GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 2 2016 Preliminary Examination

General Tamil Questions 26 to 50

1.  கீழ்க்காணும் கூற்றுகளில் எவை சரியானவை?
I. பழந்தமிழரது போர் வாழ்வு, மன்னர்களின் அறச்செயல், வீரம், கொடை, ஆட்சிச் சிறப்பு, கல்விப்பெருமை, புலவரது பெருமிதம், மக்களின் நாகரிகம், பண்பாடு பற்றியறியப் புறநானூற்றுச் செய்யுட்கள் உதவுகின்றன
II. புற வாழ்வு பற்றிய நானூறு செய்யுட்களின் தொகுப்பு, புறநானூறு
III. புறநானூற்றில் அதிக செய்யுட்களைப் பாடியவர் ஔவையார்
IV. அறியாது முரசு கட்டிலில் தூங்கிய பெண்ணைக் கொன்றமையால் 'பெண் கொலை புரிந்த மன்னன்' என்று தூற்றப்படும் செய்தி சொல்லப்பட்டுள்ளது
A.   I, III, IV சரியானவை
B.   I, II, IV சரியானவை
C.   I, II, III சரியானவை
D.   IV, III, II சரியானவை
Answer: C.  I, II, III சரியானவை
2.  நூல்களை நூலாசிரியர் பெயர்களோடு பொருத்தி, உரிய விடையைத் தேர்ந்தெடுக்க
(a) பெருமாள் திருமொழி 1. காரைக்கால் அம்மையார்
(b) திருத்தொண்டத் தொகை 2. ஆண்டாள்
(c) அற்புதத் திருவந்தாதி 3. சுந்தரர்
(d) நாச்சியார் திருமொழி 4. குலசேகர ஆழ்வார்
A.   4 2 3 1
B.   3 4 1 2
C.   2 1 4 3
D.   4 3 1 2
Answer: D.  4 3 1 2
3.  கீழ்க்காணும் நூல்களுள் இலக்கண நூல் அல்லாதது
A.   தொல்காப்பியம்
B.   தேம்பாவணி
C.   தண்டியலங்காரம்
D.   வீரசோழியம்
Answer: B.  தேம்பாவணி
4.  கீழ்க்காணும் கூற்றுகளில் பொருத்தமற்றதைத் தேர்வு செய்க
A.   ஏறத்தாழ நானூறு ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தின் காடு, மலைகளில் வாழ்ந்தவர்கள் சித்தர்கள்
B.   பாம்பாட்டிச் சித்தர், குதம்பைச் சித்தர் அழுகுணிச் சித்தர் என்பன எல்லாமே காரணப் பெயர்கள்
C.   எளிய சொற்களில் அறிவுரைகளைக் கூறியவர்கள் சித்தர்கள்
D.   இரும்பைப் பொன்னாக்கும் இரசவாத வித்தை கற்று உலகில் செல்வராக வாழச் சித்தர்கள் அவாவினர்
Answer: D.  இரும்பைப் பொன்னாக்கும் இரசவாத வித்தை கற்று உலகில் செல்வராக வாழச் சித்தர்கள் அவாவினர்
5.  “கீழ்ப்பால் ஒருவன் கற்பின்
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே”
கற்றவர்களின் சிறப்பைப் போற்றும் இவ்வடிகள் இடம்பெறும் நூல்
A.   அகநானூறு
B.   புறநானூறு
C.   நற்றிணை
D.   கலித்தொகை
Answer: B.  புறநானூறு
6.  கீழ்க்காணும் கருத்துகளில் தவறானதைச் சுட்டிக் காட்டவும்
A.   தில்லிப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகச் சாலை இளந்திரையனும், தில்லி கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகச் சாலினி இளந்திரையனும் பணியாற்றியவர்கள்
B.   நெல்லை மாவட்டம், சாலை நயினார் பள்ளிவாசலில் பிறந்த நசிருதீன் பின்னாளில் சாலை இளந்திரையன் என்று அறியப்பட்டார்.
C.   மானுடம் பூத்தது, நெஞ்சோடு நெஞ்சம், விட்ட குறை தொட்ட குறை, செயல் மணக்கும் தோள்கள், தாய் எழில் தமிழ், உரை வீச்சு, தமிழனின் ஒரே கவிஞன் முதலியன சாலை இளந்திரையனின் நூல்களாகும்
D.   கருத்துக்குப் பெரியாரையும், கவிதைக்குப் புரட்சிக் கவிஞரையும் வழிகாட்டியாகக் கொண்ட சாலை இளந்திரையன் எழுச்சிச் சான்றோர், திருப்புமுனைச் சிந்தனையாளர் ஆகிய சிறப்புகளைப் பெற்றவர்
Answer: B.  நெல்லை மாவட்டம், சாலை நயினார் பள்ளிவாசலில் பிறந்த நசிருதீன் பின்னாளில் சாலை இளந்திரையன் என்று அறியப்பட்டார்.
7.  கீழே காணப்பெறுவனவற்றுள் பொருந்தாததைக் குறிப்பிடுக
A.   ஓவ, ஓவியம், ஓவம், சித்திரம், படம், படம் வட்டிகைச் செய்தி எனப் பல பெயர்களால் ஓவியக்கலை வழங்கப்பெற்றது
B.   ஓவியர், 'கண்ணுள் வினைஞர்' எனப் புகழப்பெற்றார்
C.   ஓவியருக்கு, 'நோக்கினார் கண்ணிடத்தே தம் தொழில் நிறுத்துவோர்' என நச்சினார்க்கினியர் தம் உரையில் இலக்கணம் வகுத்துள்ளார்
D.   ஓவியச் செந்நூல் உரை நூல் கிடக்கையும் கற்றுத் துறைபோகப் பொற்றொடி மடந்தையாகச் சுதமதி திகழ்ந்தனள் எனச் சிலம்பு பகர்கிறது
Answer: D.  ஓவியச் செந்நூல் உரை நூல் கிடக்கையும் கற்றுத் துறைபோகப் பொற்றொடி மடந்தையாகச் சுதமதி திகழ்ந்தனள் எனச் சிலம்பு பகர்கிறது
8.  'எவ்வகைச் செய்தியும் உவமங் காட்டி' எனும் மதுரைக் காஞ்சியின் பாடலடி குறிப்பிடும் கலை
A.   சிற்பக்கலை
B.   கட்டடக்கலை
C.   செப்புப்படிமக்கலை
D.   ஓவியக்கலை
Answer: D.  ஓவியக்கலை
9.  கீழே காணப்படுபவற்றுள் பொருத்தமற்றதைத் தெரிவு செய்க.
A.   கலம்பக இலக்கியத்தின் முதல் நூல் நந்திக்கலம்பகம்
B.   காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு தொண்டை நாட்டை ஆண்ட நந்திவர்ம பல்லவன் பற்றிய நூல்
C.   நந்தி கலம்பகத்தால் மாண்ட கதை நாடு அறியும் என்று தொண்டை மண்டல சதகமும், சோமேசர் முதுமொழி வெண்பாவும் நந்தி கதை உரைக்கின்றன
D.   'அறம் பாடுதல்' என்பது போர்த்தாக்குதல் முறை. அம்முறை நந்திக்கலம்பகத்தில் பாண்டிய மன்னனால் கையாளப்பட்டது
Answer: D.  'அறம் பாடுதல்' என்பது போர்த்தாக்குதல் முறை. அம்முறை நந்திக்கலம்பகத்தில் பாண்டிய மன்னனால் கையாளப்பட்டது
10.  பொருந்தாத விடையைக் குறிப்பிடுக :
A.   மனுமுறை கண்ட வாசகம்
B.   திருப்புகழ்
C.   திருவருட்பா
D.   சீவகாருண்ய ஒழுக்கம்
Answer: B.  திருப்புகழ்
11.  கீழே காணப்பெறுவனவற்றுள் சரியான கூற்றுகள் எவை?
I. நிலையாமையைச் சொல்லும் காஞ்சித் திணையின் துறைகளில் ஒன்று, 'முதுமொழிக் காஞ்சி' இப்பெயரில் மதுரைக் கூடலூர் கிழார் இயற்றிய நூல், 'அறவுரைக் கோவை' என்றும் அழைக்கப்படுகிறது.
II. முதுமொழிக் காஞ்சியில், பதினொரு அதிகாரங்கள் உள்ளன.
III. ஒவ்வொரு அதிகாரத்திலும் பத்துச் செய்யுட்கள் உள்ளன.
IV. முதுமொழிக்காஞ்சியில் மொத்தம் நூற்றைம்பது செய்யுட்கள் உள்ளன. அவை நச்சினார்க்கினியர் முதலிய நல்லுரையாசிரியர்களால் மேற்கோளாகக் கையாளப்பட்டுள்ளன.
A.   I மற்றும் III சரியானவை
B.   I மற்றும் IV சரியானவை
C.   II மற்றும் III சரியானவை
D.   III மற்றும் IV சரியானவை
Answer: A.  I மற்றும் III சரியானவை
12.  விடைத் தேர்க
மதுரைக் காஞ்சியின் சிறப்புகளைத் தேர்க
I. மதுரையைப் பாடுவது.
II. நிலையாமையைக் கூறுவது.
III. பத்துப்பாட்டுக் குள் மிகுதியான அடிகளை உடையது.
A.   II, III சரி I தவறு
B.   I, II, III சரி
C.   I, II சரி III தவறு
D.   I, III சரி II தவறு
Answer: B.  I, II, III சரி
13.  'நாட்டுப் புற இயலின் தந்தை' என அழைக்கப்படுபவர்
A.   ஜேக்கப் கிரீம்
B.   மாக்ஸ் முல்லர்
C.   கி.வா. ஜெகந்நாதன்
D.   ஆறு. அழகப்பன்
Answer: A.  ஜேக்கப் கிரீம்
14.  சொல்லுக்கு அழுத்தம் தரும் உயிரெழுத்து எது?
A.   அ
B.   ஊ
C.   ஐ
D.   ஏ
Answer: D.  ஏ
15.  பொருந்தா இணையினைக் காண்க
A.   'பாட்டாளி மக்களது பசி தீர வேண்டும்' - நாமக்கல் கவிஞர்
B.   'முல்லைக்கோர் காடு போலும்' - சுரதா
C.   கல்லைப் பிசைந்து கனியாக்கும் செந்தமிழ் - கவிமணி
D.   எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் - பாரதியார்
Answer: D.  எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் - பாரதியார்
16.  'தமிழ்க்கவிஞர்களின் இளவரசன்' என்று புகழப்படுபவர்
A.   இளங்கோவடிகள்
B.   வாணிதாசன்
C.   கண்ணதாசன்
D.   திருத்தக்கதேவர்
Answer: D.  திருத்தக்கதேவர்
17.  பொருத்துக:
நூல் நூலாசிரியர்
(a) மருமக்கள் வழிமான்மியம் 1. திரு. வி. க
(b) தமிழ்ச்சோலை 2. சுரதா
(c) இரட்சணியக் குரல் 3. கவிமணி
(d) தேன்மழை 4. எச்.ஏ. கிருட்டிணனார்
A.   4 1 2 3
B.   1 4 3 2
C.   2 1 3 4
D.   3 1 4 2
Answer: D.  3 1 4 2
18.  கீழே காணப்பெறுவனவற்றுள் எக்கூற்றுகள் சரியானவை?
I. ந. வேங்கடகிருஷ்ணன் என்னும் இயற்பெயரைக் கொண்ட ந. பிச்சமூர்த்தியின் சிறந்த கவிதை நூல், ந. பிச்சமூர்த்தியின் கவிதைகள் என்பது
II. கதைகள் மரபுக்கவிதைகள், புதுக்கவிதைகள் ஓரங்க நாடகங்கள் ஆகியவற்றை ந. பிச்சமூர்த்தி எழுதியுள்ளார்
III. திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரனார் என்பதற்கும் மேற்பட்ட நூல்களை இயற்றியுள்ளார்
IV. தமிழ்த்தாத்தா என்று அழைக்கப்பட்ட உ.வே. சாமிநாதரின் தலை மாணவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
A.   I, IV சரியானவை
B.   II, III சரியானவை
C.   III, IV சரியானவை
D.   I, II சரியானவை
Answer: B.  II, III சரியானவை
19.  பொருத்துக:
(a) இடுகுறிப் பொதுப் பெயர் 1. மரங்கொத்தி
(b) இடுகுறிச் சிறப்புப் பெயர் 2. பறவை
(c) காரணப் பொதுப் பெயர் 3. காடு
(d) காரணச் சிறப்புப் பெயர் 4. பனை
A.   3 4 2 1
B.   2 1 3 4
C.   1 3 2 4
D.   4 2 3 1
Answer: A.  3 4 2 1
20.  எழுத்தாளர் ஜெயகாந்தன் பெற்ற உயரிய விருது
A.   பத்மபூஷண்
B.   பத்மவிபூஷண்
C.   ஞானபீட விருது
D.   பத்மஸ்ரீ
Answer: C.  ஞானபீட விருது
21.  பட்டியல் I-இல் உள்ள செய்யுள் தொடர்களை, பட்டியல் II-இல் உள்ள புலவர்களோடு பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உரிய விடையைத் தேர்ந்து எழுதுக
பட்டியல் I பட்டியல் II
(a) உடம்பார் அழியின் உயிரார் அழிவர் 1. திருவள்ளுவர்
(b) மீதூண் விரும்பேல் 2. திருமூலர்
(c) உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே 3. சீத்தலைச் சாத்தனார்
(d) நீரின்றமையாது உலகு 4. ஔவையார்
A.   4 3 1 2
B.   3 1 4 2
C.   2 4 3 1
D.   3 2 4 1
Answer: C.  2 4 3 1
22.  பொருத்துக:
அறநூல்கள் ஆசிரியர்
(a) அறநெறிச்சாரம் 1. துறைமங்கலம் சிவப்பிரகாசர்
(b) நீதி நூல் 2. முத்து ராமலிங்க சேதுபதி
(c) நீதி போத வெண்பா 3. முனைப்பாடியார்
(d) நன்னெறி 4. மாயூரம் வேதநாயகம் பிள்ளை
A.   4 3 2 1
B.   2 1 3 4
C.   3 4 2 1
D.   1 3 4 2
Answer: C.  3 4 2 1
23.  பட்டியல் I-ல் உள்ள கவிதை நூல்களைப் பட்டியல் II-ல் உள்ள கவிஞர்களோடு பொருத்தி, கீழே தரப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக
கவிதை நூல்கள் கவிஞர்கள்
(a) நெருஞ்சி 1. சி. மணி
(b) அன்று வேறு கிழமை 2. இரா. மீனாட்சி
(c) தோணி வருகிறது 3. ஞானக்கூத்தன்
(d) வரும் போகும் 4. ஈரோடு தமிழன்பன்
A.   2 3 4 1
B.   3 4 1 2
C.   4 1 2 3
D.   2 4 3 1
Answer: A.  2 3 4 1
24.  பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
பட்டியல் ஒன்று பட்டியல் இரண்டு
(a) பெண்மை தாயாய் நின்று 1. அன்பே செய்யும்
(b) பெண்மை அயலார் தமக்கும் 2. தரணியைத் தாங்கும்
(c) பெண்மை மகளாய்ப் பிறந்து 3. தளர்வைப் போக்கும்
(d) பெண்மை தாரமாய் வந்து 4. சேவையில் மகிழும்
A.   3 1 4 2
B.   2 4 1 3
C.   2 1 4 3
D.   1 3 2 4
Answer: C.  2 1 4 3
25.  பொருத்துக:
(a) வெண்பா 1. சயங்கொண்டான்
(b) விருத்தப்பா 2. இரட்டையர்கள்
(c) பரணி 3. புகழேந்தி
(d) கலம்பகம் 4. கம்பர்
A.   4 2 3 1
B.   1 3 2 4
C.   3 4 1 2
D.   2 3 1 4
Answer: C.  3 4 1 2
;