GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 2 2013 Preliminary Examination

General Tamil Questions 26 to 50

1.  'மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில் கிருமி செருவினில் பிழைத்தும்' என்ற உயிரியியல் தொழில்நுட்பத்தை அறிவுறுத்தும் நூல்
A.   தேவாரம்
B.   திருவாசகம்
C.   திருக்கோவையார்
D.   திருப்பள்ளியெழுச்சி
Answer: B.  திருவாசகம்
2.  "ஆர்பரவை அணிதிகழும் மணிமுறுவல் அரும்பரவை" - இப்பாடலடியில் அமைந்துள்ளவாறு பின்வருவனவற்றுள் எது தவறானது?
A.   சீர்மோனை அமைந்துள்ளது
B.   சீர் முரண் அமைந்துள்ளது
C.   சீர் இயைபு அமைந்துள்ளது
D.   கீழ்க்கதுவாய்மோனை அமைந்துள்ளது
Answer: B.  சீர் முரண் அமைந்துள்ளது
3.  தனிவாக்கியம் குறித்து கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?
A.   வினாப் பொருள் தரும் வாக்கியம்
B.   ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள் ஒரு பயனிலையைக் கொண்டு முடியும்
C.   தனி வாக்கியங்கள் பல தொடர்ந்து வரும்
D.   ஒரு முதன்மை வாக்கியம் ஒரு துணை வாக்கியத்துடன் சேர்ந்து வரும்
Answer: B.  ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள் ஒரு பயனிலையைக் கொண்டு முடியும்
4.  "திருவள்ளுவர் தோன்றிராவிட்டால் தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது. திருக் குறள் என்னும் ஒரு நூல் தோன்றிராவிட்டால், தமிழ்மொழி என்னும் ஒரு மொழி இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது" எனக் கூறியவர்
A.   கி.வா.ஜ.
B.   கி.ஆ.பெ.வி.
C.   திரு.வி.க.
D.   உ.வே.சா.
Answer: B.  கி.ஆ.பெ.வி.
5.  “தெண்டன் இட்டது வள்ளுகிர் திண்டிறல் புலியே” - இத்தொடரில் 'திண்டிறல்' என்னும் சொல்லிற்கு பொருள்
A.   கொடுமையான
B.   கடுமையான
C.   எடுப்பான
D.   உறுதியான
Answer: D.  உறுதியான
6.  துரைமாணிக்கம் என்ற இயற்பெயரைக் கொண்டவர்
A.   மீரா
B.   முடியரசன்
C.   கண்ணதாசன்
D.   பெருஞ்சித்திரனார்
Answer: D.  பெருஞ்சித்திரனார்
7.  'ஏற்பாடு' என்பதன் பொருள்
A.   சூரியன் உதிக்கும் நேரம்
B.   ஏற்றப்பாட்டுப்பாடுதல்
C.   சந்திரன் தோன்றும் நேரம்
D.   சூரியன் மறையும் நேரம்
Answer: D.  சூரியன் மறையும் நேரம்
8.  'க' - என்ற ஓரெழுத்து ஒரு மொழிக்கு தவறான பொருள் எது?
A.   அரசன்
B.   காற்று
C.   மயில்
D.   காத்தல்
Answer: D.  காத்தல்
9.  ‘சலவரைச் சாரா விடுதல் இனிதே’
'சலவர்'- என்றச் சொல்லின் ஆங்கிலச்சொல்
A.   Sorrow full person
B.   Importer
C.   Violent person
D.   Deceit full person
Answer: D.  Deceit full person
10.  அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.
A.   சீராட்டு தாலாட்டு நீராட்டு பாராட்டு
B.   தாலாட்டு சீராட்டு பாராட்டு நீராட்டு
C.   நீராட்டு பாராட்டு சீராட்டு தாலாட்டு
D.   பாராட்டு நீராட்டு தாலாட்டு சீராட்டு
Answer: A.  சீராட்டு தாலாட்டு நீராட்டு பாராட்டு
11.  செயப்பபாட்டு வினைச்சொற்றொடரைக் கண்டறிக.
A.   நாற்காலி தச்சனால் செய்யப்பட்டது
B.   தச்சன் நாற்காலியைச் செய்தான்
C.   நாற்காலியைச் செய்தவன் தச்சன்
D.   நாற்காலியைத் தச்சன் செய்தான்
Answer: A.  நாற்காலி தச்சனால் செய்யப்பட்டது
12.  கனி முன் நேர் வருவதும் கனி முன் நிரை வருவதும்
A.   கலித்தளை
B.   வஞ்சித்தளை
C.   இயற்சீர் வெண்டளை
D.   வெண்சீர் வெண்டளை
Answer: B.  வஞ்சித்தளை
13.  பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பி தேரினும் அஃதே துணை - கீழ்க்காணும் சொற்களுள் எதிர்ச்சொல்லைக் கண்டறிக:
A.   பரிந்து X வெறுத்து
B.   பரிந்து X விரும்பி
C.   தெரிந்து உணர்ந்து
D.   தெரிந்து X ஆராய்ந்து
Answer: A.  பரிந்து X வெறுத்து
14.  'மூதூர்' எத்திணைக்குரிய ஊர்?
A.   மருதம்
B.   பாலை
C.   குறிஞ்சி
D.   நெய்தல்
Answer: A.  மருதம்
15.  பின்வருவனவற்றுள் 'ஈறு போதல்', 'இனமிகல்' என்னும் விதிகளின்படி புணராதது
A.   நெடுங்கடல்
B.   செங்கடல்
C.   கருங்கடல்
D.   கருங்குயில்
Answer: B.  செங்கடல்
16.  பொருந்தாத இணையைக் கண்டறிக:
A.   வீரமாமுனிவர் - பரமார்த்த குருகதை
B.   தேவநேயப்பாவாணர் - தமிழர் திருமணம்
C.   திரு.வி.க. - சைவத்திறவு
D.   பெருஞ்சித்திரனார் – தமிழ்ச்சோலை
Answer: D.  பெருஞ்சித்திரனார் – தமிழ்ச்சோலை
17.  பின்வருவனவற்றுள் பொருந்தும் இணையைத் தேர்ந்தெடு:
செரு — செறு
A.   சண்டை — வயல்
B.   போர் — சிறிய
C.   போர்க்களம் — குளம்
D.   கோபப்படு — போரிடு
Answer: A.  சண்டை — வயல்
18.  'அழுது அடியடைந்த அன்பர்' - என்னும் தொடர் யாரைக் குறிக்கிறது?
A.   அருணகிரியார்
B.   சம்பந்தர்
C.   சுந்தரர்
D.   மாணிக்கவாசகர்
Answer: D.  மாணிக்கவாசகர்
19.  'என்றுமுள தென்தமிழ்' - என்னும் தொடரை இயம்பியவர் யார்?
A.   கம்பர்
B.   பாரதியார்
C.   பாரதிதாசன்
D.   வள்ளலார்
Answer: A.  கம்பர்
20.  பதிதொறு புயல்பொழி தருமணி பணைதரு
பருமணி பகராநெற் -இத்தொடரில் 'புயல்' - என்னும் சொல்லிற்கு பொருள்
A.   வானம்
B.   காற்று
C.   மேகம்
D.   நீர்
Answer: C.  மேகம்
21.  கீழ்க்காணும் விடைகளில் எது சரியானது?
A.   சே- சோலை
B.   சோ - சிவப்பு
C.   கா - மதில்
D.   மா - விலங்கு
Answer: D.  மா - விலங்கு
22.  'ஷெல்லிதாசன்' என்று தன்னைக் கூறிக் கொண்டவர் யார்?
A.   சுப்பிரமணிய பாரதியார்
B.   சுத்தானந்த பாரதியார்
C.   சோமசுந்தர பாரதியார்
D.   சுப்ரமணிய சிவா
Answer: A.  சுப்பிரமணிய பாரதியார்
23.  குண்டலகேசிக்கு எதிராக எழுந்த வாதநூல் எது?
A.   சூளாமணி
B.   நாககுமார காவியம்
C.   யசோதர காவியம்
D.   நீலகேசி
Answer: D.  நீலகேசி
24.  விடைத்தேர்க: இலக்கியச் செய்திகளோடு அறிவியல் துறைப்பொருள்களையும் முதன் முதலாகச் சேர்த்து விளக்கம் தந்த நூல் எது?
A.   அபிதான கோசம்
B.   அபிதான சிந்தாமணி
C.   விவேக சிந்தாமணி
D.   சீவக சிந்தாமணி
Answer: B.  அபிதான சிந்தாமணி
25.  "திலகர் விதைத்த விதை பாரதியாக முளைத்தது" - என்று கூறியவர் யார்?
A.   காந்திஜி
B.   நேருஜி
C.   இராஜாஜி
D.   நேதாஜி
Answer: C.  இராஜாஜி
;