TNPSC Group 4 2012
General Tamil Questions 76 to 100
76.
நீரோட்டக யமக அந்தாதி - நூலின் சிறப்பு யாது?
Answer:
B.
இதழ்கள் ஒன்றோடொன்று பொருந்தாமல் வரும் சொற்களை அமைத்துப் பாடுவது
77.
மாதானுபங்கி என பெயருடையவர் யார்?
Answer:
C.
திருவள்ளுவர்
78.
பிரித்து எழுதுக: தாதூதி
Answer:
D.
தாது + ஊதி
79.
பொருந்தாத இணையைக் கண்டறிக:
Answer:
D.
Rectal — சரிக்கட்டக்கூடிய
80.
'கூத்தராற்றுப்பெடை' எனும் அடைமொழியால் அழைக்கப்படும் நூல் யாது?
Answer:
C.
மலைபடுகடாம்
81.
பட்டியல் I ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| சொல் | பொருள் |
| 1. நட்டோர் | அ. அருகில் |
| 2. நணி | ஆ. படுக்கை |
| 3. பாயல் | இ. வலிமை |
| 4. மதுகை | ஈ. நண்பர் |
Answer:
B.
ஈ அ ஆ இ
82.
விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
'வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே'
'வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே'
Answer:
C.
வையகம் புகழ்பெற்றது எதனால்?
83.
'ஆற்றீர்' - வேர்ச்சொல்லை தேர்வு செய்
Answer:
C.
ஆற்று
84.
பின்ருவனவற்றுள் மோனைத் தொடைக்குத் தொடர்பில்லாதது எது?
Answer:
B.
இரண்டாவது எழுத்தும் ஒன்றி வருவது
85.
சரியாக பொருந்தியுள்ளது எது?
Answer:
B.
நீர்வேலி — உருவகம்
86.
பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| 1. சிற்பியால் சிற்பம் செதுக்கப்பட்டது | அ. வினா வாக்கியம் |
| 2. சிற்பி சிற்பத்தைச் செதுக்கினார் | ஆ. உணர்ச்சி வாக்கியம் |
| 3. சிற்பி சிற்பத்தைச் செதுக்குவாரா? | இ. செயப்பாட்டு வினை |
| 4. என்னே! சிற்பியின் கை வண்ணம்! | ஈ. செய்வினை |
Answer:
B.
இ ஈ அ ஆ
87.
பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| 1. ஆர | அ. தணிய |
| 2. ஆற | ஆ. நிறைய |
| 3. ஊர | இ. சுரக்க |
| 4. ஊற | ஈ. நகர |
Answer:
D.
ஆ அ ஈ இ
88.
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
குரவர் — குறவர்
குரவர் — குறவர்
Answer:
B.
ஆசிரியர் — ஓர் இனத்தார்
89.
ஒலி வேறுபாடறிந்து சரியான பொருளைத் தேர்க.
வலை — வளை — வழை
வலை — வளை — வழை
Answer:
A.
சிலந்தி வாழிடம் — துவாரம் — புன்னை மரம்
90.
'இயைந்தவர்' — இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.
Answer:
B.
இயை
91.
'கற்றவன்' — இச்சொல்லின் வேர்ச்சொல்லை காண்க.
Answer:
C.
கல்
92.
சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்க:
Answer:
D.
புரட்சிப் பூக்கள் பூத்துக் குலுங்கிய புதுவையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தோன்றினார்
93.
வழூஉச் சொற்கள் நீக்கிய வாக்கியத்தை தேர்வு செய்க:
Answer:
D.
வியர்வை சிந்த சுவரில் ஏறினான்
94.
பட்டியல் I ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| சொல் | பொருள் |
| 1. புயல் | அ. உணவு |
| 2. புரை | ஆ. வஞ்சனை |
| 3. சலம் | இ. குற்றம் |
| 4. துப்பு | ஈ. மேகம் |
Answer:
B.
ஈ இ ஆ அ
95.
பட்டியல் I ல் உள்ள நூல்களை பட்டியல் II-ல் உள்ள நூலாசிரியர்களுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| நூல் | நூலாசிரியர் |
| 1. திருக்குற்றாலக் குறவஞ்சி | அ. புலவர் குழந்தை |
| 2. இராவண காவியம் | ஆ. குமரகுருபரர் |
| 3. மீனாட்சியம்மைக் குறம் | இ. இரட்டைப்புலவர் |
| 4. தில்லைக்கலம்பகம் | ஈ. திரிகூடஇராசப்பக்கவிராயர் |
Answer:
A.
ஈ அ ஆ இ
96.
'பழிநாணுவானை' - பெயர்சொல்லின் வகையறிக:
Answer:
D.
வினையாலணையும் பெயர்
97.
பட்டியல் I ஐ பட்டியல் II-ல் உடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| 1. புரட்சிக்கொடி திருக்குறள் கற்றாள் | அ. பிறவினைச் சொற்றொடர் |
| 2. புரட்சிக்கொடி திருக்குறள் கற்பித்தாள் | ஆ. செயப்பாட்டு வினைச்சொற்றொடர் |
| 3. புரட்சிக்கொடியால் திருக்குறள் கற்பிக்கப்பட்டது. | இ. தன்வினைச் சொற்றொடர் |
| 4. புரட்சிக்கொடி திருக்குறள் கல்லார் | ஈ. எதிர்மறைத் தொடர் |
Answer:
C.
இ அ ஆ ஈ
98.
பட்டியல் I ல் உள்ள நிலங்களை பட்டியல் II-ல் உள்ள சிறுபொழுதுகளுடன் பொருத்தி, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| நிலம் | சிறுபொழுது |
| 1. குறிஞ்சி | அ. மாலை |
| 2. முல்லை | ஆ. வைகறை |
| 3. மருதம் | இ. ஏற்பாடு |
| 4. நெய்தல் | ஈ. யாமம் |
Answer:
D.
ஈ அ ஆ இ
99.
பட்டியல் I ல் உள்ள சொற்களை பட்டியல் II-ல் உள்ள சொற்பொருளறிந்து, கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு:
| பட்டியல் I | பட்டியல் II |
|---|---|
| சொல் | பொருள் |
| 1. கணம் | அ. வருந்துதல் |
| 2. மொய்ம்பு | ஆ. விருப்பம் |
| 3. அலமரல் | இ. வலிமை |
| 4. வேள் | ஈ. கூட்டம் |
Answer:
C.
ஈ இ அ ஆ
100.
பின்வருவனவற்றுள் வீரமாமுனிவர் எழுதாத நூல் எது?
Answer:
A.
சத்திய வேத கீர்த்தனை