GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 1 2015 Preliminary Examination

General Studies Questions 26 to 50

26.  வல்லபாய் படேலுக்கு 'சர்தார்' என்று பட்டம் சூட்டியவர் யார்?
Answer: C.   மகாத்மா காந்தி
27.  1857-ம் ஆண்டு புரட்சியின் போது ஆங்கிலேயருக்கு விசுவாசமாக இருந்த இராணுவம் எது?
Answer: C.   சென்னை இராணுவம்
28.  தவறான கூற்றை சுட்டிக்காட்டவும்.
Answer: D.   சிந்த்ஹு மற்றும் கன்ஹு என்பவர்கள் கோல்களின் தலைவராவார்கள்
29.  கீழ்கண்டவற்றுள் பொருத்துக.
(a) சைமன் குழு 1. 1928
(b) நேரு அறிக்கை 2. 1932
(c) இரண்டாவது வட்டமேஜை மாநாடு 3. 1927
(d) வகுப்பு வாரித் தீர்வு 4. 1931
Answer: B.   3 1 4 2
30.  வெள்ளையனே வெளியேறு இயக்கம் தோல்வியடைய எது காரணமல்ல என்பதை கொடுக்கப்பட்டுள்ள வாசகங்களிலிருந்து அடையாளம் காண்.
(a) ஆங்கில அரசாங்கம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய தலைவர்களை சிறையில் அடைத்தது
(b) நேரு மற்றும் இராஜகோபாலாச்சாரி ஆகியோர் நேரடி நடவடிக்கைகளில் நம்பிக்கை வைக்கவில்லை
(c) இந்து மகாசபை மற்றும் முஸ்லிம் லீக் இந்நடவடிக்கையை ஆதரித்தது
(d) ஆங்கில அரசாங்கம் இவ்வியக்கத்தை அடக்கியது
Answer: C.   (c) மட்டும்
31.  கீழ்கண்ட வாக்கியங்களை கவனி

கூற்று (A): பழைய கற்காலத்திற்கும் புதிய கற்காலத்திற்கும் இடைப்பட்ட நாகரிக காலத்தை இடைகற்காலம் என அறிஞர்கள் வேறுபடுத்துகின்றனர்.

காரணம் (R): இடைக்கற்காலத்தின் முதன்மை பண்பாகக் கருதப்படுபவன படிகக்கற்களுக்குப் பதிலாக நீலச் சாயமுடைய வெண்ணிற மணிக் கல்லும் மற்றும் மணற் சத்துடன் பூசப்பட்டதும் கொண்ட மிகவும் சிறிய அளவிலான கற்கருவிகள் ஆகும்.

கீழ்க்கண்ட குறியீடுகளை கொண்டு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
Answer: C.   (A) மற்றும் (R) சரி. (R) என்பது (A) வின் சரியான காரணம் தான்
32.  பொருத்துக:
(a) Na மற்றும் K - (i) உருகிய உப்பை மின்னாற்பகுத்தலில் கிடைக்கிறது
(b) Cu மற்றும் Ag - (ii) தனித்த நிலையில் மட்டும் கிடைக்கிறது
(c) Au மற்றும் Pt - (iii) தனித்த மற்றும் சேர்ந்த நிலையில் கிடைக்கிறது
(d) Na மற்றும் Ca - (iv) உலோகவியலில் ஒடுக்கு கரணி
(e) Al மற்றும் Mg - (v) சேர்ந்த நிலையில் மட்டுமே கிடைக்கிறது.
Answer: A.   (a)-(v), (b)-(iii), (c)-(ii), (d)-(i), (e)-(iv)
33.  பின்வருவனவற்றுள் தவறானவை எது/எவை?
I. Mg₂C₃ நீராற்பகுப்பு அடைந்து அசிட்டிலீனைத் தரும்
II. Be₂C நீராற்பகுப்பு அடைந்து மீத்தேனை வெளியிடும்
III. Al₄C₃ நீராற்பகுப்பு அடைந்து அல்லீலைனைத் தரும்.
Answer: C.   I மற்றும் III
34.  டேனியல் கலத்தின் E° = 1.10 V. எனில் கீழ்க்கண்ட வினையின் (298 K ல்) சமநிலை மாறிலி (K)-யின் மதிப்பு?

Zn_((s)) + Cu²⁺_((aq)) → Zn²⁺_((aq)) + Cu_((s))
Answer: D.   1.55 × 10³⁷
35.  விவசாயத்துறையில் வேலையின்மையை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்
I. பருவகால வேலையின்மை
II. மறைமுக வேலையின்மை
III. நீடித்த வேலையின்மை

சரியான பதிலை குறிப்பிடவும்
Answer: D.   I, II மற்றும் III
36.  காலியிடங்களை நிரப்புக:

குடும்பத்திற்கு ________ என்பதை ஊக்குவிக்கவும் மக்கள் தொகையை ________-ம் ஆண்டில் நிலைப்படுத்தவும் 2000-ம் ஆண்டின் தேசிய மக்கள் தொகை கொள்கையில் ஏற்றுக்கொள்ளப்பட்டது
Answer: C.   இரண்டு குழந்தை திட்டம், 2046
37.  பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையை தேர்வு செய்க:
(a) வரி வருவாய் 1. வருங்கால வைப்பு நிதி
(b) மூலதன வருவாய் 2. வருவாய் மற்றும் செலவு மீதான வரிகள்
(c) திட்டமில்லா செலவு 3. விற்பனை வரி
(d) மதிப்பு கூட்டிய வரி 4. வட்டி செலுத்துதல்கள்
Answer: C.   2 1 4 3
38.  இந்தியாவின் தேசிய புள்ளி விவர ஆணையம் இவரது தலைமையில் அமைந்திருந்தது
Answer: B.   சி. ரெங்கராஜன்
39.  இந்திய நிதி முறையின் கட்டமைப்பு இதனை உள்ளடக்கியது அல்ல
Answer: D.   பற்றாக்குறை நிதி
40.  MGNREGS பிற ஏழ்மை நீக்கும் திட்டங்களிலிருந்து கீழ்க்கண்ட விதத்தில் வேறுபடுகிறது.
I. MGNREGS குறிப்பிட்ட ஏழைகளின் வருவாயினை அதிகரிக்கும் நோக்கமுடையது.
II. இது குடிமக்கள் மற்றும் அடிப்படை உரிமையை ஆதாரமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது.
III. தொடர்ந்த மற்றும் சமுதாய கண்காணிப்பதற்கான வழிமுறைகளை உறுதி செய்கிறது.
IV. மாநில மற்றும் மத்திய அரசுகளின் ஆணைகளுக்கிணங்க செயல்படுகிறது.
Answer: B.   II மற்றும் III
41.  உச்ச நீதிமன்றத்தால் இதை ஆராய்வதற்காக நீதியரசர் D.P. வாத்வா குழு அமைக்கப்பட்டது
Answer: D.   பொது விநியோக முறை
42.  இந்தியாவில் உரங்களுக்கான ஊட்டச்சத்தின் அடிப்படையிலான மானியக் கொள்கை துவங்கிய ஆண்டு
Answer: D.   2010
43.  'சுத்தம் செய் இந்தியா' பட்டியலில் எந்த இந்திய நகரம் மிக சுத்தமான நகரம் என்று 2015ல் தேர்வு செய்யப்பட்டுள்ளது?
Answer: D.   மைசூரூ
44.  இந்தியாவின் 20வது சட்டக்குழுவின் தலைவர் யார்?
Answer: A.   நீதிபதி. அஜீத் பிரகாஷ் ஷா
45.  அண்மைக் காலத்தில் மத்திய அரசானது நம் நாட்டின் ஒரு நகரத்தினை ஆன்மீக புனிதத் தலைநகரமாக உருவாக்க முடிவெடுத்துள்ளது. கீழ்க்கண்டவற்றுள் அது எந்த நகரமாகும்?
Answer: D.   புத்தகயா
46.  இந்தியாவின் மிகப்பெரிய தொலைத் தொடர்பு நிறுவனம் எது?
Answer: B.   பாரதி ஏர்டெல்
47.  தமிழ்நாட்டின் எந்த மாநகராட்சிக்கு 2015 ஆம் ஆண்டிற்கான சிறந்த மாநகராட்சி விருதை பெற்றது?
Answer: C.   மதுரை
48.  ஒவ்வொரு ஆண்டும் 'ஆகஸ்ட் - 13' ________ நாளாக அனுசரிக்கப்படுகிறது?
Answer: D.   உறுப்பு தானம் நாள்
49.  ஒவ்வொரு ஆண்டும் ஐக்கிய நாடுகள் சபையினால் 'அகில உலக காணாமல் போனவர் தினம்' அனுசரிக்கப்படும் நாள்
Answer: C.   ஆகஸ்ட் 30
50.  ஜூன் 2015 ல் ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி
Answer: A.   மைத்ரிபாலா சிறிசேனா
;