TNPSC Group 2 2024 Preliminary Examination
General Tamil Questions 51 to 75
1.
ஆகுபெயர் பயன்படுத்தப்படாத பழமொழியைத் தேர்வு செய்க.
A.
ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?
B.
நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி
C.
ஆலும் வேலும் பல்லுக்குறுதி
D.
நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை
Answer:
D.
நாளும் கிழமையும் நலிந்தோர்க்கில்லை
2.
"பன்னரும் கோங்கின் நன்னலம் கவற்றி", இவ்வடியில் இடம் பெற்றுள்ள எதுகை வகை
A.
முற்றெதுகை
B.
கீழ்க்கதுவாய் எதுகை
C.
பொழிப்பெதுகை
D.
ஒரூஉ எதுகை
Answer:
C.
பொழிப்பெதுகை
3.
அழகிய குளிர்ந்த கடம்பவனத்தை விட்டு இறைவன் நீங்கினான். எவ்வகை வாக்கியம்?
A.
செயப்பாட்டுவினை
B.
செய்வினை
C.
பிறவினை
D.
தன்வினை
Answer:
D.
தன்வினை
4.
எவ்வகை வாக்கியம் எனக் கண்டறிக.
'நான் திடலில் ஓடினேன்'
'நான் திடலில் ஓடினேன்'
A.
கட்டளை வாக்கியம்
B.
செய்வினை
C.
தன்வினை
D.
வினையெச்ச வாக்கியம்
Answer:
C.
தன்வினை
5.
பின்வரும் தொடர் எவ்வகைத் தொடர் எனக் கண்டறிந்து சரியானவற்றைத் தெரிவு செய்க.
'குமரன் மழையில் நனையாமல் இல்லை'
'குமரன் மழையில் நனையாமல் இல்லை'
A.
செய்தித் தொடர்
B.
எதிர்மறைத் தொடர்
C.
பொருள் மாறாமல் எதிர்மறைத் தொடர்
D.
கட்டளைத் தொடர்
Answer:
C.
பொருள் மாறாமல் எதிர்மறைத் தொடர்
6.
வஞ்சித்தளைக்குரிய சீர் அமைப்பு
A.
தேமா புளிமாங்காய்
B.
தேமாங்கனி புளிமாங்காய்
C.
கருவிளம் கூவிளங்காய்
D.
கூவிளங்காய் தேமாங்கனி
Answer:
B.
தேமாங்கனி புளிமாங்காய்
7.
சொல்லின் வகையைக் கண்டறிக.
'வெண்மை'
'வெண்மை'
A.
தொழிற்பெயர்
B.
இரண்டாம் வேற்றுமை
C.
வண்ணப் பண்புப்பெயர்
D.
ஆகுபெயர்
Answer:
C.
வண்ணப் பண்புப்பெயர்
8.
வஞ்சி விருத்தம் என்பது
A.
குறளடி நான்காய் ஒரு பொருள் குறித்து ஒரு செய்யுள் மட்டும் வருவது
B.
சிந்தடி நான்காய் ஒரு பொருள் மேல் ஒரு செய்யுள் மட்டும் வருவது
C.
குறளடி நான்காய் ஒரு பொருள் மேல் மூன்று செய்யுள்கள் வருவது
D.
அளவடி பெற்று ஒரு பொருளில் ஒரு செய்யுள் மட்டும் வருவது
Answer:
B.
சிந்தடி நான்காய் ஒரு பொருள் மேல் ஒரு செய்யுள் மட்டும் வருவது
9.
பின்வருவனவற்றுள் அகர வரிசைப்படி எழுதப்பட்ட நவமணிகளை தெரிவு செய்க.
A.
நீலம், கோமேதகம், மாணிக்கம், வைரம், பவளம், வைடூரியம், முத்து, புஷ்பராகம், மரகதம்
B.
கோமேதகம், நீலம், பவளம், புஷ்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வைரம்
C.
கோமேதகம், நீலம், புஷ்பராகம், பவளம், மரகதம், மாணிக்கம், முத்து, வைரம், வைடூரியம்
D.
கோமேதகம், நீலம், புஷ்பராகம், பவளம், மரகதம், முத்து, மாணிக்கம், வைரம், வைடூரியம்
Answer:
B.
கோமேதகம், நீலம், பவளம், புஷ்பராகம், மரகதம், மாணிக்கம், முத்து, வைடூரியம், வைரம்
10.
வினையெச்சம் - கண்டறிக.
A.
ஓடினான்
B.
ஓடும்
C.
ஓடிய
D.
ஓடி
Answer:
D.
ஓடி
11.
வினைமுற்றைத் தேர்வு செய்க.
‘வா’
‘வா’
A.
வந்தனன்
B.
வந்து
C.
வந்தான்
D.
வந்த
Answer:
C.
வந்தான்
12.
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
மாரி, மாறி
மாரி, மாறி
A.
பாதி, பறை
B.
மேளம், ஒலித்தல்
C.
மழை, வேறு
D.
வீடு, ஒலித்தல்
Answer:
C.
மழை, வேறு
13.
ஒலி வேறுபாடறிந்து சரியான விடையைத் தெரிவு செய்க:
| (a) அளை | 1. இளைத்தல் |
| (b) களை | 2. நீக்கு |
| (c) தளை | 3. புற்று |
| (d) இளை | 4. விலங்கு |
A.
2 3 1 4
B.
4 1 2 3
C.
3 2 4 1
D.
1 2 3 4
Answer:
C.
3 2 4 1
14.
கொடுக்கப்பட்டுள்ள ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை எழுதுக.
Delegate (டெலிகேட்)
Delegate (டெலிகேட்)
A.
வடிவமைப்பு
B.
பேராளர்
C.
குறும்பெட்டி
D.
மரபுத்தகவு
Answer:
B.
பேராளர்
15.
கொடுக்கப்பட்டுள்ள வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரைக்கண்டு எழுதுக.
‘அறை’
‘அறை’
A.
அறைதல்
B.
அறைந்த
C.
அறைந்தவர்
D.
அறையும்
Answer:
C.
அறைந்தவர்
16.
இவற்றுள் எது தவறான இணை எதிர்ச்சொல் என்பதைத் தெரிவு செய்க.
A.
இரவு X பகல்
B.
அகலாது X போகாது
C.
தண்மை X வெம்மை
D.
விருப்பு X வெறுப்பு
Answer:
B.
அகலாது X போகாது
17.
சரியாக பிரித்தெழுதப்பட்ட சொல்லை எடுத்தெழுதுக.
அஞ்சிலோதி
அஞ்சிலோதி
A.
அஞ்சில் + ஓதி
B.
அம் + சிலோதி
C.
அம் + சில் + ஓதி
D.
அம் + சில + ஓதி
Answer:
D.
அம் + சில + ஓதி
18.
பின்வரும் சொல்லின் சரியான பிரித்தெழுதும் முறையை எடுத்தெழுதுக.
ஊன்பொதியவிழா
ஊன்பொதியவிழா
A.
ஊன் + பொதிய + விழா
B.
ஊன்பொதிய + விழா
C.
ஊன் + பொதி + விழா
D.
ஊன் + பொதி + அவிழா
Answer:
D.
ஊன் + பொதி + அவிழா
19.
எழுத்துவகை அறிந்து பொருத்துக:
| (a) இயல் | 1. உயிர் முதல் உயிரீறு |
| (b) புதிது | 2. உயிர் முதல் மெய்யீறு |
| (c) ஆணி | 3. மெய்ம்முதல் மெய்யீறு |
| (d) வரம் | 4. மெய்ம்முதல் உயிரீறு |
A.
2 4 1 3
B.
3 2 1 4
C.
1 3 4 2
D.
1 4 2 3
Answer:
A.
2 4 1 3
20.
தமிழ்ச்சொல்லாராய்ச்சியில் உச்சம் தொட்டவர்
A.
கால்டுவெல்
B.
தேவநேயப் பாவாணர்
C.
ம.பொ.சி
D.
உ.வே.சா
Answer:
B.
தேவநேயப் பாவாணர்
21.
உ.வே.சா. அவர்கள் தனது வாழ்க்கை வரலாற்றைத் தொடராக எழுதிய இதழ் எது?
A.
துக்ளக்
B.
குமுதம்
C.
கல்கண்டு
D.
ஆனந்த விகடன்
Answer:
D.
ஆனந்த விகடன்
22.
தமது தமிழ்க் கட்டுரையின் வழியாக தமிழை ‘உயர்தனிச் செம்மொழி' என்று பெருமைப்படுத்தியவர்.
A.
வ.சுப. மாணிக்கனார்
B.
தேவநேயப் பாவாணர்
C.
மா. இராசமாணிக்கனார்
D.
பரிதிமாற் கலைஞர்
Answer:
D.
பரிதிமாற் கலைஞர்
23.
வழக்குரைஞராகப் பணியாற்றிய தமிழ்க் கவிஞர்
A.
சிற்பி
B.
மு.மேத்தா
C.
ந. பிச்சமூர்த்தி
D.
சுரதா
Answer:
C.
ந. பிச்சமூர்த்தி
24.
பொருத்துக:
| (a) காந்தியக் கவிஞர் | 1. சுரதா |
| (b) உவமைக் கவிஞர் | 2. நாமக்கல் கவிஞர் |
| (c) மக்கள் கவிஞர் | 3. வாணிதாசன் |
| (d) கவிஞரேறு | 4. பட்டுக்கோட்டை |
A.
2 1 4 3
B.
4 3 2 1
C.
3 4 1 2
D.
1 2 3 4
Answer:
A.
2 1 4 3
25.
"பிசிராந்தையார்” எனும் நாடக நூலுக்காக சாகித்திய அகாதெமி விருது பெற்றவர்
A.
பாவேந்தர் பாரதிதாசன்
B.
கவிஞர் வாணிதாசன்
C.
கவியரசர் கண்ணதாசன்
D.
கவிஞர் முடியரசன்
Answer:
A.
பாவேந்தர் பாரதிதாசன்