GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 1 2024 Preliminary Examination

General Studies Questions 26 to 50

26.  முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் கல்விச் செலவுகளை ஈடுசெய்வதற்காக ஒவ்வொரு ஆண்டும் பெண் குழந்தைக்கு வைப்புத் தொகையின் 6 வது ஆண்டு முதல் வழங்கப்படும் வருடாந்திர ஊக்கத்தொகையின் மதிப்பு
Answer: C.   ரூ. 1,800/-
27.  அரசின் எந்த வீட்டு வசதி திட்டமானது வீடற்ற மக்களுக்கு மட்டுமல்லாது நகர ஏழைகள், குறைந்த வருமானம் உள்ளவர்கள் மற்றும் நடுத்தர வர்க்க மக்களுக்கும் ஒரு வீட்டை உறுதி செய்கிறது?
Answer: D.   PMAY(U)
28.  டாக்டர். தர்மாம்பாள் அம்மையார் நினைவு உதவி எந்த வகைப் பெண்களுக்கு வழங்கப்பட்டது?
Answer: C.   விதவை மறுமணம் உதவித்தொகை
29.  கோவிட் 19-ற்கு பிறகு தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி நிலையான விலையில் ____________ சதவீதம் உயர்ந்துள்ளது.
Answer: B.   8%
30.  பின்வருவனவற்றில் எது தவறாக இணைக்கப்பட்டுள்ளது?
(1) குழந்தைகள் உதவி எண் - 1098
(2) பெண்கள் உதவி எண் - 1090
(3) சைபர் கிரைம் உதவி எண் - 1940
(4) கடலோரப் பாதுகாப்பு உதவி எண் - 1093
Answer: B.   (2) மற்றும் (3)
31.  தமிழ்நாட்டின் பொது விநியோகத் திட்டத்தின் குறிக்கோள் ____________ அனைத்து குடிமக்களுக்கும்.
Answer: A.   உணவு பாதுகாப்பு
32.  வாக்கியங்களை வாசிக்க:
(I) கனவு இல்லத் திட்டம் தமிழ் ஆய்வாளர்களுக்கு
(II) அவரவர் மாவட்டங்களில் அவர்களின் விருப்பப்படி 15 சென்ட் நிலங்கள் வழங்கப்படும்.
(III) தமிழ் நாட்டில், தமிழ் எழுத்தாளர்கள் இத்திட்டம் மூலம் பயனடைகின்றனர்.
(IV) தமிழ் எழுத்தாளர்களுக்கு ஐந்து சென்ட் நிலம் வழங்கப்படும்.
Answer: C.   (III), (IV) மட்டும்
33.  பின்வரும் சீர்திருத்தவாதிகளை அவர்களின் வாழ்நாளுடன் பொருத்துக
(a) ராஜா ராம் மோகன் ராய் 1. 1858-1962
(b) ஜோதீபா பூலே 2. 1842-1901
(c) எம்.ஜி. ரனடே 3. 1828-1890
(d) டி.கே. கார்வே 4. 1772-1833
Answer: C.   4 3 2 1
34.  மனித வளர்ச்சி குறியீட்டு மதிப்பீட்டில் சேர்க்கப்படாத சரியான ஒன்றை தேர்ந்தெடுக்கவும்.
Answer: D.   பிறப்பு வீதம்
35.  கீழ்காணும் தமிழக மாவட்டங்களை கருத்தில் கொள்க :
(1) கன்னியாகுமரி
(2) வேலூர்
(3) அரியலூர்
(4) கோயம்புத்தூர்
(5) தூத்துக்குடி
குழந்தை வளர்ச்சி குறியீட்டில் முன்னிலையில் உள்ள முதல் மூன்று மாவட்டங்களைத் தெரிவு செய்க.
Answer: D.   (1), (4) மற்றும் (5) மட்டும்
36.  கக்குவான் இருமலை உருவாக்கும் நோய் கிருமி
Answer: A.   பார்டிடெல்லா பெர்ட்டுஸிஸ்
37.  பொருள் உணராமல் கற்றலில் முக்கிய நடைமுறையாக இருப்பது —————— கற்றல் ஆகும்.
Answer: C.   மீண்டும்
38.  குறைந்த ஒளிச் செறிவில் சிறப்பாகச் செயல்படும் தாவரங்களை இவ்வாறு அழைக்கலாம்.
Answer: C.   சியோஃபைட்டுகள்
39.  பூமியின் மேற்பரப்பால் சூரிய கதிர்வீச்சின் ஒரு பகுதி மீண்டும் பிரதிபலிக்கப்படுவது இவ்வாறு அழைக்கப்படுகிறது.
Answer: A.   ஆல்பிடோ
40.  மான்டாக்ஸ் சோதனை —————— நோயை கண்டுபிடிக்க உதவுகிறது.
Answer: B.   காசநோய்
41.  யுட்ரோபிகேஷனினால் மீனின் இறப்புக்கு காரணமாக இருப்பது
Answer: D.   ஆக்ஸிஜன் அளவு குறைவது
42.  கீழ்காணும் நிகழ்வுகளில் எது நிலைமம்?
Answer: B.   நிலையான வேகத்தில் செல்லும் காரின் ஓட்டுநர்
43.  அறிவியல் மனநிலை (scientific temper) பற்றி கூறும் சட்டப்பிரிவு
Answer: B.   சட்டப்பிரிவு 51 A
44.  தவறான இணையைக் கண்டறிக :
(1) கபில் கபூர் - இலக்கியமும், கல்வியும்
(2) தீபக் தார் - அறிவியலும், பொறியியலும்
(3) லக்ஷ்மன் சிங் - இலக்கியம்
(4) வடிவேல் கோபால் - இசை
Answer: B.   (3) மற்றும் (4) மட்டும் தவறானது
45.  2014-ம் ஆண்டு தேசிய இளைஞர் கொள்கையின்படி இளைஞர்களின் எந்த வயதுப் பிரிவு கருத்தில் கொள்ளப்படுகிறது?
Answer: D.   15 – 29 வயதுப் பிரிவு
46.  ஊழலை எதிர்த்துப் போராட பின்வரும் நடவடிக்கைகளில் இந்திய அரசால் எடுக்கப்பட்டது எது/எவை?
(I) நேரடி பண பரிமாற்றம்
(II) பொது கொள்முதலில் இ-டெண்டர்
(III) குரூப் ‘C’ பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான நேர்காணலை நிறுத்தியது
Answer: D.   (I), (II) மற்றும் (III) அனைத்தும்
47.  கீழ்கண்ட வாக்கியங்களை கருதுக, சரியான விடையை தேர்ந்தெடுக்குக :
(i) G20 – நாடுகளின் அரசியலமைப்பானது ஓர் முறையான ஆவணமாகும்
(ii) G20 – நாடுகளின் நிருவாகமானது ஒருமித்த கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது
(iii) G20 – இணக்கம் என்ற கோட்பாடானது உள்ளடக்கியிருப்பதும், பிரதிநிதித்துவம் அதன் தலைமைக்கான அடிப்படைகளாகும்
(iv) G20 – ஒற்றுமைக்கே மரியாதை, இறையாண்மைக்கு அல்ல
Answer: D.   (iii) மட்டும் சரியானது
48.  கூற்று மற்றும் காரணம் வகை :
கூற்று [A] : 2024 கேல் ரத்னா விருது கிரிக்கெட் வீரர் முகமது தமிக்கும் வழங்கப்பட்டது.
காரணம் [R] : இந்த விருதினை மத்திய இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அனுராக் தாகூர் வழங்கினார்.
Answer: C.   [A] சரி, ஆனால் [R] தவறு
49.  கூற்று [A] : கரிம வேளாண்மையில் சூழல் பாதுகாக்கப்படுவதால், பெருகிய முறையில் பிரபலமடைந்து வருகிறது.
காரணம் [R] : சுற்றுச்சூழல் அடிப்படையிலான பூச்சிக் கட்டுப்பாடுகள் மற்றும் விலங்குக் கழிவுகள் மற்றும் நைட்ரஜனை நிலைநிறுத்தும் பயிர்களில் இருந்து பெறப்பட்ட உயிரியல் உரங்களைப் பயன்படுத்தும் இயற்கை வேளாண்மை அடிப்படையிலான விவசாய முறை.
Answer: B.   [A] மற்றும் [R] இரண்டும் உண்மை மற்றும் [R] என்பது [A] இன் சரியான விளக்கம்
50.  2024 ம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருது பெற்ற முனைவர். நாராயண் சக்ரபர்த்தி பற்றிய தவறான கூற்றை கண்டுபிடிக்கவும்.
Answer: D.   அவருக்கு 2024 ம் ஆண்டிற்கான பத்மஸ்ரீ விருது மருத்துவத் துறையில் வழங்கப்பட்டது
;