GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 1 2025 Preliminary Examination

General Studies Questions 75 to 100

75.  பின்வருவனவற்றிலிருந்து தவறாக இணைக்கப்பட்டுள்ளதைத் தேர்ந்தெடுக்கவும்.
(1) 1962 - சென்னை மாநில (பெயர் மாற்றம்) சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
(2) 1967 - தமிழக முதலமைச்சராகப் பேரறிஞர் அண்ணா பதவியேற்றார்
(3) 1968 - பேரறிஞர் அண்ணா ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார்
(4) 1969 - சென்னை மாநில (பெயர் மாற்றம்) சட்டம் அமலுக்கு வந்தது.
Answer: C.   (1) மற்றும் (3) தவறானவை
76.  கீழே கொடுக்கப்பட்டுள்ளனவற்றிலிருந்து சரியாகப் பொருந்திய இணைகளைக் கண்டுபிடித்து, கொடுக்கப்பட்ட குறியீட்டிலிருந்து சரியானப் பதிலைத் தேர்ந்தெடுக்கவும்
(1) 1925 - பெரியார் ஈ.வெ.ரா. 'குடி அரசு' என்ற பருவ இதழைத் தொடங்கினார்
(2) 1928 - ஆங்கில பருவ இதழ் 'ரிவோல்ட்' தொடங்கப்பட்டது
(3) 1934 - பெரியார் 'விடுதலை’ யைத் தமிழ் நாளிதழாக வெளியிட்டார்
(4) 1937 - பெரியார் 'பகுத்தறிவு' என்ற தமிழ்வார இதழை வெளியிட்டார்
குறியீடு
Answer: A.   (1) மற்றும் (2) மட்டுமே சரியானவை
77.  கூற்று [A] : தமிழ்நாடு பெண்கள் மாநாடு 13.11.1938-ல் தி. நீலாம்பிகை அம்மையார் தலைமையில் சென்னையில் நடைப்பெற்றது.
காரணம் [R] : இந்த மாநாட்டில் சாதிய வேற்றுமையை ஒழிப்பதற்கும் ஈ.வெ. ராமசாமிக்குப் "பெரியார்" பட்டம் வழங்குவதற்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Answer: D.   கூற்று [A] சரி மற்றும் காரணம் [R]-ம் சரி
78.  ஆசிரியர்களுடன் அவர்களது புத்தகங்கள்/பத்திரிக்கைகளை சரியாகப் பொருத்தவும்.
(a) தி மிர்ரர் ஆப் தி இயர் 1. A.P. பேட்ரோ
(b) ஹிஸ்ட்ரி ஆப் தி ஜஸ்டிஸ் பார்ட்டி 2. N.S. இளங்கோ
(c) சர் தியாகராயரிலிருந்து Dr. கலைஞர் வரை 3. முத்துசாமி பிள்ளை
(d) ஜஸ்டிஸ் மூவ்மெண்ட் 4. A.R. முதலியார்
Answer: C.   4 3 2 1
79.  1919 ம் ஆண்டு இந்திய அரசு சட்டத்தை இறுதி செய்வதற்காக அமைக்கப்பட்ட கூட்டுத் தேர்வுக் குழுவை லண்டனில் சந்திக்க சென்ற நீதிக்கட்சி உறுப்பினர்கள்
(i) ஆற்காடு இராமசாமி முதலியார்
(ii) கோகா அப்பாராவ்
(iii) டி.ஏ. ராமலிங்கம்
(iv) எஸ்.கே. துளசிராம்
Answer: D.   (i), (ii), (iv)
80.  சரியான பொருத்த வகையைத் தேர்ந்தெடுக்கவும்.
(1) கிருஷ்ணாபாய் நிம்கர் - மதராஸ் இளைஞர் சங்கம்
(2) ருக்மினி லஷ்மிபதி - மதராஸ் மகளிர் மாணவர் அமைப்பின் தலைவர்
(3) அந்தோனி அம்மாள் - பங்கஜா ஜவுளி ஆலை
(4) மஞ்ஜுபாஷினி - தமிழ்நாடு காங்கிரஸ் குழுவின் தலைவர் (பொறுப்பு) வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது
Answer: A.   (1) மற்றும் (3) சரியானவை
81.  கூற்று [A]: ஆங்கிலேய கம்பெனியாளர்கள் வீரபாண்டியக் கட்டபொம்மனை இராமநாதபுரத்து ஆட்சியாளரின் அலுவலகத்தில் ஆஜராகுமாறு கேட்டுக்கொண்டார்.
காரணம் [R]: ஆங்கிலேய கம்பெனியாருக்கு கட்ட வேண்டிய கப்பம் நிலுவையில் இருப்பதால் ஆட்சியாளரை சந்திக்குமாறு கட்டபொம்மன் கேட்டுக்கொள்ளப்பட்டார்.
Answer: C.   [A] மற்றும் [R] சரி; மேலும் [R] என்பது [A] வுக்கு சரியான விளக்கம் ஆகும்
82.  பின்வரும் நிகழ்வுகளைக் கால வரிசைப்படுத்துக.
(1) உப்பு சத்தியாகிரகம்
(2) சுதேசி இயக்கம்
(3) வெள்ளையனே வெளியேறு இயக்கம்
(4) ஒத்துழையாமை இயக்கம்
Answer: D.   (2), (4), (1), (3)
83.  "இரத்தம் சிந்தாமல் எதுவும் செய்ய முடியாது. ஜப்பான் 20,000 வீரர்களை தியாகம் செய்ய தயாராக இருந்தது. ரஷ்யாவை வென்றது. 15 கோடி இந்தியர்கள் இதைச் செய்தால், “சுயராஜ்யம்” கிடைக்கும் என்று கூறிய நபரை அடையாளம் காணவும்."
Answer: B.   சுப்ரமணிய சிவா
84.  பின்வருபவைகளில் சரியான பொருத்தத்தை தேர்ந்தெடுக்க:
1. பொற்பனைக்கோட்டை - ஓர் சங்க கால கோட்டை
2. இரும்புக் கத்தி - பல்லாவரம்
3. வணிகக்குழு கல்வெட்டு - மயிலாடும்பாறை
4. கற்சவபெட்டி - மருங்கூர்
Answer: A.   1 மற்றும் 3 சரியானவை
85.  மனித வளர்ச்சியில் பின்வரும் வெவ்வேறு நிலைகளை ஒழுங்கமைக்கவும்:
1. நாடோடி நிலை
2. ஆயர் நிலை
3. வேடன் நிலை
4. விவசாய நிலை
Answer: C.   3, 1, 2, 4
86.  'பிறவிப் பெருங்கடல் நீந்துவார் நீந்தார்
இறைவனடி சேரா தார்' - இக்குறள் உணர்த்தும் தத்துவம் என்ன?
Answer: C.   சரணாகதி தத்துவம்
87.  திருக்குறள் உரையாசிரியர்கள்
(i) பரிப்பெருமாள்
(ii) தருமர்
(iii) கி.வ.ஜா .
(iv) தண்டபாணி தேசிகர்
Answer: B.   (i), (ii) மட்டும்
88.  கூற்று [A]: “உறுபசியும் ஓவாப் பிணியும் செறுபகையும்
சேரா தியல்வது நாடு”
காரணம் [R]: நாட்டை வாழ்த்துவதையும், நாட்டு மக்களின் மேம்பாட்டை விரும்புவதையும் புலவர்கள் தலையாய கடமையாகக் கருதுகின்றனர். தன் நாடு மட்டுமின்றி என்னாடும் சிறப்புற்றிருக்க விரும்புகின்றனர்.
Answer: C.   [A] மற்றும் [R] இரண்டும் சரி, மற்றும் [R] என்பது [A] விற்கு சரியான விளக்கமாகும்
89.  சரியான தொடரைக் கண்டறிக..
1. வெவ்வேறு சமயத்தைச் சார்ந்தவர்களும் திருக்குறளைப் போற்றினாரில்லை.
2. திருவள்ளுவர் தத்தம் சமயத்தைச் சார்ந்தவர் என்று சமயங்கள் சான்று காட்டின.
3. அறநெறியில் அழுத்தமான நம்பிக்கையற்றவர்.
4. உயர்ந்த குறிக்கோள் கொண்டு மனிதன் வாழவேண்டுமென்றார்.
Answer: C.   2 மற்றும் 4 மட்டும் சரி
90.  வரிசைப்படுத்துக:
1. வாழ்க்கை துணை நலம்
2. அன்புடைமை
3. இல்வாழ்க்கை
4. புதல்வரைப் பெறுதல்
Answer: A.   3, 1, 4, 2
91.  ‘பகைவர் புல் ஆர்க' எனும் தொடர் இடம்பெற்றுள்ள நூல்.
Answer: C.   ஐங்குறுநூறு
92.  கிராம நிருவாகத்துக்குச் சிறப்பிடம் கொடுத்தோர்
Answer: B.   சோழர்
93.  கூற்று [A]: புலவர்களில் சிலரே பரிசில் வாழ்க்கையை மேற்கொண்டிருந்தனர். பெரும்பாலோர் தத்தமக்கு விருப்பமான தொழில்களைச் செய்து வாழ்வு நடத்தினர்.
காரணம் [R]: பரிசில் வாழ்க்கையை மேற்கொண்டோர் தகுதிக்குக் குறைவாக பரிசு நல்கியபோதும் முகம் மாறி அளித்தபோதும் அப்பொருளை துச்சமென மதித்து மறுத்தனர்.
Answer: B.   [A] மற்றும் [R] ஆகிய இரண்டும் சரி, ஆனால் [A] சரி என்பதற்கு [R] சரியான விளக்கமல்ல
94.  ஒரு ரூதர்ஃபோர்டு அளவு என்பது கீழ்க்கண்டவற்றுள் எதற்குச் சமமானது?
Answer: C.   ஒரு செகண்டு நேரத்தில் 10⁶ சிதைவுகளைக் கொடுக்கும் கதிரியக்கப் பொருளின் அளவு
95.  கேஸ்லர் சின்ட்ரோம் எனப்படுவது
Answer: C.   விண்வெளியில் குவிந்துள்ள செயற்கை கோள்கள், ராக்கெட் மற்றும் இதரக் கழிவுகளால் ஏற்படும் விளைவு
96.  கூற்று [A]: புதியப் பாடங்கள் மற்றும் புதியச் சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் பொழுது பல்கலைக்கழக மாணவர்கள் விமர்சன ரீதியாகச் சிந்திக்கின்றனர்.
காரணம் [R]: பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் கருத்துசார் கற்றல் மற்றும் ஆரம்ப நிலையில் புதியப் பாடங்களைக் கருத்துச் சார்ந்து புரிந்து கொண்டு கற்க ஊக்குவிக்கின்றனர்.
Answer: B.   கூற்று [A] வும் காரணம் [R] ம் சரி; மற்றும் காரணம் [R] கூற்று [A] க்கு சரியான விளக்கமாகும்
97.  கீழ்கண்டவற்றை பொருத்துக மற்றும் மேலும் சரியான வரிசை முறையை காண்க.
(a) உயிரற்ற பொருள் 1. சாறு பிரித்தெடுத்த பிறகு நொறுக்கப்பட்ட கரும்பு
(b) கரும்புச் சக்கை 2. மற்ற விலங்குகளை உண்ணும் விலங்குகள்
(c) கார்ஸினோஜன் 3. சூழலியல் மண்டலத்தில் உள்ள உயிரற்ற கூறு
(d) ஊனுண்ணி 4. புற்றுநோயை உண்டாக்கும் நச்சுக் கரிம கலவை
Answer: C.   3 1 4 2
98.  கூற்று [A]: சுற்றுச்சூழலில் நைட்ரஜனை அதிகமாக ஏற்றுவது இயற்கையான நைட்ரஜன் சுழற்சியில் ஏற்றத்தாழ்வை உண்டாக்குகிறது.
காரணம் [R]: இது சுற்றுச்சூழலில் கலந்து மாசு ஆக மாறி, மற்ற கரிமச் சேர்மங்களுடன் வினைபுரிகிறது.
Answer: B.   [A] மற்றும் [R] இரண்டும் சரி; மற்றும் [R], [A] விற்கான சரியான விளக்கமாகும்.
99.  பின்வருவனவற்றில் பூகம்பத்தால் ஏற்படுபவை எவை?
(i) மின்னல்
(ii) நிலச்சரிவு
(iii) இடி
(iv) சுனாமி
(v) வெள்ளம்
Answer: A.   (ii), (iv) மற்றும் (v)
;