GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 1 2025 Preliminary Examination

Aptitude Questions 1 to 25

1.  ஒரு ஆண், 3 பெண்கள், 4 பையன்கள் சேர்ந்து ஒரு குறிப்பிட்ட வேலையை 96 மணி நேரத்தில் செய்கின்றனர். அதே வேலையை 2 ஆண்கள் மற்றும் 8 பையன்கள் சேர்ந்து 80 மணி நேரத்தில் செய்கின்றனர், பின்பு 2 ஆண்கள் மற்றும் 3 பெண்கள் சேர்ந்து அதே வேலையை 120 மணி நேரம் செய்கின்றனர், எனில் 5 ஆண்கள் மற்றும் 12 பையன்கள் அதே வேலையை செய்ய எடுத்துக் கொள்ளும் நேரம் _________ ஆகும்.
Answer: C.   \(43\dfrac{7}{11}\) மணி நேரம்
2.  ஒரு செவ்வகத்தின் மூலைவிட்டமானது அதன் குறுகிய பக்கத்தின் மூன்று மடங்காக உள்ளது எனில் செவ்வகத்தின் நீளம் மற்றும் அகலத்தின் விகிதம் என்ன?
Answer: D.   \(2\sqrt{2}:1\)
3.  \(x:7.5=8:y=7:17.5\) எனில் \(x:y\) ஐ காண்க.
Answer: C.   3 : 20
4.  ரூ. 1600 ஐ P மற்றும் Q என்ற இரண்டு நபர்களுக்கு 5 : 3 என்ற விகிதத்தில் பிரித்தால் Qன் பங்கு
Answer: B.   600
5.  \((2x^2-3xy)^2,\ (4x-6y)^3\) மற்றும் \((8x^3-27y^3)\) -ன் மீ.பொ.ம.
Answer: B.   \(2^3x^2(2x-3y)^3(4x^2+6xy+9y^2)\)
6.  பீட்டர் என்பவர் ஒரு தேர்வின் அதிக மதிப்பெண்களில் 30% பெற்று, 10 மதிப்பெண்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைகிறார். மேலும், பால் என்பவர் அதே தேர்வினை எழுதி, மொத்த மதிப்பெண்களில் 40% பெற்று, தேர்ச்சி பெறுவதற்கான மதிப்பெண்ணைக் காட்டிலும் 15 மதிப்பெண்கள் அதிகம் பெறுகிறார். எனில் அந்தத் தேர்வின் தேர்ச்சி மதிப்பெண் என்ன?
Answer: C.   85
7.  அகிலா தேர்வில் 80% மதிப்பெண்களை பெற்றாள். அவள் பெற்றது 576 மதிப்பெண்கள் எனில் அந்த தேர்வின் மொத்த மதிப்பெண்ணை காண்க.
Answer: A.   720
8.  அடுத்த உறுப்பு காண்.
0.5, 0.6, 1.5, 4, 8.9, ___
Answer: D.   17.0
9.  A, B, C, D, E மற்றும் F ஆகியோர் ஒன்றுவிட்ட சகோதரர்கள். அவர்களில் எந்த இரு சகோதரர்களும் ஒத்த வயதினர் அல்ல. ஆனால், அனைவருக்கும் பிறந்த தினம் சமம். அவர்களில் மிகக்குறைந்த வயது உடையவர் 17 வயதும், மிக அதிக வயது கொண்ட E, 22 வயதும் உடையவர். F ஆனவர் B மற்றும் D க்கு இடையில் உள்ள ஏதோ ஒரு வயது கொண்டவர். A என்பவர் B ஐ விட பெரியவர். C என்பவர் D ஐ விட பெரியவர் எனில் கீழ்க்கண்டவற்றில் எது சாத்தியமில்லை?
Answer: D.   F என்பவரின் வயது 20
10.  ஒரு பகடையில் 2க்கு அருகில் 3, 5 மற்றும் 6 உள்ளது எனில் கீழே கொடுக்கப்பட்டுள்ள கூற்றில் உறுதியான உண்மை எது?
Answer: B.   1 க்கு அருகே 4 உள்ளது
11.  ஐந்து பெண்கள் ஒரு வரிசையில் அமர்ந்திருக்கிறார்கள். ரோஸி என்பவர் சிவநந்தினி மற்றும் அபிக்கு அருகில் இல்லை. அனுராதா சிவநந்தினிக்கு அருகில் இல்லை. ரோஸி மோனிகாவிற்கு அருகில் இருக்கிறாள். மோனிகா வரிசையில் நடுவில் இருக்கிறாள். பின்னர், அனுராதா பின்வருவனவற்றில் யாருக்கு அருகில் இருக்கிறாள்?
Answer: A.   ரோஸி
12.  8 நபர்கள் ஒரு நாளைக்கு 9 மணி நேரம் வேலை செய்தால், ஒரு வேலையை 20 நாட்களில் முடிப்பர். அதே வேலையை 12 நபர்கள் ஒரு நாளைக்கு 10 மணி நேரம் வேலை செய்தால் எத்தனை நாட்களில் முடிப்பர்?
Answer: D.   12 நாட்கள்
13.  ஆரம் 3.5 செ.மீ உடைய மூன்று வட்டங்கள் எடுக்கப்பட்டு அவற்றில் ஒவ்வொரு வட்டமும் மற்ற இரண்டு வட்டங்களை தொடுமாறு அமைக்கப்படுகிறது எனில் அவ்வட்டங்களுக்கு இடைப்பட்ட பகுதியின் பரப்பளவு
Answer: A.   1.967 செ.மீ\(^{2}\)
14.  3 ஆண்டுகளுக்கு கணக்கிட்டால், தனி வட்டிக்கும், கூட்டு வட்டிக்கும் இடையேயுள்ள வித்தியாசம் ரூ. 183-ஆக, 5% ஆண்டு வட்டி வீதத்தில் கிடைத்தால் அசலின் மதிப்பு என்ன?
Answer: C.   24,000
15.  இரமேஷ் ரூ. 15,600 ஐ வைப்புத் தொகையாக 10% தனிவட்டி விகிதத்தில் முதலீடு செய்கிறார். ஒவ்வொரு இரண்டாண்டின் முடிவிலும் அவர் வட்டித் தொகையை அசலுடன் இணைக்கிறார் எனில் நான்காம் ஆண்டின் முடிவில் இணைக்கப்படும் வட்டித் தொகை _________ ஆகும்.
Answer: C.   ரூ.3,744
16.  A, B, C ஆகியோர் பெறும் ஊதியங்களின் கூடுதல் ரூ.33,300. அவர்கள் அவரவருடைய வருமானத்தில் இருந்து முறையே, 80%, 85% மற்றும் 75% செலவு செய்கின்றனர். மேலும் அவர்களுடைய சேமிப்பு 7:6:9. எனில் B-ன் ஊதியம் என்ன?
Answer: D.   ரூ.12,000
17.  3:4:5 என்ற விகிதத்தில் அமைந்த 3 எண்களின் மீ.பொ.ம 2400 எனில்
அவற்றின் மீ.பொ.வ. ____________.
Answer: A.   40
18.  (a, b) ன் மீப்பெரு பொது வகுத்தி 15 மற்றும் a, b ஆகியவை ஈரிலக்க எண்கள் எனில் இவ்வாறு எத்தனை இணை எண்கள் காணப்படுகின்றன?
Answer: A.   11
19.  \(\dfrac{6}{5-\dfrac{5}{3}}\div\dfrac{4-\dfrac{2}{4-\dfrac{1}{2}}}{5-\dfrac{3}{2}}-\dfrac{2}{5}\) இல் \(\left\{\dfrac{6}{9}+\dfrac{2}{3}\text{ இல் }\dfrac{1}{2}\right\}\) = ___________.
Answer: C.   \(1\dfrac{7}{16}\)
20.  ஒரு கூட்டுத்தொடரில் \(t_7-t_4=20\), எனில் பின்வருவனவற்றில் எது தவறானது?
Answer: D.   5வது உறுப்பிற்கும் 30வது உறுப்பிற்கும் கூட்டுச் சராசரி 17வது உறுப்பு
21.  மேரி என்பவரின் தற்போதைய வயது 16. அவள் தனது தம்பியின் வயதை விட 4 மடங்கு பெரியவள் எனில் அவள் தனது தம்பியின் வயதை விட 2 மடங்கு பெரியவளாக இருக்கும்பொழுது, மேரியின் வயது என்ன?
Answer: B.   24
22.  கொடுக்கப்பட்டவற்றுள் தொடர்பில்லாத எழுத்தைக் கண்டறியவும்?
CGKO : BFJN : AEIM : FDKN
Answer: D.   FDKN
23.  5 எந்திரங்கள் 5 பாகங்களை 5 நிமிடங்களில் தயாரிக்குமானால் 100 எந்திரங்கள் 100 பாகங்களை எவ்வளவு நிமிடங்களில் தயாரிக்கும்?
Answer: A.   5 நிமிடங்கள்
24.  A1B4C9D16.....2676 என எழுதும் போது P மற்றும் Q-ஆல் தொடரப்படும் எண்களின் மொத்த மதிப்பு என்ன?
Answer: A.   545
25.  கீழே நான்கு கனசதுரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன கனசதுரத்தின் நான்கு தோற்றங்களைப் பயன்படுத்தி 3-க்கு எதிரே உள்ள எண்ணை கண்டறியும் புதிர் 3 என்ற எண்ணிற்கு எதிரே உள்ள பக்கத்தில் வரும் எண்
Answer: C.   4
;