GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 26 to 50

26.  'வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்'
- இப்பாடலடிகளில் அடியியைபைச் சுட்டுக.
Answer: C.   வானாகி — ஊனாகி
27.  'இடும்பைக்கு இடும்பைப் படுப்பர் இடும்பைக்கு
இடும்பைப் படாஅ தவர்' - குறளில் அமைந்துள்ளவாறு பொருத்தமானதைக் குறியிடு:
Answer: B.   முற்று எதுகை அமைந்துள்ளது
28.  'கல்லாஅ ஒருவனை அனுப்பிச் செயல்புரிந்திடும்
எல்லாஅ வல்ல இறைவனை ஏத்துவாம்' — இப்பாடலடிகளில் கண்டுள்ளவாறு பின்வருவனவற்றுள் சரியான விடையை சுட்டுக:
Answer: D.   இவை அனைத்தும்
29.  அயற்கூற்று குறித்து கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?
Answer: B.   ஒருவர் கூறியதை அப்படியே கூறாமல் அயலார் கூறுவதுபோல் கூறுவதில் மேற்கோள் குறியீடு இடம் பெறாது. தன்மை, முன்னிலைப் பெயர்கள் படர்க்கைப் பெயரில் மாறி அமையும்
30.  தவறான சொற்றொடரை நீக்குக:
Answer: B.   மணிமேகலை மேற்கண்டாள் துறவு வாழ்க்கை
31.  எது நேர்க்கூற்று?
Answer: A.   'நான் பரிசு வாங்கி வருவேன்' என்று சீதா லதாவிடம் கூறினாள்
32.  விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
'ஏவல் வழுவான் வழிநின்று வண்டார் வயலுள்
உழுவா னுலகுக் குயிர்'
Answer: C.   உலகினுக்கு உயிர் யார்?
33.  கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
கூற்று (A): ஆ! வானத்து விண்மீன்கள் என்னே அழகு!
காரணம் (R): மகிழ்ச்சி, துன்பம், வியப்பு, உள்ளத்து உணர்வுகள் வெளிப்படுமாறு அமைவது உணர்ச்சி வாக்கியம்.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு:
Answer: B.   (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
34.  'கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு' - இக்குறளின்படி சீர் எதுகைக்கும் சீர் மோனைக்கும் பொதுவானது
Answer: D.   கேண்மையார் — கேண்மை
35.  'அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல' - இக்குறளில் அடி எதுகையாக அமைந்தது
Answer: C.   அறத்தான் — புறத்த
36.  பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
1. ஆ அ. அம்பு
2. ஏ ஆ. இரக்கம்
3. ஐ இ. பசு
4. ஓ ஈ. அழகு
Answer: A.   இ அ ஈ ஆ
37.  செய்வினைச் சொற்றொடரைக் கண்டறிக:
Answer: A.   ஔவையார் மூவேந்தர்களைப் புகழ்ந்து பாடினார்
38.  பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
1. குழந்தைக்கு தாய் உணவு ஊட்டினாள் அ. எதிர்மறைத் தொடர்
2. தாயால் குழந்தைக்கு உணவு ஊட்டப்பட்டது ஆ. பிறவினை
3. தாய் உணவு உண்டாள் இ. செயப்பாட்டு வினை
4. தாய் குழந்தைக்கு உணவு ஊட்டவில்லை ஈ. தன்வினை
Answer: B.   ஆ இ ஈ அ
39.  பிறவினைச் சொற்றொடரை கண்டறிக:
Answer: B.   எழிலரசி சிலப்பதிகாரம் கற்பித்தாள்
40.  பட்டியல் I ல் உள்ள நூல்களை பட்டியல் II-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
நூல் நூலாசிரியர்
1. நளவெண்பா அ. முனைப்பாடியார்
2. நைடதம் ஆ. புகழேந்தி
3. அறநெறிச்சாரம் இ. குமரகுருபரர்
4. சகலகலாவல்லி மாலை ஈ. அதிவீரராம பாண்டியர்
Answer: A.   ஆ ஈ அ இ
41.  பட்டியல் I ல் உள்ள நிலங்களை பட்டியல் II-ல் உள்ள தெய்வங்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
நிலம் தெய்வம்
1. குறிஞ்சி அ. வருணன்
2. முல்லை ஆ. இந்திரன்
3. மருதம் இ. முருகன்
4. நெய்தல் ஈ. திருமால்
Answer: C.   இ ஈ ஆ அ
42.  பொருந்தாத இணையைக் கண்டறிக:
Answer: C.   விரை — தளர
43.  பிரித்து எழுதுக: காட்டுக்கோழி
Answer: B.   காடு + கோழி
44.  பிரித்து எழுதுக: முன்னரண்
Answer: A.   முன் + அரண்
45.  பொருந்தாத இணையைக் கண்டறிக:
Answer: B.   இன்னா நாற்பது — பட்டினப்பாலை
46.  கீழ்க்காணும் பாடலிலிருந்து எடுக்கப்பட்ட சொற்களுள் எது எதிர்ச்சொல் இல்லை?
'மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும்
உயர்நெடுங்குன்றம் படுமழை தலைஇச்
சுரநனி இனிய ஆகுக தில்ல:
அறநெறி இதுவெனத் தெளிந்த என்,
பிறைநுதற் குறுமகள் போகிய சுரனே'
Answer: B.   சுரம் x பாலை
47.  'பயில்' - என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றை காண்க.
Answer: D.   பயின்றான்
48.  'நல்லவாய் நாடி நடக்குமாம் இல்லார்க்கு' - என்னும் அடியில் 'நாடி' என்னும் சொல்லின் வினைமுற்று எது?
Answer: D.   நாடினான்
49.  பொருந்தாத இணையைக் கண்டறிக:
Answer: B.   சமூகதீர்வு — அமைப்பு
50.  பொருந்தாத இணையைக் கண்டறிக:
Answer: D.   கவி — கிழமை
;