TNPSC Group 2 2013 Preliminary Examination
General Tamil Questions 76 to 100
1.
விடைக்கேற்ற வினாவைத் தேர்க:
'இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்திசையா'
'இரட்டைக்கிளவி இரட்டிற் பிரிந்திசையா'
A.
இரட்டைக்கிளவி இரட்டித்தால் என்னவாகும்?
B.
இரட்டைக்கிளவி எவ்விடத்தில் வரும்?
C.
இரட்டிற் பிரிந்திசையாதது எது?
D.
இரட்டிற் பிரிந்திசைப்பது எது?
Answer:
C.
இரட்டிற் பிரிந்திசையாதது எது?
2.
"சேமமுற நாள் முழுதும் உழைப்பதனாலே" -இந்தத் தேசமெல்லாம் செழுத்திடுது - எனப் பாடியவர்
A.
கண்ணதாசன்
B.
தஞ்சை இராமையாதாஸ்
C.
மருதகாசி
D.
பட்டுக்கோட்டைய கல்யாணசுந்தரனார்
Answer:
C.
மருதகாசி
3.
கீழ்வருவனவற்றுள் கவிஞர் கண்ணதாசன் இயற்றாத நூல் எது?
A.
ஆயிரந்தீவு அங்கயற்கண்ணி
B.
இராஜ தண்டனை
C.
மாங்கனி
D.
கொய்யாக்கனி
Answer:
D.
கொய்யாக்கனி
4.
உவமைக் கவிஞர் சுரதா இயற்றிய நூல் எது?
A.
நிலவுப் பூ
B.
சூரியகாந்தி
C.
தேன்மழை
D.
பூங்கொடி
Answer:
C.
தேன்மழை
5.
தம்மை நாயகியாகக் கற்பனை செய்து நாரையைத் தூது விட்ட ஆழ்வார் யார்?
A.
பொய்கையாழ்வார்
B.
நம்மாழ்வார்
C.
குலசேகர ஆழ்வார்
D.
பெரியாழ்வார்
Answer:
B.
நம்மாழ்வார்
6.
உமர்கய்யாம், 'ரூபாயத்' என்ற பெயரில் எழுதிய நூலைக் கவிமணி மொழி பெயர்த்தார். அடிக் கோடிட்ட சொல்லின் பொருளை எழுதுக.
A.
எட்டடிச் செய்யுள்
B.
இரண்டடிச் செய்யுள்
C.
நான்கடிச் செய்யுள்
D.
இவை எல்லாம் தவறானவை
Answer:
C.
நான்கடிச் செய்யுள்
7.
கீழ்க்காணும் சொற்களில் தொழிற்பெயர் அல்லாததை அறிக.
A.
அழுகை
B.
தொல்லை
C.
போக்கு
D.
தொழுகை
Answer:
B.
தொல்லை
8.
செயப்பாட்டு வினைச்சொற்றொடரைக் கண்டறிக.
A.
வ.உ.சி. தொல்காப்பியத்தைப் பதிப்பித்தார்
B.
தொல்காப்பியம் வ.உ.சி.யால் பதிப்பிக்கப்பட்டது
C.
பதிப்பித்தார் தொல்காப்பியத்தை வ.உ.சி.
D.
வ.உ.சி. பதிப்பித்தது தொல்காப்பியம்
Answer:
B.
தொல்காப்பியம் வ.உ.சி.யால் பதிப்பிக்கப்பட்டது
9.
'குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது' - இக்குறளில் அடி எதுகையாவது.
கணமேயும் காத்தல் அரிது' - இக்குறளில் அடி எதுகையாவது.
A.
குணமென்னும் — குன்றேறி
B.
குன்றேறி — நின்றார்
C.
குணமென்னும் — கணமேயும்
D.
கணமேயும் — காத்தல்
Answer:
C.
குணமென்னும் — கணமேயும்
10.
வாக்கிய அமைப்பினைக் கண்டறிதல்.
பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவியல் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார் - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
பள்ளிக்கல்வி இயக்குநர் அறிவியல் கண்காட்சியைத் தொடங்கி வைத்தார் - எவ்வகை வாக்கியம் எனச் சுட்டுக.
A.
தனி வாக்கியம்
B.
கலவை வாக்கியம்
C.
செயப்பாட்டு வினை வாக்கியம்
D.
பிறவினை வாக்கியம்
Answer:
A.
தனி வாக்கியம்
11.
பின்வரும் இலக்கணக் குறிப்புக்குரிய பொருந்தாதச் சொல்லைத் தேர்க:
பண்புத்தொகை
பண்புத்தொகை
A.
மென்கண்
B.
செய்வினை
C.
நன்கலம்
D.
அருவிலை
Answer:
B.
செய்வினை
12.
'நெறியினில் உயிர்செகுத் திடுவ' - இதில் 'உயிர்செகுத்து' எவ்விலக்கணத்தைச் சார்ந்தது?
A.
ஈறுகெட்ட எதிர்மறைப்பெயரெச்சம்
B.
வினையாலணையும் பெயர்
C.
வியக்கோள் வினைமுற்று
D.
இரண்டாம் வேற்றுமைத்தொகை
Answer:
D.
இரண்டாம் வேற்றுமைத்தொகை
13.
சரியானவற்றைத் தேர்க.
பொருள் — திணை
1. எதிரூன்றல் — வெட்சி
2. மீட்டல் — வஞ்சி
3. செருவென்றது — வாகை
4. எயில்காத்தல் — நொச்சி
பொருள் — திணை
1. எதிரூன்றல் — வெட்சி
2. மீட்டல் — வஞ்சி
3. செருவென்றது — வாகை
4. எயில்காத்தல் — நொச்சி
A.
1ம், 2ம் சரி
B.
2ம், 3ம் சரி
C.
3ம், 4ம் சரி
D.
1ம், 4ம் சரி
Answer:
C.
3ம், 4ம் சரி
14.
பிரித்தெழுதுக
நெடுநாவாய்
நெடுநாவாய்
A.
நெடு + நாவாய்
B.
நெடுமை + நா+ வாய்
C.
நெடுமை + நாவாய்
D.
நெடுநா + வாய்
Answer:
C.
நெடுமை + நாவாய்
15.
'நல்ல' எனும் அடைமொழியைப் பெற்ற நூல் எது?
A.
நற்றிணை
B.
குறுந்தொகை
C.
அகநானூறு
D.
ஐங்குறுநூறு
Answer:
B.
குறுந்தொகை
16.
'கடலில் கரைத்த பெருங்காயம் போல' இந்த உவமை வாக்கியம் உணர்த்தும் பொருள்
A.
பகர்தல்
B.
கலத்தல்
C.
வீணாதல்
D.
ஏமாறல்
Answer:
C.
வீணாதல்
17.
தெரிநிலை வினையெச்சத்தை எடுத்து எழுதுக.
A.
நோயின்றி வாழ்கிறான்
B.
மெல்ல நடந்தான்
C.
நடந்து வந்தான்
D.
நன்கு பாடினான்
Answer:
C.
நடந்து வந்தான்
18.
பொருத்துக:
| (a) கை | 1. துன்பம் |
| (b) நோ | 2. கைப்பற்றுதல் |
| (c) யா | 3. ஒழுக்கம் |
| (d) வௌ | 4. ஒருவகை மரம் |
A.
2 4 3 1
B.
3 4 1 2
C.
3 2 4 1
D.
3 1 4 2
Answer:
D.
3 1 4 2
19.
ஈற்றயலடி 'சிந்தடி' பெற்று வரும் பா வகை
A.
நேரிசைச் சிந்தியல் வெண்பா
B.
இன்னிசைச் சிந்தியல் வெண்பா
C.
நிலைமண்டில ஆசிரியப்பா
D.
நேரிசை ஆசிரியப்பா
Answer:
D.
நேரிசை ஆசிரியப்பா
20.
"சோவியத்து அறிஞர் தால்சுதாய் வழிகாட்டுதலால் திருக்குறள் மூலத்தை நேரடியாகப் படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன்" - எனக் கூறியவர்.
A.
பேரறிஞர் அண்ணா
B.
பண்டித ஜவஹர்லால் நேரு
C.
காந்தியடிகள்
D.
ஜி.யு. போப்
Answer:
C.
காந்தியடிகள்
21.
'கவி காளமேகம்' எந்த சமயத்திலிருந்து எந்த சமயத்திற்கு மாறினார்?
A.
சைவத்திலிருந்து சமணத்திற்கு மாறினார்
B.
சைவத்திலிருந்து வைணவத்திற்கு மாறினார்
C.
வைணவத்திலிருந்து சைவத்திற்கு மாறினார்
D.
வைணவத்திலிருந்து பௌத்தத்திற்கு மாறினார்
Answer:
C.
வைணவத்திலிருந்து சைவத்திற்கு மாறினார்
22.
உலகத் தமிழரிடையே தமிழுணர்வை உருவாக்கப் பாடுபட்ட பெருஞ்சித்திரனாரின் இதழ் பெயரைத் தேர்ந்தெடுக்க.
A.
இந்தியா
B.
குயில்
C.
தமிழ்ச்சிட்டு
D.
மணிக்கொடி
Answer:
C.
தமிழ்ச்சிட்டு
23.
மேதையில் சிறந்ததன்று என முதுமொழிக்காஞ்சி குறிப்பிடுவது
A.
கற்றது மறவாமை
B.
ஒழுக்கம் உடைமை
C.
கண்ணஞ்சப் படுதல்
D.
வாய்மை உடைமை
Answer:
A.
கற்றது மறவாமை
24.
இலக்கணக்குறிப்பறிந்து பொருத்துக:
| (a) வழிக்கரை | 1. வினைத்தொகை |
| (b) கரகமலம் | 2. உரிச்சொற்றொடர் |
| (c) பொங்குகடல் | 3. ஆறாம் வேற்றுமைத்தொகை |
| (d) உறுவேனில் | 4. உருவகம் |
A.
3 2 4 1
B.
3 1 2 4
C.
3 4 1 2
D.
2 3 4 1
Answer:
C.
3 4 1 2