TNPSC Group 2 2024 Preliminary Examination
General Tamil Questions 1 to 25
1.
நிழல்போலத் தொடர்ந்தான் -இது எவ்வகை உவமை?
A.
வினை உவமை
B.
பயன் உவமை
C.
வடிவ உவமை
D.
உரு உவமை
Answer:
D.
உரு உவமை
2.
பின்வரும் உவமையின் பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க.
எடுப்பார் கைப்பிள்ளை
எடுப்பார் கைப்பிள்ளை
A.
எதையும் கேட்காதவர்
B.
எடுத்து வளர்ப்பவரின் பிள்ளை
C.
யார் எதைச் சொன்னாலும் கேட்டு நடப்பவர்
D.
எடுத்து வளர்ப்பவரின் சொல்லைக் கேட்பவர்
Answer:
C.
யார் எதைச் சொன்னாலும் கேட்டு நடப்பவர்
3.
'அப்துல் நேற்று வருவித்தான்'. எவ்வகை வாக்கியம் என்பதை கண்டறிக.
A.
எதிர்மறைவினை
B.
பிறவினை
C.
தன்வினை
D.
உடன்பாட்டுவினை
Answer:
B.
பிறவினை
4.
மாணாக்கர்களே! உங்களுக்குச் சீருடை இல்லையோ? என்ன வகை வினா என்பதைக் கண்டறிக.
A.
ஏவல்வினா
B.
ஐயவினா
C.
கொளல்வினா
D.
கொடைவினா
Answer:
D.
கொடைவினா
5.
பின்வரும் விடைக்கேற்ற வினாவினை தேர்ந்தெடுத்து எழுதுக.
பரிவாதினி என்னும் வீணை பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
பரிவாதினி என்னும் வீணை பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
A.
பரிவாதினி என்னும் வீணை மகேந்திரவர்மன் காலத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறதா?
B.
பரிவாதினி என்னும் வீணை பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் இருந்ததா?
C.
பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் வீணை இருந்ததா?
D.
பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் இருந்ததாகக் கூறப்படும் வீணை எது?
Answer:
D.
பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் இருந்ததாகக் கூறப்படும் வீணை எது?
6.
பின்வரும் சொல்லின் இலக்கணக் குறிப்பு - ‘உணர்த்தினென்'.
A.
இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன்தொக்கத் தொகை
B.
தன்மை பன்மை வினைமுற்று
C.
தன்மை ஒருமை வினைமுற்று
D.
பண்புத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை
Answer:
C.
தன்மை ஒருமை வினைமுற்று
7.
முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக.
A.
தமிழர்களின் வீரவிளையாட்டு தொன்மையான ஏறுதழுவுதல்
B.
தமிழர்களின் வீரவிளையாட்டு ஏறுதழுவுதல் தொன்மையான
C.
தொன்மையான வீரவிளையாட்டு தமிழர்களின் ஏறுதழுவுதல்
D.
தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்
Answer:
D.
தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்
8.
சொற்களை ஒழுங்குபடுத்தி சரியான குறள் வடிவம் உள்ள தொடரைக் கண்டெழுதுக.
A.
யாழ்கோடு அன்ன கொளல் கணைகொடிது வினைபடு பாலால் செவ்விது ஆங்கு
B.
கணைகொடிது செவ்விது ஆங்கு வினைபடுயாழ்கோடு அன்ன பாலால் கொளல்
C.
செவ்விது ஆங்கு அன்ன கணைகொடிது யாழ்கோடு, வினைபடு பாலால் கொளல்
D.
கணைகொடிது யாழ்கோடு செவ்விது ஆங்கு அன்ன வினைபடு பாலால் கொளல்
Answer:
D.
கணைகொடிது யாழ்கோடு செவ்விது ஆங்கு அன்ன வினைபடு பாலால் கொளல்
9.
அகர வரிசைப்படுத்தி எழுதியவற்றை தேர்க.
தூய்மை, திருவிளக்கு, தவப்பெருஞ்சுடர், தீவினை, துன்பங்கள், தாய்போல்
தூய்மை, திருவிளக்கு, தவப்பெருஞ்சுடர், தீவினை, துன்பங்கள், தாய்போல்
A.
தவப்பெருஞ்சுடர், தாய்போல், திருவிளக்கு, தீவினை, துன்பங்கள், தூய்மை
B.
தவப்பெருஞ்சுடர், திருவிளக்கு, தாய்போல், தீவினை, துன்பங்கள், தூய்மை
C.
தாய்போல், தவப்பெருஞ்சுடர், தீவினை, திருவிளக்கு, துன்பங்கள், தூய்மை
D.
தூய்மை, துன்பங்கள், திருவிளக்கு, தீவினை, தாய்போல், தவப்பெருஞ்சுடர்
Answer:
A.
தவப்பெருஞ்சுடர், தாய்போல், திருவிளக்கு, தீவினை, துன்பங்கள், தூய்மை
10.
வேர்ச்சொல் கண்டறிக.
நைந்தான்
நைந்தான்
A.
நஞ்சு
B.
நைந்து
C.
நஞ்சன்
D.
ஐந்து
Answer:
B.
நைந்து
11.
'படி' என்னும் வேர்ச்சொல்லின் தன்மை ஒருமை எதிர்காலம் காட்டும் வினைமுற்றை எழுதுக.
A.
படிக்கிறேன்
B.
படித்தேன்
C.
படிப்போம்
D.
படிப்பேன்
Answer:
D.
படிப்பேன்
12.
சரியான பொருள் தரும் ஓரெழுத்து ஒரு மொழியைத் தேர்க.
A.
தே - தேடுதல்
B.
மீ - வான்
C.
ஏ - ஏற்றம்
D.
நா - நான்
Answer:
B.
மீ - வான்
13.
ஓரெழுத்து ஒருமொழிக்குரிய சரியான பொருளை அறிந்து விடையைத் தெரிவு செய்க.
| (a) பை | 1. உண் |
| (b) மே | 2. புல் |
| (c) வை | 3. அன்பு |
| (d) து | 4. இளமை |
A.
1 3 4 2
B.
3 4 1 2
C.
1 2 3 4
D.
4 3 2 1
Answer:
D.
4 3 2 1
14.
பின்வரும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை தெரிவு செய்க.
'Renaissance'
'Renaissance'
A.
மீட்டுருவாக்கம்
B.
மறுசுழற்சி
C.
மறுமலர்ச்சி
D.
மீள்சிந்தனை
Answer:
C.
மறுமலர்ச்சி
15.
பிழையான இணையைக் கண்டறிக.
A.
கல்லில் நார் உரித்தல் - ஆராய்ந்து பாராமல்
B.
ஆயிரங்காலத்துப் பயிர் - நீண்ட காலமாக இருப்பு
C.
கானல்நீர் - இல்லாத ஒன்று
D.
கம்பி நீட்டுதல் - விரைந்து வெளியேறுதல்
Answer:
A.
கல்லில் நார் உரித்தல் - ஆராய்ந்து பாராமல்
16.
சந்திப்பிழையற்றத் தொடரைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
A.
கடற்கரையில் உப்பு காய்ச்சுதல் நடைபெறுகிறது; மலைப் பகுதிகளில் மலை பயிர்களும் நில பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன.
B.
கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது; மலை பகுதிகளில் மலை பயிர்களும் நில பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன.
C.
கடற்கரையில் உப்பு காய்ச்சுதல் நடைபெறுகிறது; மலைப் பகுதியில் மலைப் பயிர்களும் நிலப் பகுதிகளில் உழவு தொழிலும் நடைபெறுகின்றன.
D.
கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது; மலைப் பகுதிகளில் மலைப் பயிர்களும் நிலப் பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன.
Answer:
D.
கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது; மலைப் பகுதிகளில் மலைப் பயிர்களும் நிலப் பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன.
17.
தவறான இணையைக் கண்டறிக.
A.
முரணி - உடன்பட்டு
B.
பன்னகம் - பாம்பு
C.
நகம் - மலை
D.
கெந்தம் - பற்கள்
Answer:
A.
முரணி - உடன்பட்டு
18.
பொருத்துக:
| (a) முல்லைப்பாட்டு | 1. நறுந்தொகை |
| (b) பட்டினப்பாலை | 2. வேளாண்வேதம் |
| (c) நாலடியார் | 3. வஞ்சி நெடும்பாட்டு |
| (d) வெற்றிவேற்கை | 4. நெஞ்சாற்றுப்படை |
A.
2 3 4 1
B.
4 3 2 1
C.
3 4 1 2
D.
2 1 4 3
Answer:
B.
4 3 2 1
19.
பொருத்துக:
| (a) தமிழ்த்தூதர் | 1. திருஞானசம்பந்தர் |
| (b) பாலறாவாயன் | 2. அப்பாதுரையார் |
| (c) பன்மொழிப் புலவர் | 3. சேதுப்பிள்ளை ரா.பி. |
| (d) சொல்லின் செல்வர் | 4. தனிநாயகம் அடிகள் |
A.
4 1 2 3
B.
1 2 3 4
C.
4 3 2 1
D.
3 4 1 2
Answer:
A.
4 1 2 3
20.
ஐம்பெருங்காப்பியம் என்னும் சொற்றொடரைத் தம் உரையில் குறிப்பிட்டவர்
A.
சிவஞான முனிவர்
B.
மயிலைநாதர்
C.
ஆறுமுகநாவலர்
D.
இளம்பூரணர்
Answer:
B.
மயிலைநாதர்
21.
"திராவிடம்" என்னும் சொல்லை முதன்முதலில் குறிப்பிட்டவர்
A.
ஹீராஸ் பாதிரியார்
B.
அகத்தியலிங்கம்
C.
குமரிலபட்டர்
D.
ஹோக்கன்
Answer:
C.
குமரிலபட்டர்
22.
நாயக்கர் கால சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வது
A.
தஞ்சை பெரிய கோயில்
B.
இராமேசுவரம் பெருங்கோயில்
C.
திருச்சி திருவரங்கக் கோயில்
D.
காஞ்சி பெரிய கோயில்
Answer:
B.
இராமேசுவரம் பெருங்கோயில்
23.
'தேவதுந்துபி' எந்த ஆட்டத்துக்குரிய இசைக் கருவி ?
A.
மயிலாட்டம்
B.
ஒயிலாட்டம்
C.
தேவராட்டம்
D.
காவடியாட்டம்
Answer:
C.
தேவராட்டம்
24.
"புனலிடை மூழ்கிப் பொழிலிடை உலவிப்
பொன்னின் இழையும் துகிலும் பூண்டு
கனிமொழிபேசி நீ களித்திருக்கும் காட்சியினைக்
கண்டு மகிழ்வு பெறும் நிலையிலே
இருந்தேன்", என்று தம்பிக்குக் கடிதம் எழுதியவர்
பொன்னின் இழையும் துகிலும் பூண்டு
கனிமொழிபேசி நீ களித்திருக்கும் காட்சியினைக்
கண்டு மகிழ்வு பெறும் நிலையிலே
இருந்தேன்", என்று தம்பிக்குக் கடிதம் எழுதியவர்
A.
முத்தமிழறிஞர் கலைஞர்
B.
பேரறிஞர் அண்ணா
C.
மூதறிஞர் இராசாசி
D.
மு. வரதராசனார்
Answer:
B.
பேரறிஞர் அண்ணா
25.
"குமரிகண்ட நோய்க்குக் குமரி கொடு" இத்தொடரில் 'குமரி' என்னும் மூலிகை
A.
கறிவேப்பிலை
B.
குப்பைமேனி
C.
தூதுவளை
D.
கற்றாழை
Answer:
D.
கற்றாழை