TNPSC Group 2 2016 Preliminary Examination
General Tamil Questions 51 to 75
1.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
பரிதிமாற் கலைஞர் செம்மொழிக்கு இலக்கணம் வகுத்துள்ளார்
பரிதிமாற் கலைஞர் செம்மொழிக்கு இலக்கணம் வகுத்துள்ளார்
A.
பரிதிமாற் கலைஞர் என்ன செய்தார்?
B.
பரிதிமாற் கலைஞர் எம்மொழிக்கு இலக்கணம் வகுத்துள்ளார்?
C.
பரிதிமாற் கலைஞர் இலக்கணம் வகுத்தாரா?
D.
பரிதிமாற் கலைஞரின் தொண்டு யாது?
Answer:
B.
பரிதிமாற் கலைஞர் எம்மொழிக்கு இலக்கணம் வகுத்துள்ளார்?
2.
கீழ்க் காண்பனவற்றுள் பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
A.
வெட்சித் திணை
B.
வாகைத் திணை
C.
முல்லைத் திணை
D.
வஞ்சித் திணை
Answer:
C.
முல்லைத் திணை
3.
சரியான எதுகையைத் தேர்க
'எள்ளுறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்'
'எள்ளுறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்'
A.
எள்ளுறு – வியப்ப
B.
புள்ளுறு – புன்கண்
C.
எள்ளுறு – புள்ளுறு
D.
சிறப்பின் – புன்கண்
Answer:
C.
எள்ளுறு – புள்ளுறு
4.
வினைமுற்று, பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகிய இவற்றினைப் பயனிலையாகக் கொண்டு முடிவது?
A.
நான்காம் வேற்றுமை
B.
இரண்டாம் வேற்றுமை
C.
முதல் வேற்றுமை
D.
ஆறாம் வேற்றுமை
Answer:
C.
முதல் வேற்றுமை
5.
பொருத்துக:
| (a) தாங்குறூஉம் | 1. ஒரு பொருட் பன்மொழி |
| (b) வல்லிரைத்து | 2. இன்னிசையளபெடை |
| (c) ஓஒதல் | 3. உரிச்சொற்றொடர் |
| (d) மல்லல் மதுரை | 4. சொல்லிசையளபெடை |
A.
3 2 4 1
B.
2 1 4 3
C.
2 4 1 3
D.
1 2 3 4
Answer:
B.
2 1 4 3
6.
தமிழ்ப் பெயர்களைப் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை
I. ஒருவர், ஒரு இடம், பொருள் பற்றிக் குறிப்பிடுவதற்குக் குறியீடாக இடுவது பெயர்
II. தமிழில் பெயர்ச் சொற்கள் ஒருபோதும் காலம் காட்டி
III. தமிழ்ப் பெயர்ச்சொற்கள் அனைத்தும் காரணம் பற்றி அமைவன
IV. குழந்தை என்னும் தமிழ்ப்பெயர் பால் பகாப் பெயர்ச்சொல் ஆகும்
I. ஒருவர், ஒரு இடம், பொருள் பற்றிக் குறிப்பிடுவதற்குக் குறியீடாக இடுவது பெயர்
II. தமிழில் பெயர்ச் சொற்கள் ஒருபோதும் காலம் காட்டி
III. தமிழ்ப் பெயர்ச்சொற்கள் அனைத்தும் காரணம் பற்றி அமைவன
IV. குழந்தை என்னும் தமிழ்ப்பெயர் பால் பகாப் பெயர்ச்சொல் ஆகும்
A.
IV, III, I சரியானவை
B.
II, III, IV சரியானவை
C.
I, II, IV சரியானவை
D.
III, I, II சரியானவை
Answer:
C.
I, II, IV சரியானவை
7.
பொருத்துக:
| (a) தூது | 1. காரணச் சிறப்புப்பெயர் |
| (b) மரம் | 2. இடுகுறிப் பொதுப்பெயர் |
| (c) வளையல் | 3. புதர் |
| (d) மலை | 4. இடுகுறிப்பெயர் |
A.
3 1 2 4
B.
3 4 1 2
C.
2 4 1 3
D.
1 3 2 4
Answer:
B.
3 4 1 2
8.
பட்டியல் I இல் உள்ள கலைச்சொற்களைப் பட்டியல் II இல் உள்ள தமிழாக்கத்துடன் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| கலைச்சொற்கள் | தமிழாக்கம் |
| (a) Editorial | 1. செய்தித்தாள் வடிவமைப்பு |
| (b) Bulletin | 2. தலையங்கம் |
| (c) Green Proof | 3. சிறப்புச் செய்தி இதழ் |
| (d) Layout | 4. திருத்தப்படாத அச்சுப்படி |
A.
4 2 1 3
B.
2 3 4 1
C.
3 1 2 4
D.
1 4 3 2
Answer:
B.
2 3 4 1
9.
கீழ்க்காணும் 'வல்லினம் மிகும் இடம்' குறித்த கூற்றில் பிழையான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
A.
அந்த, இந்த, எந்த என்னும் சொற்களின் பின்வரும் வல்லினம் மிகும்
B.
ஓரெழுத்து ஒரு மொழியில் வரும் வல்லினம் மிகும்
C.
உம்மைத் தொகையில் வல்லினம் மிகும்
D.
சால, தவ என்னும் உரிச்சொற்களின் பின்வரும் வல்லினம் மிகும்
Answer:
C.
உம்மைத் தொகையில் வல்லினம் மிகும்
10.
பின்வருவனவற்றுள் பண்புப்பெயர்ப் புணர்ச்சியைக் குறிக்காத விதி எது?
A.
தன்னொற்றிரட்டல்
B.
அடியகரம் ஐயாதல்
C.
மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்
D.
இடையுகரம் இய்யாதல்
Answer:
C.
மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்
11.
பெருமை + களிறு = பெருங்களிறு
புணர்ச்சி விதியைத் தேர்ந்தெடு
புணர்ச்சி விதியைத் தேர்ந்தெடு
A.
ஈறு போதல், இடையுகரம் இய்யாதல்
B.
ஈறு போதல், அடியகரம் ஐயாதல்
C.
ஈறு போதல், ஆதி நீடல், முன்னின்ற மெய் திரிதல்
D.
ஈறு போதல், இனமிகல்
Answer:
D.
ஈறு போதல், இனமிகல்
12.
'நல்லொழுக்கம் ஒன்றே – பெண்ணே
நல்ல நிலை சேர்க்கும்
புல்லொழுக்கம் தீமை – பெண்ணே
பொய்யுரைத்தல் தீமை'
– இப்பாடலில் உள்ள விளிச்சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
நல்ல நிலை சேர்க்கும்
புல்லொழுக்கம் தீமை – பெண்ணே
பொய்யுரைத்தல் தீமை'
– இப்பாடலில் உள்ள விளிச்சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
A.
ஒன்றே
B.
பெண்ணே
C.
சேர்க்கும்
D.
தீமை
Answer:
B.
பெண்ணே
13.
'சேர்' என்னும் வேர்ச்சொல்லின் பெயரெச்சம்
A.
சேர்ந்து
B.
சேர்க
C.
சேர்ந்த
D.
சேர்ந்தது
Answer:
C.
சேர்ந்த
14.
கீழுள்ள கம்பரின் நூல் பட்டியலில் பொருந்தாத நூல் எது?
A.
ஏரெழுபது
B.
அபிராமி அந்தாதி
C.
சரசுவதி அந்தாதி
D.
திருக்கை வழக்கம்
Answer:
B.
அபிராமி அந்தாதி
15.
பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
| பட்டியல் ஒன்று | பட்டியல் இரண்டு |
|---|---|
| (a) ஏற்றப்பாட்டு | 1. ஒருவகை மீன் |
| (b) நாரை | 2. நீர் நிலை |
| (c) குறவை | 3. நீர் இறைக்கும் போது பாடும் பாட்டு |
| (d) குளம் | 4. கொக்கு வகை |
A.
3 2 4 1
B.
2 4 3 1
C.
1 2 4 3
D.
3 4 1 2
Answer:
D.
3 4 1 2
16.
கீழ்க்காணும் திருக்குறளைத் தக்க மேற்கோள் தொடரால் நிரப்புக.
“ஊழி பெயரினும் தாம்பெயரார் ___________
___________”
“ஊழி பெயரினும் தாம்பெயரார் ___________
___________”
A.
சால்பென்னும் திண்மை உண்டாகப் பெறின்
B.
தோல்வி துலையல்லார் கண்ணும் கொளல்
C.
பிறர் தீமை சொல்லா நலத்தது சால்பு
D.
சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார்
Answer:
D.
சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார்
17.
'நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி'
என்னும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்
என்னும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்
A.
நாலாயிர திவ்வியபிரபந்தம், இருபா இருபஃது
B.
இன்னா நாற்பது, இனியவை நாற்பது
C.
நாலடியார், திருக்குறள்
D.
அகநானூறு, புறநானூறு
Answer:
C.
நாலடியார், திருக்குறள்
18.
சுரதா எழுதிய நூல்களில் தமிழ்வளர்ச்சித்துறைப் பரிசைப் பெற்ற நூல்
A.
சுரதாவின் கவிதைகள்
B.
துறைமுகம்
C.
தேன்மழை
D.
சுவரும் சுண்ணாம்பும்
Answer:
C.
தேன்மழை
19.
ரூபாவதி, கலாவதி ஆகிய நாடகங்களை இயற்றியவர்
A.
மறைமலையடிகள்
B.
பரிதிமாற் கலைஞர்
C.
சுந்தரம் பிள்ளை
D.
திரு.வி.க
Answer:
B.
பரிதிமாற் கலைஞர்
20.
ஏழ் பருவ மங்கையரைப் பற்றிக் கூறும் இலக்கியம் எது?
A.
தூது
B.
உலா
C.
பள்ளு
D.
அந்தாதி
Answer:
B.
உலா
21.
'சின்னச்சீறா' என்ற நூலை எழுதியவர்
A.
பனு அகமது மரைக்காயர்
B.
உமறுப்புலவர்
C.
அப்துல் ரகுமான்
D.
சேக் மீரான்
Answer:
A.
பனு அகமது மரைக்காயர்
22.
'அழுது அடியடைந்த அன்பர்' எனக் குறிப்பிடப் பெறுபவர்
A.
சுந்தரமூர்த்தி
B.
மாணிக்கவாசகர்
C.
திருஞானசம்பந்தர்
D.
திருநாவுக்கரசர்
Answer:
B.
மாணிக்கவாசகர்
23.
உரிய சொல்லால் நிரப்புக.
அறனறிந்து மூத்த அறிவுடையார் ___________
திறனறிந்து தேர்ந்து கொளல்.
அறனறிந்து மூத்த அறிவுடையார் ___________
திறனறிந்து தேர்ந்து கொளல்.
A.
கேண்மை
B.
நன்மை
C.
வண்மை
D.
தகைமை
Answer:
A.
கேண்மை
24.
கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக
A.
'பொல்லாக்காட்சி' என்பதன் பொருள், 'மாயத்தோற்றம்' என்பது
B.
வெகுளல் என்பதன் பொருள், 'சினத்தல்' என்பது
C.
வெஃகல் என்பதன் பொருள் 'விரும்புதல்' என்பது
D.
'குறளை' என்பதன் பொருள் 'புறம்பேசுதல்' என்பது
Answer:
D.
'குறளை' என்பதன் பொருள் 'புறம்பேசுதல்' என்பது
25.
பட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க
| பட்டியல் ஒன்று | பட்டியல் இரண்டு |
|---|---|
| (a) திருச்சிற்றம்பலம் | 1. வேதாஅரணியம் |
| (b) திருமுதுகுன்றம் | 2. கும்பகோணம் |
| (c) திருமறைக்காடு | 3. சிதம்பரம் |
| (d) குட மூக்கு | 4. விருத்தாசலம் |
A.
4 2 3 1
B.
3 4 1 2
C.
1 3 2 4
D.
2 3 4 1
Answer:
B.
3 4 1 2