GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 1 2015 Preliminary Examination

General Studies Questions 76 to 100

76.  பின்வரும் இணைகளை கருத்தில் கொள்க:
I. தாளோபைட்டா - ஆல்காக்கள் மற்றும் பூஞ்ஞைகள்
II. டிரக்கியோபைட்டா - வாஸ்குலார் திசுக்கள் உடைய அனைத்து தாவரங்கள்
III. பிரையோபைட்டா - லிவர்வோட்ஸ் மற்றும் பூஞ்ஞைகள்
IV. டெரிடோபைட்டா - மாஸ்கள் மற்றும் காளான்கள்
மேற்குறிப்பிட்ட இணைகளில் எது சரி?
Answer: B.   I மற்றும் II
77.  'கிளைக்கோலிசிஸ்' பற்றிய கீழ்க்கண்ட கூற்றுகளில் எது/எவை சரி?
I. கிளைக்கோலிசிஸ் நிகழ்வினை பெண்டோஸ் பாஸ்பேட் வழிப்பாதை எனவும் அழைப்பார்கள்
II. கிளைக்கோலிசிஸின் தளப் பொருள் குளுக்கோஸ்
III. கிளைக்கோலிசிஸ் நிகழ்வின் முடிவுப் பொருள் கிளைக்கோஜன்
IV. கிளைக்கோலிசிஸ் நிகழ்வினை கிளையாக்ஸிலேட் சுழற்சி எனவும் அழைப்பார்கள்
Answer: B.   II மட்டும்
78.  பின்வரும் வகைப்பாட்டின் பொது அலகுகளை ஏறு வரிசையில் எழுதுக.

I. Family
II. Order
III. Species
IV. Variety
V. Genus
Answer: D.   IV, III, V, I, II
79.  ஒரு கோப்பை தேநீர் 85°C வெப்பநிலையிலிருந்து 75°C-க்கு குளிர்வடைய 1 நிமிடம் ஆகுமெனில், அது 65°C-யிலிருந்து 55°C-க்கு குளிர்வடைய ஆகும் கால அளவு
Answer: C.   1 நிமிடத்திற்கும் அதிகம்
80.  ஃபோட்டானின் ஓய்வு நிறையானது
Answer: A.   சுழி
81.  பின்வருவனவற்றுள் வெவ்வேறு பரிமாணங்கள் கொண்ட குழு எது?
Answer: D.   இருமுனை திருப்புத் திறன், மின்புலப் பாயம், மின்புலம்
82.  புதுத் தனிமங்கள் மற்றும் அரிய புவித் தனிமங்கள் கண்டறியப்படவும், தனிம வரிசை அட்டவணையில் பொருத்தப்படவும் பயன்படுவது
Answer: B.   மோசலியின் விதி
83.  இந்திய வனக் கணக்கீட்டு தலைமையகம் எங்கு அமைந்துள்ளது?
Answer: B.   டேராடூன்
84.  இவற்றுள் எந்த சரணாலயம் தமிழ்நாட்டில் இல்லை?
Answer: D.   பெரியார்
85.  நிறக்குருட்டு பெண்ணிற்கும், இயல்பான பார்வை கொண்ட ஆணிற்கும் திருமணம் நடந்தால், இவர்கள் பெற்றெடுக்கும்
Answer: B.   மகன்கள் நிறக்குருட்டுத்தன்மை உடையவர்கள் மற்றும் மகள்கள் இயல்பான பார்வை உடையவர்கள்
86.  கிரிட்டினிசம், மிக்சோஎடிமா மற்றும் முன் கழுத்துகழலை ஆகிய கோளாறுகள் இதனுடன் தொடர்புடையது
Answer: B.   தைராய்டு சுரப்பி
87.  கீழ்க்கண்டவற்றுள் தவறாக பொருத்தப்பட்டுள்ளது எது?
Answer: A.   அனோஃபிலிஸ் ஸ்டீபென்சி - லீஸ்மேனியாசிஸ்
88.  கணிப்பொறியில் ஆணைகளின் தொகுப்பு
Answer: A.   நிரல்
89.  சரியாக பொருந்தியவற்றை தேர்ந்தெடுக்க:
பட்டியல் I - பட்டியல் II
(P) பிளவு - 1. ஸ்ராம்போலி
(Q) மடிப்பு - 2. சான் ஆண்டரஸ்
(R) புவிஅதிர்வு - 3. இமயமலைத் தொடர்
(S) எரிமலை - 4. அதிர்வு மையம்
- 5. வானிலைச் சிதைவு
- 6. பொறை நீக்கம்
Answer: C.   P-2, Q-3, R-4, S-1
90.  அயன மண்டல கிழக்கு பசிபிக் சமுத்திர மேற்பரப்பில் ஏற்படும் வெப்ப ஏற்றத் தாழ்வுகளானது இவ்வாறு அழைக்கப்படுகிறது
Answer: D.   எல் நினோ மற்றும் லா நினா
91.  சூரியக் கதிர்வீச்சின் ஒரு பகுதி பிரதிபளிப்பின் மூலம் விண்வெளிக்கு திருப்பி அனுப்பப்படுவது இவ்வாறு அழைக்கப்படுகிறது
Answer: B.   அல்பெடோ
92.  பெல்ஜியத்தில் உள்ள ஒரு பிரதான வைரச்சுரங்கம்
Answer: D.   ஆன்ட் வெர்ஃப்
93.  கொடுக்கப்பட்டுள்ள இந்திய மண் வகைகளை பரப்பளவின் அடிப்படையில் இறங்கு வரிசைப்படுத்துக
Answer: D.   வண்டல் மண், செம்மண், கரிசல் மண், லேட்டரைட் மண்
94.  'போர் கடவுள்' என்றழைக்கப்படும் கோள்
Answer: C.   செவ்வாய்
95.  மழை வீழ்ச்சியை விவரிக்க பனிப்படிக கோட்பாட்டை உருவாக்கியவர்
Answer: A.   டார் பெர்ஜிரன்
96.  வரலாற்றுக்கு முந்தைய காலத்தின் அறிவியல் அடிப்படையில் காலத்தை கணக்கிடுவதில் பின்வரும் கூற்றை கவனி : சரியான கூற்றை தேர்ந்தெடு:

I. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் உயிர்சார் பொருட்களில் எந்த அளவுக்கு கரியம் குறைந்துள்ளது என்பதை அடிப்படையாகக் கொண்டு காலத்தை கணக்கிடும் முறையே ரேடியோ-கார்பன் முறையாகும்.
II. மற்றொரு முறை டென்ட்ரோ காலக்கணிப்பு முறை எனப்படுகிறது.
III. தொல் தாவரவியல் தொல் தாவர வகைகளை ஆய்வு செய்வது.
IV. தொல்லெழுத்து முறை பழங்கால எழுத்துக்களை வாசிக்கும் முறையாகும்.
Answer: A.   I, II மற்றும் III மட்டும்
97.  கீழ்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
Answer: A.   கோல் - மத்திய பிரதேசம்
98.  சரியான கால வரிசையை தருக :

I. பிட் இந்திய சட்டம்
II. மிண்டோ-மார்லி சட்டம்
III. ஒழுங்குமுறைச் சட்டம்
IV. மாண்டேகு-செம்ஸ்போர்டு சட்டம்
Answer: C.   III, I, II, IV
99.  தமிழ்நாட்டு நூலக இயக்கத்தின் தந்தை என்று அழைக்கப்பட்டவர் யார்?
Answer: A.   திரு. T.K. அவினாசிலிங்கம்
100.  பின்வருவனவற்றில் முகமது பின் தூக்ளக் கால நிகழ்ச்சிகளை கால வரிசையில் அடையாளம் காண்க.
Answer: C.   தோ ஆப் மீது வரிவிதிப்பு, தலைநகர் மாற்றம், அடையாள நாணய சீர்திருத்தம், நாகர்கோட் படையெடுப்பு
;