GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2013

General Tamil Questions 51 to 75

1.  உரிய மரபுச் சொல்லை எழுதுக.

"மயில்"
A.   கரையும்
B.   பிளிறும்
C.   அலறும்
D.   அகவும்
Answer: D.  அகவும்
2.  'வந்தான்' என்னும் வினைமுற்று _________ என வினையாலணையும் பெயராய் வரும்.
A.   வருவான்
B.   வாரான்
C.   வந்தவன்
D.   வந்த
Answer: C.  வந்தவன்
3.  ஆசிரியப்பாவின் ஈற்றுச்சீர் _________ முடிவது சிறப்பு.
A.   ஆகாரத்தில்
B.   ஏகாரத்தில்
C.   ஓகாரத்தில்
D.   ஈகாரத்தில்
Answer: B.  ஏகாரத்தில்
4.  "தித்திக்குந் தெள்ளமுதாய்த் தெள்ளமுதின்"

கீழ்க்காணும் விடைகளுள் சரியான விடை எது?
A.   எதுகை மட்டும் வந்துள்ளது
B.   மோனை மட்டும் வந்துள்ளது
C.   எதுகை, மோனை, இயைபு வந்துள்ளன
D.   எதுகையும், மோனையும் வந்துள்ளன
Answer: D.  எதுகையும், மோனையும் வந்துள்ளன
5.  அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்.
A.   தரங்கம், தையல், திட்பம், தோடு
B.   தையல், தோடு, திட்பம், தரங்கம்
C.   தரங்கம், திட்பம், தையல், தோடு
D.   தரங்கம், தையல், தோடு, திட்பம்
Answer: C.  தரங்கம், திட்பம், தையல், தோடு
6.  பொருத்துக
புலவர் நூல்
(a) உமறுப்புலவர் 1. தொன்னூல் விளக்கம்
(b) கம்பர் 2. நரிவிருத்தம்
(c) திருத்தக்கதேவர் 3. சிலை எழுபது
(d) வீரமாமுனிவர் 4. முதுமொழிமாலை
A.   4 2 3 1
B.   4 3 2 1
C.   3 1 4 2
D.   2 4 1 3
Answer: B.  4 3 2 1
7.  'உறுமிடத் துதவா உவர்நிலம்' என்ற வரிகள் இடம்பெற்ற நூல் எது?
A.   புறநானூறு
B.   அகநானூறு
C.   ஐங்குறுநூறு
D.   திருக்குறள்
Answer: A.  புறநானூறு
8.  திரு.வி.க. எந்த நாளிதழ் ஆசிரியராக பணியாற்றினார்?
A.   தேச பக்தன்
B.   தென்றல்
C.   இந்தியா
D.   சுதேசமித்திரன்
Answer: A.  தேச பக்தன்
9.  'பொறு' என்னும் வேர்ச்சொல்லின் வினையாலணையும் பெயரை தேர்ந்தெடு.
A.   பொறுத்தான்
B.   பொறுத்து
C.   பொறுத்தல்
D.   பொறுத்தவர்
Answer: D.  பொறுத்தவர்
10.  'அன்பருக்குப் பணி செய்வதே உண்மைத் தொண்டு' எனக் கூறியவர் யார்?
A.   இராமலிங்க அடிகள்
B.   தாயுமானவர்
C.   ஆறுமுக நாவலர்
D.   குமரகுருபரர்
Answer: B.  தாயுமானவர்
11.  மனிதரெல்லாம் அன்புநெறி காண்பதற்கும் மனோபாவம் வானைப் போல் விரிவடைந்து - இப்பாடலில் கீழ்வரும் விடைகளில் பொருந்தாததைச் சுட்டுக.
A.   அடி மோனை
B.   அடி எதுகை
C.   அடி இயைபு
D.   சீர் மோனை
Answer: C.  அடி இயைபு
12.  வினாவிற்குரிய விடை எழுதுக.

அம்பேத்கர் எந்த ஆண்டு கல்விக் கழகத்தைத் தோற்றுவித்தார்?
A.   1927
B.   1936
C.   1895
D.   1946
Answer: D.  1946
13.  "கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்
கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக" - எனப் பாடியவர்
A.   வள்ளலார்
B.   பாரதியார்
C.   பெருந்தேவனார்
D.   பாரதிதாசனார்
Answer: A.  வள்ளலார்
14.  உரிய விடையைத் தேர்ந்தெழுதுக:

பெண் அடிமை ஆனதற்கு உரிய காரணங்களில் ஒன்று எது இல்லாமை என்று பெரியார் கூறுகிறார்?
A.   வாக்குரிமை
B.   பேச்சுரிமை
C.   சொத்துரிமை
D.   எழுத்துரிமை
Answer: C.  சொத்துரிமை
15.  திரு.வி.க. பிறந்த துள்ளம் என்ற ஊர் தற்பொழுது _________ என்று அழைக்கப்படுகிறது.
A.   பல்லவபுரம்
B.   இலட்சுமிபுரம்
C.   தண்டலம்
D.   இராமவரம்
Answer: C.  தண்டலம்
16.  கோடிட்ட இடத்தை நிரப்புக :

கன்னியாகுமரிக்கும் மதுரைக்கும் இடையே அமைந்த நெடுஞ்சாலைக்கு பெயர் _________.
A.   தில்லையாடி வள்ளியம்மை
B.   வேலுநாச்சியார்
C.   இராணி மங்கம்மாள்
D.   ஜான்சி ராணி
Answer: C.  இராணி மங்கம்மாள்
17.  உரிய விடையை எழுதுக:

"உலகெல்லாம் உணர்ந்து ஓதற்கரியவன்" எனத் தொடங்கும் பாடல் இடம் பெற்றுள்ள நூல் எது?
A.   கந்தபுராணம்
B.   திருமந்திரம்
C.   பெரியபுராணம்
D.   திருவிளையாடற்புராணம்
Answer: C.  பெரியபுராணம்
18.  அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல்.
A.   வீண், வீழ்ச்சி, வீடு, வீதி
B.   வீடு, வீண், வீதி, வீழ்ச்சி
C.   வீழ்ச்சி, வீண், வீதி, வீடு
D.   வீழ்ச்சி, வீடு, வீதி, வீண்
Answer: B.  வீடு, வீண், வீதி, வீழ்ச்சி
19.  எடு - என்னும் வேர்ச்சொல்லின் வினையெச்சத்தை எழுதுக.
A.   எடுத்த
B.   எடுத்தல்
C.   எடுத்து
D.   எடுத்தான்
Answer: C.  எடுத்து
20.  கோடிட்ட இடத்தை நிரப்புக :

'ஞால்' என்பதற்கு _________ என்பது பொருள்.
A.   தொங்குதல்
B.   ஞாலம்
C.   தொடங்குதல்
D.   வாழுதல்
Answer: A.  தொங்குதல்
21.  "வள்ளுவனைப் பெற்றதாற் பெற்றதே புகழ் வையகமே" பாடியவர் யார்?
A.   பாரதியார்
B.   சுரதா
C.   தாரா பாரதி
D.   பாரதிதாசன்
Answer: D.  பாரதிதாசன்
22.  விடைக்கேற்ற வினாவைத் தேர்க.

'அன்புள இனி நாம் ஓர் ஐவர்கள் உளரானோம்'.
A.   எதனால் ஐவரானார்கள்?
B.   ஐவர் யார்?
C.   ஐந்தாவதாக வந்தவன் யார்?
D.   யாரிடம் கூறினான்?
Answer: A.  எதனால் ஐவரானார்கள்?
23.  தமிழ் எழுத்துகளில் ஒரு நல்ல சீர்திருத்தத்தினைக் கொணர்ந்தவர் யார்?
A.   வேதநாயகம் பிள்ளை
B.   வீரமாமுனிவர்
C.   H.A. கிருஷ்ணப் பிள்ளை
D.   உ.வே.சாமிநாதையர்
Answer: B.  வீரமாமுனிவர்
24.  “இம்மென்னும் முன்னே எழுநூறும் எண்ணூறும், அம்மென்றால் ஆயிரம் பாட்டும்" பாடவல்ல ஆசுகவி யார்?
A.   காளமேகப் புலவர்
B.   பாரதியார்
C.   இளஞ்சூரியர்
D.   முது சூரியர்
Answer: A.  காளமேகப் புலவர்
25.  தவறான கூற்றைத் தேர்வு செய்க.
A.   "மானிடவர்க்கு என்று பேச்சுப்படில் வாழகில்லேன்" - ஆண்டாள்
B.   "வானாளும் செல்வமும் மண்ணரசும் யான் வேண்டேன்" - குலசேகர ஆழ்வார்
C.   "கருவினும் கருவாய் பெருந்தவம் புரிந்த கருத்தனைப் பொருந்துதல் கருத்தே" - எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை
D.   "ஆதியும் அந்தமும் இல்லா அருட்பெருஞ்சோதி" - மாணிக்கவாசகர்
Answer: C.  "கருவினும் கருவாய் பெருந்தவம் புரிந்த கருத்தனைப் பொருந்துதல் கருத்தே" - எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை
;