TNPSC Group 4 2012
General Tamil Questions 1 to 25
1.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
கூற்று (A): திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவர்.
காரணம் (R): ஒரு செய்தியைத் தெளிவாகத் தெரிவிக்கும் வாக்கியம் செய்தி வாக்கியம்.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு:
கூற்று (A): திருக்குறளை எழுதியவர் திருவள்ளுவர்.
காரணம் (R): ஒரு செய்தியைத் தெளிவாகத் தெரிவிக்கும் வாக்கியம் செய்தி வாக்கியம்.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு:
Answer:
B.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
2.
பிரித்து எழுதுக: சின்னாள்
Answer:
B.
சில + நாள்
3.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
'அறந்தலைப்பட்ட நெல்லியம் பசுங்காய்'
'அறந்தலைப்பட்ட நெல்லியம் பசுங்காய்'
Answer:
C.
நெல்லிக்காயின் குணம் என்ன?
4.
பொருந்தாத இணையைக் கண்டறிக:
Answer:
C.
தம் கண்ணிற் — செய்யாறு மாணாவினை
5.
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
Answer:
B.
கொலையில் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்
களைகட் டதனொடு நேர்
6.
பிரித்து எழுதுக: நன்னூல்
Answer:
C.
நன்மை + நூல்
7.
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
Answer:
C.
தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை
தமிழ்த்தொண்டன் பாரதிதான் செத்ததுண்டோ!
தமிழ்த்தொண்டன் பாரதிதான் செத்ததுண்டோ!
8.
'மறவன்' - பெயர்ச் சொல்லின் வகை அறிக.
Answer:
A.
குடிப்பெயர்
9.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
"உறுவினை காய்வோன் உயர்வு வேண்டல் பொய்"
"உறுவினை காய்வோன் உயர்வு வேண்டல் பொய்"
Answer:
D.
யார் உயர்வை விரும்புவது பொய்யாகும்?
10.
'நீடு துயில் நீக்க பாட வந்த நிலா' என்ற தொடரால் அழைக்கப் பெறுபவர்
Answer:
C.
பாரதியார்
11.
பட்டியல் I ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| சொல் | பொருள் |
| 1. பொலம் | அ. இரக்கம் |
| 2. வேரல் | ஆ. அழகு |
| 3. நொய்மை | இ. மூங்கில் |
| 4. செந்தண்மை | ஈ. மென்மை |
Answer:
C.
ஆ இ ஈ அ
12.
எது உணர்ச்சி வாக்கியம் இல்லை?
Answer:
C.
உண்மைக்கு அழிவில்லை அல்லவா?
13.
பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| 1. பை | அ. நுரை |
| 2. பூ | ஆ. அளவு |
| 3. பே | இ. கூர்மை |
| 4. மா | ஈ. பாம்பின் படம் |
Answer:
A.
ஈ இ அ ஆ
14.
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
Answer:
C.
கடலில் கரைத்த பெருங்காயம் போல
15.
சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
Answer:
B.
பள்ளி என்பது பாடநூல்களைக் கொண்டு அறிவை விதைக்கும் களம் ஆகும்
16.
ஐந்திலக்கணம் பேசும் நூல்
Answer:
C.
வீரசோழியம்
17.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
"நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்"
"நன்றிக்கு வித்தாகும் நல்லொழுக்கம்"
Answer:
A.
நன்றிக்கு வித்தாவது எது?
18.
இலைமறை காய் போல
Answer:
B.
மறைபொருள்
19.
'இன்ப மிகுதி' — உவமையால் விளக்கப்பெறும் பொருத்தமானப் பொருளைத் தேர்ந்தெடுக்க:
Answer:
C.
பழம் நழுவிப் பாலில் விழுந்தது போல
20.
பிரித்து எழுதுக: வெற்றிலை
Answer:
C.
வெறுமை + இலை
21.
வேளாண்மை வேதம் எனப்படுவது
Answer:
D.
நாலடியார்
22.
வீரயுகப் பாடல்கள் என்ற சிறப்புக்குரிய நூல் எது?
Answer:
B.
சங்க இலக்கியம்
23.
'செயற்குஅரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்குஅரிய செய்கலா தார்' - தவறான கூற்றைச் சுட்டுக
செயற்குஅரிய செய்கலா தார்' - தவறான கூற்றைச் சுட்டுக
Answer:
A.
அடி இயைபு மட்டும் வந்துள்ளது
24.
பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| 1. உழைப்பின் வாரா | அ. உணவு முறை அமைய வேண்டும் |
| 2. உழைப்பிற்குத் தகுந்த | ஆ. உடம்பை வளர்ப்போம் |
| 3. உடற்பயிற்சி செய்தால் | இ. உறுதிகள் உளவோ? |
| 4. உடற்கல்வி பெற்று | ஈ. உடல்நலம் பெறும் |
Answer:
C.
இ அ ஈ ஆ
25.
தவறான சொற்றொடரை நீக்குக:
Answer:
B.
பக்கம் பார்த்து அக்கம் பேசு