TNPSC Group 4 2012
General Tamil Questions 76 to 100
1.
நீரோட்டக யமக அந்தாதி நூலின் சிறப்பு யாது ?
A.
சிலேடையில் பாடுவது
B.
இதழ்கள் ஒன்றோடொன்று பொருந்தாமல் வரும் சொற்களை அமைத்துப் பாடுவது
C.
மழையினை ஏற்படுத்துவது
D.
உவமை, அலங்காரங்களில் தனிச்சிறப்புடையது.
Answer:
B.
இதழ்கள் ஒன்றோடொன்று பொருந்தாமல் வரும் சொற்களை அமைத்துப் பாடுவது
2.
மாதானுபங்கி என பெயருடையவர் யார் ?
A.
திருமங்கையாழ்வார்
B.
நக்கீரர்
C.
திருவள்ளுவர்
D.
பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்.
Answer:
C.
திருவள்ளுவர்
3.
பிரித்து எழுதுக : தாதூதி
A.
தா + தூது + ஊதி
B.
தா + ஊதி
C.
தாது + தூது + ஊதி
D.
தாது + ஊதி.
Answer:
D.
தாது + ஊதி.
4.
பொருந்தாத இணையைக் கண்டறிக:
A.
Redo — மீண்டும் செய்
B.
Recur — திரும்பவும் நிகழ்
C.
Rectum — மலக்குடல்
D.
Rectal — சரிக்கட்டக்கூடிய.
Answer:
D.
Rectal — சரிக்கட்டக்கூடிய.
5.
'கூத்தராற்றுப்பெடை' எனும் அடைமொழியால் அழைக்கப்படும் நூல் யாது ?
A.
முல்லைப்பாட்டு
B.
குறிஞ்சிப்பாட்டு
C.
மலைபடுகடாம்
D.
பட்டினப்பாலை.
Answer:
C.
மலைபடுகடாம்
6.
பட்டியில் I ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியில் I சொல்
1. நட்டோர்
2. நணி
3. பாயல்
4. மதுகை
பட்டியல் II பொருள்
அ. அருகில்
ஆ. படுக்கை
இ. வலிமை
ஈ. நண்பர்.
பட்டியில் I சொல்
1. நட்டோர்
2. நணி
3. பாயல்
4. மதுகை
பட்டியல் II பொருள்
அ. அருகில்
ஆ. படுக்கை
இ. வலிமை
ஈ. நண்பர்.
A.
ஈ ஆ இ அ
B.
ஈ அ ஆ இ
C.
ஆ இ ஈ அ
D.
அ ஈ ஆ இ.
Answer:
B.
ஈ அ ஆ இ
7.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு :
'வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே'
'வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே'
A.
வள்ளுவனைப் பெற்றது யார் ?
B.
வையகம் யாரைப் பெற்றது ?
C.
வையகம் புகழ்பெற்றது எதனால் ?
D.
வையகம் பெற்ற புகழ் எது ?
Answer:
C.
வையகம் புகழ்பெற்றது எதனால் ?
8.
'ஆற்றீர்' - வேர்ச்சொல்லை தேர்வு செய்
A.
ஆற்றி
B.
ஆற்றிய
C.
ஆற்று
D.
ஆற்றுதல்.
Answer:
C.
ஆற்று
9.
பின்ருவனவற்றுள் மோனைத் தொடைக்குத் தொடர்பில்லாதது எது ?
A.
முதலெழுத்து ஒன்றி வருவது
B.
இரண்டாவது எழுத்தும் ஒன்றி வருவது
C.
முதல் எழுத்து இனவெழுத்தாக இருப்பது
D.
அடிகளிலும் சீர்களிலும் அமையக் கூடியது.
Answer:
B.
இரண்டாவது எழுத்தும் ஒன்றி வருவது
10.
சரியாக பொருந்தியுள்ளது எது?
A.
செந்தாமரை வந்தாள் — உவமைத்தொகை
B.
நீர்வேலி — உருவகம்
C.
குணமிலார் — பண்புத்தொகை
D.
குருநிறம் — உரிச்சொற்றொடர்.
Answer:
B.
நீர்வேலி — உருவகம்
11.
பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I
1. சிற்பியால் சிற்பம் செதுக்கப்பட்டது
2. சிற்பி சிற்பத்தைச் செதுக்கினார்
3. சிற்பி சிற்பத்தைச் செதுக்குவாரா ?
4. என்னே ! சிற்பியின் கை வண்ணம் !
பட்டியல் II
அ. வினா வாக்கியம்
ஆ. உணர்ச்சி வாக்கியம்
இ. செயப்பாட்டு வினை
ஈ. செய்வினை.
பட்டியல் I
1. சிற்பியால் சிற்பம் செதுக்கப்பட்டது
2. சிற்பி சிற்பத்தைச் செதுக்கினார்
3. சிற்பி சிற்பத்தைச் செதுக்குவாரா ?
4. என்னே ! சிற்பியின் கை வண்ணம் !
பட்டியல் II
அ. வினா வாக்கியம்
ஆ. உணர்ச்சி வாக்கியம்
இ. செயப்பாட்டு வினை
ஈ. செய்வினை.
A.
ஈ அ இ ஆ
B.
இ ஈ அ ஆ
C.
ஆ ஈ அ இ
D.
அ ஆ இ ஈ.
Answer:
B.
இ ஈ அ ஆ
12.
பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I
1. ஆர
2. ஆற
3. ஊர
4. ஊற
பட்டியல் II
அ. தணிய
ஆ. நிறைய
இ. சுரக்க
ஈ. நகர.
பட்டியல் I
1. ஆர
2. ஆற
3. ஊர
4. ஊற
பட்டியல் II
அ. தணிய
ஆ. நிறைய
இ. சுரக்க
ஈ. நகர.
A.
அ ஆ இ ஈ
B.
ஆ இ ஈ அ
C.
இ ஆ அ ஈ
D.
ஆ அ ஈ இ.
Answer:
D.
ஆ அ ஈ இ.
13.
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
குரவர் — குறவர்
குரவர் — குறவர்
A.
குலம் — புலவர்
B.
ஆசிரியர் — ஓர் இனத்தார்
C.
புலவர் — குலம்
D.
ஓர் இனத்தார் — புரவலர்.
Answer:
B.
ஆசிரியர் — ஓர் இனத்தார்
14.
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
வலை — வளை — வழை
வலை — வளை — வழை
A.
சிலந்தி வாழிடம் — துவாரம் — புன்னை மரம்
B.
எலி வாழிடம் — பள்ளம் — வாழை மரம்
C.
நண்டு வாழிடம் — குழி — தென்னை மரம்
D.
ஆமை வாழிடம் — கடல் — பனை மரம்.
Answer:
A.
சிலந்தி வாழிடம் — துவாரம் — புன்னை மரம்
15.
'இயைந்தவர்' இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.
A.
இயைந்த
B.
இயை
C.
இயைந்து
D.
இயைதல்.
Answer:
B.
இயை
16.
'கற்றவன்' இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.
A.
கற்க
B.
கற்று
C.
கல்
D.
கள்.
Answer:
C.
கல்
17.
சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்க :
A.
புரட்சிப் பூக்கள் பூத்துக் குலுங்கிய புதுவையில் புரட்சி கவிஞர் பாரதிதாசன் தோன்றினார்
B.
புரட்சிப் பூக்கள் பூத்து குலுங்கிய புதுவையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தோன்றினார்
C.
புரட்சி பூக்கள் பூத்துக் குலுங்கிய புதுவையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தோன்றினார்
D.
புரட்சிப் பூக்கள் பூத்துக் குலுங்கிய புதுவையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தோன்றினார்.
Answer:
D.
புரட்சிப் பூக்கள் பூத்துக் குலுங்கிய புதுவையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தோன்றினார்.
18.
வழூஉச் சொற்கள் நீக்கிய வாக்கியத்தை தேர்வு செய்க :
A.
புண்ணாக்கு விற்பனையில் பதட்டம் அடைந்தான்
B.
பிண்ணாக்கு விற்பனையில் பதட்டம் அடைந்தான்
C.
வேர்வை சிந்த சுவற்றில் ஏறினான்
D.
வியர்வை சிந்த சுவரில் ஏறினான்.
Answer:
D.
வியர்வை சிந்த சுவரில் ஏறினான்.
19.
பட்டியல் I ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I சொல்
1. புயல்
2. புரை
3. சலம்
4. துப்பு
பட்டியல் II பொருள்
அ. உணவு
ஆ. வஞ்சனை
இ. குற்றம்
ஈ. மேகம்.
பட்டியல் I சொல்
1. புயல்
2. புரை
3. சலம்
4. துப்பு
பட்டியல் II பொருள்
அ. உணவு
ஆ. வஞ்சனை
இ. குற்றம்
ஈ. மேகம்.
A.
அ ஈ இ ஆ
B.
ஈ இ ஆ அ
C.
ஆ அ இ ஈ
D.
இ ஆ அ ஈ.
Answer:
B.
ஈ இ ஆ அ
20.
பட்டியல் I ல் உள்ள நூல்களை பட்டியல் II-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I நூல்
1. திருக்குற்றாலக் குறவஞ்சி
2. இராவண காவியம்
3. மீனாட்சியம்மைக் குறம்
4. தில்லைக்கலம்பகம்
பட்டியல் II நூலாசிரியர்
அ. புலவர் குழந்தை
ஆ. குமரகுருபரர்
இ. இரட்டைப்புலவர்
ஈ. திரிகூட இராசப்பக்கவிராயர்.
பட்டியல் I நூல்
1. திருக்குற்றாலக் குறவஞ்சி
2. இராவண காவியம்
3. மீனாட்சியம்மைக் குறம்
4. தில்லைக்கலம்பகம்
பட்டியல் II நூலாசிரியர்
அ. புலவர் குழந்தை
ஆ. குமரகுருபரர்
இ. இரட்டைப்புலவர்
ஈ. திரிகூட இராசப்பக்கவிராயர்.
A.
ஈ அ ஆ இ
B.
அ ஈ இ ஆ
C.
ஈ ஆ அ இ
D.
இ ஆ அ ஈ.
Answer:
A.
ஈ அ ஆ இ
21.
'பழிநாணுவானை' - பெயர்சொல்லின் வகையறிக :
A.
தொழிற்பெயர்
B.
பண்புப்பெயர்
C.
பொருட்பெயர்
D.
வினையாலணையும் பெயர்.
Answer:
D.
வினையாலணையும் பெயர்.
22.
பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I
1. புரட்சிக்கொடி திருக்குறள் கற்றாள்
2. புரட்சிக்கொடி திருக்குறள் கற்பித்தாள்
3. புரட்சிக்கொடியால் திருக்குறள் கற்பிக்கப்பட்டது.
4. புரட்சிக்கொடி திருக்குறள் கல்லார்
பட்டியல் II
அ. பிறவினைச் சொற்றொடர்
ஆ. செயப்பாட்டு வினைச்சொற்றொடர்
இ. தன்வினைச் சொற்றொடர்
ஈ. எதிர்மறைக் தொடர்.
பட்டியல் I
1. புரட்சிக்கொடி திருக்குறள் கற்றாள்
2. புரட்சிக்கொடி திருக்குறள் கற்பித்தாள்
3. புரட்சிக்கொடியால் திருக்குறள் கற்பிக்கப்பட்டது.
4. புரட்சிக்கொடி திருக்குறள் கல்லார்
பட்டியல் II
அ. பிறவினைச் சொற்றொடர்
ஆ. செயப்பாட்டு வினைச்சொற்றொடர்
இ. தன்வினைச் சொற்றொடர்
ஈ. எதிர்மறைக் தொடர்.
A.
அ இ ஈ ஆ
B.
இ ஈ அ ஆ
C.
இ அ ஆ ஈ
D.
ஈ அ இ ஆ.
Answer:
C.
இ அ ஆ ஈ
23.
பட்டியல் I ல் உள்ள நிலங்களை பட்டியல் II-ல் உள்ள சிறுபொழுதுகளுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு
பட்டியல் I நிலம்
1. குறிஞ்சி
2. முல்லை
3. மருதம்
4. நெய்தல்
பட்டியல் II சிறுபொழுது
அ. மாலை
ஆ. வைகறை
இ. ஏற்பாடு
ஈ. யாமம்.
பட்டியல் I நிலம்
1. குறிஞ்சி
2. முல்லை
3. மருதம்
4. நெய்தல்
பட்டியல் II சிறுபொழுது
அ. மாலை
ஆ. வைகறை
இ. ஏற்பாடு
ஈ. யாமம்.
A.
அ ஈ இ ஆ
B.
இ ஆ அ ஈ
C.
அ ஆ ஈ இ
D.
ஈ அ ஆ இ.
Answer:
D.
ஈ அ ஆ இ.
24.
பட்டியல் I ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு :
பட்டியல் I சொல்
1. கணம்
2. மொய்ம்பு
3. அலமரல்
4. வேள்
பட்டியல் II பொருள்
அ. வருந்துதல்
ஆ. விருப்பம்
இ. வலிமை
ஈ. கூட்டம்.
பட்டியல் I சொல்
1. கணம்
2. மொய்ம்பு
3. அலமரல்
4. வேள்
பட்டியல் II பொருள்
அ. வருந்துதல்
ஆ. விருப்பம்
இ. வலிமை
ஈ. கூட்டம்.
A.
அ ஆ ஈ இ
B.
ஆ ஈ இ அ
C.
ஈ இ அ ஆ
D.
ஈ அ இ ஆ.
Answer:
C.
ஈ இ அ ஆ
25.
பின்வருவனவற்றுள் வீரமாமுனிவர் எழுதாத நூல் எது ?
A.
சத்திய வேத கீர்த்தனை
B.
திருக்காவலூர்க் கலம்பகம்
C.
அழுங்கல் அந்தாதி
D.
அடைக்கல மாலை.
Answer:
A.
சத்திய வேத கீர்த்தனை