GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2012

General Studies Questions 51 to 92

51.  கீழ்க்காண்பவற்றில் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
Answer: A.   pH மதிப்பீடு — S. P. L. சோரன்சன்
52.  கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்துகிறது?
Answer: C.   எட்டாவது ஐந்தாண்டு திட்டம் — 2000 ல் முழு வேலைவாய்ப்பை சாதிக்கும் வேலையை உருவாக்குதல்
53.  பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
a) உலக சுகாதார நிறுவனம் 1. பாரிஸ்
b) பெண்கள் காப்பகம் 2. ரோம்
c) ஐக்கிய நாடுகளின் கல்வி அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு 3. நியூயார்க்
d) பன்னாட்டு வேளாண்மை வளர்ச்சி நிதி 4. ஜெனீவா
Answer: B.   4 3 1 2
54.  நிதிக்குழுவின் தலைவரை நியமனம் செய்வது
Answer: A.   குடியரசுத் தலைவர்
55.  கீழ்க்கண்ட பிரதம அமைச்சர்களை காலவரிசைப்படுத்துக:
I. திரு. சரண்சிங்
II. திரு. வி.பி.சிங்
III. திரு. லால்பகதூர் சாஸ்திரி
IV. திரு சந்திரசேகர்
இவற்றுள்:
Answer: A.   III, I, II & IV
56.  கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
கூற்று (A): பிரெஞ்சு அறிஞரான டிரேசி என்பவரால் கருத்தியல் சொல்லாக்கம் செய்யப்பட்டது.
காரணம் (R): மக்களுடைய இலட்சியங்கள், உறுதிப்பாடுகள் நம்பிக்கைகள் மற்றும் கருத்துக்கள் ஆகியவற்றின் தொகுப்பினை கருத்தியல் குறிப்பிடுகிறது.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு:
Answer: B.   (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
57.  பின்வருவனவற்றுள் இந்திய துணை குடியரசுத்தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதற்கு அவசியமான தகுதி அல்லாதது எது?
Answer: B.   அவருக்கு இந்தி பேசவும், படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்
58.  கீழ்க்கண்டவற்றில் எது சரியாக பொருந்தும்?
Answer: C.   இந்தியாவின் முதல் பெண் பிரதமர் — இந்திரா காந்தி
59.  நுகர்வு என்ற பட்சத்தில் 'அபரிகரக' என்பதின் பொருள்
Answer: D.   இவை அனைத்தும்
60.  எந்த மன்னனால் காஞ்சிக் கைலாசநாதர் கோயில் கட்டப்பட்டது?
Answer: A.   இராஜசிம்மன்
61.  எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே
அல்லாமல் வேறொன்றறியேன் பராபரமே! — என்று பாடியவர் யார்?
Answer: A.   தாயுமானவர்
62.  விறகு இச்சொல்லில் எவ்வகைக் குற்றியலுகரம் இடம்பெற்றுள்ளது?
Answer: C.   உயிர்த்தொடர்க் குற்றியலுகரம்
63.  திருமுறைகளைக் தொகுத்தவர் யார்?
Answer: C.   நம்பியாண்டார் நம்பி
64.  ஐம்பெருங்காப்பியங்களில் ஐந்து ஒழுக்க நெறிகளை விளக்கும் காப்பியம் எது?
Answer: B.   மணிமேகலை
65.  'இனியவை நாற்பது' என்ற நூலின் ஆசிரியர் யார்?
Answer: C.   பூதஞ்சேந்தனார்
66.  புதுக்கவிதைக்கு சாகித்திய அகாதமி விருது பெற்றவர் யார்?
Answer: C.   ஈரோடு தமிழன்பன்
67.  தொல்காப்பியர் குறிப்பிடும் நகை, அழுகை முதலான மெய்ப்பாடுகளின் எண்ணிக்கையைக் குறிப்பிடுக.
Answer: B.   எட்டு
68.  கீழ்வரும் தொடர்களில் பாரதியார் கூறாத தொடரைச் சுட்டுக.
Answer: B.   தமிழன் என்றொரு இனமுண்டு
69.  மனிதர்களின் குணங்களில் கீழ்வருவனவற்றுள் எது மிகவும் உயர்ந்தது என்பதைக் குறிப்பிடுக?
Answer: C.   கொள்ளேன் என்றல்
70.  ஆங்கிலேயர் காலத்தில், திருவள்ளுவர் உருவில் தங்க நாணயம் வெளியிட்டவர் யார்?
Answer: C.   எல்லீசு
71.  பொருந்தாததைச் சுட்டுக:
Answer: C.   விடலை
72.  கீழ்க்காணும் நூல்களுள் ஜெயகாந்தன் எழுதியது எது?
Answer: B.   பாரிசுக்குப் போ
73.  ஒலிம்பிக் கொடியில் 5 கண்டங்களைக் குறிக்கும் வகையில் 5 வளையங்கள் உள்ளன. அவற்றில் எந்த இரு கண்டங்கள் இந்து சமுத்திரத்தைத் தொடவில்லை?
Answer: D.   ஐரோப்பா, வட அமெரிக்கா
74.  கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் எது மக்கள்தொகை கணக்கெடுப்பு-2011 பற்றி தவறான தகவலைத் தருகிறது?
Answer: D.   கைப்பேசி, கணினி மற்றும் இணையம் பயன்படுத்துவோர் பற்றிய தகவல் சேகரிக்கப்படவில்லை
75.  பின்வருபவர்களுள் பத்தொன்பதாவது நிதிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
(Note: The English question references Law Commission)
Answer: B.   நீதியரசர் பி. வி. ரெட்டி
76.  பின்வருவனவற்றுள் இந்திய ரிசர்வ் வங்கியின் பணி அல்லாதது எது?
Answer: D.   தனி நபர்களுக்குக் கடன் வழங்குதல்
77.  மனித உடலில் எதை பெர்சனாலிட்டி ( ஆளுமை தன்மை ) ஹார்மோன் என்று அழைக்கிறோம்?
Answer: D.   தைராக்சின்
78.  கீழ்க்கண்டவற்றுள் மிகவும் குறுகிய கோள் யாது?
Answer: C.   புளூட்டோ
79.  கீழ்க்கண்ட கூற்றுகளை ஆய்க:
இந்தியாவில் கிடைக்கும் முதன்மை ஆற்றல் மூலங்கள்
I. நிலக்கரி மற்றும் லிக்னைட்
II. எண்ணெய் மற்றும் வாயு
III. எண்ணெய் மட்டும்
IV. மின்சாரம்.
இவற்றுள்:
Answer: D.   I, II மற்றும் IV சரியானவை
80.  கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் சரியானதைத் தேர்ந்தெடு:
Answer: B.   இது சூரியனை விட மூன்று மடங்கு வெப்பமானது
81.  மனித உடலில் இயல்பான இரத்த குளூக்கோஸின் அளவு
Answer: A.   80-120 mg/100 ml
82.  பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
a) பிளத்தல் 1. ஈஸ்ட்
b) மொட்டுகள் 2. பூக்கும் தாவரங்கள்
c) துண்டாதல் 3. பாக்டீரியா
d) மகரந்தச் சேர்க்கை 4. ஆல்கா
Answer: A.   3 1 4 2
83.  நாவினை உருளையாக உருளச் செய்தல் மனிதரில் ஓங்குத்தன்மை. 80 மாணவர்கள் உள்ள ஒரு வகுப்பில் 72 மாணவர்கள் நாவினை உருளச் செய்ய முடியும். 8 மாணவர்கள் செய்ய இயலாதவர்கள். இந்த பண்பின் ஓங்கு மற்றும் ஒடுங்குப் பண்பின் சதவீதம்
Answer: A.   ஓங்குத்தன்மை 90% ஒடுங்குத் தன்மை 10%
84.  பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
a) WHO 1. மனிதனும் உயிர்க்கோளமும்
b) NPCB 2. தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டம்
c) NLEP 3. தேசிய பார்வை நோய்க் கட்டுப்பாட்டுத் திட்டம்
d) MAB 4. உலக சுகாதார நிறுவனம்
Answer: C.   4 3 2 1
85.  2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி பாலின விகிதம் அதிகம் உள்ள மாநிலத்தை குறிப்பிடுக.
Answer: C.   கேரளா
86.  லண்டனுக்கு சிறப்பு சேர்ப்பது லார்ட்ஸ், சென்னைக்கு சிறப்பு சேர்ப்பது சேப்பாக்கம் கொல்கத்தாவுக்கு சிறப்பு சேர்ப்பது ஈடன் கார்டன்ஸ் எனில், கிரின்பார்க் எதற்கு சிறப்பு சேர்க்கிறது?
Answer: C.   கான்பூர்
87.  மைக்ரோசாப்ட் எக்செல் கீழ்க்கண்டவாறு பயன்படுகிறது
Answer: A.   வரைபடம் உருவாக்க
88.  புவிக்கும் சந்திரனுக்கும் இடையேயான ஈர்ப்பு விசையினால் உருவாவது
Answer: B.   ஓதங்கள்
89.  தவறான இணை எது?
Answer: D.   ஹாக்கி — செய்னா நெய்வால்
90.  களிமண் கலந்த நீரை தூய நீராக மாற்றப்பயன்படுத்தப்படும் பொதுவான வேதிப்பொருள் எது?
Answer: B.   படிகாரம்
91.  கீழ்கண்ட வாக்கியங்களைக் கவனி:
கூற்று (A): தலைகீழ் சவ்வுடு பரவல் நீரைத் தூய்மைப்படுத்துவதில் உதவுகிறது.
காரணம் (R): இது ஒரு சவ்வின் மூலம் நிகழும் தொழில்முறை வடிகட்டுதல் ஆகும். குறிப்பிட்ட சவ்வின் வழியே அழுத்தம் செலுத்துவதால் மிகப்பெரிய அளவிலான மூலக்கூறுகள் மற்றும் அயனிகள் நீக்கப்படுகின்றன.
கீழ்க்காண்பவற்றில் எது சரியானது? கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு:
Answer: A.   (A) மற்றும் (R) சரியானவை
92.  பட்டியல் I ஐ பட்டியல் II உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
a) வெய்ன் ரூனி 1. பிரேசில்
b) கிரிஸ்டியன் ரோனால்டோ 2. அர்ஜென்டினா
c) மரடோனா 3. நெதர்லாண்ட்
d) ரோனால்டின்ஹோ 4. இங்கிலாந்து
Answer: C.   4 3 2 1
;