GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 1 2015 Preliminary Examination

General Studies Questions 1 to 25

1.  பொருத்துக:
(a) கிரப் சுழற்சி 1. சைட்டோபிளாசத்தில் நடைபெறும்
(b) யூபிக்குயினான் 2. சைட்டோபிளாசத்திலிருந்து மைட்டோகாண்டிரியாவுக்கு பரவும்
(c) கிளைக்கோலிஸிஸ் 3. நகரும் கேரியர்கள்
(d) அஸிட்டல் துணை என்ஸைம் ஏ 4. மைட்டோகான்டிரியாவின் மேட்ரிக்ஸ் பகுதியில் நடைபெறும்
Answer: A.   4 3 1 2
2.  நியூக்ளிக் அமிலங்களில் காணப்படும் ப்யூரின்கள்
Answer: B.   II. குவானின் மற்றும் தைமின்
3.  சரியான பொருத்தத்தினைக்/யவைகளை கண்டறிக.
I. நொதிகள் - உயிரிய கிரியா ஊக்கிகள்
II. டி.என்.ஏ - நியூக்ளிக் அமிலம்
III. இன்சுலின் - ஹார்மோன்
IV. வைட்டமின் E - நீரில் கரையும் வைட்டமின்
Answer: D.   I, II மற்றும் III
4.  ஒரு தனி ஊசலின் நிலையை அறிய தேவையான பொதுநிலை ஆயங்களின் எண்ணிக்கை
Answer: B.   2
5.  g - புவிஈர்ப்பு முடுக்கம் மற்றும் R - புவி ஆரம் எனில் விடுபடு வேகத்திற்கான சமன்பாடு
Answer: C.   V_e = √2Rg
6.  யங்குணகம் (E), பருமக் குணகம் (K) மற்றும் விறைப்புக் குணகம் (N) ஆகியவற்றை இணைக்கும் சமன்பாடு
Answer: A.   9/E = 3/N + 1/K
7.  புவிஈர்ப்பு மாறிலி G-யின் S.I அலகு
Answer: D.   Nm² kg⁻²
8.  சரியான விடை தருக:
ஜப்பானின் இட்டாய் இட்டாய் நோய் உருவாக்கத்திற்கு காரணம்
I. ஆர்சனிக் மாசுபாடு
II. சையனைட் மாசுபாடு
III. காட்மியம் மாசுபாடு
IV. லெட் (ஈயம்) மாசுபாடு
Answer: C.   III மட்டும்
9.  பொருத்துக:
(a) செரிகல்ச்சர் 1. நீர்வாழ் உயிரின வளர்ப்பு
(b) ஹார்டிகல்சர் 2. தேனீ வளர்ப்பு
(c) அக்வாகல்ச்சர் 3. பட்டுப்புழு வளர்ப்பு
(d) ஏபிகல்ச்சர் 4. தோட்டக்கலை
Answer: A.   3 4 1 2
10.  FAT என்பதன் விரிவாக்கம் என்ன?
Answer: D.   கோப்பு பங்கீட்டுப் பட்டியல் (File Allocation Table)
11.  கீழ்க்காணும் நினைவகங்களில் எது அதிகப்படியான தகவல்களை சேமிக்க பயன்படுகிறது?
Answer: B.   இரண்டாம் நிலை நினைவகம்
12.  டெர்ராபைட்டின் மதிப்பினைக் கூறு.
Answer: D.   2⁴⁰
13.  ‘புளூடூத்’ தொழில்நுட்பம் என்பது
Answer: C.   இரு கருவிகளுக்கிடையே உள்ள கம்பி இல்லா தொடர்பு
14.  கடல் நீரின் மேற்பரப்பை செந்நிறமாக மாற்றும் தாவர வகை
Answer: A.   டைனோபிளாஜெல்லேட்ஸ்
15.  பட்டியல் I–ஐ பட்டியல் II–உடன் பொருத்தி சரியான விடையைத் தெரிவு செய்க.
பட்டியல் I (கால நிலை) பட்டியல் II (காரணம்)
(a) கொல்கத்தாவை விட சென்னை வெப்பமாக உள்ளது 1. கடலில் இருந்து தூரம்
(b) இமயமலையில் பனிப்பொழிவு 2. உயரம்
(c) மேற்கு வங்கத்திலிருந்து பஞ்சாப் நோக்கி செல்ல மழை குறைகிறது 3. மேற்கத்திய காற்று
(d) குளிர்கால மழைப்பொழிவு 4. அட்சரேகை
Answer: D.   4 2 1 3
16.  கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றுள் கோள் காற்று அல்லாதவை எது?
Answer: C.   பருவக் காற்று
17.  இந்தியாவில் அயன மண்டல பசுமை மாறாக்காடுகளைக் கொண்டிராத பகுதி
Answer: A.   மேற்கு தொடர்ச்சி மலையின் கிழக்குப்பகுதி
18.  பின்வரும் கூற்றை கவனித்து கொடுக்கப்பட்டுள்ளவைகளில் சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
I. “ஷாம்பென்ஸ்” நிக்கோபார் தீவில் வசிக்கும் ஓர் பழங்குடியினர்.
II. 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவர்களின் மக்கள் தொகை 229.
Answer: C.   இரண்டும் சரியானது
19.  கீழே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் குறியீடுகளைப் பயன்படுத்தி சரியான வரிசையைத் தேர்ந்தெடு
I. குத்புதீன் ஐபெக், இல்துத்மிஷ், இரசியா, பால்பன்
II. ஜஹாங்கீர், ஹுமாயூன், அக்பர், ஷாஜஹான்
III. பாலாஜி விஸ்வநாத், பாலாஜி பாஜிராவ், முதலாம் பாஜிராவ், சிவாஜி
Answer: C.   I மட்டும்
20.  சிந்து சமவெளி மக்களின் முக்கிய ஏற்றுமதிப் பொருள்களை கீழ்க்கண்ட குறியீடுகள் மூலம் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
I. கோதுமை
II. பார்லி
III. பருத்தி
IV. தங்கம்
Answer: C.   I மற்றும் II
21.  பட்டியல் Iஐ பட்டியல் II உடன் பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
(a) சாந்தல்கள் கலகம் 1. 1923
(b) மாப்ளா கலகம் 2. 1929
(c) வைசாக் கலகம் 3. 1921
(d) பர்தோலி சத்தியாகிரகம் 4. 1855
Answer: C.   4 3 1 2
22.  பட்டியல் I-ஐ பட்டியல் II உடன்பொருத்தி சரியான விடையை தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
(a) டூப்ளே 1. வங்காள நவாப்
(b) அன்வாருதின் 2. ஆங்கிலப்படை தளபதி
(c) ஷூஜா உத் தௌலா 3. பிரெஞ்சு கவர்னர்
(d) போலோக் 4. கர்னாடக நவாப்
Answer: C.   3 4 1 2
23.  பட்டியல் I லிருந்து பட்டியல் II ஐ பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடு.
பட்டியல் I பட்டியல் II
(a) குரள் 1. ரிஷபம்
(b) தூதம் 2. சாத்ஜம்
(c) கைகிளை 3. மத்தியாமம்
(d) உழ்கை 4. காந்தாரம்
Answer: A.   2 1 4 3
24.  பட்டியல் I லிருந்து பட்டியல் II ஐ பொருத்துக
பட்டியல் I பட்டியல் II
(a) பிராமணங்கள் 1. வன நூல்கள்
(b) சாம வேதம் 2. புரோகிதர் வழிகாட்டி நூல்
(c) ஆரண்யங்கள் 3. சடங்கு நூல்கள்
(d) யஜுர் வேதம் 4. மந்திர நூல்கள்
Answer: B.   3 4 1 2
25.  கீழ் குறிப்பிட்டவைகளில் தவறானவற்றை குறிப்பிடுக.
1909-ம் ஆண்டு மின்டோ-மார்லி சீர்திருத்தங்கள் கீழ் குறிப்பிட்ட சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்தியது.
I. நேரடி தேர்தல் முறையை மாநிலங்களில் ஏற்படுத்தியது
II. பெண்களுக்கு ஓட்டுரிமை கொடுக்கவில்லை
III. இரட்டை ஆட்சியை மாநிலங்களில் ஏற்படுத்தியது
IV. வகுப்பு வார தேர்தல் முறையை அறிமுகப்படுத்தியது
Answer: B.   I மற்றும் III மட்டும்
;