GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 1 2014 Preliminary Examination

General Studies Questions 101 to 125

101.  கு. காமராசர் வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டதற்காக, கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட இடம் ________
Answer: D.   அலிப்பூர்
102.  கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையை கண்டுபிடி.
(a) கருத்து : நமது தேசியக் கொடியில் உள்ள அசோக சக்கரம் 24 ஆரங்களை உடையது. அவை நீலம் நிறம் கொண்டவை.
(b) காரணம் : 24 ஆரங்களும் புத்தரின் எண்வழிக் கொள்கையைக் குறிக்கின்றன.
Answer: A.   (a) மற்றும் (b) இரண்டும் சரி
103.  நமது தேசிய கீதத்தை உருவாக்கியவர் இரவீந்திரநாத் தாகூர், இப்பாடல் முதன் முதலாக இசைக்கப்பட்ட ஆண்டு
Answer: C.   1911
104.  கீழே கொடுக்கப்பட்டுள்ள பட்டியல் I லிருந்து பட்டியல் II-ல் பொருத்தமானவற்றை தேர்ந்தெடுக்க.
பட்டியல் I பட்டியல் II
(a) விருபக்சா கோயில் 1. எல்லோரா
(b) கைலாசநாதர் கோயில் 2. கழுகுமலை
(c) வெட்டுரான் கோயில் 3. பட்டடக்கல்
(d) லட்கான் கோயில் 4. அய்கொல்
Answer: B.   3 1 2 4
105.  சீன யாத்ரீகா யுவான் சுவாங் காஞ்சியை பார்வையிட்டது
Answer: A.   கி.பி. 640
106.  கீழ்க்காணும் வாக்கியங்களை கவனத்தில் கொள்க.
கூற்று (A) : காந்தியடிகள் 1930-ல் சட்டமறுப்பு இயக்கத்தைத் தொடங்கினார்.
காரணம் (R) : ஆகவே, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி 1930ல் முதல் வட்டமேசை மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை.
Answer: C.   (A) சரி ஆனால் (R) தவறு
107.  கீழ்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்.
கூற்று (A) : 1916 ஆம் ஆண்டு அன்னி பெசன்ட் சென்னையில் தன்னாட்சி சங்கத்தை அமைத்தார்.
காரணம் (R) : அரசியலமைப்பு முறையில் தன்னாட்சி அடைவதே இதன் நோக்கமாகும்.
Answer: A.   (A) மற்றும் (R) இரண்டுமே சரி மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமாகும்
108.  பின்வரும் இரு வாக்கியங்களில் கொடுக்கப்பட்டுள்ள கூற்று (கூ), காரணம் (கா) ஆகியவைகளை கருத்தில் கொண்டு கீழே கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பில் இருந்து உங்கள் விடையை தெரிவு செய்க.
கூற்று (கூ) : 1870 முதல் 1900 வரை தேசிய இயக்கத்தின் குறிக்கோளாக விளங்கியது அரசியலாக்குதல், அரசியல் பிரச்சாரம், கல்வி மற்றும் அரசியல் கோட்பாட்டை உருவாக்கி பரப்புதல்.
காரணம் (கா) : இவ்விலக்கை அடைய பத்திரிக்கைகளை முக்கிய சாதனமாக பயன்படுத்தப்பட்டது.
Answer: A.   (கூ) மற்றும் (கா) ஆகிய இரண்டும் சரி (கா), (கூ) வின் சரியான விளக்கம்
109.  கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது/எவை?
I. இந்திய அரசுச் சட்டம், 1935, மாநிலங்களில் இரட்டை ஆட்சியை அறிமுகப்படுத்தியது.
II. இந்தியா கவுன்சில் 1935-ல் தொடங்கப்பட்டது.
III. மாண்டெகு-செம்ஸ்போர்டு சீர்திருத்தச் சட்டம் மாநிலங்களில் இரட்டை ஆட்சியை அறிமுகப்படுத்தியது.
IV. 1935-ல் மாநில சுயாட்சி ஏற்படுத்தப்பட்டது.
Answer: D.   III மற்றும் IV
110.  வரிசை I உடன் வரிசை II-னைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையைத் தேர்வு செய்க:
வரிசை I - அதிகாரி வரிசை II - பொறுப்பு
(a) ராஜூகர் 1. சமயம்
(b) பிரதேசகர் 2. செயலாளர் (அல்லது) காரியதரிசி
(c) யுக்தர் 3. வரிவசூல் மற்றும் காவல்
(d) தர்ம மகாமாத்திரர் 4. மாவட்ட நீதிபதி
Answer: A.   4 3 2 1
111.  கீழ்கண்ட உரங்களில் முழுமையான உரம் எது?
Answer: C.   NPK உரங்கள்
112.  பக்மின்ஸ்டர் ஃபுல்லரீன் என அழைக்கப்படுவது ________ ஆகும்.
Answer: C.   C₆₀
113.  கீழ்க்கண்டவற்றுள் எது ஹேலைடு தாது?
Answer: B.   பாறை உப்பு
114.  இயற்கை வாயுவில் பெரும் பங்கு பெறுவது
Answer: B.   மீதேன்
115.  2011-ம் ஆண்டில் இந்தியாவில், மக்கள் தொகையில் மகளிர் கற்றவர் வீதம் என்ன?
Answer: D.   64.5 சதவீதம்
116.  வளர்ச்சி குன்றிய நாடுகளில் வெளிநாட்டு நிதியானது கீழ்க்காணும் இடைவெளிகளை நிரப்பச் செய்கிறது
I. சேமிப்பு இடைவெளி
II. அந்நிய செலாவணி இடைவெளி
III. தொழில்நுட்ப மற்றும் நிர்வாக இடைவெளி
IV. இயற்கை வள இடைவெளி
Answer: B.   I, II மற்றும் III
117.  கீழ்க்கண்டவற்றுள் எதனுடைய வளர்ச்சி முக்கிய நோக்கமாகவும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு அவசிய நிபந்தனையாகவும் திகழ்கிறது?
Answer: A.   வேளாண் மற்றும் சார்ந்த துறைகள்
118.  டங்கல் திட்டம் இதனுடன் தொடர்புடையதாகும்
Answer: A.   காட் ஒப்பந்தம்
119.  கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி :
I. ஆற்றல் சக்தியை உருவாக்கும் முக்கிய நாடுகளில் இந்தியாவும் ஒன்று
II. ஆற்றல் சக்தியை அதிகமாக நுகரும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று
III. 1950-51லிருந்து இந்தியாவில் ஆற்றல் சக்தி தொடர்ந்து பற்றாக்குறையாகவே உள்ளது.
இவற்றுள் எது சரியான விடை?
Answer: D.   I, II மற்றும் III
120.  கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி :
கூற்று I : மொத்த நாட்டு உற்பத்தி எப்பொழுதும் மொத்த உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாகவே இருக்கும்.
கூற்று II : மொத்த நாட்டு உற்பத்தியை பெறுவதற்கு, மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் வெளிநாடுகளில் இருந்து கிடைக்கும் நிகர காரணிகளின் வருமானத்தையும் சேர்க்க வேண்டும்.
இவற்றுள் எது சரியான விடை?
Answer: D.   கூற்று I தவறானது, ஆனால் கூற்று II சரியானது
121.  கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனி :
கூற்று (A) : விலைக் கொள்கை நிதிப் பற்றாக்குறையை கீழ் கட்டுப்படுத்தும் நோக்கம் உடையதாகும்.
காரணம் (R) : நிதிப்பற்றாக்குறை பணவீக்க அழுத்தத்தை உண்டாக்கும்.
இவற்றுள் சரியான விடை எது?
Answer: D.   (A) மற்றும் (R) இரண்டும் சரியானவை மற்றும் (A) க்கு (R) சரியான விளக்கமாகும்
122.  மொரிசியஸ் நாட்டின் 45-வது சுதந்திர தினத்தன்று சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டவர் யார்?
Answer: B.   திரு. பிரணாப் முகர்ஜி
123.  2013ம் ஆண்டுக்கான பிரிட்ஸ்கர் கட்டிடக்கலை பரிசை வென்றவர் யார்?
Answer: A.   டோயோ இடோ
124.  உலகினில் வயதான பெண்மணியான கோடோ ஒகுபோ எந்த நாட்டைச் சேர்ந்தவர்?
Answer: A.   ஜப்பான்
125.  கீழ்கண்ட விருதுகளுடன் எவை தொடர்புடையனவற்றை பொருத்துக.
(a) போர்லாங் விருது 1. அறிவியல்
(b) நேரு அறிவொளி விருது 2. வயது வந்தோர் கல்வி
(c) சாந்தி ஸ்வரூப் பட்நாகர் விருது 3. விவசாயம்
(d) ஹரி ஓம் ஆஸ்ரம் விருது 4. பல்வேறு துறை ஆசிரியர்கள்
Answer: A.   3 2 1 4
;