TNPSC Group 1 2025 Preliminary Examination
General Studies Questions 151 to 175
(1) பிரதான் மந்திரி அவாஸ் யோஜனா - கிராமீன்
(2) தீன் தயாள் உபாதாயாய கிராமீன் கௌசல்ய யோஜனா
(3) பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா
(4) சமக்ர சிக்ஷா அபியான்
(i) மருத்துவத் துறையை மேம்படுத்த நிதி உதவி செய்தல்
(ii) சிறு,குறு மற்றும் நடுத்தர தொழிற்துறைக்கு கடன் வழங்குதல்
(iii) சுற்றுலாத் துறையை மேம்படுத்த கடன் வழங்குதல்
(iv) ஊரக வளர்ச்சிக்கு நிதி உதவி செய்தல்
(1) மஹல்வாரி முறை
(2) ரயத்துவாரி முறை
(3) ஜமீன்தாரி முறை
(4) பூமிதானம் முறை
(i) மக்கள் தொகை செயல் திறனுக்கான புள்ளிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
(ii) நிதி ஒழுக்கத்திற்கு 10% புள்ளிகள் வழங்கப்படுகிறது .
(iii) காடுகளின் பரப்பு எனும் பிரிவிற்குப் பதிலாக காடு மற்றும் சூழலியல் எனும் பிரிவு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது
(a) வணிக வங்கிகளிடமிருந்து வாங்கும் கடனுக்கான RBI கொடுக்க விரும்பும் வட்டி விகிதமே மீள் ரெப்போ விகிதம்
(b) ரெப்போவிகிதத்தை அதிகரிப்பதன் மூலம் கடன் வாங்குவதற்கான செலவு அதிகரிக்கிறது, கடன் வாங்குவதைக் குறைக்கிறது
(c) பணவீக்கத்தைக் கட்டுப்படுத்தும் கருவியாக ரெப்போ விகிதம் உள்ளது
(d) குறைந்த மீள் ரெப்போ விகிதம் பணவீக்கத்தைக் குறைக்கிறது
(i) திட்டக் குழுவிற்குப் பதிலாக 'நிதி ஆயோக்' அமைக்கப்பட்டது
(ii) அவற்றிற்கு நிதி ஒதுக்க அதிகாரம் இல்லை
(iii) நிதி ஆயோக் ஒரு சிந்தனைக் குழு
(iv) இந்தியாவின் குடியரசுத் தலைவர் நிதி ஆயோக்கின் தலைவர்
(i) அசோகர் எழுத்துப் பொறிகள் மைசூர் பிராந்தியத்தில் பிரம்மகிரியில் கிடைக்கின்றது.
(ii) சின்னமனூர் செப்பேடு தலையாலங்கானத்துப் பாண்டியன் நெடுஞ்செழியனைக் குறிப்பிடுகின்றது.
(iii) தி.ஆ. கோபிநாதநாயர் பதிப்பித்த திருக்கோவிலூர் எழுத்துப்பொறி ஒளவை உயிர் துறந்ததைக் குறிப்பிடுகின்றது.
(iv) கி.பி. 10 ஆம் நூற்றாண்டு வரையில் கன்னட நாட்டில் வீரக்கல் கிடைக்கவில்லை.
காரணம் [R]: சி.என். அண்ணாதுரை, நீதிக்கட்சி மற்றும் திராவிடர் கழகத்தை சமமாக நடத்தினார்.
(i) அந்தக் கலகம் எட்டு மணி நேரம் வரை நீடித்தது.
(i) அந்தக் கலகம் உள்நாட்டு துரோகத்தால் அதன் முக்கியத்துவத்தினை இழந்தது.
(iii) அந்த கலகத்திற்கு பிறகு திப்பு சுல்தானின் குடும்பம் சென்னைக்கு மாற்றப்பட்டது.
(iv) ஆங்கிலேயர்கள் 2,000-க்கு மேற்பட்ட இந்திய சிப்பாய்களைப் பிடித்தார்கள்.
(1) பெரியார் 'பெண் ஏன் அடிமையானாள்' என்ற புத்தகத்தை வெளியிட்டார்.
(2) பெரியார் 'உண்மை' என்ற தமிழ் இருமாத இதழை திருச்சிராப்பள்ளியில் தொடங்கினார்.
(3) பகத் சிங்கின் 'நான் ஏன் நாத்திகன்' என்ற துண்டு பிரசுரத்தின் தமிழ் மொழிபெயர்ப்பை வெளியிட்டதற்காக பெரியார் கைதுச் செய்யப்பட்டார்.
(4) சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு பெண்கள் மாநாட்டில் 'பெரியார்' என்ற பட்டம் வழங்கப்பட்டது.
(i) சுயமரியாதைத் திருமணங்கள் எந்த பூசாரிகளும் இல்லாமல் அல்லது சமஸ்கிருதத்தில் சடங்குகள் உச்சரிக்கப்படாமல் நடத்தப்பட்டன.
(ii) அவை பெரும்பாலும் வேண்டுமென்றே மங்களகரமானதாகக் கருதப்படும் நேரங்களில் நடத்தப்பட்டன.
(iii) அவர்கள் தாலி கட்டும் விழாவை ஒழித்தனர்.
(iv) தம்பதிகள் ஒருவருக்கொருவர் சமமாகவும் நண்பர்களாகவும் நடத்துவதாக உறுதியளித்து சத்தியம் செய்தனர்.
காரணம் [R]: டொமினியன் அந்தஸ்து பிராமணர்களுக்கு அதிக அதிகாரத்தினை வழங்கக்கூடும் என கவலைப்பட்டது.
(1) வைக்கம் போராட்டத்தில் காமராஜர்
(2) திருநெல்வேலி கலகம்
(3) சென்னை மகாசன சபை
(4) சுதேசிச் சங்கம்
(1) அஞ்சலை அம்மாள் சிறையில் இருந்த போது கர்ப்பமாக இருந்தார்
(2) சென்னையில் பிறந்த அஞ்சலையம்மாள் நீல் சிலை போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தார்
(3) அஞ்சலையம்மாளின் கணவர் சுதந்திரப் போராட்டத்தில் பங்கு பெறுவதை விரும்பவில்லை
(4) அஞ்சலையம்மாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக 1937 முதல் 1946 வரை பணியாற்றினார்
(1) சர் தாமஸ் மன்றோ - 1857 ஆம் ஆண்டு உரிமச் சட்டம்
(2) சர்சார்லஸ் மெட்காஃப் - இந்திய பத்திரிக்கைகளின் விடுதலையாளர்
(3) வெல்லெஸ்லி பிரபு - தாளின் கீழே அச்சுப்பொறியாளர் பெயர்
(4) கானிங் பிரபு - உரிமை மற்றும் தணிக்கை முறை
(1) கேரளாவைச் சேர்ந்த ஜார்ஜ் ஜோசப் வைக்கம் போராட்டத்தின் மூளையாக செயல்பட்டார்.
(2) தீண்டாமைச் சிக்கலில் கிறிஸ்துவரான ஜார்ஜ் ஜோசப் கலந்துகொள்வதில் காந்தி கருத்து வேறுபாடு கொண்டிருந்தார்.
(3) ஜார்ஜ்ஜோசபின் மார்பளவு சிலை மதுரையில் நிறுவப்பட்டுள்ளது.
(4) ஜார்ஜ் ஜோசப்பும், கரூர் நீலகண்டனும் பெரியார் வைக்கம் போராட்டத்தில் கலந்து கொள்வதை விரும்பவில்லை.
| (a) கொல்லிப்பொறை நாணயங்கள் | 1. பாண்டியர்கள் |
| (b) பெருவழுதி நாணயங்கள் | 2. சேரர்கள் |
| (c) மணிகள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை | 3. காங்கேயம் |
| (d) துணி உற்பத்தித் தொழிற்சாலை | 4. மொகஞ்சதாரோ |
கூற்று [A]: கேரளம், எர்ணாகுளத்தில் உள்ள பட்டிணம் கிராமத்தில் நடத்தப்பட்ட தொல்லியல் அகழ்வாராய்ச்சி தொடக்ககால ரோமானிய வாணிகத்தைத் தெரிவிக்கிறது.
காரணம் [R]: சங்ககால பேரரசர்களின் துறைமுக நகரான முசிறியின் ஒரு பகுதியாக பட்டணம் இருந்தது என்பதை அகழ்வாராய்ச்சி நிரூபிக்கிறது.
| (a) பழி வாங்காத காதலனால் செய்யப்படும் ஒரு வழக்கம் | 1. குறுந்தொகை |
| (b) இளநீரில் பனை மற்றும் கரும்புச்சாறு ஆகியவற்றைக் கலக்கும் வழக்கம் | 2. மணிமேகலை |
| (c) வெள்ளை அரிசி மற்றும் நெய்யுடன் காக்கைக்கு நைவேத்யம் செய்யும் வழக்கம் | 3. தொல்காப்பியம் |
| (d) வீடுகளின் சுவர்களில் ஓவியம் தீட்டும் வழக்கம் | 4. புறநானூறு |
(i) ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப் புடைத்து
(ii) தகுதி எனஒன்று நன்றே பகுதியால்
பாற்பட்டு ஒழுகப் பெறின்
(iii) மறவற்க மாசற்றார் கேண்மை துறவற்க
துன்பத்துள் துப்பாயார் நட்பு
1. சினம் கொள்ளுதல் (வெகுளி)
2. ஆசை கொள்ளுதல் (அவா)
3. பொறாமை கொள்ளல் (அழுக்காறு)
4. கடுஞ்சொல் கூறல் (இன்னாச்சொல்)
கூற்று [A]: பிறரால் இகழப்படாமல் இருக்க வேண்டும் என்று எண்ணுபவன்
காரணம் [R]: யாதொரு பொருளையும் கள்ளத்தினால் அடையக் கூடிய எண்ணம் நெஞ்சினில் புகாதபடி காத்துக் கொள்வான்
1. தொடக்கு - கழுத்திற் பூட்டியிருக்கும் சங்கிலி
2. ஆண்டலை அடுப்பு - சேவல் வடிவானது
3. ஐயவித்துலாம் - கண்ணைக் கொத்தும் ஆயுதம்
4. எறிசிரல் - அம்புகள் வைத்தெய்யும் எந்திரம்
தமிழகத்தில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்ட இடங்கள்
| (a) சென்னை | 1. மல்லபாடி |
| (b) தஞ்சாவூர் | 2. கம்பர்மேடு |
| (c) தர்மபுரி | 3. கொடுமணல் |
| (d) ஈரோடு | 4. பல்லாவரம் |
1. பழங்காலத்தில் தமிழர்கள் திருமணத்தில் மணல் பரப்பி விழா எடுத்தனர் - அகநானூறு
2. மணமகளுக்கு மணமகன் தாலி அணிவித்தல் வழக்கமாகும் - தொல்காப்பியம்
3. மணமகள் வீட்டினர் மணமகன் வீட்டாருக்கு வரதட்சணை கொடுக்கும் வழக்கமிருந்தது - நன்னூல்
4. தீ நெறிப்பட்ட வேள்வித் திருமணம் - சிலப்பதிகாரம்