GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 1 2015 Preliminary Examination

Aptitude Questions 26 to 45

26.  + என்பது ×, × என்பது -, ÷ என்பது + மற்றும் - என்பது ÷ எனில் (175 - 25) ÷ (5 + 20) × (3 + 10) ன் மதிப்பு யாது?
Answer: C.   77
27.  ஒரு பெருக்குத் தொடர் வரிசையின் நான்காவது உறுப்பு \(\dfrac{2}{3}\) மற்றும் அதன் ஏழாவது உறுப்பு \(\dfrac{16}{81}\) எனில் அந்த வரிசையின் முதல் உறுப்பு என்ன?
Answer: D.   \(\dfrac{9}{4}\)
28.  ஒரு முக்கோணத்தின் ஒவ்வொரு பக்கமும் இரு மடங்காக அதிகரிக்கப்பட்டால், அந்த முக்கோணத்தின் பரப்பளவு எத்தனை சதவீதம் அதிகரித்திருக்கும்?
Answer: C.   300 %
29.  கீழே உள்ள வரிசை ஒரு முறையான மாதிரியைச் சார்ந்தது. கேள்விக்குறி இட்ட இடத்தில், சரியான எழுத்தைக் கொண்டு நிறைவு செய்க.

C E I K O Q ?
Answer: D.   U
30.  \(\dfrac{4}{5},\ \dfrac{3}{10}\) மற்றும் \(\dfrac{7}{15}\) ஆகியவற்றின் மீச்சிறு பொது மடங்கு காண்.
Answer: A.   \(\dfrac{84}{5}\)
31.  மூன்று எண்கள் 1 : 2 : 3 என்ற விகிதத்தில் உள்ளன. அவற்றின் மீப்பெரு பொது காரணி (H.C.F) 12 எனில் அந்த எண்கள் யாவை?
Answer: A.   12, 24, 36
32.  இரண்டு எண்களின் விகிதம் 2 : 3. அவ்வெண்களின் மீப்பெரு பொது காரணி மற்றும் மீச்சிறு பொது மடங்கு ஆகியவற்றின் பெருக்குத் தொகை 150 எனில், அந்த இரு எண்களின் கூட்டுத் தொகை யாது?
Answer: D.   25
33.  ஆண்டுக்கு 5% என்ற கூட்டு வட்டியில், 2 ஆண்டுகளுக்கு அலெக்ஸ் என்பவர் ரூ. 8,000-ஐ நிரந்தர வைப்பு திட்டத்தில் முதலீடு செய்கின்றார். அந்த முதலீடு முதிர்வு அடையும் பொழுது, அலெக்ஸ் பெறும் தொகை யாது?
Answer: C.   ரூ. 8,820
34.  இரண்டு ஆண்டுகளுக்கு, ஆண்டுக்கு 8% வட்டி வீதத்தில், ஒரு தொகையின் கூட்டு வட்டி மற்றும் தனிவட்டிகளுக்கு இடையே உள்ள வித்தியாசம் ரூ. 240 எனில் அந்த தொகையின் மதிப்பு என்ன?
Answer: C.   ரூ. 37,500
35.  ஆண்டுக்கு 12% தனி வட்டி வீதத்தில் ரூ 6,000-ஐ ஓராண்டு வட்டியாக கொடுக்கும் தொகையைக் காண்க.
Answer: B.   ரூ. 50,000
36.  6 செ.மீ., 8 செ.மீ., 10 செ.மீ. பக்கமுள்ள மூன்று உலோகத்தாலான திண்ம கனசதுரங்கள் உருக்கப்பட்டு ஒரு புதிய கனசதுரம் செய்யப்படுகிறது எனில் புதிய கனசதுரத்தின் பக்கத்தின் நீளம் யாது?
Answer: A.   12 செ.மீ.
37.  கேள்விக் குறியிட்ட இடத்தில் வரும் எண்ணைக் காண்க:

21, 25, 34, 50, ?, 111, 160
Answer: C.   75
38.  A ஒரு வேலையை 10 நாட்களிலும், B அதை 15 நாட்களிலும் செய்து முடிப்பர். இருவரும் சேர்ந்து அவ்வேலையைச் செய்து ரூ. 1,500-ஐ ஈட்டினால், அத்தொகையை எவ்வாறு பிரித்துக் கொள்வர்?
Answer: B.   ரூ. 900 மற்றும் ரூ. 600
39.  6 ஆண்கள், 8 சிறுவர்கள் இணைந்து ஒரு வேலையைச் செய்ய, 10 நாட்கள் தேவைப்படும்; மற்றும் 26 ஆண்கள், 48 சிறுவர்கள் இணைந்து அதே வேலையை 2 நாட்களில் செய்வர் எனில், 15 ஆண்கள், 20 சிறுவர்கள் சேர்ந்து அதே வேலையைச் செய்ய எத்தனை நாட்கள் தேவைப்படும்?
Answer: A.   4 நாட்கள்
40.  ஒரு வீட்டு மனையானது நாற்கர வடிவில் உள்ளது. அதன் ஒரு மூலை விட்டத்தின் நீளம் 100 மீ. மூலைவிட்டத்தின் எதிரெதிர் பக்கங்களில் உள்ள முனைகள் இரண்டும் மூலை விட்டத்திலிருந்து 50 மீ தொலைவில் இருப்பின், மனையின் பரப்பு யாது?
Answer: A.   5000 மீ\(^{2}\)
41.  “NOIDA” என்பது 39658 என எழுதப்பட்டால் “INDIA” என்பதை எவ்வாறு எழுதலாம்?
Answer: B.   63568
42.  பின்வரும் கூற்றுகளைப் படிக்க
1. A-யும் B-யும் சமவயதுடையவர்கள் அல்லது A ஆனவர் B-ஐ விட பெரியவர்
2. C-யும் D-யும் சமவயதுடையவர்கள் அல்லது D ஆனவர் C-ஐ விட பெரியவர்
3. B ஆனவர் C-ஐ விட பெரியவர்

மேலே உள்ள கூற்றுகளிலிருந்து நாம் காணும் தீர்மானம் யாது?
Answer: A.   A ஆனவர் C-ஐ விடப் பெரியவர்
43.  ஒரு கடிகாரத்தின் நிமிட மற்றும் மணி முள்களின் நீளம் முறையே 14 செ.மீ மற்றும் 7 செ.மீ. 30 நிமிடங்களில் நிமிட முள் மற்றும் மணி முள் எவ்வளவு தூரம் நகரும்?
Answer: C.   44 செ.மீ, 1.83 செ.மீ
44.  நேர்வட்ட கூம்பு வடிவில் குவிக்கப்பட்ட நெற்குவியலின் விட்டம் 4.8 மீ மற்றும் அதன் உயரம் 1.8 மீ என்க. இந் நெற்குவியலை மழையிலிருந்து பாதுகாக்க கித்தான் துணியால் மிகச்சரியாக மூடப்படுகிறது எனில், தேவையான கித்தான் துணியின் பரப்பைக் காண்.
Answer: A.   22.6 மீ²
45.  \(a^x=b,\ b^y=c,\ c^z=a\) எனில் \(xyz\)-ன் மதிப்பு என்ன?
Answer: D.   1
;