GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 2 2024 Preliminary Examination

General Studies Questions 26 to 50

26.  நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் நிறுவனம் இந்திய அரசால் எப்போது நிறுவப்பட்டது?
Answer: A.   1956
27.  பின்வரும் பல்கலைக்கழகங்களை அவை நிறுவப்பட்ட ஆண்டின் காலவரிசைப்படி ஒழுங்கமைக்கவும் :
(1) மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
(2) பாரதிதாசன் பல்கலைக்கழகம்
(3) திருவள்ளுவர் பல்கலைக்கழகம்
(4) பெரியார் பல்கலைக்கழகம்
Answer: B.   (2), (1), (4), (3)
28.  கூற்று [A] : சட்டப்பிரிவு 240ன் மூலம் தனக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தின்படி ஜனாதிபதி B.P. மண்டல் என்பவரை பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான ஆணையத் தலைவராக நியமித்தார்.
காரணம் [R] : இவ்வாணையம் பின்தங்கிய நிலையை தீர்மானிக்க பதினொரு குறிகாட்டிகளை உருவாக்கியுள்ளது.
Answer: C.   [A] தவறானது; [R] சரியானது
29.  கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக:
(a) பிராமணரல்லாதோர் இயக்கம் 1. ஜோதிராவ் பூலே
(b) சுயமரியாதை இயக்கம் 2. ஈ.வெ. ராமசாமி
(c) ஸுத்தி இயக்கம் 3. தயானந்த சரஸ்வதி
(d) சத்ய சோதாக் சமாஜ் இயக்கம் 4. ஸ்ரீ சாகு மகராஜ்
Answer: D.   1 2 3 4
30.  ஈ.வெ.ரா. பற்றி கால வரிசைப்படி பின்வரும் நிகழ்வுகளை ஒழுங்கமைக்கவும்.
(1) அவர் நீதிக் கட்சியின் தலைவர் ஆனார்
(2) அவர் காங்கிரஸில் சேர்ந்தார்
(3) அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஆனார்
(4) வைக்கம் சத்தியாகிரகம் துவக்கினார்
Answer: C.   (2), (3), (4), (1)
31.  “வானாளும் செல்வமும் மண்ணரசும் யான்வேண்டேன்” – என்று பாடியவர்.
Answer: D.   குலசேகரர்
32.  தோற்றுவித்தவர்களுடன் தொடர்புடைய செய்தித்தாளை சரியாக பொருத்தவும்:
(a) ரிச்சர்டு ஜான்சன் 1. மதராஸ் கூரியர்
(b) G.P. பிள்ளை 2. மதராஸ் மெயில்
(c) சார்லஸ் லாசன் மற்றும் ஹென்றி கார்னிஷ் 3. மதராஸ் ஸ்டாண்டர்டு
(d) G. சுப்பிரமணிய ஐயர் 4. தி ஹிந்து
Answer: A.   1 3 2 4
33.  “நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி” என்ற பழமொழியில் ‘இரண்டு’ எதனைக் குறிக்கின்றது?
Answer: B.   திருக்குறள்
34.  எதனை ‘பனையளவு நன்றியாக கொள்வர்’ என வள்ளுவர் குறிப்பிடுகிறார்?
Answer: B.   தினை அளவு நன்றி
35.  “கல்லாரைக் காணுங்கால் கல்வி நல்காக்
கசடர்க்குத் தூக்குமரம் அங்கே உண்டாம்” –
இக்கவிதை வரிகளுக்கு உரியவர் யார்?
Answer: A.   பாரதிதாசன்
36.  அகில இந்திய முஸ்லீம் லீக் பாகிஸ்தான் தீர்மானத்தை லாகூர் மாநாட்டில் எப்பொழுது நிறைவேற்றியது?
Answer: C.   மார்ச் 23, 1940
37.  ஜவஹர்லால் நேருவின் நூல்களை அவை வெளியிடப்பட்ட ஆண்டின் அடிப்படையில் காலவரிசைப்படுத்துக :
(1) ஓர் சுயசரிதை : சுதந்திரம் நோக்கி
(2) உலக வரலாறு ஓர் பார்வை
(3) இந்தியாவின் கண்டுபிடிப்பு
(4) சுதந்திரத்திற்கு முன்
Answer: B.   (2), (1), (3), (4)
38.  பின்வருவனவற்றில் ‘மித்ரா மேளா’ சங்கத்தை தொடங்கியவர் யார்?
Answer: B.   விநாயக தாமோதர் சாவர்க்கர்
39.  அனைத்திந்திய முஸ்லீம் லீக் கட்சியை 1906-ல் நிறுவியது யார்?
Answer: B.   கவாஜா சலிமுல்லா
40.  கூற்று [A] : சுவாமி விவேகானந்தர் தனது குருவின் போதனைகளை பரப்ப இராமகிருஷ்ணா மிஷனை நிறுவினார்.
காரணம் [R] : இராமகிருஷ்ணா மிஷன் ஒரு துறவற அமைப்பு மற்றும் அது மனிதனின் ஆன்மீக வளர்ச்சிக்கு தன்னை அர்ப்பணித்தது.
Answer: B.   [A] மற்றும் [R] சரி, [R] [A]யினுடைய சரியான விளக்கம்
41.  இந்தியாவில் வறுமை பற்றிய பின்வரும் ஆய்வுகளை காலவரிசைபடி ஒழுங்கமைக்கவும் :
(1) ஓஜா ஆய்வு
(2) பர்தான் ஆய்வு
(3) மின்ஹாஸ் ஆய்வு
(4) தண்டேகர் மற்றும் ராத் ஆய்வு
Answer: B.   (1), (4), (3), (2)
42.  டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் மூலம் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை
(i) தொழில்நுட்ப உருவாக்ககம் மற்றும் பரவல், கொள்கைகள் மற்றும் சீர்திருத்தங்கள் மற்றும் வளர்ச்சி ஊக்கிகள்
(ii) கொள்கைகளும், சீர்திருத்தங்களும்
(iii) சீர்திருத்தங்களும், முன்னேற்றமும்
(iv) செயற்கை நுண்ணறிவும்
Answer: A.   (i) மட்டும்
43.  பின்வருவனவற்றை பொருத்துக:
(a) வரி வருவாய் - 1. வட்டி ரசீது
(b) வரி அல்லாத வருவாய் - 2. நிகர சந்தை கடன்கள்
(c) மூலதன ரசீதுகள் - 3. வருமான மற்றும் செலவு மீதான வரிகள்
Answer: A.   3 1 2
44.  கீழ்க்கண்டவற்றைப் பொருத்துக:
இயற்றப்பட்ட ஆண்டு சட்டத்தின் பெயர்
(a) 1963 1. நாட்டின் பெருமை அவமதிக்கப்படுவதைத் தடை செய்யும் சட்டம்
(b) 1991 2. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்
(c) 1971 3. இந்திய ஒன்றியப் பகுதிச் சட்டம்
(d) 1951 4. தேசியத் தலைநகர் டெல்லி ஒன்றியப் பகுதிச் சட்டம்
Answer: A.   3 4 1 2
45.  கூற்று [A] : இந்திய கூட்டாட்சியில், ஆளுநர், அரசின் தலைவர் மற்றும் மத்திய அரசின் பிரதிநிதி என்னும் இரு விதமான பணிகளை செய்கிறார்.
காரணம் [R] : ஆளுநர் என்ற நிறுவனமே கூட்டாட்சிக்கு எதிரானது
Answer: A.   கூற்று [A] சரி, ஆனால் காரணம் [R] தவறு
46.  அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் அரசின் கடமைகளாக அரசியலமைப்பில் இந்த வடிவத்தில் சேர்த்தனர்.
Answer: C.   அரசின் வழிகாட்டும் நெறிமுறைகள்
47.  கீழ்கண்ட அமைப்புகளில் எவை/எவைகள் அரசியலமைப்புச் சட்டத்தில் காணப்படவில்லை?
(1) தேசிய வளர்ச்சிக் குழு
(2) நிதி ஆயோக்
(3) தேர்தல் ஆணையம்
(4) நிதி ஆணையம்
Answer: A.   (1) மற்றும் (2) மட்டும்
48.  பின்வருபவர்களுள் முகலாயர்களின் காலத்தில் நடந்த வரலாற்று நிகழ்வுகளை எழுதிய ஒரே பெண் வரலாற்று ஆசிரியர் யார்?
Answer: A.   குல்பதன் பேகம்
49.  அகமது ஷாவின் ஆட்சியில் கீழே குறிப்பிட்டவற்றில் எது தவறானது?
Answer: D.   குஜராத் அரசை தன் பேரரசுடன் இணைத்துக் கொண்டார்
50.  இந்தியா ஒரு 'மனித குலத்தின் அருங்காட்சியகம்' என அழைத்தவர் யார்?
Answer: D.   வி.ஏ. ஸ்மித்
;