GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 1 2014 Preliminary Examination

General Studies Questions 26 to 50

26.  சமண சமயத்தின் 23-வது தீர்த்தங்கரர்
Answer: B.   பார்சவநாதர்
27.  சென்னையில் தமிழ் இசைச் சங்கத்தை உருவாக்கியவர்
Answer: B.   சர். அண்ணாமலை செட்டியார்
28.  பின்வருவனவற்றுள் சரியாக பொருத்தப்பட்ட ஜோடி எது?
வம்சம் - பெயர்
Answer: B.   டெல்லி சுல்தானியம் - குத்புதீன் ஐபக்
29.  வரிசை I உடன் வரிசை II யை பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தெரிவு செய்க.
வரிசை I வரிசை II
(a) குடி அரசு 1. 1971
(b) ரிவோல்ட் 2. 1934
(c) பகுத்தறிவு 3. 1928
(d) மாடர்ன் ரேசனலிஸ்ட் 4. 1925
Answer: B.   4 3 2 1
30.  மௌரியர்களின் வருவாய்த்துறை அதிகாரிகளை மேலிருந்து கீழாக குறியீடுகளின் மூலம் தேர்வு செய்க.
1. பிரதேசிகா
2. ஸ்தானிகா
3. சம்ஹர்டா
4. ராஜூகா
Answer: D.   2, 4, 1, 3
31.  எந்த ஆங்கிலேய இராணுவத் தளபதி, பாஞ்சாலங்குறிச்சி பாளையக்காரர் வீரபாண்டிய கட்டபொம்மனை கைப்பற்றி தூக்கிலிட்டார்?
Answer: B.   மேஜர் பானர்மேன்
32.  சரியான விடையை தேர்ந்தெடுக.
இந்திய தேசிய இராணுவம் இந்திய-பர்மா எல்லையினைத் தாண்டி நமது மூவர்ன கொடியினை ஏற்றிய நாள்
Answer: A.   19 மார்ச் 1944
33.  கீழ்குறிப்பிட்டவைகளில் சரியானது எது?
இந்திய சிப்பாய்களின் சந்தோஷமின்மை 1824ம் ஆண்டு பரக்பூரில் முதன் முதலில் உருவானதிற்கு காரணம்.
I. பரக்பூரின் 47-வது பிரிவு ராணுவம் பர்மாவிற்கு செல்ல உத்தரவிடப்பட்டது
II. ராணுவப் பிரிவுக்குள்ளே சாதி பாகுபாடு மற்றும் தனிமைபடுத்தல்
III. பிராமணர்கள் தேர்வு செய்வதில் ஊக்கமின்மை
IV. என்பீல்ட் துப்பாக்கி அமுல்படுத்தல்
Answer: A.   I
34.  கீழ் கொடுக்கப்பட்டவர்களில், இந்திய மன்னர்கள் ஏகாதிபத்திய ஆட்சிக்கு உதவுபவர்கள் மற்றும் தொழிலக தோழர்கள் என்று கூறியவர் யார்?
Answer: C.   இரண்டாம் ஹார்டிங் பிரபு
35.  கீழ்க்கண்டவற்றில் வீரியமிகுந்த அமிலம் எது?
Answer: A.   HCOOH
36.  கீழ்க்கண்ட மின்கல வினையின்
A(S) + 2B⁺ ⇌ A²⁺ + 2B
சமநிலை மாறிலி 10¹² எனில், அதன் E°cell மதிப்பு என்ன?
Answer: A.   0.354 V
37.  0.01 M KCl கரைசலின் நியம கடத்துத்திறன் 298 K-யில் 1.4 × 10⁻³ ஓம்⁻¹ செமீ⁻¹ எனில், இக்கரைசலின் சமான கடத்துத்திறன் மதிப்பு (ohm⁻¹ cm² equt⁻¹)
Answer: D.   140
38.  ராக்கெட் எரிபொருள் பயன்பாட்டிற்கு உபயோகிக்கப்படும் பொருள்
Answer: A.   ஹைட்ரஸின்
39.  1977-ஆம் ஆண்டு இந்திய தொழில் கொள்கையில் ஊடுருவிச் சென்ற கூற்று
Answer: C.   சிறிய மற்றும் குடிசைத் தொழில்களை ஊக்குவிப்பது
40.  அனைவருக்கும் கல்வி (சர்வ சிக்ஷா அபியான்-SSA) என்ற திட்டத்தை இந்தியாவில் அறிமுகம் செய்த ஆண்டு
Answer: C.   2003-04
41.  காலியிடங்களை நிரப்புக.
உலக நாடுகளில் இந்தியா ________ மக்கள் நலத்திட்டத்தை ________ ஆண்டு நடைமுறைப்படுத்தியது.
Answer: C.   முதலாவதாக, 1952
42.  கீழ்க்காணும் வாக்கியங்களை கவனத்தில் கொள்க.
கூற்று (A) : மண் அரிப்பானது மனிதனால் உருவாக்கப்படும் அவசியமான குறிப்பிடத்தக்க நிகழ்வு
காரணம் (R) : மண் அரிப்பானது காடழித்தல், அதிக அளவிலான கால்நடை மேய்ச்சல், இடப்பெயர்வு வேளாண்மை மற்றும் முறையாக கட்டப்படாத கட்டிட அமைப்புகளில் உள்ள நீர் வெளியேற்றம்.
Answer: A.   (A) மற்றும் (R) இரண்டுமே சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
43.  காப்பீடு முறைப்படுத்துதல் மற்றும் வளர்ச்சி ஆணைய (IRDA) சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
Answer: C.   1999
44.  2004-ல் சந்தையை நிலைப்படுத்தும் திட்டத்தினை இந்திய ரிசர்வ் வங்கி துவங்கியது
Answer: B.   நீர்மைத் தன்மையினை சரிசெய்வதற்கான ஒரு அதிகப்படியான ஊடகமாக
45.  2009-ம் ஆண்டின் இந்தியாவில் வறுமையை மதிப்பீடு செய்யும் நெறிமுறையை ஆய்வு செய்யும் குழு இவரது தலைமையில் அமைந்தது
Answer: D.   எஸ்.டி. டெண்டுல்கர்
46.  இந்தியாவில் செலவு வரி இவரால் அறிமுகம் செய்யப்பட்டது.
Answer: A.   டி.டி. கிருஷ்ணமாச்சாரி
47.  கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி :
கூற்று (A) : புதிய பொருளாதாரக் கொள்கைப்படி உலகமயமாதல் வளர்ச்சிக்கான ஒரு கருவியாகக் கருதப்படுகிறது.
காரணம் (R) : உலகமயமாதல் போக்குவரத்து மற்றும் தொலை தொடர்புக்கான செலவை அதிகரிக்கிறது.
இவற்றுள் சரியான விடை எது?
Answer: A.   (A) சரியானது ஆனால் (R) தவறானதாகும்
48.  பிப்ரவரி 2006ஆம் ஆண்டு சிறப்புப் பொருளாதார மண்டலம் குறித்த சட்டம் இயற்றப்பட்டது. இவற்றின் குறிக்கோள் எதுவல்ல என்பதை அடையாளம் காண்.
Answer: B.   இறக்குமதியை ஊக்குவிப்பது
49.  கீழே கொடுக்கப்பட்டுள்ள கருத்துருவில், காரணம், விளக்கத்தை ஆய்வுசெய்து, கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்வு செய்.
கருத்து (A) : வங்கி வட்டாரத்தில் 'ரத்னாகர் வங்கியை' 'நான்காம் நெடுஞ்சாலை வங்கி என அழைக்கின்றனர்".
காரணம் (R) : இவ்வங்கியின் பெரும்பாலான வர்த்தகம், இந்நெடுஞ்சாலையில் உள்ள, மக்கள்தொகை மிகுந்த 10 நகரங்களில் மேற்கொள்ளப்படுகிறது.
Answer: A.   (A) மற்றும் (R) இரண்டும் சரி, (A) வின் சரியான விளக்கம் (R) ஆகும்
50.  பின்வருவனவற்றில் மண் பாதுகாக்கும் முறை அல்ல எது?
Answer: D.   தொடர்ச்சியாள உரங்களை இடுதல்
;