக ஏழு அடிகளையும் கொண்டு இருக்கின்றன
II. குறுந்தொகைச் செய்யுட்களைத் தொகுத்தவர் பூரிக்கோ
III. குறுந்தொகைக்கு நக்கீர தேவநாயனார் கடவுள் வாழ்த்துச் செய்யுளைப் பாடியுள்ளார்
IV. குறுந்தொகையில் கடவுள் வாழ்த்துடன் நானூற்றொரு பாடல்கள் உள்ளன
I. குறுந்தொகைச் செய்யுட்கள் குறைந்த அளவாக மூன்று அடிகளையும், அதிக அளவாக ஏழு அடிகளையும் கொண்டு இருக்கின்றன
II. குறுந்தொகைச் செய்யுட்களைத் தொகுத்தவர் பூரிக்கோ
III. குறுந்தொகைக்கு நக்கீர தேவநாயனார் கடவுள் வாழ்த்துச் செய்யுளைப் பாடியுள்ளார்
IV. குறுந்தொகையில் கடவுள் வாழ்த்துடன் நானூற்றொரு பாடல்கள் உள்ளன
A.
II, III சரியற்றவை
B.
I, IV சரியற்றவை
C.
I, III சரியற்றவை
D.
III, IV சரியற்றவை
Answer:
C.
I, III சரியற்றவை
24.
'புலவரேறு' என்று சிறப்பிக்கப் பெற்றவர்
A.
நக்கண்ணையார்
B.
நாமக்கல் கவிஞர்
C.
வரத நஞ்சையப் பிள்ளை
D.
கபிலர்
Answer:
C.
வரத நஞ்சையப் பிள்ளை
25.
'தோடுடைய செவியன், விடைமுண்ட கண்டன்' என்ற தொடரால் குறிக்கப்படுபவர்
A.
உமையொரு பாகனாம் சிவபெருமான்
B.
குழலூதும் கோவிந்தனாம் கண்ணன்
C.
மராமரம் ஏழினைத் துளைத்த இராமன்
D.
மாமரம் தடிந்த தணிகை வேலன்
Answer:
A.
உமையொரு பாகனாம் சிவபெருமான்