GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 1 2024 Preliminary Examination

General Studies Questions 51 to 75

51.  இந்திய புவியியல் ஆய்வு மையம், மேகாலயாவில் எந்த மலையில் பழமையான புதைபடிவத்தைக் கண்டறிந்தது?
Answer: A.   தெற்கு கேரோ மலைகள்
52.  கழிவுப்பொருட்களின் வெப்ப அழிவிலிருந்து உருவாகும் தூசி துகள்களை —————— மூலம் காற்றில் கலப்பதைத் தடுக்கலாம்
Answer: D.   மின்நிலை விரைவுக்கி
53.  பேரழிவுகளை அவற்றின் தொடர்புடைய பண்புகளுடன் சரியாகப் பொருத்தவும்:
(a) எரிமலை வெடிப்பு 1. கடுமையான காற்று
(b) சூறாவளி 2. கடலடி நிலநடுக்கம்/பிளவு
(c) ஆழிப் பேரலை 3. பாலைவனமாக்கல்
(d) வறட்சி 4. பாறைக் குழம்பு
Answer: A.   4 1 2 3
54.  சரளைமண் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது சரியானது?
(i) இந்த வார்த்தையானது கிரேக்க மொழியில் இருந்து வந்தது
(ii) இதில் இரும்பு மற்றும் அலுமினியம் சக்தி அதிகமாக உள்ளது
(iii) இதில் நைட்ரஜன், பொட்டாசியம் மற்றும் சுண்ணாம்பு குறைவாக உள்ளது
Answer: C.   (ii) மற்றும் (iii) மட்டும்
55.  பின்வரும் இந்திய நதிகளுள் அதிக ஆற்றுப்படுகையை கொண்டது
Answer: A.   கோதாவரி
56.  நார்வெஸ்டர், 50 செ.மீ மழைப்பொழிவை —————— இடத்தில் தருகிறது
Answer: A.   அசாம்
57.  கீழ்கண்டவற்றுள் எவை சரியாக பொருந்தியுள்ளன :
இனம் - மாநிலம்
(1) லீம்போ அல்லது லிம்பு - சிக்கீம்
(2) கர்பி - இமாச்சலப் பிரதேசம்
(3) தோங்காரியா - ஒடியா
(4) போண்டா - தமிழ் நாடு
Answer: A.   (1) மற்றும் (3) மட்டும்
58.  தாக்கினி இலக்கியம் குதுப் ஷாகி சுல்தான் —————— ஆல் ஆதரிக்கப்பட்டது
Answer: A.   கோல்கொண்டா
59.  சரியான விடையைத் தேர்ந்தெடு :
கூற்று [A] : பாமன் ஷா மிகச் சரியாகத் தாக்குதல் தொடுத்து வாரங்கல் மற்றும் ரெட்டி அரசுகளான ராஜமுந்திரி, கொண்டவீடு ஆகியன மீது ஆதிக்கம் செலுத்தி ஆண்டுதோறும் திறை செலுத்திவைத்தார்.
காரணம் [R] : இது அடிக்கடி போர்கள் ஏற்பட வழி வகுத்தது.
Answer: D.   கூற்று [A] சரி, காரணம் [R], கூற்று [A]-ன் சரியான விளக்கமாகும்
60.  மராட்டிய பேரரசின் இரண்டாவது நிறுவனர்
Answer: C.   பாலாஜி விஸ்வநாத்
61.  அக்பரின் படையெடுப்பு வெற்றிகளைக் காலவரிசைப்படுத்துக.
(1) காஷ்மீர்
(2) காபுல்
(3) கந்தஹார்
(4) அஹமத்நகர்
Answer: B.   2 1 3 4
62.  சுல்தானியர்களின் ஆட்சியில், பிரதம மந்திரி வாசிர் என்று அழைக்கப்பட்டார்.
(i) திவானி-இ-விஸாரத் என்றழைக்கப்பட்ட நிதித் துறைக்கு அவர்தான் தலைவராகச் செயல்பட்டார்
(ii) துறையிலுள்ள வரவு செலவுக் கணக்குகளை மேற்பார்வையிடும் இடத்திலிருந்தார்
மேற்கூறிய கூற்றுகளில் எவை சரியானவை?
Answer: C.   (i) மற்றும் (ii)
63.  கீழ்கண்டவற்றுள் சரியாகப் பொருந்தியதைத் தேர்வு செய்க.
(1) ஆரிய பட்டர் - ஆரிய பட்டியம்
(2) வராகமிகிர் - ஹாஸ் யாயு வேதா
(3) பிரம்மகுப்தர் - பிருகத் சம்ஹிதா
(4) வாக்பாட்டா - அஷ்டாங்க சங்கரா
Answer: A.   (1) மற்றும் (4) சரியானவை
64.  மாநில தகவல் ஆணையம் பற்றிய கீழ்கண்ட கூற்றுகளை கவனி. தவறானவற்றை கண்டறிக.
(i) ஆணையம் ஒரு தலைமை ஆணையர் மற்றும் ஐந்துக்கு மிகாமல் தகவல் ஆணையர்களை கொண்டிருக்க வேண்டும்.
(ii) மாநில தகவல் ஆணையர்கள் பணியில் அமர்த்தப்பட்ட பிறகு மீண்டும் மறு நியமனத்திற்கு தகுதியுடையோர் அல்ல.
(iii) மாநில தகவல் ஆணையரை ஆளுநர் பதவி நீக்கம் செய்ய முடியும்.
(iv) மாநில தகவல் ஆணையரை ஆணையர்களை பரிந்துரைக்கும் குழுவில் மாநிலத்தின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும் ஒரு உறுப்பினர்.
Answer: C.   (i) மற்றும் (iv) தவறு
65.  மாநில மனித உரிமை ஆணையம், மனித உரிமை மீறல்கள் தொடர்பான மீறல்களை விசாரிக்க கீழ்கண்ட பட்டியலில் இருந்து மேற்கொள்ளலாம்
Answer: C.   மாநில மற்றும் பொது பட்டியல்
66.  பொருத்துக:
விதி பொருள்
(a) 124 C 1. உச்ச நீதிமன்றத்தின் இருப்பிடம்
(b) 125 2. நாடாளுமன்றத்தின் சட்டமியற்றும் அதிகாரம்
(c) 126 3. ஊதியங்கள்
(d) 130 4. இடைக்கால தலைமை நீதிபதி நியமனம்
Answer: A.   2 3 4 1
67.  பின்வரும் ஆணையங்களை, அதன் அமைப்பின் கால வரிசைப்படி ஒழுங்கமைக்கவும்.
Answer: B.   முதல் நிர்வாக சீர்திருத்த ஆணையம், ராஜ்மன்னார் குழு, சர்க்காரியா ஆணையம், பூஞ்சி ஆணையம்
68.  அரசியலமைப்பின் எந்த விதி ஒரு மாநில முதலமைச்சருடன் தொடர்புடையதல்ல?
Answer: C.   விதி 165
69.  'பாராளுமன்றம்' என்னும் சொல், பேசு என்று பொருளடங்கிய 'பார்லே' என்னும் சொல்லிலிருந்து பெறப்பட்டது.
Answer: A.   பிரெஞ்சு மொழி
70.  (i) இந்திய ஜனாதிபதி நேர்முக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
(ii) இந்திய ஜனாதிபதி பெயரளவில் அரசின் தலைவர் ஆவார்.
மேற்கண்ட கூற்றுக்களில் எது சரியானது?
Answer: B.   (ii) மட்டும்
71.  அரசு நெறிமுறைக் கொள்கைகளை “நோக்கங்கள் மற்றும் விழைவுகளின் அறிக்கை” என அழைத்தவர் யார்?
Answer: A.   கே.சி. வேயர்
72.  அடிப்படை கடமைகள் பற்றிய கூற்றுக்களை கருதுக. தவறான கூற்றினை கண்டறிக.
(i) வரிகளை செலுத்துதல்
(ii) பொது சொத்துக்களை பாதுகாத்தல்
(iii) இந்தியாவின் வளமான பாரம்பரியத்தை பேணிக்காத்தல்
(iv) தேர்தல்களில் வாக்களித்தல்
Answer: D.   (i) மற்றும் (iv) தவறு
73.  இந்திய அரசமைப்பின் அடிப்படை கட்டமைப்புடன் தொடர்பில்லாத வழக்கினை கண்டறிக.
Answer: C.   ஏ.கே. ராய் எதிர் இந்திய ஒன்றியம், 1982
74.  முதல் அரசமைப்பு திருத்தம் - 1951 - மூலம் இந்த சட்ட உறுப்பு சேர்க்கப்பட்டது
Answer: A.   விதி 15(4)
75.  ஜனனி சுரக்ஷா யோஜனா தொடர்புடைய வாக்கியங்களைக் கருத்தில் கொண்டு, சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
(1) மகப்பேறு இறப்பு விகிதம் மற்றும் குழந்தை இறப்பு விகிதத்தை குறைப்பதற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டம்
(2) 100 சதவீதம் மத்திய அரசால் நிதியுதவி
(3) 100 சதவீதம் மாநில அரசால் நிதியுதவி
Answer: A.   (1) மற்றும் (2)
;