GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 26 to 50

26.  பொருத்துக:
(a) அன்னை முத்துலெட்சுமி 1. தேவதாசி ஒழிப்புச் சட்டம்
(b) மூவலூர் இராமாமிர்தம் 2. சமூகத் தன்னார்வலர்
(c) பண்டித ரமாபாய் 3. பெண் கல்வி
(d) மலாலா 4. புற்றுநோய் மருத்துவமனை
Answer: C.   4 1 2 3
27.  தமிழ் இலக்கியத்தில் 'ஆலவாய்' என்னும் பெயர் இவ்வூருக்கும் பொருந்தும்.
Answer: C.   மதுரை
28.  ஆங்கில அரசால், 'வாய்ப்பூட்டுச் சட்டத்தின்' மூலம் மேடைகளில் அரசியல் பேசக்கூடாது என்று தடை விதிக்கப்பட்டவர் யார்?
Answer: C.   முத்துராமலிங்கனார்
29.  "இன்று நாம் உணர்கின்றோம் தம்பி! எத்தனை இன்னலுக்கிடையிலே தள்ளப்பட்டிருப்பினும், இந்தப் பொங்கற் புது நாளில் மட்டும் நமக்கு ஒரு மகிழ்வு" என்று உரையாற்றியவர்
Answer: A.   பேரறிஞர் அண்ணா
30.  சென்ரியு மற்றும் லிமரைக்கூ என்ற புதிய வடிவங்களில் தமிழ்க் கவிதைகள் தந்தவர்
Answer: C.   கவிஞர் ஈரோடு தமிழன்பன்
31.  ’பாவலர் மணி’ என்னும் பட்டம் பெற்றக் கவிஞர்
Answer: C.   கவிஞர் வாணிதாசன்
32.  தமிழ்த்தாய் நெருப்பினாலும் வெள்ளத்தினாலும் பாதிக்கப்பட்டாலும் அவளது ஆபரணங்கள் தொலைவில் உள்ள நகரமான பாரீசில் மிகவும் பாதுகாக்கப்பட்டுப் பராமரிக்கப்படுகின்றன என்று ________ குறித்து ________ கூறினார்.
Answer: B.   ஆனந்தரங்கர் நாட்குறிப்பு - உ.வே. சாமிநாதர்
33.  ஜெயகாந்தன் இயற்றாத சிறுகதை எது?
Answer: B.   அறம்
34.  ஆண்மைமையின் கூர்மை என திருவள்ளுவர் எதனைக் கூறுகிறார்?
Answer: B.   பகைவருக்கு உதவுதல்
35.  ஒழுகல் - இலக்கணக் குறிப்பு தருக.
Answer: A.   தொழிற்பெயர்
36.  திருக்குறளின் சரியான வரியை கொண்டு நிறைவு செய்க.
'தம்மிற் பெரியார் தமரா ஒழுகுதல்
________?'
Answer: A.   வன்மையுள் எல்லாம் தலை
37.  கும்பகர்ணனை எழுப்பும் காட்சியை கண்முன் நிறுத்தும் சந்தம் ________.
Answer: C.   உலக்கையால் மாறி, மாறி இடிக்கும் ஒத்த ஓசை
38.  பின்வரும் பாடல் எந்த படிம வகையைச் சார்ந்தது என்பதை கண்டறிந்து சரியானவற்றை எடுத்தெழுதுக.
"யானைதன் வாய்நிறை கொண்ட வலிதேம்பு தடக்கை
குன்றுபுகு பாம்பின் தோன்றும்"
– (அகம் 391 : 11-12)
Answer: B.   மெய்ப்படிமம்
39.  கலித்தொகையில் முல்லைத் திணைக்குரிய பாடல்களை இயற்றியவரைத் தெரிவு செய்க.
Answer: B.   சோழன் நல்லுருத்திரன்
40.  'சிதவல்' -இச்சொல்லின் பொருள்.
Answer: D.   தலைப்பாகை
41.  சீறாப்புராணம் இவருடைய உதவியால் நிறைவுற்றது
Answer: D.   அபுல்காசிம்
42.  இரண்டிரண்டு அடிகள் கொண்ட ________ யால் தொடுக்கப்படும் செய்யுள் வகை கண்ணி ஆகும்.
Answer: B.   எதுகை
43.  பொருத்துக :
(a) விசும்பு - 1. தந்தம்
(b) துலை - 2. நெருப்பு
(c) கனல் - 3. யானை
(d) களிறு - 4. வானம்
(e) மருப்பு - 5. துலாக்கோல்
Answer: A.   4 5 2 3 1
44.  கீர்த்தனை ________ வகைகளுள் ஒன்றாகும்.
Answer: D.   சிற்றிலக்கியம்
45.  'தெம்மாங்கு' பிரித்தெழுதுக.
Answer: D.   தேன் + பாங்கு
46.  எள்ளில் தைலம்போல் எங்கும் நிறைபொருளை
உள்ளில் துதித்தே உணர்வடைந்து போற்றீரே!
- இப்பாடலடிகளை இயற்றியவர் ________ சித்தர் ஆவார்.
Answer: B.   இடைக்காட்டுச் சித்தர்
47.  "திருப்பல்லாண்டு" பாடியவர்
Answer: C.   பெரியாழ்வார்
48.  தருமசேனர், அப்பர், வாகீசர் என்னும் பெயர்களைக் கொண்ட சைவ அடியார்.
Answer: A.   திருநாவுக்கரசர்
49.  ’தமிழ் மூவாயிரம்’ என்றழைக்கப்படும் நூலை இயற்றியவர் யார்?
Answer: D.   திருமூலர்
50.  ’காரிகை கற்றுக் கவிபாடுவதிலும் பேரிகை கொட்டிப் பிழைப்பது மேல்’
இத்தொடர் உணர்த்துவது
Answer: B.   கவிதை எழுதுவது அரிது
;