GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 1 to 25

1.  நிழல்போலத் தொடர்ந்தான் -இது எவ்வகை உவமை?
Answer: D.   உரு உவமை
2.  பின்வரும் உவமையின் பொருத்தமான பொருளைத் தெரிவு செய்க.
எடுப்பார் கைப்பிள்ளை
Answer: C.   யார் எதைச் சொன்னாலும் கேட்டு நடப்பவர்
3.  'அப்துல் நேற்று வருவித்தான்'. எவ்வகை வாக்கியம் என்பதை கண்டறிக.
Answer: B.   பிறவினை
4.  மாணாக்கர்களே! உங்களுக்குச் சீருடை இல்லையோ? என்ன வகை வினா என்பதைக் கண்டறிக.
Answer: D.   கொடைவினா
5.  பின்வரும் விடைக்கேற்ற வினாவினை தேர்ந்தெடுத்து எழுதுக.
பரிவாதினி என்னும் வீணை பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
Answer: D.   பல்லவ மன்னன் மகேந்திரவர்மன் காலத்தில் இருந்ததாகக் கூறப்படும் வீணை எது?
6.  பின்வரும் சொல்லின் இலக்கணக் குறிப்பு - ‘உணர்த்தினென்'.
Answer: C.   தன்மை ஒருமை வினைமுற்று
7.  முறையான தொடர் அமைப்பினைக் குறிப்பிடுக.
Answer: D.   தமிழர்களின் தொன்மையான வீரவிளையாட்டு ஏறுதழுவுதல்
8.  சொற்களை ஒழுங்குபடுத்தி சரியான குறள் வடிவம் உள்ள தொடரைக் கண்டெழுதுக.
Answer: D.   கணைகொடிது யாழ்கோடு செவ்விது ஆங்கு அன்ன வினைபடு பாலால் கொளல்
9.  அகர வரிசைப்படுத்தி எழுதியவற்றை தேர்க.
தூய்மை, திருவிளக்கு, தவப்பெருஞ்சுடர், தீவினை, துன்பங்கள், தாய்போல்
Answer: A.   தவப்பெருஞ்சுடர், தாய்போல், திருவிளக்கு, தீவினை, துன்பங்கள், தூய்மை
10.  வேர்ச்சொல் கண்டறிக.
நைந்தான்
குறிப்பு: இந்தக் கேள்வியில் பிழை உள்ளது. TNPSC இறுதி விடைக்குறிப்பின்படி அனைத்து விடைத் தேர்வுகளும் ஏற்கப்பட்டுள்ளன.
11.  'படி' என்னும் வேர்ச்சொல்லின் தன்மை ஒருமை எதிர்காலம் காட்டும் வினைமுற்றை எழுதுக.
Answer: D.   படிப்பேன்
12.  சரியான பொருள் தரும் ஓரெழுத்து ஒரு மொழியைத் தேர்க.
Answer: B.   மீ - வான்
13.  ஓரெழுத்து ஒருமொழிக்குரிய சரியான பொருளை அறிந்து விடையைத் தெரிவு செய்க.
(a) பை 1. உண்
(b) மே 2. புல்
(c) வை 3. அன்பு
(d) து 4. இளமை
Answer: D.   4 3 2 1
14.  பின்வரும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை தெரிவு செய்க.
'Renaissance'
Answer: C.   மறுமலர்ச்சி
15.  பிழையான இணையைக் கண்டறிக.
Answer: A.   கல்லில் நார் உரித்தல் - ஆராய்ந்து பாராமல்
16.  சந்திப்பிழையற்றத் தொடரைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
Answer: D.   கடற்கரையில் உப்புக் காய்ச்சுதல் நடைபெறுகிறது; மலைப் பகுதிகளில் மலைப் பயிர்களும் நிலப் பகுதிகளில் உழவுத் தொழிலும் நடைபெறுகின்றன.
17.  தவறான இணையைக் கண்டறிக.
Answer: A.   முரணி - உடன்பட்டு
18.  பொருத்துக:
(a) முல்லைப்பாட்டு 1. நறுந்தொகை
(b) பட்டினப்பாலை 2. வேளாண்வேதம்
(c) நாலடியார் 3. வஞ்சி நெடும்பாட்டு
(d) வெற்றிவேற்கை 4. நெஞ்சாற்றுப்படை
Answer: B.   4 3 2 1
19.  பொருத்துக:
(a) தமிழ்த்தூதர் 1. திருஞானசம்பந்தர்
(b) பாலறாவாயன் 2. அப்பாதுரையார்
(c) பன்மொழிப் புலவர் 3. சேதுப்பிள்ளை ரா.பி.
(d) சொல்லின் செல்வர் 4. தனிநாயகம் அடிகள்
Answer: A.   4 1 2 3
20.  ஐம்பெருங்காப்பியம் என்னும் சொற்றொடரைத் தம் உரையில் குறிப்பிட்டவர்
Answer: B.   மயிலைநாதர்
21.  "திராவிடம்" என்னும் சொல்லை முதன்முதலில் குறிப்பிட்டவர்
Answer: C.   குமரிலபட்டர்
22.  நாயக்கர் கால சிற்பக் கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வது
Answer: B.   இராமேசுவரம் பெருங்கோயில்
23.  'தேவதுந்துபி' எந்த ஆட்டத்துக்குரிய இசைக் கருவி?
Answer: C.   தேவராட்டம்
24.  "புனலிடை மூழ்கிப் பொழிலிடை உலவிப்
பொன்னின் இழையும் துகிலும் பூண்டு
கனிமொழிபேசி நீ களித்திருக்கும் காட்சியினைக்
கண்டு மகிழ்வு பெறும் நிலையிலே
இருந்தேன்", என்று தம்பிக்குக் கடிதம் எழுதியவர்
Answer: B.   பேரறிஞர் அண்ணா
25.  "குமரிகண்ட நோய்க்குக் குமரி கொடு" இத்தொடரில் 'குமரி' என்னும் மூலிகை
Answer: D.   கற்றாழை
;