GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 1 2015 Preliminary Examination

General Studies Questions 101 to 125

101.  பாபருக்கு தொடர்புடைய கீழே கொடுக்கப்பட்டுள்ளதை கருதுக.

I. பாபரின் சுயசரிதை 'பாபர் நாமா' ஆகும்
II. அதனின் மூல நூல் பாரசீக மொழியில் உள்ளது
Answer: A.   I மட்டுமே சரியாகும்
102.  இந்தியாவில் எந்த மாநிலத்தில் பிராமணர் மற்றும் பனியா பெண்களைத் தவிர, பிற பெண்கள் “சூடி பஹானானா” முறைப்படித் தங்கள் திருமண உறவை முறித்துக் கொள்கின்றனர்?
Answer: B.   சட்டீஸ்கர்
103.  மதர் தெரசா தொடர்பான கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவை எவை?

I. அவர் மிஷனரீஸ் ஆஃப் சாரிட்டி என்ற சபையை துவக்கினார்
II. அவர் இந்திய குடியுரிமையை ஏற்றுக் கொள்ளவில்லை
III. அமைதிக்கான நோபல் பரிசு அவர்களுக்கு வழங்கப்பட்டது
IV. கி.பி. 1929-ம் ஆண்டு சென்னைக்கு சமய பரப்பாளராக வந்தார்
Answer: A.   I மற்றும் III சரியானது
104.  திராவிட மகாஜன சபையைத் தோற்றுவித்தவர்
Answer: A.   அயோத்தி தாசர் பண்டிதர்
105.  எந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் மகாத்மா காந்தி அதன் தலைவராக்கப்பட்டார்?
Answer: C.   பெல்காம்
106.  வரிசை I உடன் வரிசை II ஐ பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையை தெரிவு செய்க.
வரிசை I வரிசை II
(a) அமிர்த் பஜார் பத்திரிக்கை 1. தாதாபாய் நௌரோஜி
(b) இந்தியன் மிர்ரர் 2. சிசிர் குமார் கோஷ்
(c) வாய்ஸ் ஆஃப் இந்தியா 3. G. வர்மா
(d) அட்வகேட் 4. N. N. சென்
Answer: A.   2 4 1 3
107.  கருப்பு சட்டம் என்று இந்தியர்களால் அழைக்கப்படுவது எது?
Answer: C.   ரௌலட் சட்டம்
108.  கொடுக்கப்பட்டுள்ள வாக்கியங்களில் தவறான வாக்கியத்தை அடையாளம் காட்டுக.
Answer: D.   மிஷ்னரிகள் நற்செய்தியை ஆங்கில மொழியில் பரப்பினர்
109.  கீழே கொடுக்கப்பட்டுள்ள காரணம் மற்றும் விளக்கத்தை கருத்தில் கொண்டு, சரியான விடையை குறியீடுகளிலிருந்து தேர்ந்தெடு.

காரணம் (R) : பண்டைய தமிழ் மக்களின் உணவுப் பழக்கம், நவீன காலத்தை விட மாறுபட்டதல்ல. நெய் ஒரு முக்கிய உணவாக அனைத்து மக்களும் பயன்படுத்தினர். இதற்கு அதிக விலை கிடைத்தது.

விளக்கம் (A) : சைவம் மற்றும் அசைவம் உண்ணும் அனைத்து மக்களும் நெய் பயன்படுத்தினர். ஆவூர் மூலங்கிழார் மற்றும் புறத்திணை நன்னாகணார் நெய்யின் பயன்பாடு பற்றி நிறைய செய்திகளை எழுதியுள்ளனர்.
Answer: A.   காரணம் மற்றும் விளக்கமும் சரி, காரணத்தின் விளக்கம் சரியாக கொடுக்கப்பட்டுள்ளது.
110.  கீழ்கண்ட குறியீடுகளிலிருந்து சரியான விடையை தேர்ந்தெடு.

கூற்று (A) : இந்திய சுதந்திரப் போராட்டம் படிப்படியான வளர்ச்சி மூலம் 1920-22 ஒத்துழையாமை இயக்கம் வரை அடைந்தது. இத்தருணத்தில் தான் உழைக்கும் வர்க்கத்தினர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். இவர்கள் தங்கள் உரிமைக்காக ஒரு அமைப்பை உருவாக்கினர்.

காரணம் (R) : 1920 ஆம் ஆண்டு அனைத்திந்திய தொழிலாளர் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பை உருவாக்க உந்துகோலாக இருந்தவர் லோகமான்ய திலகர்.
Answer: A.   (A) மற்றும் (R) சரி
111.  பின்வரும் சேர்மங்களை அவற்றின் நீரில் கரையும் திறனின் ஏறுவரிசையில் எழுது
(i) NaHCO₃
(ii) KHCO₃
(iii) Mg(HCO₃)₂
(iv) Ca(HCO₃)₂
Answer: B.   (i) < (ii) < (iii) < (iv)
112.  சரியாக பொருத்துக:
ஆக்டினைடு தனிமம் அணு எண்
(a) புளூட்டோனியம் 1. 102
(b) க்யூரியம் 2. 100
(c) பெர்மியம் 3. 96
(d) நோபிலியம் 4. 94
Answer: D.   4 3 2 1
113.  கடத்தப்படும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை (a)-ஐ ஒரு மோல் KMnO₄ ஒடுக்கப்படும் போது உண்டாகும் தொடர்பான அமைப்புகளோடு (b) பொருத்திக் காட்டுக.
(a) 1, 3, 4, 5
(b) Mn₂O₃, MnO₂, MnO₄²⁻, Mn²⁺
Answer: A.   1-MnO₄²⁻, 3-MnO₂, 4-Mn₂O₃, 5-Mn²⁺
114.  பொதுவாகப் பயன்படுத்தப்படும் களைக்கொல்லி
Answer: B.   2, 4- டைகuளோரோ பீனாக்ஸி அசிட்டிக் அமிலம்
115.  பொருத்துக:
I - II - III
(1) தயமின் - (a) சீலோசிஸ் - (i) பெல்லகரா
(2) நியசின் - (b) பாலிநியுரிட்டிஸ் - (ii) குளோசிட்டிஸ்
(3) ரிபோபிளவின் - (c) நிகோட்டினமைடு - (iii) பெரி பெரி
(4) பயோடின் - (d) எதிர்பெர்னிக் தன்மை - (iv) ஹைபரெஸ்தீசியா
(5) சயனகோபாலமின் - (e) இணை நொதி - R - (v) பெர்னிசியஸ் இரத்த சோகை
Answer: B.   (1)-(b)-(iii), (2)-(c)-(i), (3)-(a)-(ii), (4)-(e)-(iv), (5)-(d)-(v)
116.  எந்த விதிகளின் கீழ் இந்திய அரசியலமைப்பு மத்திய மற்றும் மாநில சட்டத்துறையின் உறவுகள் பற்றி குறிப்பிடுகிறது?
Answer: A.   விதிகள் 245 - 255
117.  பின்வருவனவற்றில் எவை சரியாக பொருந்தவில்லை? கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளை பயன்படுத்தி உங்கள் விடையை தேர்ந்தெடுக்க
I. கடன் உருவாக்கம் - இந்தியன் ரிசர்வ் வங்கி
II. வணிக வங்கிகள் - வைப்புகளை ஏற்றுக் கொள்ளுதல்
III. இந்தியன் ரிசர்வ் வங்கி - கடன் கட்டுப்படுத்துதல்
IV. எண்ணளவு கட்டுப்பாட்டு முறைகள் - பட்டியல் வங்கிகள்
Answer: A.   I மட்டும்
118.  இந்தியாவில் விரைவான மக்கள் தொகை வளர்ச்சி ஏற்பட்டது இக்காலக் கட்டத்தில் ஆகும்
Answer: C.   1951 - 1981 ஆண்டுகளில்
119.  பின்வரும் இந்திய மாநிலங்களில் எந்த மாநிலத்தில் உள்நாட்டு நீர்வழிப் போக்குவரத்து முக்கியமானதாக இல்லை?
Answer: D.   குஜராத்
120.  இந்தியாவில் எந்த மின் சக்தியின் மூலமாக அதிக அளவில் மின் சக்தி உற்பத்தியாகிறது?
Answer: B.   அனல் மின்
121.  2010-11 ஆம் ஆண்டில் உலகளாவிய பால் உற்பத்தியில் இந்தியாவின் தரம் என்ன?
Answer: A.   முதலிடம்
122.  புதிய பொருளாதார கொள்கையில் பொதுத்துறையின் கீழ் எந்த தொழில் நிறுவனம் ஒதுக்கீடு செய்யப்பட்டது?
Answer: A.   அணுமின் சக்தி
123.  வணிக சக்தி நுகர்வின் அடிப்படையில் கீழ்க்காணும் இந்திய துறைகளை இறங்கு வரிசையில் வரிசைப்படுத்துக
1. இல்லத்துறை
2. வேளாண்மை
3. தொழிற்சாலை
4. போக்குவரத்து
Answer: B.   3, 4, 1, 2
124.  ஆகஸ்ட் 2015ல் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட 'இந்திரதனுஸ்' திட்டத்தின் நோக்கம்
Answer: B.   பொதுத் துறை வங்கிகளை மேம்படுத்துவது அல்லது சீரமைப்பது
125.  எந்த நாடு "சூறாவளி கோனி" யால் பாதிக்கப்பட்டது?
Answer: A.   பிலிப்பைன்ஸ்
;