GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 1 2024 Preliminary Examination

General Studies Questions 101 to 125

101.  “... இவ்விரண்டும் கண்ணென்ப வாழு உயிர்க்கு” மேற்காணும் திருக்குறளில் எவை இரண்டைத் திருவள்ளுவர் கண்களுக்கு ஒப்பாகக் கூறுகிறார்?
Answer: D.   எண்ணும் எழுத்தும்
102.  பின்வருவனவற்றில் எது தவறாக இணைக்கப்பட்டுள்ளது?
(1) உலக தண்ணீர் தினம் - மார்ச் 22
(2) உலக சுற்றுச்சூழல் தினம் - ஏப்ரல் 22
(3) பூமி தினம் - ஜூன் 5
(4) உலக ஆற்றல் பாதுகாப்பு தினம் - டிசம்பர் 14
Answer: A.   (2) மற்றும் (3)
103.  இன்ப துன்பத்தை ஒன்றாக ஏற்றுக் கொள்ளும் இராமனின் மனப் பக்குவத்தை எந்த மலருக்குக் கம்பர் ஒப்புமை செய்கிறார்?
Answer: B.   தாமரை
104.  “மருதநில நந்தா விளக்கம்” எனச் சிறப்பிக்கப் பெறும் சிற்றிலக்கிய வகை
Answer: B.   பள்ளு
105.  யாருடைய சொற்றொடர் என்பதைச் சரியாக அறிந்திடுக.
“பழங்களை அதிகம் கொண்டுள்ள மரங்களைச் சுற்றிலும் பறவைகள் பறந்து வருவது போல நான் மிகவும் பெரிய கரிகாலனின் அரண்மனை அவைக்குச் சென்றேன்”
Answer: B.   முடத்தாமக்கண்ணியார்
106.  'நெஞ்சாற்றுப்படை' என்னும் வேறு பெயர் கொண்ட பத்துப்பாட்டு நூல் எது?
Answer: B.   முல்லைப்பாட்டு
107.  அரிக்கமேடு தொல்லியல் ஆய்வுகளின் கூற்றுகளில் கீழ்கண்டவைகளில் சரியானது எது?
(1) அரிக்கமேடு தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.
(2) இது ஒரு சோழர்களின் துறைமுகம்
(3) இத்துறைமுகம் ரோம் நாட்டுடன் வாணிப உறவு கொண்டிருந்தது.
(4) அரிக்கமேடு துறைமுகம் காவேரிப்பட்டணம், அழகன்குளம் மற்றும் முசிறி துறைமுகங்களுடன் நெருங்கிய வணிகத் தொடர்பு கொண்டிருந்தது.
Answer: C.   (2), (3), (4) சரியானது (1) மட்டும் தவறானது
108.  'கண்ணகி' க்கு —————— ஆல் கோயில் கட்டப்பட்டது.
Answer: B.   செங்குட்டுவன்
109.  உத்திரமேரூர் கல்வெட்டுகள் தெரிவிப்பவை
(1) கிராம நிர்வாகம்
(2) எழுதப்பட்ட அரசியல் அமைப்பு
(3) முழுமையான தேர்தல் முறை
(4) பராந்தகனின் நிர்வாகம்
Answer: D.   மேற்கூறிய அனைத்தும்
110.  முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தைப் பற்றி பின்வரும் அறிக்கைகளைக் கவனியுங்கள்.
(1) இந்தத் திட்டம் தமிழகத்தால் தொடங்கப்பட்டது
(2) இது தமிழகத்தில் உள்ள அனைத்து மேல்நிலை பள்ளி மாணவர்களுக்காக செயல்படுத்தப்படும்
(3) இந்த திட்டம் நாட்டிலேயே தமிழ்நாட்டில் முதல் முறையாகும்
கீழே கொடுக்கப்பட்ட குறியீட்டை பயன்படுத்தி சரியான பதிலை தேர்ந்தெடுக்கவும்.
Answer: C.   (1) மற்றும் (3) மட்டும்
111.  தமிழ்நாட்டில் உள்ள ஆற்றுப்படுகைகளின் எண்ணிக்கை
Answer: A.   17
112.  சரியாக பொருத்துக:
(a) பாக்சைட் 1. சேலம்
(b) ஜிப்சம் 2. சேர்வராயன் மலை
(c) இரும்பு 3. கோயம்புத்தூர்
(d) சுண்ணாம்புக்கல் 4. திருச்சிராப்பள்ளி
Answer: A.   2 4 1 3
113.  கீழ்கண்டவற்றுள் எது சரியாக பொருத்தப்பட்டுள்ளது?
(1) AIIMS – அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம்
(2) ICCW – குழந்தைகள் நலனுக்கான சர்வதேச அமைப்பு
(3) NIPCCD – தேசிய பொது ஒத்துழைப்பு மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு நிறுவனம்
(4) ICDS – குழந்தைகள் மேம்பாட்டு திட்ட நிறுவனம்
Answer: B.   (1) மற்றும் (3) சரியானது
114.  TICEL இதனோடு தொடர்புடையது
(1) இரப்பர் பூங்கா
(2) ஜவுளி பூங்கா
(3) உணவு பூங்கா
(4) உயிரி பூங்கா
Answer: D.   (4)
115.  பின்வருவனவற்றை காலவரிசைப்படி ஒழுங்கமைக்கவும்.
(1) வாழ்வாதார மேம்பாட்டிற்கான திறன்களைப் பெறுதல் மற்றும் அறிவு விழிப்புணர்வு
(2) இந்தியாவில் தயார் செய்க
(3) தமிழ்நாடு பெண்கள் மேம்பாட்டு ஆணையம்
(4) தேசிய திறன் மேம்பாட்டு திட்டம்
Answer: A.   3 2 4 1
116.  தமிழகத்தில் துவக்கப்பட்ட அவசரகால பாதுகாப்பு கொள்கையை 2021 அடையாளம் காண்க.
Answer: B.   நம்மை காக்கும் 48 திட்டம் 2021
117.  கட்டாயம் மற்றும் இலவசகல்வி அனைத்து 6 முதல் 14 வயது வரை உள்ளக் குழந்தைகளுக்கு சட்டப்பூர்வமாக அரசு வழங்க வேண்டும் என நிர்ணயமானது —————— சட்டத்திருத்தத்தின் மூலமாகும்.
Answer: B.   86 ஆம்
118.  பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் (OBC) பாதுகாப்பிற்கான அரசியலமைப்பு விதிகள் யாவை?
(1) அதிகாரம் எண் 15 (4)
(2) அதிகாரம் எண் 16 (4)
(3) அதிகாரம் எண் 17 (1)
(4) அதிகாரம் எண் 19 (2)
Answer: C.   (1) மற்றும் (2) சரியானது
119.  குடும்ப வன்முறையில் இருந்து பெண்களைப் பாதுகாக்கும் சட்டம் 2005, பெண்களுக்கு “வன்முறையில்லா வாழ்வதற்கான” பாதுகாப்பு. இந்தச் சட்டத்தில் சிவில் மற்றும் கிரிமினல் விதிகள் இருந்தாலும் இது பெண்கள் உடனடி சிவில் தீர்வுகளைப் பெற —————— நாட்கள் மட்டும் உதவுகிறது.
Answer: C.   60 நாட்கள்
120.  —————— வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற திருநங்கைகளுக்கான ஓய்வூதியத் திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டு அவர்களுக்கு ரூ. 1,000 மாதமாக வழங்கப்படுகிறது.
Answer: B.   40
121.  ஐக்கிய நாடுகள் மன்றத்தின் நிறுவனமான ‘யுனெஸ்கோ’ அமைப்பினால் “தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ்” என்று சான்றளிக்கப்பட்ட தலைவர் யார்?
Answer: D.   ஈ.வெ. இராமசாமி
122.  தமிழ் நாடு அரசு புத்தொழில் கொள்கையை நடைமுறைப்படுத்திய ஆண்டு
Answer: C.   2018
123.  கருத்து [A] : பெரியார் காங்கிரஸ் கட்சியை விட்டு வெளியேறி, 1925-ஆம் ஆண்டு சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கினார்.
காரணம் [R] : சேரன்மாதேவியில் குருகுல அமைப்பில் நடைபெற்ற ஒரு பள்ளிக்குப் பெரியார் விஜயம் செய்தார். அங்கு பிராமணர் மாணவர்கள் மற்றும் பிராமணரல்லாத மாணவர்களுக்குக் குடிக்கும் தண்ணீர், உணவருந்தும் கூடம் தனித்தனியே இருப்பதைக் கண்டார். அரசுப் பணிகளில் பிராமணரல்லாதவர்களுக்குத் தனி ஒதுக்கீடு வழங்க மசோதா தாக்கலாக முடிவு செய்தார். ஆனால் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
Answer: D.   [A] மற்றும் [R] இரண்டும் சரி மற்றும் [A] விற்கான [R] சரியான விளக்கம்
124.  மின்மாற்றியின் தத்துவம் ஆனது
Answer: B.   பரிமாற்று மின்தூண்டல்
125.  சம மின் அழுத்தப் பரப்பின் மீது ஒரு நேர் மின்னூட்டத்தை நகர்த்தச் செய்யப்படும் வேலையின் மதிப்பு
(i) வரையறுக்கப்பட்ட மதிப்பாகும்
(ii) நேர்குறி கொண்டது
(iii) எதிர்குறி கொண்டது
(iv) சுழியாகும்
Answer: B.   (iv) மட்டும்
;