GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2013

General Tamil Questions 1 to 25

1.  பொருளுக்கு ஏற்ற பொருத்தமான உவமையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

உலக நிலைகளை அறியாதிருத்தல்
A.   கீரியும் பாம்பும் போல
B.   இலவு காத்த கிளி போல
C.   கிணற்றுத் தவளை போல
D.   அனலிடைப்பட்ட புழு போல
Answer: C.  கிணற்றுத் தவளை போல
2.  இலக்கணக் குறிப்பறிதல் :

பின்வரும் இலக்கணக் குறிப்புக்குப் பொருந்தாதச் சொல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

பண்புத்தொகை
A.   நெடுந்தேர்
B.   மலர்ச்சேவடி
C.   செங்கோல்
D.   கருங்குரங்கு
Answer: B.  மலர்ச்சேவடி
3.  பெயர்ச் சொல்லின் வகையறிதல் :

'கரியன்' - என்ற பெயர்சொல்லின் வகை அறிக.
A.   சினைப் பெயர்
B.   பொருட்பெயர்
C.   பண்புப் பெயர்
D.   தொழிற் பெயர்
Answer: C.  பண்புப் பெயர்
4.  "நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்"

இப்பாடலடிகளில் இடம்பெற்றுள்ள 'நடலை'க்கு இணையான ஆங்கிலச் சொல்லை எழுதுக.
A.   Affection
B.   Affliction
C.   Attraction
D.   Addition
Answer: B.  Affliction
5.  பெயர்ச் சொல்லின் வகையறிதல் :

'ஆதிரையான்' என்ற பெயர்ச்சொல்லின் வகையறிக.
A.   பண்புப் பெயர்
B.   தொழிற் பெயர்
C.   காலப் பெயர்
D.   குணப் பெயர்
Answer: C.  காலப் பெயர்
6.  "இழுக்க லுடையுழி ஊற்றுக்கோ லற்றே
ஒழுக்க முடையார்வாய்ச் சொல்".

அடிக்கோடிட்ட சொல்லுக்கு இணையான ஆங்கிலப் பதத்தினைத் தேர்க.
A.   An assistant
B.   Supporter
C.   Staff
D.   Friends
Answer: C.  Staff
7.  தன்வினை வாக்கியத்தைக் கண்டறிக.
A.   இலக்கியா புத்தாடை அணிவித்தாள்
B.   இலக்கியா புத்தாடை அணிந்தாள்.
C.   புத்தாடை இலக்கியாவால் அணிவிக்கப்பட்டது
D.   இலக்கியா புத்தாடை அணியாள்
Answer: B.  இலக்கியா புத்தாடை அணிந்தாள்.
8.  திரு.வி.க. இயற்றிய 'பொதுமை வேட்டல்' என்னும் நூலில் உள்ள பாக்களின் எண்ணிக்கை
A.   நானூற்று முப்பது
B.   இருநூற்று ஒன்று
C.   முந்நூற்று ஆறு
D.   நானூற்று எழுபது
Answer: A.  நானூற்று முப்பது
9.  தழீஇ இலக்கணக் குறிப்பு தருக.
A.   செய்யுளிசை அளபெடை
B.   ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்
C.   இன்னிசையளபெடை
D.   சொல்லிசை அளபெடை
Answer: D.  சொல்லிசை அளபெடை
10.  உலகம் என்ற தமிழ்ச் சொல்லின் வேர்ச்சொல் எது?
A.   உலகு
B.   உலவு
C.   உளது
D.   உளம்
Answer: B.  உலவு
11.  ஒருமைப் பன்மைப் பிழையற்ற தொடர் எது?
A.   அவன் கவிஞன் அல்லர்
B.   அவன் கவிஞன் அன்று
C.   அவன் கவிஞன் அல்லன்
D.   அவன் அல்லன் கவிஞன்
Answer: C.  அவன் கவிஞன் அல்லன்
12.  ஞானப்பச்சிலை எனப் போற்றப்படும் மூலிகை
A.   துளசி
B.   கீழாநெல்லி
C.   தூதுவளை
D.   கற்றாழை
Answer: C.  தூதுவளை
13.  இலக்கணக் குறிப்பறிதல்:

பின்வரும் இலக்கணக் குறிப்புக்கு பொருந்திய சொல்லைத் தேர்ந்தெடுக்க.

வினைத்தொகை
A.   செந்நாய்
B.   சூழ்கழல்
C.   வெண்மதி
D.   கண்ணோட்டம்
Answer: B.  சூழ்கழல்
14.  கோடிட்ட இடத்தை நிரப்புக:

தில்லையாடி வள்ளியம்மை _________ நாட்டில் பிறந்தார்.
A.   அமெரிக்கா
B.   இத்தாலி
C.   இந்தியா
D.   தென்னாப்பிரிக்கா
Answer: D.  தென்னாப்பிரிக்கா
15.  'பாவை பாடிய வாயால் கோவை பாடுக' என்று சொல்லக் கேட்டு பாடப்பட்ட நூல் எது?
A.   அசதிக் கோவை
B.   ஆசாரக் கோவை
C.   திருக்கோவையார்
D.   மும்மணிக் கோவை
Answer: C.  திருக்கோவையார்
16.  பரணி இலக்கியத்திற்குரிய பாவகையைக் குறிப்பிடுக.
A.   வெண்பா
B.   விருத்தப்பா
C.   கலி விருத்தம்
D.   கலித்தாழிசை
Answer: D.  கலித்தாழிசை
17.  பட்டியல் Iல் உள்ள சொற்றொடரைப் பட்டியல் IIல் உள்ள சொற்றொடருடன் பொருத்தி குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
பட்டியல் I பட்டியல் II
(a) களவழி நாற்பது 1. நிலையாமை
(b) முதுமொழிக் காஞ்சி 2. வேளாண் வேதம்
(c) நாலடியார் 3. ஆறு மருந்து
(d) ஏலாதி 4. புறப்பொருள்
A.   3 1 2 4
B.   2 3 4 1
C.   1 3 4 2
D.   4 1 2 3
Answer: D.  4 1 2 3
18.  பொற்கொடி ஆயகலை அறுபத்து நான்கினையும் கற்றாள் - இவாக்கியம் எவ்வகை வினை சார்ந்தது?
A.   பிறவினை
B.   தன்வினை
C.   கலவை
D.   செய்யப்பாட்டு வினை
Answer: B.  தன்வினை
19.  பொருந்தாத தொடரைக் கண்டறிக.
A.   ஒறுத்தார் - பொறுத்தார்
B.   அஞ்சாமை - துஞ்சாமை
C.   அறிவுடையார் - அறிவிலார்
D.   வையார் - வைப்பர்
Answer: B.  அஞ்சாமை - துஞ்சாமை
20.  வினாவிற்குரிய விடை எழுதுக:

காமராசரின் பிறந்த நாளை ஆண்டுதோறும் எந்த நாளாக கொண்டாடுகிறோம்?
A.   கல்விப் பணி ஆற்றிய நாள்
B.   கல்வி வளர்ச்சி நாள்
C.   தொழில் முன்னேற்ற நாள்
D.   தேசிய கல்வி நாள்
Answer: B.  கல்வி வளர்ச்சி நாள்
21.  பெயர்ச்சொல்லின் வகை அறிக.

'நன்மை' என்பது
A.   பொருளுட் பெயர்
B.   சினைப் பெயர்
C.   பண்புப் பெயர்.
D.   தொழிற் பெயர்
Answer: C.  பண்புப் பெயர்.
22.  "நாட்டுதும் யாம்ஓர் பாட்டுடைச் செய்யுள்" என்று பாடத் தொடங்கிய புலவர் யார்?
A.   கம்பர்
B.   கபிலர்
C.   இளங்கோவடிகள்
D.   சீத்தலைச் சாத்தனார்
Answer: C.  இளங்கோவடிகள்
23.  வினாவிற்குரிய விடை எழுதுக:

தமிழை ஆலென வளர்த்து மாண்புறச் செய்தவர் யார்?
A.   பரிதிமாற் கலைஞர்
B.   மு.வரதராஜன்
C.   தேவநேயப் பாவாணர்
D.   புதுமைப்பித்தன்
Answer: C.  தேவநேயப் பாவாணர்
24.  கோடிட்ட இடத்தை நிரப்புக :

நிகண்டுகளில் மிகப் பழமையானது-
A.   சேந்தன் திவாகரம்
B.   சூடாமணி நிகண்டு
C.   அகராதி
D.   இதில் எதுவும் இல்லை
Answer: A.  சேந்தன் திவாகரம்
25.  பொருளறிந்து பொருத்துக:
பட்டியல் I பட்டியல் II
(a) ஓ 1. கோபம்
(b) மா 2. சோலை
(c) கா 3. நீர் தாங்கும் பலகை
(d) சீ 4. திருமகள்
A.   2 4 1 3
B.   1 3 4 2
C.   3 4 2 1
D.   4 1 3 2
Answer: C.  3 4 2 1
;