TNPSC Group 2 2024 Preliminary Examination
General Tamil Questions 26 to 50
1.
பொருத்துக:
| (a) அன்னை முத்துலெட்சுமி | 1. தேவதாசி ஒழிப்புச் சட்டம் |
| (b) மூவலூர் இராமாமிர்தம் | 2. சமூகத் தன்னார்வலர் |
| (c) பண்டித ரமாபாய் | 3. பெண் கல்வி |
| (d) மலாலா | 4. புற்றுநோய் மருத்துவமனை |
A.
1 2 3 4
B.
1 3 2 4
C.
4 1 2 3
D.
3 2 4 1
Answer:
C.
4 1 2 3
2.
தமிழ் இலக்கியத்தில் 'ஆலவாய்' என்னும் பெயர் இவ்வூருக்கும் பொருந்தும்.
A.
நெல்லை
B.
திருச்சி
C.
மதுரை
D.
காவிரிப்பூம்பட்டினம்
Answer:
C.
மதுரை
3.
ஆங்கில அரசால், 'வாய்ப்பூட்டுச் சட்டத்தின்' மூலம் மேடைகளில் அரசியல் பேசக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டவர் யார்?
A.
பெரியார்
B.
ம.பொ. சிவஞானம்
C.
முத்துராமலிங்கனார்
D.
ப. ஜீவானந்தம்
Answer:
C.
முத்துராமலிங்கனார்
4.
"இன்று நாம் உணர்கின்றோம் தம்பி! எத்தனை இன்னலுக்கிடையிலே தள்ளப்பட்டிருப்பினும், இந்தப் பொங்கற் புது நாளில் மட்டும் நமக்கு ஒரு மகிழ்வு" என்று உரையாற்றியவர்
A.
பேரறிஞர் அண்ணா
B.
ரா.比. சேதுப்பிள்ளை
C.
மகாத்மா காந்தியடிகள்
D.
மு. வரதராசனார்
Answer:
A.
பேரறிஞர் அண்ணா
5.
சென்ரியு மற்றும் லிமரைக்கூ என்ற புதிய வடிவங்களில் தமிழ்க் கவிதைகள் தந்தவர்
A.
கவிக்கோ அப்துல் ரகுமான்
B.
கவிவேந்தர் மு. மேத்தா
C.
கவிஞர் ஈரோடு தமிழன்பன்
D.
இரவீந்திரநாத் தாகூர்
Answer:
C.
கவிஞர் ஈரோடு தமிழன்பன்
6.
’பாவலர் மணி’ என்னும் பட்டம் பெற்றக் கவிஞர்
A.
உவமைக் கவிஞர் சுரதா
B.
பாவேந்தர் பாரதிதாசன்
C.
கவிஞர் வாணிதாசன்
D.
கவிஞர் முடியரசன்
Answer:
C.
கவிஞர் வாணிதாசன்
7.
தமிழ்த்தாய் நெருப்பினாலும் வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டாலும் அவளது ஆபரணங்கள் தொலைவில் உள்ள நகரமான பாரீசில் மிகவும் பாதுகாக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன என்று ________ குறித்து ________ கூறினார்.
A.
சங்க இலக்கியம் - குமரிலபட்டர்
B.
ஆனந்தரங்கர் நாட்குறிப்பு - உ.வே. சாமிநாதர்
C.
புறநானூறு - பரிதிமாற்கலைஞர்
D.
நன்னூல் - ஜி.யு. போப்
Answer:
B.
ஆனந்தரங்கர் நாட்குறிப்பு - உ.வே. சாமிநாதர்
8.
ஜெயகாந்தன் இயற்றாத சிறுகதை எது?
A.
குருபீடம்
B.
அறம்
C.
யுகசந்தி
D.
புதிய வார்ப்புகள்
Answer:
B.
அறம்
9.
ஆண்மைமையின் கூர்மை என திருவள்ளுவர் எதனைக் கூறுகிறார்?
A.
வறியவருக்கு உதவுதல்
B.
பகைவருக்கு உதவுதல்
C.
நண்பனுக்கு உதவுதல்
D.
உறவினருக்கு உதவுதல்
Answer:
B.
பகைவருக்கு உதவுதல்
10.
ஒழுகல் - இலக்கணக் குறிப்பு தருக.
A.
தொழிற்பெயர்
B.
வினையெச்சம்
C.
வினையாலணையும் பெயர்
D.
பண்புத்தொகை
Answer:
A.
தொழிற்பெயர்
11.
திருக்குறளின் சரியான வரியை கொண்டு நிறைவு செய்க.
'தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
________?'
'தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
________?'
A.
வன்மையுள் எல்லாம் தலை
B.
கெடுக்குந் தகைமை யவர்
C.
பேணித் தமராக் கொளல்
D.
பெற்றியார்ப் பேணிக் கொளல்.
Answer:
A.
வன்மையுள் எல்லாம் தலை
12.
கும்பகர்ணனை எழுப்பும் காட்சியை கண்முன் நிறுத்தும் சந்தம் ________.
A.
வில்லை மாறி, மாறி, எய்வதால் வரும் ஓசை
B.
மேகங்கள் ஒன்றோடு ஒன்று உரசும் ஓசை
C.
உலக்கையால் மாறி, மாறி இடிக்கும் ஒத்த ஓசை
D.
மத்தளங்களின் இடி இசை
Answer:
C.
உலக்கையால் மாறி, மாறி இடிக்கும் ஒத்த ஓசை
13.
பின்வரும் பாடல் எந்த படிம வகையைச் சார்ந்தது என்பதை கண்டறிந்து சரியானவற்றை எடுத்தெழுதுக.
"யானைதன் வாய்நிறை கொண்ட வலிதேம்பு தடக்கை
குன்றுபுகு பாம்பின் தோன்றும்"
– (அகம் 391 : 11-12)
"யானைதன் வாய்நிறை கொண்ட வலிதேம்பு தடக்கை
குன்றுபுகு பாம்பின் தோன்றும்"
– (அகம் 391 : 11-12)
A.
வினைப்படிமம்
B.
மெய்ப்படிமம்
C.
பயன்படிமம்
D.
உருப்படிமம்
Answer:
B.
மெய்ப்படிமம்
14.
கலித்தொகையில் முல்லைத் திணைக்குரிய பாடல்களை இயற்றியவரைத் தெரிவு செய்க.
A.
நல்லந்துவனார்
B.
சோழன் நல்லுருத்திரன்
C.
சேரமான் பெருங்கடுங்கோ
D.
இளநாகனார்
Answer:
B.
சோழன் நல்லுருத்திரன்
15.
'சிதவல்' -இச்சொல்லின் பொருள்.
A.
முரசம்
B.
ஊன்றுகோல்
C.
சோம்பல்
D.
தலைப்பாகை
Answer:
D.
தலைப்பாகை
16.
சீறாப்புராணம் இவருடைய உதவியால் நிறைவுற்றது
A.
அப்துல் காதிர்
B.
வள்ளல் சீதக்காதி
C.
அப்துல் சமத்
D.
அபுல்காசிம்
Answer:
D.
அபுல்காசிம்
17.
இரண்டிரண்டு அடிகள் கொண்ட ________ யால் தொடுக்கப்படும் செய்யுள் வகை கண்ணி ஆகும்.
A.
மோனை
B.
எதுகை
C.
இயைபு
D.
ஒரூஉ
Answer:
B.
எதுகை
18.
பொருத்துக :
(a) விசும்பு - 1. தந்தம்
(b) துலை - 2. நெருப்பு
(c) கனல் - 3. யானை
(d) களிறு - 4. வானம்
(e) மருப்பு - 5. துலாக்கோல்
(a) விசும்பு - 1. தந்தம்
(b) துலை - 2. நெருப்பு
(c) கனல் - 3. யானை
(d) களிறு - 4. வானம்
(e) மருப்பு - 5. துலாக்கோல்
A.
4 5 2 3 1
B.
3 2 1 4 5
C.
4 3 2 1 5
D.
2 1 5 4 3
Answer:
A.
4 5 2 3 1
19.
கீர்த்தனை ________ வகைகளுள் ஒன்றாகும்.
A.
சங்க இலக்கியம்
B.
நீதி இலக்கியம்
C.
பக்தி இலக்கியம்
D.
சிற்றிலக்கியம்
Answer:
D.
சிற்றிலக்கியம்
20.
'தெம்மாங்கு' பிரித்தெழுதுக.
A.
தென் + பாங்கு
B.
தென் + மாங்கு
C.
தேன் + மாங்கு
D.
தேன் + பாங்கு
Answer:
D.
தேன் + பாங்கு
21.
எள்ளில் தைலம்போல் எங்கும் நிறைபொருளை
உள்ளில் துதித்தே உணர்வடைந்து போற்றீரே !
-இப்பாடலடிகளை இயற்றியவர் ________ சித்தர் ஆவார்.
உள்ளில் துதித்தே உணர்வடைந்து போற்றீரே !
-இப்பாடலடிகளை இயற்றியவர் ________ சித்தர் ஆவார்.
A.
குதம்பைச் சித்தர்
B.
இடைக்காட்டுச் சித்தர்
C.
பாம்பாட்டிச் சித்தர்
D.
திருமூலர்
Answer:
B.
இடைக்காட்டுச் சித்தர்
22.
"திருப்பல்லாண்டு" பாடியவர்
A.
குலசேகராழ்வார்
B.
ஆண்டாள்
C.
பெரியாழ்வார்
D.
திருப்பாணாழ்வார்
Answer:
C.
பெரியாழ்வார்
23.
தருமசேனர், அப்பர், வாகீசர் என்னும் பெயர்களைக் கொண்ட சைவ அடியார்.
A.
திருநாவுக்கரசர்
B.
சம்பந்தர்
C.
சுந்தரர்
D.
மாணிக்கவாசகர்
Answer:
A.
திருநாவுக்கரசர்
24.
’தமிழ் மூவாயிரம்’ என்றழைக்கப்படும் நூலை இயற்றியவர் யார்?
A.
நாவுக்கரசர்
B.
நக்கீரர்
C.
திருமாளிகைத்தேவர்
D.
திருமூலர்
Answer:
D.
திருமூலர்
25.
’காரிகை கற்றுக் கவிபாடுவதிலும் பேரிகை கொட்டிப் பிழைப்பது மேல்’
இத்தொடர் உணர்த்துவது
இத்தொடர் உணர்த்துவது
A.
கவிதை எழுதுவது எளிது
B.
கவிதை எழுதுவது அரிது
C.
கவிதை எழுதக் காரிகைத் தேவையில்லை
D.
பேரிகை கொட்டினால் பிழைக்கலாம்
Answer:
B.
கவிதை எழுதுவது அரிது