GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 1 to 25

1.  பொருளுக்கு ஏற்ற பொருத்தமான உவமையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
உலக நிலைகளை அறியாதிருத்தல்
Answer: C.   கிணற்றுத் தவளை போல
2.  இலக்கணக் குறிப்பறிதல்:
பின்வரும் இலக்கணக் குறிப்புக்குப் பொருந்தாதச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.
பண்புத்தொகை
Answer: B.   மலர்ச்சேவடி
3.  பெயர்ச் சொல்லின் வகையறிதல்:
'கரியன்' - என்ற பெயர்சொல்லின் வகை அறிக.
Answer: C.   பண்புப் பெயர்
4.  "நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்"
இப்பாடலடிகளில் இடம்பெற்றுள்ள 'நடலை'க்கு இணையான ஆங்கிலச் சொல்லை எழுதுக.
Answer: B.   Affliction
5.  பெயர்ச் சொல்லின் வகையறிதல்:
'ஆதிரையான்' என்ற பெயர்ச்சொல்லின் வகையறிக.
Answer: C.   காலப் பெயர்
6.  "இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்".
அடிக்கோடிட்ட சொல்லுக்கு இணையான ஆங்கிலப் பதத்தினைத் தேர்க.
Answer: C.   Staff
7.  தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக.
Answer: B.   இலக்கியா புத்தாடை அணிந்தாள்
8.  திரு.வி.க. இயற்றிய 'பொதுமை வேட்டல்' என்னும் நூலில் உள்ள பாக்களின் எண்ணிக்கை ______________
Answer: A.   நானூற்று முப்பது
9.  தழீஇ: இலக்கணக் குறிப்பு தருக.
Answer: D.   சொல்லிசை அளபெடை
10.  உலகம் என்ற தமிழ்ச் சொல்லின் வேர்ச்சொல் எது?
Answer: B.   உலவு
11.  ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது?
Answer: C.   அவன் கவிஞன் அல்லன்
12.  ஞானப்பச்சிலை எனப் போற்றப்படும் மூலிகை ____________
Answer: C.   தூதுவளை
13.  இலக்கணக் குறிப்பறிதல்:
பின்வரும் இலக்கணக் குறிப்புக்கு பொருந்திய சொல்லைத் தேர்ந்தெடுக்க.
வினைத்தொகை
Answer: B.   சூழ்கழல்
14.  கோடிட்ட இடத்தை நிரப்புக:
தில்லையாடி வள்ளியம்மை ____________ நாட்டில் பிறந்தார்.
Answer: D.   தென்னாப்பிரிக்கா
15.  'பாவை பாடிய வாயால் கோவை பாடுக' என்று சொல்லக் கேட்டு பாடப்பட்ட நூல் எது?
Answer: C.   திருக்கோவையார்
16.  பரணி இலக்கியத்திற்குரிய பாவகையைக் குறிப்பிடுக.
Answer: D.   கலித்தாழிசை
17.  பட்டியல் Iல் உள்ள சொற்றொடரைப் பட்டியல் IIல் உள்ள சொற்றொடருடன் பொருத்தி குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
பட்டியல் I பட்டியல் II
(a) களவழி நாற்பது 1. நிலையாமை
(b) முதுமொழிக் காஞ்சி 2. வேளாண் வேதம்
(c) நாலடியார் 3. ஆறு மருந்து
(d) ஏலாதி 4. புறப்பொருள்
Answer: D.   4 1 2 3
18.  பொற்கொடி ஆயகலை அறுபத்து நான்கினையும் கற்றாள் - இவ்வாக்கியம் எவ்வகை வினை சார்ந்தது?
Answer: B.   தன்வினை
19.  பொருந்தாத தொடரைக் கண்டறிக.
Answer: B.   அஞ்சாமை - துஞ்சாமை
20.  வினாவிற்குரிய விடை எழுதுக:
காமராசரின் பிறந்த நாளை ஆண்டுதோறும் எந்த நாளாக கொண்டாடுகிறோம்?
Answer: B.   கல்வி வளர்ச்சி நாள்
21.  பெயர்ச்சொல்லின் வகை அறிக.
'நன்மை' என்பது
Answer: C.   பண்புப் பெயர்
22.  "நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுள்" என்று பாடத் தொடங்கிய புலவர் யார்?
Answer: C.   இளங்கோவடிகள்
23.  வினாவிற்குரிய விடை எழுதுக:
தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர் யார்?
Answer: C.   தேவநேயப் பாவாணர்
24.  கோடிட்ட இடத்தை நிரப்புக:
நிகண்டுகளில் மிகப் பழமையானது __________.
Answer: A.   சேந்தன் திவாகரம்
25.  பொருளறிந்து பொருத்துக:
பட்டியல் I பட்டியல் II
(a) ஓ 1. கோபம்
(b) மா 2. சோலை
(c) கா 3. நீர் தாங்கும் பலகை
(d) தீ 4. திருமகள்
Answer: C.   3 4 2 1
;