TNPSC Group 1 2024 Preliminary Examination
Aptitude Questions 1 to 25
1.
P, Q, R, S, T மற்றும் U ஆகியோர் ஒரு குடும்பத்தின் 6 உறுப்பினர்கள். அவர்களில் இரண்டு திருமணமான தம்பதியர் உள்ளனர். T என்பவர் ஒரு ஆசிரியர் மற்றும் அவர் R மற்றும் U-ன் தாயாரான மருத்துவரை மணந்து கொண்டுள்ளார். Q என்பவர் ஒரு சட்ட வல்லுநர், மேலும் அவர் P ஐ மணந்து கொண்டுள்ளார். P என்பவருக்கு ஒரு மகன் மற்றும் ஒரு பேரன் உள்ளனர். இரு திருமணமான பெண்களில் ஒருவர் வீட்டில் இருப்பவர் மற்றும் அந்த குடும்பத்தில் ஒரு ஆண் பொறியாளர் மற்றும் ஒரு மாணவர் உள்ளனர். எனில் கீழ்க்கண்டவர்களில் யார் வீட்டில் இருக்கும் பெண்?
Answer:
A.
P
2.
A = Z = 1, B = Y = 2, C = X = 3,..... etc.
எனில் எது தவறானது?
எனில் எது தவறானது?
Answer:
D.
E, G, J என்பவை பகா எண்கள்
3.
A என்பவர் B என்பவரை விட 20% குறைவாக வேலை பார்க்கிறார். ஒரு வேலையை A \(7\dfrac{1}{2}\) மணி நேரத்தில் முடிப்பாரானால் B எவ்வளவு நேரம் எடுப்பார்?
Answer:
A.
\(6\) மணி நேரம்
4.
ஒரு வேலையை 4 ஆண்கள் 3 நாட்களில் முடிப்பர் மற்றும் அதே வேலையை 3 பெண்கள் 6 நாட்களில் முடிப்பர் எனில் பின்வருவனவற்றுள் தவறானது எது?
Answer:
B.
6 ஆண்கள் மற்றும் 8 பெண்கள் ஒரே நாளில் வேலையை முடிப்பர்
5.
வட்டத்தின் ஆரம் 1 செ.மீ அதிகரிக்கும் போது வட்டத்தின் பரப்பு 66 சதுர செ.மீ. அதிகரிக்கிறது. புதிய வட்டத்தின் பரப்பு காண்க.
Answer:
C.
\(\dfrac{2}{7}\times11^3\)
6.
ஒரு நகரத்தில் மக்கள் தொகை ஆண்டுக்கு 6% அதிகரிக்கிறது. 2018 ஆம் ஆண்டு மக்கள் தொகை 238765 ஆக இருந்தது. 2020ஆம் ஆண்டின் மக்கள் தொகையைக் காண்க.
Answer:
B.
268276
7.
5 ஆண்டுகளில் அசல் ரூ. 20,000 மேல் கிடைக்கும் தனி வட்டியானது அசல் ரூ. 15,000 மேல் கிடைக்கும் தனி வட்டியை விட ரூ. 3,000 அதிகம் எனில் ஆண்டு வட்டி வீதம் காண்க.
Answer:
C.
12%
8.
\(\dfrac{6x+2y}{3x+4y}=\dfrac{3}{4}\) மற்றும் \(\dfrac{x+z}{2x+3z}=\dfrac{3}{7}\) எனில் \(x:y:z\) ஐ காண்க
Answer:
B.
4 : 15 : 2
9.
மூன்று எண்களின் மீ.சி.ம. ஆனது 120 எனில் கொடுக்கப்பட்ட எண்ணில் எது மீ.பொ.வ. ஆக இருக்க இயலாது?
Answer:
D.
35
10.
\(a=2^2\times3^3\)
\(b=3^2\times5^3\)
\(c=5^2\times2^3\)
எனில் மீ.பொ.வ. \((a^2,b^3)\) + மீ.பொ.வ \((b^2,c^3)\) + மீ.பொ.வ \((c^2,a^3)\) ன் மதிப்பு காண்க
\(b=3^2\times5^3\)
\(c=5^2\times2^3\)
எனில் மீ.பொ.வ. \((a^2,b^3)\) + மீ.பொ.வ \((b^2,c^3)\) + மீ.பொ.வ \((c^2,a^3)\) ன் மதிப்பு காண்க
Answer:
A.
\(3^6+2^6+5^6\)
11.
ஒரு குறிப்பிட்ட வருடத்தில் ஒரு நகரத்தின் மக்கள் தொகை 5% அதிகரிக்கிறது. மேலும் அதற்கு அடுத்த வருடத்தில் மக்கள் தொகை 5% குறைகிறது. இரண்டாவது ஆண்டின் முடிவில் மொத்த மக்கள் தொகை 9,975 எனில் முதலாம் ஆண்டின் தொடக்கத்தில் மக்கள் தொகை எவ்வளவு?
Answer:
D.
10,000
12.
\(5\dfrac{3}{4}\), \(4\dfrac{4}{5}\) மற்றும் \(7\dfrac{3}{8}\) இவற்றின் கூடுதலுடன் எந்த பின்னத்தைக் கூட்ட அது ஒரு முழு எண்ணாகும்?
Answer:
C.
\(\dfrac{3}{40}\)
13.
\(\dfrac{(963+476)^2+(963-476)^2}{963\times963+476\times476}\) = ?
Answer:
C.
2
14.
In an A.P
\(t_{20}+t_{21}+t_{22}+\cdots+t_{30}=0\) என ஒரு கூட்டுத் தொடரில் அமைந்தால் பின்வருவனவற்றுள் எது தவறானது?
\(t_{20}+t_{21}+t_{22}+\cdots+t_{30}=0\) என ஒரு கூட்டுத் தொடரில் அமைந்தால் பின்வருவனவற்றுள் எது தவறானது?
Answer:
D.
\(d\) மிகை எனில் \(a\) வும் மிகை ஆகும்
15.
ஒரு வகுப்பில் 35 மாணவர்கள் உள்ளனர். கீழிலிருந்து கணக்கிடும்போது கமல் என்பவர் ஏழாவது இடத்தில் உள்ளார், மேல் இருந்து கணக்கிடும் போது சுரேஷ் என்பவர் ஒன்பதாவது இடத்தில் உள்ளார். ரமேஷ் என்பவர் இவ்விருவருக்கும் இடையில் உள்ளார். ரமேஷ் உடன் ஒப்பிடும் போது கமல் எந்த இடத்தில் உள்ளார்?
Answer:
B.
10
16.
இரு முறை ஒரு பகடை உருட்டப்படும் போது கூடுதலாக பகா எண் கிடைக்க நிகழ்தகவு என்ன?
Answer:
C.
\(\dfrac{15}{36}\)
17.
ஒரு வட்டத்தின் ஆரமானது, அதனுடைய சுற்றளவில் 5% அதிகரிக்கும் அளவிற்கு உயர்கிறது எனில், அவ்வட்டத்தின் பரப்பளவு எத்தனை சதவீதம் அதிகரிக்கும்?
Answer:
A.
10.25%
18.
\(11\sqrt{3}\) அடி நீளமுடைய மூலைவிட்டம் கொண்ட ஒரு கன சதுர அறையின் கன அளவு என்ன?
Answer:
D.
\(1331\) க.அடி
19.
ஒரு வகையான பாக்டீரியா முதலாவது ஒரு மணி நேரத்தில் 5% வளர்ச்சியும், இரண்டாவது மணி நேரத்தில் 12% வளர்ச்சிக் குன்றியும், மூன்றாவது மணி நேரத்தில் 10% வளர்ச்சியும் அடைகிறது. தொடக்கத்தில் அதன் எண்ணிக்கை 20000 ஆக இருந்தது எனில் மூன்று மணி நேரத்திற்குப் பிறகு அதன் எண்ணிக்கையைக் காண்க.
Answer:
A.
20328
20.
ஆண்டொன்றிற்கு 5% தனி வட்டி வீதத்தில் 2 ஆண்டுகள் 6 மாதத்திற்கு ரூ. 6,400 வினால் பெறப்படும் தொகை என்ன?
Answer:
B.
7,200
21.
யானையின் அதிகளவு வேகம் 20 கி.மீ./மணி, சிங்கத்தின் வேகம் 80 கி.மீ./மணி, சிறுத்தையின் வேகம் 100 கி.மீ./மணி. அதன் வேகங்களின் விகிதங்களை கண்டு எந்த விகிதம் சிறியது என காண்க.
Answer:
C.
யானை மற்றும் சிறுத்தை
22.
மூன்று வெவ்வேறு சாலை சந்திப்புக்களில் உள்ள போக்குவரத்து குறியீட்டு விளக்குகள் முறையே ஒவ்வொரு 48 வி, 72 வி, 108 விநாடிகளில் மாற்றம் அடைகின்றன. மூன்று சந்திப்புக்களில் உள்ள விளக்குகளும் ஒரே சமயத்தில் 8:20:00 மணிக்கு மாற்றம் அடைகின்றன எனில், அடுத்த முறை அவை இணைந்து மாற்றம் அடைவது எப்போது?
Answer:
A.
8:27:12 மணி
23.
1657 மற்றும் 2037 ஆகிய எண்களை வகுக்கும் போது முறையே 6 மற்றும் 5 மீதியை தரக் கூடிய மிகப் பெரிய எண் எது?
Answer:
C.
127
24.
1356, 1868 மற்றும் 2764 ஆகிய எண்களை வகுக்கக் கூடிய பெரிய எண்கள் மீதி 12 கிடைக்கும் எனில் அந்த எண் எதுவாக இருக்கும்?
Answer:
A.
64
25.
வணிகர் ஒருவர் ஒரு தண்ணீர் கொதிகலனை 18% சரக்கு மற்றும் சேவை வரியுடன் சேர்த்து ரூ.10,502-க்கு விற்றார். தண்ணீர் கொதிகலனின் சரக்கு மற்றும் சேவை வரியைக் காண்க
Answer:
B.
ரூ. 1,602