TNPSC Group 1 2024 Preliminary Examination
General Studies Questions 1 to 25
1.
காரணம் மற்றும் வலியுறுத்துதல் :
வலியுறுத்துதல் [A] : C.N. அண்ணாதுரை சிறு தொழிற்சங்கங்களை அமைக்க ஏற்பாடு செய்தார்.
காரணம் [R] : தொழிலாளர் நலன் என்பது நேரம் மற்றும் இடத்துடன் தொடர்புடையது.
வலியுறுத்துதல் [A] : C.N. அண்ணாதுரை சிறு தொழிற்சங்கங்களை அமைக்க ஏற்பாடு செய்தார்.
காரணம் [R] : தொழிலாளர் நலன் என்பது நேரம் மற்றும் இடத்துடன் தொடர்புடையது.
Answer:
D.
[A] ம் [R] ம் சரி ஆனால் [R] என்பது [A] க்கு சரியான விளக்கம் அல்ல
2.
பின்வருவனவற்றுள் சரியான பொருத்தத்தைத் தேர்ந்தெடு
(1) மதுரை காந்தி - N.M. சுப்பராமன்
(2) தட்சினா காந்தி - இராஜாஜி
(3) வித்யாலயா அய்யா - காமராஜ்
(4) தமிழ்நாடு நூலக இயக்கத்தின் தந்தை - A. ராமசாமி
(1) மதுரை காந்தி - N.M. சுப்பராமன்
(2) தட்சினா காந்தி - இராஜாஜி
(3) வித்யாலயா அய்யா - காமராஜ்
(4) தமிழ்நாடு நூலக இயக்கத்தின் தந்தை - A. ராமசாமி
Answer:
A.
(1) ம் (3) ம் சரி
3.
ராவ் பகதூர் சர் அ.த. பன்னீர்செல்வம் ____________ தலைவராக இருந்தார், இதற்கு முன்பு ஆளுநர் எர்ஸ்கினின் நிர்வாகக் குழுவில் பணியாற்றினார்.
Answer:
C.
நீதிக் கட்சி
4.
15வது நிதிக் குழுவின் பரிந்துரைகளின்படி, மாநிலங்களுக்கு GSDP-ல் 4.0% நிதிப்பற்றாக்குறை அனுமதிக்கப்படும், அதில் 0.5% பின்வரும் துறையைச் சீர்திருத்துவதற்கு இணைக்கப்படும்.
Answer:
B.
எரிசக்தி துறை
5.
கீழ்க்காண்பவற்றுள் ஆலய நுழைவுப் போராட்டத்தினைப் பற்றிய உண்மையான கூற்றினை கூறு:
(i) நவம்பர் 1, 1817 ல் பிரிட்டிஷ் அரசு மெட்ராஸ் பிரசிடென்சியில் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது
(ii) இது கோவில் நிர்வாகத்தின் ஒரே மாதிரியான அதிகாரங்களை ஆதரிக்கிறது
(iii) இது வங்காளச் சட்டம் நம்பர் XIX, 1810 ல் உள்ள மாதிரியாக இருக்கிறது.
(i) நவம்பர் 1, 1817 ல் பிரிட்டிஷ் அரசு மெட்ராஸ் பிரசிடென்சியில் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது
(ii) இது கோவில் நிர்வாகத்தின் ஒரே மாதிரியான அதிகாரங்களை ஆதரிக்கிறது
(iii) இது வங்காளச் சட்டம் நம்பர் XIX, 1810 ல் உள்ள மாதிரியாக இருக்கிறது.
குறிப்பு:
இந்தக் கேள்வியில் பிழை உள்ளது. TNPSC இறுதி விடைக்குறிப்பின்படி அனைத்து விடைத் தேர்வுகளும் ஏற்கப்பட்டுள்ளன.
6.
"வலிமையான எதிரியின் முன் அடிபணிதலின் பாசாங்கும் சரணடைதலின் ஒத்திவைப்பு" என்ற பழமொழியின்படி ஆங்கிலேயருக்கு எதிரான பாளையக்காரர் கூட்டமைப்புக்கு வழிகாட்டிய நூல்
Answer:
C.
பஞ்சதந்திரம்
7.
கீழ்கண்டவற்றை கால வரிசைப்படுத்துக :
(1) பாரத மாதா சங்கம்
(2) சென்னை மகாஜன சபை
(3) ஹோம் ரூல் இயக்கம்
(4) மெட்ராஸ் திராவிட சங்கம்
(1) பாரத மாதா சங்கம்
(2) சென்னை மகாஜன சபை
(3) ஹோம் ரூல் இயக்கம்
(4) மெட்ராஸ் திராவிட சங்கம்
Answer:
B.
(2), (1), (4), (3)
8.
வெண்மை எனப்படுவது யாதென வள்ளுவர் கூறுகிறார்?
Answer:
A.
தாம் அறிவொளி படைத்தவர்கள் என்று நினைக்கும் செருக்கு
9.
“மன்னரைச் சேர்ந்தொழுகுதல், குறிப்பறிதல், அவையறிதல்" ஆகிய அதிகாரங்களில் வள்ளுவர் உணர்த்துவன யாவை?
(1) அமைச்சரின் நடத்தை பற்றியது
(2) அமைச்சர் மன்னனுக்கு ஆலோசனை வழங்குவது
(3) மன்னன் பிற மன்னர்களோடு நடந்து கொள்ள வேண்டிய முறை பற்றியது
(4) உளவியல் கருத்துக்கள் நிறைந்தது
(1) அமைச்சரின் நடத்தை பற்றியது
(2) அமைச்சர் மன்னனுக்கு ஆலோசனை வழங்குவது
(3) மன்னன் பிற மன்னர்களோடு நடந்து கொள்ள வேண்டிய முறை பற்றியது
(4) உளவியல் கருத்துக்கள் நிறைந்தது
Answer:
D.
(1), (2) மற்றும் (4) மட்டும்
10.
மக்களே போல்வர் கயவர் அவரன்ன
ஒப்பாரி யாங்கண்ட தில்
– என்ற குறளில் 'கயவர்' என யாரைக் குறிப்பிடுகின்றார்?
ஒப்பாரி யாங்கண்ட தில்
– என்ற குறளில் 'கயவர்' என யாரைக் குறிப்பிடுகின்றார்?
Answer:
D.
இவை மூன்றும்
11.
'துறவிகளுக்கு இகழ்ச்சி வராமல் இருக்க' அவர்கள் என்ன ஒழுக்கம் மேற்கொள்ள வேண்டும் என்று வள்ளுவர் கூறுகிறார்?
Answer:
A.
கள்ளாமை
12.
யாருடைய செல்வத்தை வள்ளுவர் நீர் நிறைந்த ஊருணியோடு ஒப்பிடுகிறார்?
Answer:
A.
பேரறிவாளன்
13.
"காகிதச் சங்கிலிகள்" என்ற புதினத்தின் ஆசிரியர் யார்?
Answer:
A.
சுஜாதா ரங்கராஜன்
14.
ஆசிரியர்களை அவர்களது இதழ்களுடன் பொருத்துக:
| ஆசிரியர் | இதழ்கள் |
|---|---|
| (a) ஜெயகாந்தன் | 1. தென்றல் |
| (b) நா. பார்த்தசாரதி | 2. அன்னம் விடு தூது |
| (c) கண்ணதாசன் | 3. ஞானரதம் |
| (d) மீரா | 4. தீபம் |
Answer:
D.
3 4 1 2
15.
'கழுமலம்' என்ற இடத்து போர் நிகழ்வை கூறுவது
Answer:
B.
அகநானூறு
16.
“மலையுளே பிறப்பினும் மலைக்கு அவைதாம் என் செய்யும்”
– என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல் எது?
– என்ற பாடல் வரிகள் இடம் பெற்ற நூல் எது?
Answer:
C.
கலித்தொகை
17.
ஆஷ் கொலை வழக்கில் முதல் குற்றவாளி யார்?
Answer:
B.
நீலகண்ட பிரம்மச்சாரி
18.
பின்வருவனவற்றுள் சமண அறிஞர்களின் முக்கிய கற்றல் மையமாக இருந்த இடம் எது?
Answer:
A.
மதுரை
19.
மன்னர்களின் பட்டங்களைப் பொருத்துக:
| (a) பாண்டியர் | 1. ஆதவன் |
| (b) சேரர் | 2. திதியன் |
| (c) சோழர் | 3. செழியன் |
| (d) ஆய் | 4. செம்பியன் |
Answer:
B.
3 1 4 2
20.
தமிழ்நாடு பேரிடர் மீட்பு மையம் (TNDRC) அமைந்துள்ள இடம்
Answer:
B.
திருச்சிராப்பள்ளி
21.
தமிழக அரசின் ‘புதுமை பெண்’ திட்டம் எதை உறுதிப்படுத்துகிறது?
Answer:
B.
பெண்களுக்கு உயர் கல்வி
22.
2017 – 2018 ஆண்டுடன் ஒப்பிடும் போது 2018 – 2019இல் மூன்றாவது சுற்றில் சுகாதாரக் குறியீட்டின் அடிப்படையில் தமிழ்நாடு ____________ பிரிவைச் சேர்ந்ததாகிறது.
Answer:
A.
மேம்படுத்தப்பட்ட தரவரிசை
23.
மாநிலத்தில் குடும்ப நலன் மற்றும் குழந்தைகள் சுகாதார திட்டங்களை செயல்படுத்த தமிழ்நாடு பின்பற்றுகிறது.
Answer:
A.
சமூக தேவைகள் மதிப்பீட்டு அணுகுமுறை
24.
1956-ல் மத்திய சுகாதாரக் கல்வி பணியகத்தின் முதன்மைக் கடமை
Answer:
D.
பல்வேறு பிரிவுகளின் மூலம் சுகாதாரக் கல்வியை ஒருங்கிணைத்து மேம்படுத்துதல்
25.
AYUSH அமைப்பின் குடும்பத்தில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட முறை யாது?
Answer:
B.
சோவ ரிக்பா