GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 2 2013 Preliminary Examination

General Studies Questions 1 to 25

1.  சுவாசித்தல் குறித்த கீழ்கண்ட கூற்றுகளில் எவை சரியானவை?
I. சுவாசித்தல் மூலம் தாவரத்தின் உலர் எடை குறைகிறது.
II. சுவாசித்தலின் போது சர்க்கரையை எளிமையாக்கும் இடை வேதி வினைகள் மற்றும் ஒளிச்சேர்க்கையின் போது சர்க்கரையை உருவாக்கும் உயிர் வேதிவினைகள் ஆகியவை பெரும்பாலும் ஒரே மாதிரியானவை.
III. ஆக்ஸிஜனின் அளவு சுவாசித்தலை பாதிப்பதாகக் கண்டறியப்படவில்லை.
IV. சுவாசித்தல் என்பது ஆக்கல் நிகழ்வு.
Answer: C.   I மற்றும் II மட்டும்
2.  ஆஞ்சியோஸ்பெர்ம், ஜிம்னோஸ்பெர்ம் வகையில் இருந்து இதனால் வேறுபடுகின்றது
Answer: D.   சூல்கள், சூலகத்தால் மூடப்பட்டிருக்கும்
3.  கீழ்க்கண்ட கூற்றுக்களைக் கவனி
(a) எண்ணற்றவகை இனமக்கள் இங்கு வசிப்பதால் V.A. சுமித் என்பவர் இந்தியாவை ஒரு இனங்களின் அருங்காட்சியகம் என்று குறிப்பிட்டுள்ளார்.
(b) இந்தியா ஏராளமான மாறுபட்ட தன்மைகளை உள்ளடக்கிய நாடு என்று அனைவராலும் அறியப்பட்டுள்ளது. ஏனெனில், இங்கு எண்ணற்ற வகை இனமக்கள் வசிக்கின்றனர்.
இவற்றுள்
Answer: C.   (a) மற்றும் (b) இரண்டும் சரி
4.  கீழ்க்கண்ட சிறந்த மனிதர்களிடையே காணப்படும் சிறப்பம்சம் என்ன?
பண்டிட் ரவிசங்கர், M.S. சுப்புலட்சுமி, சத்யஜித்ரே
Answer: A.   பாரத ரத்னா விருது பெற்றவர்கள்
5.  பின் கொடுக்கப்பட்டுள்ள இந்தியாவின் GDPயின் பிரிவுகளை மேலிருந்து கீழ்நோக்கிச் செல்லும் தொடர்ச்சியாக அமைத்தால் எந்த வரிசை சரியானது?
Answer: D.   மூன்றாம் நிலைத்துறை, இரண்டாம் நிலைத்துறை, முதல் நிலைத்துறை
6.  தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் அரசாங்க வெளியீடானது
Answer: A.   செப்டம்பர், 2013
7.  நிகர நாட்டு உற்பத்தி (NNI) - யில் சேர்த்துக்கொள்ளாதது
Answer: C.   தேய்மானச் செலவு
8.  சரியாக பொருத்துக:
நாணயங்கள் தேசம்/நாடுகள்
(a) டினார் 1. கொரியா
(b) வோன் 2. இராக்
(c) பெசோ 3. ரஷ்யா
(d) ரபல் 4. பிலிபைன்ஸ்
Answer: B.   2 1 4 3
9.  [Fe(H₂O)₆]³⁺ இணை அளி குறி
Answer: B.   [Fe (H₂O)₅ OH]⁺²
10.  இரும்பை அதன் ஹெமடைட் தாதுவிலிருந்து பிரித்தெடுக்கும் போது சேர்க்கப்படும் இளக்கி மற்றும் கசடு முறையே
Answer: C.   சிலிக்கா, அயர்ன் சிலிக்கேட்
11.  இடப்பெயர்ப்பின் போது மரபணு சார்ந்த குறியன்களில் எதில் தடை குறியன் உள்ளது?
I. UGC
II. UAA
III. UAG
IV. UGA
Answer: D.   II, III, IV
12.  மத்திய அட்லாண்டிக் தொடர் மத்திய அட்லாண்டிக் தொடரின் வரைபடம் கொடுக்கப்பட்டுள்ள மத்திய அட்லாண்டிக் தொடரினை கவனி. வரிசை I யை வரிசை II உடன் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டிலிருந்து சரியாக தேர்ந்தெடுத்து பொருத்துக:
வரிசை I வரிசை II - தொடரின் பெயர்
(a) a 1. சேலஞ்சர் தொடர்
(b) b 2. ரியோ கிராண்ட் தொடர்
(c) c 3. வால்விஸ் தொடர்
(d) d 4. டால்பின் உயர்வு
Answer: C.   4 1 2 3
13.  தவறான பொருத்தத்தை கண்டுபிடிக்கவும்:
(a) சர்வதேச மனித உரிமைகள் பிரகடனம் — (1) 1948
(b) ஐரோப்பிய சமூக சாசனம் — (2) 1961
(c) அமெரிக்க மனித உரிமைகள் மற்றும் கடமைகளின் பிரகடனம் — (3) 1958
(d) சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகளின் உடன்படிக்கை (ICCPR) — (4) 1966
Answer: C.   (c)
14.  கீழ்கண்ட வாக்கியங்களை கவனி:
கூற்று (A) : JVP குழு இந்தியாவின் மொழிவாரி மாநிலங்கள் அமைப்பது பற்றி மறுபரிசீலனை செய்ய அமைக்கப்பட்டது.
காரணம் (R) : இந்த குழுவின் உறுப்பினர்கள் ஜவகர்லால் நேரு, வல்லபாய் பட்டேல் மற்றும் பட்டாபி சீதாராமய்யா ஆவர்.
கீழ்க்கண்ட குறியீடுகளை கொண்டு சரியான விடையை தேர்ந்தெடுக்கவும்.
Answer: C.   (A) மற்றும் (R) சரி. (R) என்பது (A) வின் சரியான காரணம் தான்.
15.  விடுதலைப் போராட்ட வீரர் என்.எம்.ஆர். சுப்பாராமன் ___________ என்று அழைக்கப்பட்டார்.
Answer: B.   மதுரை காந்தி
16.  தமிழ்நாட்டின் பசுமையக கிராமப்புற வீட்டு வசதித்திட்டத்திற்கு மின்திறன் இந்த ஆற்றலிலிருந்து பெறப்படுகிறது
Answer: B.   சூரிய ஆற்றல்
17.  'CHOGM' என்றால் என்ன?
Answer: B.   காமன் வெல்த் ஹெட்ஸ் ஆப் கவன்மென்ட் மீடிங்
18.  கீழ்கண்ட கூற்றுகளை கவனித்து சரியான விடையைத் தேர்ந்தெடுக்க:
துணிவுரை (A) : ஒளியியல் நுண்ணோக்கிகளைக் காட்டிலும் எலக்டிரான் நுண்ணோக்கிகள் மேன்மையான பகுதிறனைத் தரவல்லன.
காரணம் (R) : உயர் ஆற்றல் கொண்ட துகள், சிறிய டீ-பிராக்லி அலைநீளத்தினைப் பெறும். அதனால் மற்ற துகள்களது சிறிய-அளவீடு உள்கட்டமைப்பினை ஆய்வு செய்ய வல்லது.
Answer: A.   (A) மற்றும் (R) இரண்டும் சரியானவை. மேலும் (R), (A) விற்கான சரியான விளக்கமாகும்.
19.  வரிசை I உடன் வரிசை II னைப் பொருத்தி வரிசைகளுக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள தொகுப்பிலிருந்து சரியான விடையினைத் தேர்வு செய்க:
வரிசை I வரிசை II
நதி கலக்கும் கடல்
(a) ஹவாங்கோ 1. பியுபோர்ட் கடல்
(b) நைஜர் 2. மஞ்சள் கடல்
(c) வோல்கா 3. கினி வளைகுடா
(d) மெக்கன்ஜி 4. காஸ்பியன் கடல்
Answer: B.   2 3 4 1
20.  கொடுக்கப்பட்டுள்ள கோவில் மற்றும் இடத்தைப் பொருத்தி கீழ்க்குறிக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடு:
பட்டியல் I பட்டியல் II
(a) ஒற்றைக்கல் ரதம் 1. திருத்தணி
(b) கைலாசநாதர் கோவில் 2. குடிமல்லம்
(c) வீரட்டானேசுவரர் கோவில் 3. காஞ்சிபுரம்
(d) பரசுராமேஸ்வரர் கோவில் 4. மாமல்லபுரம்
Answer: A.   4 3 1 2
21.  கூற்று (A) : டில்லிக்கு முழுமையான மாநிலத்திற்குரிய அந்தஸ்து வழங்கப்படவில்லை.
காரணம் (R) : இந்தியாவின் தலைநகரமாக டில்லி விளங்குவதால் அது சிறப்பு அந்தஸ்தினைப் பெற்றுள்ளது.
Answer: A.   (A) மற்றும் (R) இரண்டுமே சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
22.  ஜூன் 29, 2000ல் UNDP வெளியிட்ட மனித மேம்பாட்டு அறிக்கையின்படி 174 நாடுகளின் மனித முன்னேற்ற குறியீட்டின்படி இந்தியாவில் தர வரிசை ___________ ஆக உள்ளது
Answer: C.   128
23.  ராஜீவ் அவாஸ் யோஜனாவின் (RAY) பிராதான குறிக்கோளானது நமது நாட்டினை இதன்படி கொண்டு வருவதாகும்
Answer: B.   சேரிகள் இல்லாமை
24.  "ஃபான்டம் இன் தி ப்ரெயின்" என்ற நாவலின் ஆசிரியர்
Answer: C.   V.S. சுப்ரமணியன் ராமச்சந்திரன்
25.  இந்தியாவின் தலைமை நீதிபதிகளை வரிசைப்படுத்துக :
1. யோகேஷ் குமார் சபர்வால்
2. சரோஷ் ஹோமி காபாடியா
3. கே.ஜீ. பாலகிருஷ்ணன்
4. அல்டாமஸ் கபீர்
Answer: B.   1, 3, 2, 4
;