GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 51 to 75

51.  விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு
பரிதிமாற் கலைஞர் செம்மொழிக்கு இலக்கணம் வகுத்துள்ளார்
Answer: B.   பரிதிமாற் கலைஞர் எம்மொழிக்கு இலக்கணம் வகுத்துள்ளார்?
52.  கீழ்க் காண்பனவற்றுள் பொருந்தாச் சொல்லைக் கண்டறிக.
Answer: C.   முல்லைத் திணை
53.  சரியான எதுகையைத் தேர்க
'எள்ளுறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்'
Answer: C.   எள்ளுறு – புள்ளுறு
54.  வினைமுற்று, பெயர்ச்சொல், வினைச்சொல் ஆகிய இவற்றினைப் பயனிலையாகக் கொண்டு முடிவது?
Answer: C.   முதல் வேற்றுமை
55.  பொருத்துக:
(a) தாங்குறூஉம் 1. ஒரு பொருட் பன்மொழி
(b) வல்லிரைத்து 2. இன்னிசையளபெடை
(c) ஓஒதல் 3. உரிச்சொற்றொடர்
(d) மல்லல் மதுரை 4. சொல்லிசையளபெடை
Answer: B.   2 1 4 3
56.  தமிழ்ப் பெயர்களைப் பற்றிய கீழ்க்காணும் கூற்றுகளில் சரியானவை
I. ஒருவர், ஒரு இடம், பொருள் பற்றிக் குறிப்பிடுவதற்குக் குறியீடாக இடுவது பெயர்
II. தமிழில் பெயர்ச் சொற்கள் ஒருபோதும் காலம் காட்டி
III. தமிழ்ப் பெயர்ச்சொற்கள் அனைத்தும் காரணம் பற்றி அமைவன
IV. குழந்தை என்னும் தமிழ்ப்பெயர் பால் பகாப் பெயர்ச்சொல் ஆகும்
Answer: C.   I, II, IV சரியானவை
57.  பொருத்துக:
(a) தூது 1. காரணச் சிறப்புப்பெயர்
(b) மரம் 2. இடுகுறிப் பொதுப்பெயர்
(c) வளையல் 3. புதர்
(d) மலை 4. இடுகுறிப்பெயர்
Answer: B.   3 4 1 2
58.  பட்டியல் I இல் உள்ள கலைச்சொற்களைப் பட்டியல் II இல் உள்ள தமிழாக்கத்துடன் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க
பட்டியல் I பட்டியல் II
கலைச்சொற்கள் தமிழாக்கம்
(a) Editorial 1. செய்தித்தாள் வடிவமைப்பு
(b) Bulletin 2. தலையங்கம்
(c) Green Proof 3. சிறப்புச் செய்தி இதழ்
(d) Layout 4. திருத்தப்படாத அச்சுப்படி
Answer: B.   2 3 4 1
59.  கீழ்க்காணும் 'வல்லினம் மிகும் இடம்' குறித்த கூற்றில் பிழையான கூற்றைத் தேர்ந்தெடுக்க.
Answer: C.   உம்மைத் தொகையில் வல்லினம் மிகும்
60.  பின்வருவனவற்றுள் பண்புப்பெயர்ப் புணர்ச்சியைக் குறிக்காத விதி எது?
Answer: C.   மவ்வீறு ஒற்றழிந்து உயிரீறு ஒப்பவும்
61.  பெருமை + களிறு = பெருங்களிறு
புணர்ச்சி விதியைத் தேர்ந்தெடு
Answer: D.   ஈறு போதல், இனமிகல்
62.  'நல்லொழுக்கம் ஒன்றே – பெண்ணே
நல்ல நிலை சேர்க்கும்
புல்லொழுக்கம் தீமை – பெண்ணே
பொய்யுரைத்தல் தீமை'
– இப்பாடலில் உள்ள விளிச்சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Answer: B.   பெண்ணே
63.  'சேர்' என்னும் வேர்ச்சொல்லின் பெயரெச்சம்
Answer: C.   சேர்ந்த
64.  கீழுள்ள கம்பரின் நூல் பட்டியலில் பொருந்தாத நூல் எது?
Answer: B.   அபிராமி அந்தாதி
65.  பட்டியல் ஒன்றுடன், பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
பட்டியல் ஒன்று பட்டியல் இரண்டு
(a) ஏற்றப்பாட்டு 1. ஒருவகை மீன்
(b) நாரை 2. நீர் நிலை
(c) குறவை 3. நீர் இறைக்கும் போது பாடும் பாட்டு
(d) குளம் 4. கொக்கு வகை
Answer: D.   3 4 1 2
66.  கீழ்க்காணும் திருக்குறளைத் தக்க மேற்கோள் தொடரால் நிரப்புக.
“ஊழி பெயரினும் தாம்பெயரார் ___________
___________”
Answer: D.   சான்றாண்மைக்கு ஆழி எனப்படு வார்
67.  'நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி'
என்னும் அடைமொழியால் குறிக்கப்பெறும் நூல்கள்
Answer: C.   நாலடியார், திருக்குறள்
68.  சுரதா எழுதிய நூல்களில் தமிழ்வளர்ச்சித்துறைப் பரிசைப் பெற்ற நூல்
Answer: C.   தேன்மழை
69.  ரூபாவதி, கலாவதி ஆகிய நாடகங்களை இயற்றியவர்
Answer: B.   பரிதிமாற் கலைஞர்
70.  ஏழ் பருவ மங்கையரைப் பற்றிக் கூறும் இலக்கியம் எது?
Answer: B.   உலா
71.  'சின்னச்சீறா' என்ற நூலை எழுதியவர்
Answer: A.   பனு அகமது மரைக்காயர்
72.  'அழுது அடியடைந்த அன்பர்' எனக் குறிப்பிடப் பெறுபவர்
Answer: B.   மாணிக்கவாசகர்
73.  உரிய சொல்லால் நிரப்புக.
அறனறிந்து மூத்த அறிவுடையார் ___________
திறனறிந்து தேர்ந்து கொளல்.
Answer: A.   கேண்மை
74.  கீழ்க்காண்பனவற்றுள் பொருத்தமற்றதைக் குறிப்பிடுக
Answer: D.   'குறளை' என்பதன் பொருள் 'புறம்பேசுதல்' என்பது
75.  பட்டியல் ஒன்றுடன் பட்டியல் இரண்டைப் பொருத்தி, பட்டியல்களுக்குக் கீழே உள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க
பட்டியல் ஒன்று பட்டியல் இரண்டு
(a) திருச்சிற்றம்பலம் 1. வேதாஅரணியம்
(b) திருமுதுகுன்றம் 2. கும்பகோணம்
(c) திருமறைக்காடு 3. சிதம்பரம்
(d) குட மூக்கு 4. விருத்தாசலம்
Answer: B.   3 4 1 2
;