GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 2 2024 Preliminary Examination

General Studies Questions 51 to 75

51.  கீழ்க்கண்டவற்றுள் எந்த ஹரப்பா நாகரீகத் தளங்கள் தற்பொழுது இந்தியாவில் இல்லை?
Answer: A.   மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா
52.  கிழக்குக் கடற்கரையில் சுமார் 25 மாவட்டங்கள்; தமிழ்நாட்டில் 10, ஆந்திராவில் 7, ஓடிசாவில் 6, மற்றும் மேற்கு வங்கத்தில் 2 - சூறாவளி புயல்களால் பாதிக்கப்படக்கூடியவை. இவற்றில், எந்தப் பகுதியானது கடுமையான வகைப் புயல்களில் 70 சதவீத பாதிப்பை அடையும்?
Answer: D.   சுந்தரவனப்பகுதி
53.  கீழ்க்காணும் கூற்றுகளுக்குரிய இந்தியாவின் ஒரு பழங்குடியினம் எது?
(1) மகாபாரத இதிகாச கதாப்பாத்திரம் ஏகலைவனுடன் தொடர்புடையவர்கள்
(2) ஆரவல்லி, விந்திய மற்றும் சத்புரா மலைத் தொடர்களில் வாழ்பவர்கள்
(3) சிறிய குன்றுகளில் குடிசை அமைத்தல்
(4) மக்காச் சோளமே பிரதான உணவு
Answer: C.   பில்ஸ்
54.  கர்நாடக பீடபூமியின் வடக்கு நிலப்பரப்பு __________ என அழைக்கப்படுகிறது.
Answer: A.   மால்நாடு
55.  எந்த அமைச்சகம் சஞ்சார் சாத்தி போர்ட்டலில் டிஜிட்டல் நுண்ணறிவு தளம் மற்றும் ‘சாக்ஷு’ வசதியை தொடங்கியது?
Answer: C.   தகவல் தொடர்பு அமைச்சகம்
56.  பின்வருவனவற்றை பொருத்துக:
பகுதி I பகுதி II
(a) இந்தியா 1. வழுக்கை கழுகு
(b) ஜப்பான் 2. டால்பின்
(c) அமெரிக்கா 3. பியோனி
(d) சீனா 4. செர்ரி மலர்ச்சி
5. அரச வங்கப்புலி
Answer: C.   2 4 1 3
57.  ஜவுளி மற்றும் தொழில்துறை அமைச்சகத்தால் சில்ப் விருதுகள் யாருக்கு வழங்கப்படுகிறது?
Answer: D.   புகழ்பெற்ற கைவினைக் கலைஞர்கள்
58.  நிலவின் சில பகுதிகள் எப்போதும் சூரிய ஒளியினைப் பார்த்ததேயில்லை. ஏன் என்றால் நிலவின் அச்சு சூரிய ஒளியின் திசைக்கு __________ ஆக இருப்பதால்.
Answer: A.   செங்குத்தாக
59.  பின்வருவனவற்றைப் பொருத்துக:
(a) CO2 1. நிலத்தடி நீர் மாசுபாடு மற்றும் காற்றில் உள்ள துகளுரு மாசு
(b) NOx 2. புவி வெப்பமயமாதல்
(c) காரீயம் (Pb) 3. அமில மழை
(d) ஹைட்ரோகார்பன் (HC) 4. ஒளி வேதியியல் புகைபனி உருவாகுவதற்கான ஒரு மூலப்பொருள்
Answer: A.   2 3 1 4
60.  கூற்று [A] : 2-4-D களைக்கொல்லியாக செயல்படுகிறது
காரணம் [R] : 2 -4 - D கருவுறாமல் கனி உருவாக காரணமாகிறது.
Answer: D.   [A] சரியானது [R] சரியான விளக்கமில்லை
61.  புறவயப்பட்டதன்மை, முன்கணிப்புத்தன்மை மற்றும் பொதுமைத்தன்மை ஆகியவை __________ யின் அம்சங்களாக அமைகிறது.
Answer: A.   அறிவியல் முறை
62.  பின்வருவனவற்றில் “CEDAW” என்ற விரிவாக்கத்தின்/பொருளை சரியாகத் தேர்ந்தெடுக்கவும்.
Answer: C.   பெண்களுக்கு எதிரான அனைத்து வித பாகுபாட்டினையும் நீக்குவதற்கான மாநாடு
63.  தமிழ்நாடு மாநிலத்திற்கான அனைத்து புவியியல் தரவுகளுக்கும் பின்வருவனவற்றில் எது ஒரே இடத்தில் உள்ளது?
Answer: B.   தமிழ்நாடு புவியியல் தகவல் அமைப்பு
64.  1987 - ஐ __________ ஆக ஐக்கிய நாட்டு சபை அறிவித்தது.
Answer: B.   சர்வதேச உறைவிடம் இல்லாதவர்களுக்கு உறைவிடம் வழங்கும் ஆண்டு
65.  எந்த ஆண்டு பிளிப்கார்ட், தமிழ்நாடு MSME வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு புரிந்துணர்வு பணியகத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது?
Answer: A.   2021
66.  பின்வரும் அடித்தளங்களை அது தொடர்புடைய பெயர்களோடு சரியாக பொருத்துக:
(a) தென்னிந்திய நல உரிமைச் சங்கம் 1. A. சிங்காரவேலர்
(b) குடியரசு இதழ் 2. C. ராஜகோபாலாச்சாரி
(c) தொழிலாளர் அமைப்புகளின் தோற்றம் 3. தந்தை பெரியார்
(d) சுதந்திர கட்சி 4. C. நடேசன்
Answer: C.   4 3 1 2
67.  2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தமிழ்நாட்டின் மக்கள் தொகை அடர்த்தி ஆகும்.
Answer: B.   555 ஒரு சதுர கி.மீ
68.  இலக்கியம், இசை, நாடகம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்ற தமிழ்ப் பெண்கள் __________ என்று அழைக்கப்பட்டனர்.
Answer: A.   முதுக்குரவை
69.  பின்வரும் வகைக்கு இடையே சரியான பொருத்தங்களை தேர்வு செய்யவும்.
(1) திரு.வி.க – தேசபக்தன்
(2) சுப்ரமணிய பாரதியார் – இந்து
(3) அன்னிபெசன்ட் – நியூ இந்தியா
(4) கஸ்தூரி ரங்க அய்யங்கார் – இந்தியா
Answer: A.   (1) மற்றும் (3) மட்டும்
70.  __________ ன் இயற்பெயர் குமாரசாமி நாயக்கர்.
Answer: B.   ஊமைத்துரை
71.  ‘பகைவரின் கர்வத்தை அடக்கும் ஆயுதம்' என்று வள்ளுவர் எதனைக் குறிப்பிடுகிறார்?
Answer: D.   செல்வம்
72.  “__________ பிறனாக்கம்
பேணாது அழுக்கறுப் பான்”.
என்று யாரை திருவள்ளுவர் குறிப்பிடுகிறார்?
Answer: A.   அறன் ஆக்கம் வேண்டாதான்
73.  தாலாட்டுப் பாடலில் தாய்மாமன் கட்டி வரும் வேட்டி வகை எது?
Answer: C.   துவை வேட்டி
74.  “உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும்” –
மேற்காணும் புறநானூற்றுப்பாடல் அடி எதன் சிறப்பை வலியுறுத்துகின்றது?
Answer: A.   கல்வி
75.  கீழே கொடுக்கப்பட்டுள்ள காலத்தில் நக்கீரர் மிக முக்கிய புலவராக எந்தச் சங்க காலத்தைச் சேர்ந்தவராகக் கருதப்படுகிறார்?
Answer: B.   மூன்றாம் சங்கம்
;