GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 2 2024 Preliminary Examination

General Studies Questions 1 to 25

1.  பின்வரும் இணைகளில் தவறானவற்றை கண்டுபிடி :
கிளர்ச்சி - பகுதி
(I) ராமோசிஸ் - பூனா
(II) குகா - பஞ்சாப்
(III) சந்தல்ஸ் - ஒரிசா
(IV) கிட்டூர் - மலபார்
Answer: C.   (IV) மட்டும்
2.  “ரூபாயின் பிரச்சனை” என்ற ஆய்வறிக்கையை __________ சமர்ப்பித்தார்.
Answer: A.   டாக்டர் பி.ஆர். அம்பேத்கர்
3.  ‘நியூ லாம்ப்ஸ் ஃபார் வோல்ட்’ என்னும் தலைப்பில் கட்டுரைத் தொடரினை எழுதியவர் யார்?
Answer: D.   அரவிந்தோ கோஷ்
4.  பின்வரும் நிறுவனங்களை அதன் சரியான இருப்பிடத்துடன் பொருத்தவும்:
(a) NIFPHATT 1. பெங்களூரு
(b) CICEF 2. கொச்சி
(c) NFDB 3. சென்னை
(d) CAA 4. ஹைதராபாத்
Answer: B.   2 1 4 3
5.  கூற்று [A] : இந்தியாவில் பாரம்பரிய சிறுதொழில்கள் அதிக வேலைவாய்ப்பை நவீன சிறு தொழில்களைவிட வழங்குகின்றன.
காரணம் [R] : பாரம்பரிய சிறுதொழில்களில் தொழிலாளருக்கு தேவைப்படும் மூலதன மதிப்பு குறைவாகவும் நவீன சிறு தொழில்களில் தொழிலாளருக்கு தேவைப்படும் மூலதன மதிப்பு அதிகமாகவும் உள்ளது.
Answer: A.   [A] மற்றும் [R] இரண்டும் சரி மற்றும் [R] என்பது [A]க்கான சரியான விளக்கம்
6.  பின்வருவனவற்றுள் எது சரியானவை?
(a) சமத்துவமான முன்னேற்றம் 11வது ஐந்தாண்டுத் திட்டத்தின் நோக்கமாகும்.
(b) அதிவேகமான, நிலையான மற்றும் அதிகப்படியான உள்ளடக்கிய வளர்ச்சி 11வது ஐந்தாண்டுத் திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்
Answer: B.   (b) மட்டும் சரியானது
7.  பின்வருவனவற்றுள் பத்தாண்டு காலத்தில் சரியான கல்வியறிவு தொடர்பான இலக்கு
Answer: A.   திட்டக்காலத்தில் 75 விழுக்காடாக கல்வியறிவில் உயர்வு
8.  கீழ்காணும் கூற்றுகளை கருத்தில் கொண்டு, சரியான விடையைத் தேர்ந்தெடுக்க :
(A) மத்திய தலைமை தகவல் ஆணையருக்கு மறுநியமனம் சாத்தியம், ஆனால் மாநில தலைமை தகவல் ஆணையருக்கு மறுநியமனம் சாத்தியமல்ல
(B) மாநில தலைமை தகவல் ஆணையருக்கு மறுநியமனம் சாத்தியம், ஆனால் மத்திய தலைமை தகவல் ஆணையருக்கு மறுநியமனம் சாத்தியமல்ல
(C) இருவருக்குமே மறுநியமனம் சாத்தியம்
(D) இருவருக்குமே மறுநியமனம் சாத்தியமல்ல
Answer: D.   இருவருக்குமே மறுநியமனம் சாத்தியமல்ல
9.  சர்க்காரியா ஆணையம் பற்றிய தவறான கூற்றினை கண்டறிக :
(i) சர்க்காரியா ஆணையம் 1983-ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்டது
(ii) இந்த ஆணையம் 247 பரிந்துரைகளை அளித்தது
(iii) கூறு 356-ஐ நீக்குவதற்கு இந்த ஆணையம் பரிந்துரைத்தது
(iv) வரிவிதிப்பில் உள்ள எஞ்சிய அதிகாரங்கள் மாநிலங்களிடம் இருக்க வேண்டும் என்று இந்த ஆணையம் பரிந்துரைத்தது.
Answer: A.   (iii) மற்றும் (iv) மட்டும்
10.  சரியான இணையை கண்டறிக :
குடியரசுத் தலைவர் பெயர் - தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டு
(1) Dr. S. ராதா கிருஷ்ணன் - 1961
(2) Dr. சாகீர் உசேன் - 1966
(3) பக்ருதீன் அலி அகமத் - 1974
(4) N. சஞ்சீவ ரெட்டி - 1977
Answer: C.   (3) மற்றும் (4) சரியானது
11.  கீழ்க்கண்டவற்றுள் தவறான இணையை கண்டறிக :
(i) சட்ட உறுப்பு 18 - பட்டங்களை ஒழித்தல்
(ii) சட்ட உறுப்பு 21 - உயிர்வாழ்தல் மற்றும் தனி மனித சுதந்திரத்திற்கான பாதுகாப்பு
(iii) சட்ட உறுப்பு 23 - கைது செய்யப்படுவதிலிருந்து பாதுகாப்பு
(iv) சட்ட உறுப்பு 20 - சுதந்திரமாக நடமாடுவதற்கான உரிமை
Answer: A.   (iii) மற்றும் (iv) தவறான இணை
12.  'நகரங்களை அழிப்பவர்' என்று எந்த வேதக் கடவுள் அறியப்படுகிறார்?
Answer: B.   இந்திரன்
13.  கீழ்கண்டவற்றுள் ஹரப்பா நாகரிகம் பற்றி தவறான கூற்று எது?
Answer: A.   ஹரப்பா நாகரிகத்தில் அனைத்து இடங்களும் நகர நாகரிகம் கொண்டது
14.  இரண்டாம் சந்திர குப்தருக்கு முந்தைய குப்த மன்னர்கள் __________ நாணயங்களை மட்டுமே வெளியிட்டனர்.
Answer: A.   தங்கம்
15.  ஹாக்-இ-ஷார்ப் அல்லது ஹசில்-இ-ஷார்ப் என்பதன் பொருள்
Answer: B.   நீர்ப்பாசன வரி
16.  பின்வருவனவற்றில் எவை சரியாக இணைக்கப்பட்டுள்ளன?
(i) ஹெமடைட் தாது - இரும்பின் ஆக்சைடு
(ii) மேக்னடைட் தாது - கருப்பு தாது
(iii) லிமோனைட் - டோலமைட்
(iv) சிட்ரைட் - இரும்பு கார்பனேட்
Answer: C.   (i), (ii) மற்றும் (iv) மட்டும்
17.  அடர்த்தி மற்றும் சுருக்கம் என்பது போக்குவரத்துச் செலவுகளைக் குறைப்பதற்கும், சேமிப்பகத்தை எளிதாக்குவதற்கும், மீட்டெடுக்கப்பட்ட பொருட்களின் அடர்த்தியை அதிகரிக்கப் பயன்படும் அலகு செயல்பாடுகள் ஆகும். இந்த முறை பின்வரும் எந்த முறையில் பயன்படுத்தப்படுகிறது?
Answer: D.   MSWலிருந்து கழிவு கூறுகளைச் செயலாக்குதல் மற்றும் மீட்டெடுத்தல்
18.  அண்மையில், துபாயில் மேக விதைப்பு தொழில்நுட்பம் செயற்கை மழையைப் பெற பயன்படுத்தப்பட்டது. பின்வருவனவற்றுள் எவை பொதுவாக விதைப்பு முகவர்களாக உபயோகிக்கப்பட்டுப்படுத்தப்படுகின்றன?
(1) வெள்ளி அயோடைடு
(2) உலர் பனி
(3) சோடியம் குளோரைடு
(4) ஈய அயோடைடு
(5) அம்மோனியம் சல்பேட்
Answer: A.   (1), (2) மற்றும் (3) மட்டும்
19.  'தமிழ்நாடு தினம்' ஒவ்வொரு வருடமும் இந்த தினத்தில் கொண்டாடப்படுகிறது
Answer: D.   ஜூலை 18
20.  கீழ்க்கண்டவற்றில் சரியாகப் பொருத்தப்பட்ட இணை எவை?
(1) 2014 – ஒலிம்பிக் மேடை இலக்குத் திட்டம்
(2) 2023 – எனது இளைய பாரதம் (MY பாரத்)
(3) 1982 – இந்திய விளையாட்டு ஆணையம் (SAI)
(4) 1984 – துரோணாச்சாரியார் விருது நிறுவப்பட்டது
Answer: B.   (1) மற்றும் (2) சரி
21.  0.5 A மின்னோட்டம் ஒளிரும் விளக்கு வழியாக இரண்டு நிமிடங்கள் பாய்கிறது எனில், விளக்கு வழியே சென்ற எதிர்மின்னணுக்களின் எண்ணிக்கை
Answer: D.   3.8 x 10²⁰ எலக்ட்ரான்கள்
22.  இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் 75வது சுதந்திரத்தின் போது ஏவப்படும் மனிதனைக் கொண்டு செல்லும் விண்கலத்தின் விண்வெளிப் பயணம் மேற்கொள்ளும் குழு உறுப்பினர் எவ்வாறு அழைக்கப்படுவார்?
Answer: C.   காகாநாட்
23.  விஞ்ஞான முறைகளை நிறுவுவதில் வழிகாட்டி – மாணவர் சங்கிலியை காலவரிசைப்படி தேர்ந்தெடுக்கவும்
Answer: C.   சாக்ரடீஸ் – பிளேட்டோ – அரிஸ்டாட்டில் – அலெக்ஸாண்டர்
24.  10 கிலோ எடையுள்ள ஒரு பொருளில் 1N விசை செயல்படுகிறது. இதன் விளைவாக அந்த பொருள் 4 வினாடிகளில் 100 செ.மீ நேர்க்கோட்டில் நகரும் எனில் அதன் ஆரம்ப வேகத்தைக் கண்டறியவும்.
Answer: B.   5 செ.மீ/வினாடி
25.  ஒரு ரோஜா நிறப்பூவில் பச்சை ஒளி ஒளிர்விக்கிறது. அப்போது, அதன் இதழ்களின் நிறமாகத் தோன்றுவது
Answer: C.   கருப்பு
;