GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

General Tamil Questions 26 to 50

26.  'முருகு பொருநாறு பாணிரண்டு முல்லை'
இத்தொடரில் 'பாணிரண்டு' என்ற தொடரால் குறிக்கப்படும் நூல்கள் எவை?
Answer: D.   சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை
27.  உரிய விடையைத் தேர்க:
அகராதி என்னும் சொல்லை முதன் முதலாக கையாண்டவர் யார்?
Answer: A.   திருமூலர்
28.  பொருத்துக:
(a) Fanfare 1. இணக்கமுள்ள
(b) Fangle 2. வீட்டுப் புறா
(c) Fantail 3. எக்காள முழக்கம்
(d) Facile 4. நாகரிகம்
Answer: A.   3 4 2 1
29.  உரிய விடையைத் தேர்க:
திருக்குறளை நாற்பதாண்டுகள் படித்துச் சுவைத்த போப், அதனை ஆங்கிலத்தில் எந்த ஆண்டு மொழிபெயர்த்து வெளியிட்டார்?
Answer: D.   1886
30.  வருக - என்பதன் இலக்கணக் குறிப்பு தேர்க:
Answer: D.   வியங்கோள் வினைமுற்று
31.  பொருந்தாத தொடரைக் குறிப்பிடுக.
Answer: D.   பரணி - 100 தாழிசைகள்
32.  பின்வரும் தொடர்களில் இராமலிங்க அடிகளார் கூறியவை
Answer: B.   வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே
33.  பின்வரும் சொற்களுள் குற்றியலுகரம் அல்லாத சொல்லைக் கண்டறிக.
Answer: C.   மடு
34.  சித்துகளின் எண்ணிக்கை
Answer: D.   எட்டு
35.  அடிவரையறை அறிந்து சரியான வரிசையைக் குறிப்பிடுக.
(a) 3-6
(b) 4-8
(c) 9-12
(d) 13-31
Answer: A.   ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு
36.  தன்வினையைத் தேர்ந்து எழுதுக.
Answer: C.   அப்பூதி அடிகள் நான்மறை கற்றார்
37.  பட்டியல் Iல் உள்ள சொற்றொடரை பட்டியல் IIல் உள்ள தொடர்களுடன் பொருத்தி கீழே உள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
பட்டியல் I பட்டியல் II
(a) பேதையர் நட்பு 1. உடுக்கை இழந்தகை
(b) பண்புடையார் தொடர்பு 2. வளர்பிறை
(c) அறிவுடையார் நட்பு 3. நவில் தோறும்
(d) இடுக்கண் களையும் நட்பு 4. தேய்பிறை
Answer: A.   4 3 2 1
38.  சரியான விடையைத் தேர்வு செய்க.
'ஆயிடை அணங்கின் கற்பும் ஐய நின்னருளும் செய்ய
தூய நல்லறனும் என்றிங்கிணையன தொடர்ந்து காப்ப'

இவ்வரிகளில் சீதையை அழியாமல் காப்பாற்றியவை எவை?
Answer: D.   கற்பும் அருளும்
39.  'வளன்' என்ற சொல்லால் குறிக்கப்படுவன் யார்?
Answer: C.   சூசையப்பர்
40.  கடலைக் குறிக்கும் தமிழ்ச் சொற்கள்
Answer: C.   ஆழி, ஆர்கலி, பௌவம்
41.  பொருத்தமான விடையைக் கண்டறி.
“தமிழுக்குக் கதி” என்று போற்றப்படும் நூல்கள்
Answer: C.   இராமாயணமும் குறளும்
42.  பட்டியல் Iல் உள்ள சொற்றொடரைப் பட்டியல் IIல் உள்ள தொடர்களுடன் பொருத்திக் குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்வு செய்.
பட்டியல் I பட்டியல் II
(a) கண் வனப்பு 1. செல்லாமை
(b) எண் வனப்பு 2. இத்துணையாம்
(c) பண் வனப்பு 3. கண்ணோட்டம்
(d) கால் வனப்பு 4. கேட்டார் நன்றென்றல்
Answer: A.   3 2 4 1
43.  ஆற்றுப்படுத்தல் என்பதன் பொருள்
Answer: C.   வழிகாட்டுதல்
44.  ஐஞ்சிறு காப்பியம் - இவற்றுள் பொருந்தா நூலைக் கண்டறி.
Answer: B.   இராவண காவியம்
45.  பட்டியல் Iஐ பட்டியல் II-உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளைக் கொண்டு சரியான விடை தேர்க.
பட்டியல் I பட்டியல் II
(a) புள் 1. விரைவு
(b) குலவு 2. கலப்பை
(c) மேழி 3. அன்னம்
(d) ஒல்லை 4. விளங்கும்
Answer: C.   3 4 2 1
46.  பொருந்தாத இணையைக் கண்டறிக.
Answer: C.   Mislay - தவறான சொல்
47.  'வாழ்த்துவோம்' என்ற சொல்லின் வேர்ச் சொல்லை எழுதுக.
Answer: C.   வாழ்த்து
48.  பின்வரும் இரண்டினும் பொருள் பொருந்தாத இணையைத் தேர்ந்தெடு.
கழை - களை
Answer: C.   வேய் - சீலை
49.  சரியான பொருள் தருக:
'இந்து'
Answer: A.   நிலவு
50.  தொண்டுக்கு முந்து, தலைமைக்குப் பிந்து எனக் கூறியவர்
Answer: C.   மு.வரதராசனார்
;