GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 4 2013

General Tamil Questions 26 to 50

1.  'முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை'

இத்தொடரில் 'பாணிரண்டு' என்ற தொடரால் குறிக்கப்படும் நூல்கள் எவை?
A.   அகநானூறு, புறநானூறு
B.   முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு
C.   திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை
D.   சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை
Answer: D.  சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை
2.  உரிய விடையைத் தேர்க:

அகராதி என்னும் சொல்லை முதன் முதலாக கையாண்டவர் யார்?
A.   திருமூலர்
B.   வீரமாமுனிவர்
C.   திருநாவுக்கரசர்
D.   கம்பர்
Answer: A.  திருமூலர்
3.  பொருத்துக:
List I List II
(a) Fanfare 1. இணக்கமுள்ள
(b) Fangle 2. வீட்டுப் புறா
(c) Fantail 3. எக்காள முழக்கம்
(d) Facile 4. நாகரிகம்
A.   3 4 2 1
B.   4 1 3 2
C.   2 3 4 1
D.   1 4 2 3
Answer: A.  3 4 2 1
4.  உரிய விடையைத் தேர்க:

திருக்குறளை நாற்பதாண்டுகள் படித்துச் சுவைத்த போப், அதனை ஆங்கிலத்தில் எந்த ஆண்டு மொழிபெயர்த்து வெளியிட்டார்?
A.   1786
B.   1858
C.   1808
D.   1886
Answer: D.  1886
5.  வருக - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க:
A.   வினையெச்சம்
B.   உருவகம்
C.   உரிச்சொல் தொடர்
D.   வியங்கோள் வினைமுற்று
Answer: D.  வியங்கோள் வினைமுற்று
6.  பொருந்தாத தொடரைக் குறிப்பிடுக.
A.   கலம்பகம் - பதினெட்டு உறுப்புகள்
B.   சிற்றிலக்கியங்கள் - தொண்ணூற்றாறு
C.   பிள்ளைத் தமிழ் - பத்துப் பருவங்கள்
D.   பரணி - 100 தாழிசைகள்
Answer: D.  பரணி - 100 தாழிசைகள்
7.  பின்வரும் தொடர்களில் இராமலிங்க அடிகளார் கூறியவை
A.   நான் தனியாக வாழவில்லை, தமிழோடு வாழ்கிறேன்
B.   வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே
C.   பெண்களே சமூகத்தின் கண்கள்
D.   சமத்துவத்தின் மறுபெயரே மனிதநேயம்
Answer: B.  வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே
8.  பின்வரும் சொற்களுள் குற்றியலுகரம் அல்லாத சொல்லைக் கண்டறிக.
A.   மார்பு
B.   வரகு
C.   மடு
D.   மாசு
Answer: C.  மடு
9.  சித்துகளின் எண்ணிக்கை
A.   பன்னிரண்டு
B.   பதினெட்டு
C.   பத்து
D.   எட்டு
Answer: D.  எட்டு
10.  அடிவரையறை அறிந்து சரியான வரிசையைக் குறிப்பிடுக.

(a) 3-6
(b) 4-8
(c) 9-12
(d) 13-31
A.   ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு
B.   அகநானூறு, நற்றிணை, குறுந்தொகை, ஐங்குறுநூறு
C.   குறுந்தொகை, ஐங்குறுநூறு, நற்றிணை, அகநானூறு
D.   நற்றிணை, அகநானூறு, ஐங்குறுநூறு, குறுந்தொகை
Answer: A.  ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு
11.  தன்வினையைத் தேர்ந்து எழுதுக.
A.   அப்பூதி அடிகள் நான்மறை கற்கவில்லை
B.   அப்பூதி அடிகள் நான்மறை கற்பித்தார்
C.   அப்பூதி அடிகள் நான்மறை கற்றார்
D.   அப்பூதி அடிகள் நான்மறை கற்றாரா?
Answer: C.  அப்பூதி அடிகள் நான்மறை கற்றார்
12.  பட்டியல் Iல் உள்ள சொற்றொடரை பட்டியல் IIல் உள்ள தொடர்களுடன் பொருத்தி கீழே உள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
பட்டியல் I பட்டியல் II
(a) பேதையர் நட்பு 1. உடுக்கை இழந்தகை
(b) பண்புடையார் தொடர்பு 2. வளர்பிறை
(c) அறிவுடையார் நட்பு 3. நவில் தோறும்
(d) இடுக்கண் களையும் நட்பு 4. தேய்பிறை
A.   4 3 2 1
B.   3 4 2 1
C.   4 3 1 2
D.   1 2 3 4
Answer: A.  4 3 2 1
13.  சரியான விடையைத் தேர்வு செய்க.

'ஆயிடை அணங்கின் கற்பும் ஐய நின்னருளும் செய்ய
தூய நல்லறனும் என்றிங்கிணையன தொடர்ந்து காப்ப'

இவ்வரிகளில் சீதையை அழியாமல் காப்பாற்றியவை எவை?
A.   அன்பும் பண்பும்
B.   அறிவும் ஆற்றலும்
C.   அறனும் மறனும்
D.   கற்பும் அருளும்
Answer: D.  கற்பும் அருளும்
14.  'வளன்' என்ற சொல்லால் குறிக்கப்படுவன் யார்?
A.   தாவீது
B.   கோலியாத்து
C.   சூசையப்பர்
D.   சவுல் மன்னன்
Answer: C.  சூசையப்பர்
15.  கடலைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள்
A.   ஆழி, அம்பி, ஆர்கலி
B.   பௌவம், முந்நீர், பரிசில்
C.   ஆழி, ஆர்கலி, பௌவம்
D.   வாரணம், பரவை, புணை
Answer: C.  ஆழி, ஆர்கலி, பௌவம்
16.  பொருத்தமான விடையைக் கண்டறி.

“தமிழுக்குக் கதி” என்று போற்றப்படும் நூல்கள்
A.   பாட்டும் தொகையும்
B.   சிலம்பும் மேகலையும்
C.   இராமாயணமும் குறளும்
D.   பாரதமும் இராமாயணமும்
Answer: C.  இராமாயணமும் குறளும்
17.  பட்டியல் Iல் உள்ள சொற்றொடரைப் பட்டியல் IIல் உள்ள தொடர்களுடன் பொருத்திக் குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்வு செய்.
பட்டியல் I பட்டியல் II
(a) கண் வனப்பு 1. செல்லாமை
(b) எண் வனப்பு 2. இத்துணையாம்
(c) பண் வனப்பு 3. கண்ணோட்டம்
(d) கால் வனப்பு 4. கேட்டார் நன்றென்றல்
A.   3 2 4 1
B.   3 1 2 4
C.   1 2 4 3
D.   2 3 4 1
Answer: A.  3 2 4 1
18.  ஆற்றுப்படுத்தல் என்பதன் பொருள்
A.   அன்பு காட்டுதல்
B.   ஆறுதல் கூறுதல்
C.   வழிகாட்டுதல்
D.   ஆதரவு தருதல்
Answer: C.  வழிகாட்டுதல்
19.  ஐஞ்சிறு காப்பியம் - இவற்றுள் பொருந்தா நூலைக் கண்டறி.
A.   உதயண குமார காவியம்
B.   இராவண காவியம்
C.   நாக குமார காவியம்
D.   யசோதரா காவியம்
Answer: B.  இராவண காவியம்
20.  பட்டியல் Iஐ பட்டியல் II-உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடை தேர்க.
பட்டியல் I பட்டியல் II
(a) புள் 1. விரைவு
(b) குலவு 2. கலப்பை
(c) மேழி 3. அன்னம்
(d) ஒல்லை 4. விளங்கும்
A.   2 4 1 3
B.   4 1 2 3
C.   3 4 2 1
D.   3 1 4 2
Answer: C.  3 4 2 1
21.  பொருந்தாத இணையைக் கண்டறிக.
A.   Mishap - விபத்து
B.   Miserable - துக்ககரமான
C.   Mislay - தவறான சொல்
D.   Misdeed - கெட்ட செயல்
Answer: C.  Mislay - தவறான சொல்
22.  'வாழ்த்துவோம்' என்ற சொல்லின் வேர்ச் சொல்லை எழுதுக.
A.   வாழ்
B.   வாழ்த்துதல்
C.   வாழ்த்து
D.   வாழ்த்தும்
Answer: C.  வாழ்த்து
23.  பின்வரும் இரண்டினும் பொருள் பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.

கழை - களை
A.   கரும்பு - அழகு
B.   மூங்கில் - காந்தி
C.   வேய் - சீலை
D.   கழி - அகற்று
Answer: C.  வேய் - சீலை
24.  சரியான பொருள் தருக:

'இந்து'
A.   நிலவு
B.   துன்பம்
C.   படகு
D.   தலைவன்
Answer: A.  நிலவு
25.  தொண்டுக்கு முந்து, தலைமைக்குப் பிந்து எனக் கூறியவர்
A.   காந்தியடிகள்
B.   பேரறிஞர் அண்ணா
C.   மு.வரதராசனார்
D.   பெரியார்
Answer: C.  மு.வரதராசனார்
;