TNPSC Group 4 2012
General Tamil Questions 26 to 50
1.
'வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்'
- இப்பாடலடிகளில் அடியியைபைச் சுட்டுக.
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்'
- இப்பாடலடிகளில் அடியியைபைச் சுட்டுக.
A.
வானாகி — மண்ணாகி
B.
வளியாகி — ஒளியாகி
C.
வானாகி — ஊனாகி
D.
ஊனாகி — உயிராகி.
Answer:
C.
வானாகி — ஊனாகி
2.
'இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பைப் படாஅ தவர்' குறளில் அமைந்துள்ளவாறு பொருத்தமானதைக் குறியிடு :
இடும்பைப் படாஅ தவர்' குறளில் அமைந்துள்ளவாறு பொருத்தமானதைக் குறியிடு :
A.
முற்று மோனை அமைந்துள்ளது
B.
முற்று எதுகை அமைந்துள்ளது
C.
முற்று இயைபு அமைந்துள்ளது
D.
இவை அனைத்தும்.
Answer:
B.
முற்று எதுகை அமைந்துள்ளது
3.
'கல்லாஅ ஒருவனை அனுப்பிச் செயல்புரிந்திடும்
எல்லாஅ வல்ல இறைவனை ஏத்துவாம்' — இப்பாடலடிகளில் கண்டுள்ளவாறு பின்வருவனவற்றுள் சரியான விடையை சுட்டுக :
எல்லாஅ வல்ல இறைவனை ஏத்துவாம்' — இப்பாடலடிகளில் கண்டுள்ளவாறு பின்வருவனவற்றுள் சரியான விடையை சுட்டுக :
A.
அடி எதுகை வந்துள்ளது
B.
சீர்எதுகை வந்துள்ளது
C.
அடிஇயைபு அமைந்துள்ளது
D.
இவை அனைத்தும்.
Answer:
D.
இவை அனைத்தும்.
4.
அயற்கூற்று குறித்து கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது ?
A.
ஒரு முதன்மை வாக்கியம் ஒரு துணை வாக்கியத்துடன் சேர்ந்து வரும்
B.
ஒருவர் கூறியதை அப்படியே கூறாமல் அயலார் கூறுவதுபோல் கூறுவதில் மேற்கோள் குறியீடு இடம் பெறாது. தன்மை, முன்னிலைப் பெயர்கள் படர்க்கைப் பெயரில் மாறி அமையும்
C.
வினாப்பொருள் தரும் வாக்கியம்
D.
ஒரு செய்தியைத் தெளிவாகத் தெரிவிக்கும் வாக்கியம்.
Answer:
B.
ஒருவர் கூறியதை அப்படியே கூறாமல் அயலார் கூறுவதுபோல் கூறுவதில் மேற்கோள் குறியீடு இடம் பெறாது. தன்மை, முன்னிலைப் பெயர்கள் படர்க்கைப் பெயரில் மாறி அமையும்
5.
தவறான சொற்றொடரை நீக்குக :
A.
நட்பாக இருந்தவன் பகைவனாக மாறினான்
B.
மணிமேகலை மேற்கண்டாள் துறவு வாழ்க்கை
C.
யானைவரும் பின்னே மணியோசை வரும் பின்னே
D.
காலையில் கதிரொளி கேணியில் கொட்டியது.
Answer:
B.
மணிமேகலை மேற்கண்டாள் துறவு வாழ்க்கை
6.
எது நேர்க்கூற்று ?
A.
'நான் பரிசு வாங்கி வருவேன்' என்று சீதா லதாவிடம் கூறினாள்
B.
மறுநாள் தான் மதுரை செல்வதாக பாரதி கூறினான்
C.
ஐயோ ! பேரறிஞர் அண்ணா மறைந்தாரே !
D.
வனஜா, கிரிஜாவிடம் தான் புத்தகம் கொண்டு வருவதாகக் கூறினாள்.
Answer:
A.
'நான் பரிசு வாங்கி வருவேன்' என்று சீதா லதாவிடம் கூறினாள்
7.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு :
'ஏவல் வழுவான் வழிநின்று வண்டார் வயலுள்
உழுவா னுலகுக் குயிர்'
'ஏவல் வழுவான் வழிநின்று வண்டார் வயலுள்
உழுவா னுலகுக் குயிர்'
A.
ஏவல் வழுவான் யார் ?
B.
ஏவல் வழுவினால் என்ன ஆகும் ?
C.
உலகினுக்கு உயிர் யார் ?
D.
உழுபவன் என்ன செய்கிறான் ?
Answer:
C.
உலகினுக்கு உயிர் யார் ?
8.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி :
கூற்று (A) : ஆ ! வானத்து விண்மீன்கள் என்னே அழகு !
காரணம் (R) : மகிழ்ச்சி, துன்பம், வியப்பு, உள்ளத்து உணர்வுகள் வெளிப்படுமாறு அமைவது உணர்ச்சி வாக்கியம்.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :
கூற்று (A) : ஆ ! வானத்து விண்மீன்கள் என்னே அழகு !
காரணம் (R) : மகிழ்ச்சி, துன்பம், வியப்பு, உள்ளத்து உணர்வுகள் வெளிப்படுமாறு அமைவது உணர்ச்சி வாக்கியம்.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு :
A.
(A) தவறு ஆனால் (R) சரி
B.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
C.
(A) மற்றும் (R) இரண்டும் சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
D.
(A) சரி, ஆனால் (R) தவறு.
Answer:
B.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
9.
'கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு' இக்குறளின்படி சீர் எதுகைக்கும் சீர் மோனைக்கும் பொதுவானது
விடாஅர் விழையும் உலகு' இக்குறளின்படி சீர் எதுகைக்கும் சீர் மோனைக்கும் பொதுவானது
A.
கெடாஅ — விடாஅர்
B.
விடார் — வழிவந்த
C.
விடாஅர் — விழையும்
D.
கேண்மையார் — கேண்மை.
Answer:
D.
கேண்மையார் — கேண்மை.
10.
'அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல' இக்குறளில் அடி எதுகையாக அமைந்தது
புறத்த புகழும் இல' இக்குறளில் அடி எதுகையாக அமைந்தது
A.
அறத்தான் — வருவதே
B.
புறத்த — புகழும்
C.
அறத்தான் — புறத்த
D.
அறத்தான் — மற்றெல்லாம்.
Answer:
C.
அறத்தான் — புறத்த
11.
பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I
1. ஆ
2. ஏ
3. ஐ
4. ஓ
பட்டியல் II
அ. அம்பு
ஆ. இரக்கம்
இ. பசு
ஈ. அழகு.
பட்டியல் I
1. ஆ
2. ஏ
3. ஐ
4. ஓ
பட்டியல் II
அ. அம்பு
ஆ. இரக்கம்
இ. பசு
ஈ. அழகு.
A.
இ அ ஈ ஆ
B.
அ இ ஆ ஈ
C.
இ ஆ ஈ அ
D.
ஈ ಇ அ ஆ.
Answer:
A.
இ அ ஈ ஆ
12.
செய்வினைச் சொற்றொடரைக் கண்டறிக:
A.
ஔவையார் மூவேந்தர்களைப் புகழ்ந்து பாடினார்
B.
மூவேந்தர்கள் ஒளவையாரால் புகழ்ந்து பாடப்பட்டனர்
C.
மூவேந்தர்களைப் புகழ்ந்து பாடினார் ஔவையார்
D.
ஔவையார் மூவேந்தர்களைப் புகழ்ந்து பாடினாரா ?
Answer:
A.
ஔவையார் மூவேந்தர்களைப் புகழ்ந்து பாடினார்
13.
பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I
1. குழந்தைக்கு தாய் உணவு ஊட்டினாள்
2. தாயால் குழந்தைக்கு உணவு ஊட்டப்பட்டது
3. தாய் உணவு உண்டாள்
4. தாய் குழந்தைக்கு உணவு ஊட்டவில்லை
பட்டியல் II
அ. எதிர்மறைத் தொடர்
ஆ. பிறவினை
இ. செயப்பாட்டு வினை
ஈ. தன்வினை.
பட்டியல் I
1. குழந்தைக்கு தாய் உணவு ஊட்டினாள்
2. தாயால் குழந்தைக்கு உணவு ஊட்டப்பட்டது
3. தாய் உணவு உண்டாள்
4. தாய் குழந்தைக்கு உணவு ஊட்டவில்லை
பட்டியல் II
அ. எதிர்மறைத் தொடர்
ஆ. பிறவினை
இ. செயப்பாட்டு வினை
ஈ. தன்வினை.
A.
ஆ ஈ இ அ
B.
ஆ இ ஈ அ
C.
அ ஆ ஈ இ
D.
இ ஈ அ ஆ.
Answer:
B.
ஆ இ ஈ அ
14.
பிறவினைச் சொற்றொடரை கண்டறிக :
A.
எழிலரசி சிலப்பதிகாரம் கற்றாள்
B.
எழிலரசி சிலப்பதிகாரம் கற்பித்தாள்
C.
எழிலரசியால் சிலப்பதிகாரம் கற்பிக்கப்பட்டது
D.
எழிலரசி சிலப்பதிகாரம் கல்லார்.
Answer:
B.
எழிலரசி சிலப்பதிகாரம் கற்பித்தாள்
15.
பட்டியல் I ல் உள்ள நூல்களை பட்டியல் II-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I நூல்
1. நளவெண்பா
2. நைடதம்
3. அறநெறிச்சாரம்
4. சகலகலாவல்லி மாலை
பட்டியல் II நூலாசிரியர்
அ. முனைப்பாடியார்
ஆ. புகழேந்தி
இ. குமரகுருபரர்
ஈ. அதிவீரராம பாண்டியர்.
பட்டியல் I நூல்
1. நளவெண்பா
2. நைடதம்
3. அறநெறிச்சாரம்
4. சகலகலாவல்லி மாலை
பட்டியல் II நூலாசிரியர்
அ. முனைப்பாடியார்
ஆ. புகழேந்தி
இ. குமரகுருபரர்
ஈ. அதிவீரராம பாண்டியர்.
A.
ஆ ஈ அ இ
B.
ஆ இ ஈ அ
C.
அ ஆ இ ஈ
D.
ஈ அ ஆ இ.
Answer:
A.
ஆ ஈ அ இ
16.
பட்டியல் I ல் உள்ள நிலங்களை பட்டியல் II-ல் உள்ள தெய்வங்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I நிலம்
1. குறிஞ்சி
2. முல்லை
3. மருதம்
4. நெய்தல்
பட்டியல் II தெய்வம்
அ. வருணன்
ஆ. இந்திரன்
இ. முருகன்
ஈ. திருமால்.
பட்டியல் I நிலம்
1. குறிஞ்சி
2. முல்லை
3. மருதம்
4. நெய்தல்
பட்டியல் II தெய்வம்
அ. வருணன்
ஆ. இந்திரன்
இ. முருகன்
ஈ. திருமால்.
A.
அ ஆ இ ஈ
B.
அ இ ஈ ஆ
C.
இ ஈ ஆ அ
D.
ஆ இ அ ஈ.
Answer:
C.
இ ஈ ஆ அ
17.
பொருந்தாத இணையைக் கண்டறிக :
A.
புவி — ஞாலம்
B.
இகல் — பகை
C.
விரை — தளர
D.
அல் — இருள்.
Answer:
C.
விரை — தளர
18.
பிரித்து எழுதுக : காட்டுக்கோழி
A.
காட்டு + கோழி
B.
காடு + கோழி
C.
கா + கோழி
D.
கான் + கோழி.
Answer:
B.
காடு + கோழி
19.
பிரித்து எழுதுக : முன்னரண்
A.
முன் + அரண்
B.
முன்பு + அரண்
C.
முன்னர் + அரண்
D.
முள் + அரண்.
Answer:
A.
முன் + அரண்
20.
பொருந்தாத இணையைக் கண்டறிக :
A.
முல்லைப்பாட்டு — மதுரைக்காஞ்சி
B.
இன்னா நாற்பது — பட்டினப்பாலை
C.
இன்னிலை — பழமொழி
D.
தமிழ்மறை — நான்மணிக் கடிகை.
Answer:
B.
இன்னா நாற்பது — பட்டினப்பாலை
21.
கீழ்க்காணும் பாடலிலிருந்து எடுக்கப்பட்ட சொற்களுள் எது எதிர்ச்சொல் இல்லை ?
'மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும்
உயர்நெடுங்குன்றம் படுமழை தலைஇச்
சுரநனி இனிய ஆகுக தில்ல:
அறநெறி இதுவெனத் தெளிந்த என்,
பிறைநுதற் குறுமகள் போகிய சுரனே'
'மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும்
உயர்நெடுங்குன்றம் படுமழை தலைஇச்
சுரநனி இனிய ஆகுக தில்ல:
அறநெறி இதுவெனத் தெளிந்த என்,
பிறைநுதற் குறுமகள் போகிய சுரனே'
A.
உயர்நெடுங்குன்றம் x குன்று
B.
சுரம் x பாலை
C.
அறநெறி x தீநெறி
D.
இனிய x இன்னாத.
Answer:
B.
சுரம் x பாலை
22.
'பயில்' என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றை காண்க.
A.
பயின்ற
B.
பயின்று
C.
பயிலல்
D.
பயின்றான்.
Answer:
D.
பயின்றான்.
23.
'நல்லவாய் நாடி நடக்குமாம் இல்லார்க்கு' என்னும் அடியில் 'நாடி' என்னும் சொல்லின் வினைமுற்று எது?
A.
நாடுதல்
B.
நாடு
C.
நாடியவன்
D.
நாடினான்.
Answer:
D.
நாடினான்.
24.
பொருந்தாத இணையைக் கண்டறிக:
A.
அவகாசம் — நாள் தள்ளீடு
B.
சமூகதீர்வு — அமைப்பு
C.
மகாசபை — பேரவை
D.
மகஜர் — விண்ணப்பம்.
Answer:
B.
சமூகதீர்வு — அமைப்பு
25.
பொருந்தாத இணையைக் கண்டறிக
A.
அரி — திருமால்
B.
உரம் — சக்தி
C.
ஒதி — கலங்கி
D.
கவி — கிழமை.
Answer:
D.
கவி — கிழமை.