GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 1 2024 Preliminary Examination

General Studies Questions 76 to 100

76.  கிராம மின்மயமாக்குதல் என்பது இந்த திட்டங்களின் மூலமாக நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது
(i) தீன தயாள உபாத்யாய கிராம ஜோதி திட்டம்
(ii) தீன தயாள உபாத்யாய கிராமின் கௌசல்யா திட்டம்
(iii) பிரதான் மந்திரி சஹாஜ் பிஜ்லி ஹர் கர் யோஜனா
Answer: B.   (i) மற்றும் (iii) மட்டும்
77.  பின்வருவனவற்றில் எது தவறுதலாக பொருத்தப்பட்டுள்ளது?
(1) RLEGP - ஊரக நிலமற்றோருக்கான வேலை உறுதி திட்டம்
(2) SGSY - சம்பூர்ணா ஊரக சுயசார்பு திட்டம்
(3) CSRE - மத்திய ஊரக வேலைவாய்ப்பு திட்டம்
(4) NREGA - தேசிய ஊரக கல்வி உறுதி திட்டம்
Answer: B.   (2) மற்றும் (4)
78.  தீனதயாள் அந்தியோதயா திட்டம் உருவாக்கப்பட்டது
Answer: C.   நகர்ப்புற வறுமையைக் குறைக்க
79.  'ஒரே வரி, ஒரே சந்தை, ஒரே நாடு' என்ற பொன்மொழி எதனுடன் தொடர்புடையது
Answer: C.   சரக்கு மற்றும் சேவை வரி (GST)
80.  பின்வரும் வகையைப் பொருத்துக:
(a) நிதிக் கொள்கை 1. நாணயத் தாள்களின் வெளியீடு
(b) பணவியல் கொள்கை 2. கடன் விநியோகம்
(c) RBI 3. ரொக்க இருப்பு விகிதம்
(d) கடன் கட்டுப்பாடு 4. வரி விதிப்பு
Answer: A.   4 3 1 2
81.  முதல் ஐந்தாண்டுத் திட்டத்தைப் பற்றி பின்வரும் கூற்றுகளில் எது உண்மை?
(i) விவசாய உற்பத்தியை அதிகரிக்க விவசாயம் மற்றும் நீர்ப்பாசனத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
(ii) இது சில மாற்றங்களுடன் ஹாரோட்-டோமார் மாதிரியை அடிப்படையாகக் கொண்டது.
(iii) அது மஹாலனோபிஸ் மாதிரி பின்பற்றப்பட்டது.
Answer: B.   (i), (ii) மட்டும்
82.  கீழ்கண்டவற்றை கால வரிசைப்படுத்துக:
(1) மித்திர மேளா
(2) அனு சீலன் சமிதி
(3) இந்திய தன்னாட்சி கழகம்
(4) ஹந்துஸ்தான் கதர்
Answer: A.   1 2 3 4
83.  1947-ல் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி பிரிவினைக்கு ஒப்புக் கொண்டது. ஏனெனில்
Answer: D.   மேற்கூறிய அனைத்து காரணங்களும்
84.  பின்வரும் நிகழ்வுகளை காலவரிசைப்படி ஒழுங்கமைக்கவும்:
(1) இந்திய அரசின் சட்டம் - 1935
(2) காந்தி-இர்வின் ஒப்பந்தம்
(3) வகுப்புவாத ஒதுக்கீடு
(4) கிரிப்ஸ் தூதுக்குழு
Answer: C.   2 3 1 4
85.  பின்வருவனவற்றில் தென் இந்தியாவில் சமூக மத இயக்கத்தில் ஒரு முக்கிய சங்கமாக நிரூபிக்கப்பட்டது எது?
Answer: C.   பிரம்மஞான சபை
86.  தேசிய குடிமைப் பணியாளர்கள் தினம் என்று அனுசரிக்கப்படுகிறது
Answer: D.   ஏப்ரல் 21
87.  முதன் முதலாக "ஜன கன மன” எனும் பாடல் இந்திய தேசிய காங்கிரஸின் எந்த மாநாட்டில் பாடப்பட்டது?
Answer: C.   1911 கல்கத்தா மாநாட்டில்
88.  பின்வருவனவற்றில் எது சரியாக பொருந்தவில்லை?
Answer: B.   சாவித்ரி பாய் பூலே - இந்தியாவின் ஊழியர் சங்கம்
89.  உடுக்கை இழந்தவன் கைபோலே என்பதற்கு வள்ளுவர் எதனை ஒப்பிடுகிறார்?
Answer: A.   நட்பு
90.  ‘சமய நடுநிலைப் பண்பு' கொண்டது திருக்குறள் என்பார் கூற்றுக்குக் காரணம்.
(i) எல்லாச் சமயத்தவரும் இது எம் நூல் என்று கூறும் சிறப்புப்பெற்றதால்
(ii) கடவுள் உண்டு என்பவர் மட்டுமின்றி இல்லை என்பவரும் உவந்து ஏற்கும் சிறப்புப்பெற்றதால்
(iii) இனம், சாதி, சமயம், வகுப்பு எல்லாவற்றிற்கும் அப்பாற்பட்டதால்
(iv) மனித இனத்திற்குப் பொதுவான ஒழுக்கமும் அறிவும் அறிவுறுத்தப்படுவதால்
Answer: D.   அனைத்தும் சரி
91.  பின்வருபவையில் தவறான பொருத்தம் எது?
(1) அண்ணாதுரை தலைமையில் சுய மரியாதை மாநாடு - துறையூர்
(2) பாரதிதாசன் அண்ணாதுரையை அறிஞர் என பட்டம் சூட்டியது - சென்னை
(3) நீதிக்கட்சி திராவிட கழகம் என பெயர் சூட்டப்பட்டது - ஈரோடு
(4) கருப்பு சட்டை தீர்மானம் - சேலம்
Answer: B.   (3) மற்றும் (4)
92.  1929ல் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டின் தலைவர் யார்?
Answer: C.   W.P.A. சௌந்திரபாண்டியன்
93.  கீழ்கண்டவற்றை பொருத்துக:
(a) ஆலய நுழைவு மற்றும் இழப்பீட்டுச் சட்டம் 1. அண்ணாதுரை
(b) ஆலய நுழைவுச் சட்டம் 2. இராஜாஜி
(c) சுய மரியாதைத் திருமணங்கள் சட்டம் 3. ஓமந்தூரார்
(d) சென்னை மாகாண ஜமீன் ஒழிப்புச் சட்டம் 4. குமாரசாமி ராஜா
Answer: D.   2 3 1 4
94.  பின்வருவனவற்றில் அரசு மகப்பேறு மற்றும் கண் மருத்துவமனையில் இந்தியாவின் முதல் பெண் பயிற்சி அறுவை சிகிச்சை நிபுணர் யார்?
Answer: B.   முத்துலட்சுமி அம்மையார்
95.  S. அம்புஜம்மாள் பற்றிய பின்வரும் கூற்றுகளில் எது உண்மை?
(i) இவர் 1920-ல் நடந்த ஒத்துழையாமை இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டார்
(ii) இவர் 1926-ல் மெட்ராஸ் சட்டசபை கவுன்சிலுக்கு நியமனம் செய்யப்பட்டார்
(iii) இவர் சென்னையில் பெண்கள் சுதேசி இயக்கத்தை உருவாக்கினார்.
Answer: B.   (i) மற்றும் (iii) மட்டும்
96.  பின்வருவனவற்றை பொருத்துக:
(a) ஈ.வெ.ரா. பெரியார் 1. முதல் இந்திய நீதிபதி
(b) டி. முத்துசாமி 2. வீரராகவாச்சாரி
(c) மெட்ராஸ் மகாஜன சபா 3. புதுச்சேரி
(d) பாரதியார் 4. குடியரசு
Answer: A.   4 1 2 3
97.  திருக்குறள் ‘உலகப் பொதுமறை’ என அழைக்கப்படக் காரணம் யாது?
Answer: D.   அனைத்து நாட்டினருக்கும், சமயத்தவருக்கும், காலத்திற்கும் பொருந்துகிறது
98.  "போற்றுவார் போற்றட்டும்'' என்ற பாடலைப் பாடியவர் யார்?
Answer: C.   கண்ணதாசன்
99.  உலகில் உள்ள எல்லா உயிர்களையும் மதித்துப் போற்றுதல் (Reverence for life) வள்ளுவத்தின் உயிர் நாடியாகும் என்னும் கருத்து முக்கியத்துவம் பெறக்காரணம்:
Answer: D.   மேற்கண்ட அனைத்தும்
100.  “...... தன்நீர்மை குன்றும் தடிந்து எழிலி தான் நல்காதாகி விடின்” – என்ற குறளில் எது குன்றும் என்று திருவள்ளுவர் கூறுகிறார்?
Answer: C.   நெடுங்கடல்
;