TNPSC Group 4 2012
General Tamil Questions 26 to 50
26.
'வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்'
- இப்பாடலடிகளில் அடியியைபைச் சுட்டுக.
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்'
- இப்பாடலடிகளில் அடியியைபைச் சுட்டுக.
Answer:
C.
வானாகி — ஊனாகி
27.
'இடும்பைக்கு இடும்பைப் படுப்பர் இடும்பைக்கு
இடும்பைப் படாஅ தவர்' - குறளில் அமைந்துள்ளவாறு பொருத்தமானதைக் குறியிடு:
இடும்பைப் படாஅ தவர்' - குறளில் அமைந்துள்ளவாறு பொருத்தமானதைக் குறியிடு:
Answer:
B.
முற்று எதுகை அமைந்துள்ளது
28.
'கல்லாஅ ஒருவனை அனுப்பிச் செயல்புரிந்திடும்
எல்லாஅ வல்ல இறைவனை ஏத்துவாம்' — இப்பாடலடிகளில் கண்டுள்ளவாறு பின்வருவனவற்றுள் சரியான விடையை சுட்டுக:
எல்லாஅ வல்ல இறைவனை ஏத்துவாம்' — இப்பாடலடிகளில் கண்டுள்ளவாறு பின்வருவனவற்றுள் சரியான விடையை சுட்டுக:
Answer:
D.
இவை அனைத்தும்
29.
அயற்கூற்று குறித்து கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?
Answer:
B.
ஒருவர் கூறியதை அப்படியே கூறாமல் அயலார் கூறுவதுபோல் கூறுவதில் மேற்கோள் குறியீடு இடம் பெறாது. தன்மை, முன்னிலைப் பெயர்கள் படர்க்கைப் பெயரில் மாறி அமையும்
30.
தவறான சொற்றொடரை நீக்குக:
Answer:
B.
மணிமேகலை மேற்கண்டாள் துறவு வாழ்க்கை
31.
எது நேர்க்கூற்று?
Answer:
A.
'நான் பரிசு வாங்கி வருவேன்' என்று சீதா லதாவிடம் கூறினாள்
32.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
'ஏவல் வழுவான் வழிநின்று வண்டார் வயலுள்
உழுவா னுலகுக் குயிர்'
'ஏவல் வழுவான் வழிநின்று வண்டார் வயலுள்
உழுவா னுலகுக் குயிர்'
Answer:
C.
உலகினுக்கு உயிர் யார்?
33.
கீழ்க்கண்ட வாக்கியங்களைக் கவனி:
கூற்று (A): ஆ! வானத்து விண்மீன்கள் என்னே அழகு!
காரணம் (R): மகிழ்ச்சி, துன்பம், வியப்பு, உள்ளத்து உணர்வுகள் வெளிப்படுமாறு அமைவது உணர்ச்சி வாக்கியம்.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு:
கூற்று (A): ஆ! வானத்து விண்மீன்கள் என்னே அழகு!
காரணம் (R): மகிழ்ச்சி, துன்பம், வியப்பு, உள்ளத்து உணர்வுகள் வெளிப்படுமாறு அமைவது உணர்ச்சி வாக்கியம்.
கீழே குறிப்பிட்டுள்ள குறியீட்டில் சரியான விடையைத் தேர்ந்தெடு:
Answer:
B.
(A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
34.
'கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை
விடாஅர் விழையும் உலகு' - இக்குறளின்படி சீர் எதுகைக்கும் சீர் மோனைக்கும் பொதுவானது
விடாஅர் விழையும் உலகு' - இக்குறளின்படி சீர் எதுகைக்கும் சீர் மோனைக்கும் பொதுவானது
Answer:
D.
கேண்மையார் — கேண்மை
35.
'அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல' - இக்குறளில் அடி எதுகையாக அமைந்தது
புறத்த புகழும் இல' - இக்குறளில் அடி எதுகையாக அமைந்தது
Answer:
C.
அறத்தான் — புறத்த
36.
பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| 1. ஆ | அ. அம்பு |
| 2. ஏ | ஆ. இரக்கம் |
| 3. ஐ | இ. பசு |
| 4. ஓ | ஈ. அழகு |
Answer:
A.
இ அ ஈ ஆ
37.
செய்வினைச் சொற்றொடரைக் கண்டறிக:
Answer:
A.
ஔவையார் மூவேந்தர்களைப் புகழ்ந்து பாடினார்
38.
பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| 1. குழந்தைக்கு தாய் உணவு ஊட்டினாள் | அ. எதிர்மறைத் தொடர் |
| 2. தாயால் குழந்தைக்கு உணவு ஊட்டப்பட்டது | ஆ. பிறவினை |
| 3. தாய் உணவு உண்டாள் | இ. செயப்பாட்டு வினை |
| 4. தாய் குழந்தைக்கு உணவு ஊட்டவில்லை | ஈ. தன்வினை |
Answer:
B.
ஆ இ ஈ அ
39.
பிறவினைச் சொற்றொடரை கண்டறிக:
Answer:
B.
எழிலரசி சிலப்பதிகாரம் கற்பித்தாள்
40.
பட்டியல் I ல் உள்ள நூல்களை பட்டியல் II-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| நூல் | நூலாசிரியர் |
| 1. நளவெண்பா | அ. முனைப்பாடியார் |
| 2. நைடதம் | ஆ. புகழேந்தி |
| 3. அறநெறிச்சாரம் | இ. குமரகுருபரர் |
| 4. சகலகலாவல்லி மாலை | ஈ. அதிவீரராம பாண்டியர் |
Answer:
A.
ஆ ஈ அ இ
41.
பட்டியல் I ல் உள்ள நிலங்களை பட்டியல் II-ல் உள்ள தெய்வங்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| நிலம் | தெய்வம் |
| 1. குறிஞ்சி | அ. வருணன் |
| 2. முல்லை | ஆ. இந்திரன் |
| 3. மருதம் | இ. முருகன் |
| 4. நெய்தல் | ஈ. திருமால் |
Answer:
C.
இ ஈ ஆ அ
42.
பொருந்தாத இணையைக் கண்டறிக:
Answer:
C.
விரை — தளர
43.
பிரித்து எழுதுக: காட்டுக்கோழி
Answer:
B.
காடு + கோழி
44.
பிரித்து எழுதுக: முன்னரண்
Answer:
A.
முன் + அரண்
45.
பொருந்தாத இணையைக் கண்டறிக:
Answer:
B.
இன்னா நாற்பது — பட்டினப்பாலை
46.
கீழ்க்காணும் பாடலிலிருந்து எடுக்கப்பட்ட சொற்களுள் எது எதிர்ச்சொல் இல்லை?
'மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும்
உயர்நெடுங்குன்றம் படுமழை தலைஇச்
சுரநனி இனிய ஆகுக தில்ல:
அறநெறி இதுவெனத் தெளிந்த என்,
பிறைநுதற் குறுமகள் போகிய சுரனே'
'மள்ளர் கொட்டின் மஞ்ஞை ஆலும்
உயர்நெடுங்குன்றம் படுமழை தலைஇச்
சுரநனி இனிய ஆகுக தில்ல:
அறநெறி இதுவெனத் தெளிந்த என்,
பிறைநுதற் குறுமகள் போகிய சுரனே'
Answer:
B.
சுரம் x பாலை
47.
'பயில்' - என்னும் வேர்ச்சொல்லின் வினைமுற்றை காண்க.
Answer:
D.
பயின்றான்
48.
'நல்லவாய் நாடி நடக்குமாம் இல்லார்க்கு' - என்னும் அடியில் 'நாடி' என்னும் சொல்லின் வினைமுற்று எது?
Answer:
D.
நாடினான்
49.
பொருந்தாத இணையைக் கண்டறிக:
Answer:
B.
சமூகதீர்வு — அமைப்பு
50.
பொருந்தாத இணையைக் கண்டறிக:
Answer:
D.
கவி — கிழமை