GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 76 to 100

76.  நீரோட்டக யமக அந்தாதி - நூலின் சிறப்பு யாது?
Answer: B.   இதழ்கள் ஒன்றோடொன்று பொருந்தாமல் வரும் சொற்களை அமைத்துப் பாடுவது
77.  மாதானுபங்கி என பெயருடையவர் யார்?
Answer: C.   திருவள்ளுவர்
78.  பிரித்து எழுதுக: தாதூதி
Answer: D.   தாது + ஊதி
79.  பொருந்தாத இணையைக் கண்டறிக:
Answer: D.   Rectal — சரிக்கட்டக்கூடிய
80.  'கூத்தராற்றுப்பெடை' எனும் அடைமொழியால் அழைக்கப்படும் நூல் யாது?
Answer: C.   மலைபடுகடாம்
81.  பட்டியல் I ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
சொல் பொருள்
1. நட்டோர் அ. அருகில்
2. நணி ஆ. படுக்கை
3. பாயல் இ. வலிமை
4. மதுகை ஈ. நண்பர்
Answer: B.   ஈ அ ஆ இ
82.  விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
'வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே'
Answer: C.   வையகம் புகழ்பெற்றது எதனால்?
83.  'ஆற்றீர்' - வேர்ச்சொல்லை தேர்வு செய்
Answer: C.   ஆற்று
84.  பின்ருவனவற்றுள் மோனைத் தொடைக்குத் தொடர்பில்லாதது எது?
Answer: B.   இரண்டாவது எழுத்தும் ஒன்றி வருவது
85.  சரியாக பொருந்தியுள்ளது எது?
Answer: B.   நீர்வேலி — உருவகம்
86.  பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
1. சிற்பியால் சிற்பம் செதுக்கப்பட்டது அ. வினா வாக்கியம்
2. சிற்பி சிற்பத்தைச் செதுக்கினார் ஆ. உணர்ச்சி வாக்கியம்
3. சிற்பி சிற்பத்தைச் செதுக்குவாரா? இ. செயப்பாட்டு வினை
4. என்னே! சிற்பியின் கை வண்ணம்! ஈ. செய்வினை
Answer: B.   இ ஈ அ ஆ
87.  பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
1. ஆர அ. தணிய
2. ஆற ஆ. நிறைய
3. ஊர இ. சுரக்க
4. ஊற ஈ. நகர
Answer: D.   ஆ அ ஈ இ
88.  ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
குரவர் — குறவர்
Answer: B.   ஆசிரியர் — ஓர் இனத்தார்
89.  ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
வலை — வளை — வழை
Answer: A.   சிலந்தி வாழிடம் — துவாரம் — புன்னை மரம்
90.  'இயைந்தவர்' — இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.
Answer: B.   இயை
91.  'கற்றவன்' — இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.
Answer: C.   கல்
92.  சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்க:
Answer: D.   புரட்சிப் பூக்கள் பூத்துக் குலுங்கிய புதுவையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தோன்றினார்
93.  வழூஉச் சொற்கள் நீக்கிய வாக்கியத்தை தேர்வு செய்க:
Answer: D.   வியர்வை சிந்த சுவரில் ஏறினான்
94.  பட்டியல் I ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
சொல் பொருள்
1. புயல் அ. உணவு
2. புரை ஆ. வஞ்சனை
3. சலம் இ. குற்றம்
4. துப்பு ஈ. மேகம்
Answer: B.   ஈ இ ஆ அ
95.  பட்டியல் I ல் உள்ள நூல்களை பட்டியல் II-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
நூல் நூலாசிரியர்
1. திருக்குற்றாலக் குறவஞ்சி அ. புலவர் குழந்தை
2. இராவண காவியம் ஆ. குமரகுருபரர்
3. மீனாட்சியம்மைக் குறம் இ. இரட்டைப்புலவர்
4. தில்லைக்கலம்பகம் ஈ. திரிகூடஇராசப்பக்கவிராயர்
Answer: A.   ஈ அ ஆ இ
96.  'பழிநாணுவானை' - பெயர்சொல்லின் வகையறிக:
Answer: D.   வினையாலணையும் பெயர்
97.  பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
1. புரட்சிக்கொடி திருக்குறள் கற்றாள் அ. பிறவினைச் சொற்றொடர்
2. புரட்சிக்கொடி திருக்குறள் கற்பித்தாள் ஆ. செயப்பாட்டு வினைச்சொற்றொடர்
3. புரட்சிக்கொடியால் திருக்குறள் கற்பிக்கப்பட்டது. இ. தன்வினைச் சொற்றொடர்
4. புரட்சிக்கொடி திருக்குறள் கல்லார் ஈ. எதிர்மறைத் தொடர்
Answer: C.   இ அ ஆ ஈ
98.  பட்டியல் I ல் உள்ள நிலங்களை பட்டியல் II-ல் உள்ள சிறுபொழுதுகளுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
நிலம் சிறுபொழுது
1. குறிஞ்சி அ. மாலை
2. முல்லை ஆ. வைகறை
3. மருதம் இ. ஏற்பாடு
4. நெய்தல் ஈ. யாமம்
Answer: D.   ஈ அ ஆ இ
99.  பட்டியல் I ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
சொல் பொருள்
1. கணம் அ. வருந்துதல்
2. மொய்ம்பு ஆ. விருப்பம்
3. அலமரல் இ. வலிமை
4. வேள் ஈ. கூட்டம்
Answer: C.   ஈ இ அ ஆ
100.  பின்வருவனவற்றுள் வீரமாமுனிவர் எழுதாத நூல் எது?
Answer: A.   சத்திய வேத கீர்த்தனை
;