TNPSC Group 2 2013 Preliminary Examination
General Tamil Questions 51 to 75
1.
“ஆயுள் நாள் முழுவதும் தமிழ்மகன் தன்னுடன் வைத்துக் கொண்டு அனுபவிக்கக் கூடிய வாடாத கற்பகப் பூச்செண்டு” - என்று கவிமணியின் பாடலைப் பாராட்டியவர் யார்?
A.
வ. உ. சிதம்பரம்
B.
டி. கே. சிதம்பரம்
C.
சிதம்பர சுவாமி
D.
சிதம்பர நாதன்
Answer:
B.
டி. கே. சிதம்பரம்
2.
திரு. வி. கல்யாணசுந்தரனாரின் பயண இலக்கிய நூல் எது?
A.
யான் கண்ட இலங்கை
B.
எனது இலங்கைச் செலவு
C.
யான் கண்ட ஜப்பான்
D.
உலகம் சுற்றிய தமிழன்
Answer:
B.
எனது இலங்கைச் செலவு
3.
“மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்” எனப்பாடியவர்
A.
அரிசில் கிழார்
B.
மோசிகீரனார்
C.
ஒளவையார்
D.
பரணர்
Answer:
B.
மோசிகீரனார்
4.
சிவபெருமான் திருக்கோவிலின் எதிரே உள்ள அறுகால் பீடத்தில் இருந்து வடமொழி, தென்மொழிப் புலவர் போற்ற அரங்கேறிய நூல் எது?
A.
பெரிய புராணம்
B.
திருவிளையாடற்புராணம்
C.
கந்தபுராணம்
D.
திருவாசகம்
Answer:
B.
திருவிளையாடற்புராணம்
5.
பெரியபுராணத்தில் யாருடைய வரலாறு மிக விரிவாக விளக்கப்பட்டுள்ளது?
A.
திருநாவுக்கரசர்
B.
திருஞானசம்பந்தர்
C.
சுந்தரர்
D.
காரைக்கால் அம்மையார்
Answer:
B.
திருஞானசம்பந்தர்
6.
சுந்தரர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட இடம் எது?
A.
திருச்செங்குன்றம்
B.
திருவெண்ணெய் நல்லூர்
C.
திருச்செந்தூர்
D.
திருவாரூர்
Answer:
B.
திருவெண்ணெய் நல்லூர்
7.
எழுத்து என்னும் இதழில் புதுக்கவிதைகளைப் படைத்தவர்
A.
மீரா
B.
இன்குலாப்
C.
தருமு சிவராமு
D.
ந. பிச்சமூர்த்தி
Answer:
C.
தருமு சிவராமு
8.
மனிதர்களின் மாறுபட்ட மன விகாரத்தை எடுத்து உணர்த்தும் "ஈஸ்வரலீலை" என்னும் கதைநூலின் ஆசிரியர்
A.
லாச. ராமாமிருதம்
B.
சி. சு. செல்லப்பா
C.
ந. பிச்சமூர்த்தி
D.
தி. ஜானகிராமன்
Answer:
C.
ந. பிச்சமூர்த்தி
9.
முத்துக்குமார் சுவாமி பிள்ளைத் தமிழை இயற்றியவர்
A.
குமர குருபரர்
B.
பலபட்டடைச் சொக்கநாதர்
C.
சேக்கிழார்
D.
சிவஞான சுவாமிகள்
Answer:
A.
குமர குருபரர்
10.
இந்திய நூலகத் தந்தை எனப்போற்றப்படுகிறவர்
A.
உ.வே. சாமிநாத அய்யர்
B.
மாயூரம் வேதநாயகம் பிள்ளை
C.
சீர்காழி சீ. இரா.அரங்கநாதன்
D.
தஞ்சை வர்ணன்
Answer:
C.
சீர்காழி சீ. இரா.அரங்கநாதன்
11.
'தேம்பாவணி' நூலில் உள்ள படலங்களின் எண்ணிக்கை
A.
39 படலங்கள்
B.
30 படலங்கள்
C.
32 படலங்கள்
D.
36 படலங்கள்
Answer:
D.
36 படலங்கள்
12.
பொருத்துக:
| புலவர் | நூற்பெயர் |
|---|---|
| (a) முடியரசன் | 1. ஆனந்தத் தேன் |
| (b) சச்சிதானந்தன் | 2. மாங்கனி |
| (c) குமரகுருபரர் | 3. காவியப்பாவை |
| (d) கண்ணதாசன் | 4. சகலகலாவல்லிமாலை |
A.
2 1 4 3
B.
3 2 4 1
C.
3 1 4 2
D.
1 3 2 4
Answer:
C.
3 1 4 2
13.
மலரின் பருவத்தைக் குறிக்காத பெயர் எது?
A.
அகரு
B.
அலர்
C.
முகை
D.
வீ
Answer:
A.
அகரு
14.
'மருமக்கள் வழி மான்மியம்' என்ற நூலின் ஆசிரியர் யார்?
A.
திரு.வி.க
B.
கவிமணி
C.
இரசிகமணி
D.
நாமக்கல் கவிஞர்
Answer:
B.
கவிமணி
15.
'கிளியை வளர்த்துப் பூனையின் கையில் கொடுத்தது போல' - என்னும் உவமை உணர்த்தும் பொருள் யாது?
A.
இன்பம்
B.
வருமுன் காத்தல்
C.
மகிழ்ச்சி
D.
துன்பம்
Answer:
D.
துன்பம்
16.
அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க:
A.
வைகுதல் வைகறை வைகலும் வைகல்
B.
வைகறை வைகுதல் வைகல் வைகலும்
C.
வைகலும் வைகல் வைகுதல் வைகறை
D.
வைகல் வைகலும் வைகறை வைகுதல்
Answer:
D.
வைகல் வைகலும் வைகறை வைகுதல்
17.
வாக்கியங்களைக் கவனி:
கூற்று (A) : எ.கா "நான் புத்தகம் கொண்டு வருகிறேன்" என்று பவானி, காயத்ரியிடம் கூறினாள்
காரணம் (R): ஒருவர் கூறியதை அப்படியே கூறுவது மேற்கோள் குறியீடு இடம் பெறும் தன்மை, முன்னிலைப் பெயர்கள் இடம்பெறும் என்பது நேர்க்கூற்று ஆகும்
கூற்று (A) : எ.கா "நான் புத்தகம் கொண்டு வருகிறேன்" என்று பவானி, காயத்ரியிடம் கூறினாள்
காரணம் (R): ஒருவர் கூறியதை அப்படியே கூறுவது மேற்கோள் குறியீடு இடம் பெறும் தன்மை, முன்னிலைப் பெயர்கள் இடம்பெறும் என்பது நேர்க்கூற்று ஆகும்
A.
இவற்றுள் (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கமல்ல
B.
இவற்றுள் (A) தவறு. ஆனால் (R) சரி
C.
இவற்றுள் (A) சரி. ஆனால் (R) தவறு
D.
இவற்றுள் (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
Answer:
D.
இவற்றுள் (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்
18.
இலக்கணக் குறிப்புச் சொல்லைத் தேர்க:
‘பண்புப் பெயர்'
‘பண்புப் பெயர்'
A.
திட்பம்
B.
ஆட்டம்
C.
கோடல்
D.
பெறுதல்
Answer:
A.
திட்பம்
19.
அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க:
A.
தோப்பு துப்பு தீர்ப்பு தப்பு
B.
துப்பு தோப்பு தப்பு தீர்ப்பு
C.
தப்பு தீர்ப்பு துப்பு தோப்பு
D.
தப்பு தீர்ப்பு தோப்பு துப்பு
Answer:
C.
தப்பு தீர்ப்பு துப்பு தோப்பு
20.
பொருந்தா இணையைக் கண்டறிக:
A.
சுவடி — நூல்
B.
வெய்யோன் — திங்கள்
C.
செட்டு — சிக்கனம்
D.
சிந்தை — உள்ளம்
Answer:
B.
வெய்யோன் — திங்கள்
21.
சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடராக்குதல்
A.
தமிழில் பேசுதல் தமிழறிந்தாரிடம் தமிழர் தகுதி மிகு பண்பாகும்
B.
தமிழறிந்தாரிடம் தமிழர் தகுதி மிகு பண்பாகும் தமிழில் பேசுதல்
C.
தகுதி மிகு பண்பாகும் தமிழில் பேசுதல் தமிழ்றிந்தாரிடம் தமிழர்
D.
தமிழர் தமிழறிந்தாரிடம் தமிழில் பேசுதல் தகுதிமிகு பண்பாகும்
Answer:
D.
தமிழர் தமிழறிந்தாரிடம் தமிழில் பேசுதல் தகுதிமிகு பண்பாகும்
22.
'கற்றவனுக்குக் கட்டுச் சோறு வேண்டாம்' என்று குறிப்பிடும் இலக்கியம்
A.
மூதுரை
B.
நாலடியார்
C.
பழமொழி நானூறு
D.
நான்மணிக்கடிகை
Answer:
C.
பழமொழி நானூறு
23.
எவ்வகை வாக்கியம்?
மாணவன் பாடம் படித்திலன்
மாணவன் பாடம் படித்திலன்
A.
எதிர்மறைத் தொடர்
B.
பொருள் மாறா எதிர்மறைத் தொடர்
C.
உடன்பாட்டுத் தொடர்
D.
கலவைத் தொடர்
Answer:
A.
எதிர்மறைத் தொடர்
24.
தக்கார் தகவுஇலர் என்பது அவர் அவர் எச்சத்தால் காணப்படும் - இக்குறளில் அமைந்துள்ள தக்கார்- எச்சத்தால் என்ற இணை
A.
அடி முரண்
B.
டி மோனை
C.
அடி இயைபு
D.
இன எதுகை
Answer:
D.
இன எதுகை
25.
விடைக்கேற்ற வினாவைத் தேர்க:
‘மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை’
‘மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை’
A.
தமிழர்க்குப் பெருமை தராதது எது?
B.
நமக்குள்ளே பேசுவது எது?
C.
பழங்கதைகளால் என்ன நன்மை?
D.
பழங்கதைகளின் மகிமை யாது?
Answer:
A.
தமிழர்க்குப் பெருமை தராதது எது?