GK Tamil
Home TNPSC Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 2 2013 Preliminary Examination

General Studies Questions 26 to 50

1.  உத்ரகாண்ட் மாநில வெள்ளப் பெருக்கில் (2013 ல்) பாதிக்கப்படாத பகுதி எது?
A.   பத்ரிநாத்
B.   கேதர்நாத்
C.   ஹனுமன்கர்
D.   உத்தர்காசி
Answer: C.  ஹனுமன்கர்
2.  14-வது நிதிக்குழுவின் தலைவர் யார்?
A.   மோண்டேக் சிங் அகுலுவாலியா
B.   சி. ரங்கராஜன்
C.   ஒய்.வி.ரெட்டி
D.   விஜய் கெல்க்கர்
Answer: C.  ஒய்.வி.ரெட்டி
3.  2013 ஆம் ஆண்டு பிப்ரவரி 3, நீதிபதி வர்மா குழுவினரால் முன்வைக்கப்பட்ட முக்கிய பரிந்துரைகளில், பின்வருவனவற்றுள் எது இடம் பெறவில்லை?
A.   கல்வி மூலம் பாலின கூர் உணர்ச்சிப்பாடு
B.   மனித இழி தொடர்பு கொள்ளலுக்கான முடிவு
C.   சச்சரவுக்குள்ளான மண்டலங்களில், பாதுகாப்பு விதிகளின் மறு பரிசீலனை
D.   அரிதிலும் அரிதான நேர்வுகளில், மரண தண்டணைக்கான பரிந்துரை
Answer: D.  அரிதிலும் அரிதான நேர்வுகளில், மரண தண்டணைக்கான பரிந்துரை
4.  காலம் I மற்றும் காலம் II வில் கொடுக்கப்பட்டவைகளை பொருத்தி சரியான விடையை காண்க.
காலம் I — காலம் II
(a) ஹோலோப்நியூஸ்டிக் — 1. சுவாச துவாரம் பதிலாக செவுள்கள் காணப்படுதல்
(b) மெட்டாப்நியூஸ்டிக் — 2. முன் மார்பு சுவாசத் துவாரம் மட்டும் திறந்த நிலையில் உள்ளது
(c) புரோப்நியூஸ்டிக் — 3. அனைத்து சுவாசத் துவாரமும் திறந்த நிலையில் உள்ளது
(d) பிராங்கிநியூஸ்டிக் — 4. முன் மார்பு மற்றும் பின் வயிற்று சுவாசத் துவாரம் மட்டும் திறந்த நிலையில் உள்ளது
(e) ஆஃம்பிநியூஸ்டிக் — 5. இறுதி இணை சுவாசத் துவாரம் மட்டுமே திறந்த நிலையில் உள்ளது
A.   2 1 4 3 5
B.   3 5 2 1 4
C.   5 1 2 4 3
D.   4 2 5 3 1
Answer: B.  3 5 2 1 4
5.  வைட்டமின்கள்-D முக்கியமாக எதிலிருந்து பெறப்படுகிறது?
A.   மார்கரைன்
B.   அரிசி
C.   கோதுமை
D.   கரும்பு
Answer: A.  மார்கரைன்
6.  கீழ்க்கண்டவற்றுள் எது சரியாக பொருந்தியுள்ளது?
A.   இரஞ்சித்சிங் — பிளாசிப்போர்
B.   திப்பு சுல்தான் — அமிர்தசரஸ் உடன்படிக்கை
C.   ஹெக்டர் மன்றோ — பக்சார் போர்
D.   வாட்சன் — ஸ்ரீரங்கபட்டினம் உடன்படிக்கை
Answer: C.  ஹெக்டர் மன்றோ — பக்சார் போர்
7.  வரிசை Iயை, வரிசை II உடன் பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீட்டிலிருந்து சரியான விடையைத் தேர்ந்தெடுத்து பொருத்துக:
வரிசை I வரிசை II
(a) ஆத்மிய சபை 1. M.G. ரான்டே
(b) பிரார்தன சபா 2. ராஜாராம் மோகன்ராய்
(c) ஆரிய சமாஜம் 3. தயானந்த சரஸ்வதி
(d) தக்காண கல்விக்குழு 4. ஆத்மாராம் பாண்டுரங்கா
A.   2 4 3 1
B.   1 3 2 4
C.   4 3 2 1
D.   3 2 1 4
Answer: A.  2 4 3 1
8.  பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை அளிக்க பரிந்துரை வழங்கிய ஆணையம் எது?
A.   சர்காரியா ஆணையம்
B.   மண்டல் ஆணையம்
C.   கலேல்கர் ஆணையம்
D.   ஷா ஆணையம்.
Answer: B.  மண்டல் ஆணையம்
9.  இந்திய அரசியலமைப்பின் எந்த அட்டவணையில் பஞ்சாயத்து முறையின் ஆற்றல், அதிகாரம் மற்றும் பொறுப்புகளை குறிப்பிடப்பட்டுள்ளன?
A.   ஏழாவது அட்டவணை
B.   ஒன்பதாவது அட்டவணை
C.   பதினொன்றாவது அட்டவணை
D.   பனிரெண்டாவது அட்டவணை
Answer: C.  பதினொன்றாவது அட்டவணை
10.  எந்த ஐந்தாண்டு திட்டம் வரை வேலை வாய்ப்பு செயல் திட்டம் வளர்ச்சியுடன் தொடர்பு கொண்டது?
A.   ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம்
B.   ஆறாவது ஐந்தாண்டு திட்டம்
C.   ஏழாவது ஐந்தாண்டு திட்டம்
D.   எட்டாவது ஐந்தாண்டு திட்டம்
Answer: A.  ஐந்தாவது ஐந்தாண்டு திட்டம்
11.  குழந்தைகளுக்கு எந்த நோய் புரதங்களின் குறைபாட்டால் ஏற்படுகிறது?
A.   மராஸ்மஸ்
B.   பெலாக்ரா
C.   பெரி-பெரி
D.   ரீக்கட்ஸ்
Answer: A.  மராஸ்மஸ்
12.  நர்மதா பச்சாவ் அந்தோலன் என்ற அமைப்பின் மூலம் அறியப்படும் இந்திய சமூக ஆர்வலர்
A.   மேனகா காந்தி
B.   சாந்தா சின்ஹா
C.   கிரன் பேடி
D.   மேதா பட்கர்
Answer: D.  மேதா பட்கர்
13.  ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை வாங்கிய முதல் இந்திய விளையாட்டு வீரர்
A.   சச்சின் தென்டுல்கர்
B.   விஸ்வநாதன் ஆனந்த்
C.   கீத் சேத்தி
D.   தன்ராஜ் பிள்ளை
Answer: B.  விஸ்வநாதன் ஆனந்த்
14.  பின்வரும் சமன்பாட்டில் நைட்ரஜனின் ஆக்ஸிஜனேற்ற நிலைகள்
4[NH₃OH]⁺ → N₂O + 2NH₄⁺ + 2H⁺ + 3H₂O
(X) (Y) (Z)
X Y Z
A.   +1 0 -3
B.   -1 1 -2
C.   -1 -2 -3
D.   -1 1 -3
Answer: D.  -1 1 -3
15.  அமிலம் கலந்த பெரஸ் அமோனியம் சல்பேட் டைகுரோமேட் கரைசலில் ஆக்ஸிஜன் ஏற்றம் அடையும் பொழுது
A.   ஆக்ஸிஜன் ஏற்ற எண் குரோமியத்திற்கு +6 லிருந்து +3 ஆகவும், இரும்பிற்கு +3 லிருந்து +2 ஆகவும் மாறுகிறது
B.   ஆக்ஸிஜன் ஏற்ற எண் குரோமியத்திற்கு +3 லிருந்து +6 ஆகவும், இரும்பிற்கு +3 லிருந்து +2 ஆகவும் மாறுகிறது
C.   ஆக்ஸிஜன் ஏற்ற எண் குரோமியத்திற்கு +6 லிருந்து +3 ஆகவும், இரும்பிற்கு +2 லிருந்து +3 ஆகவும் மாறுகிறது
D.   ஆக்ஸிஜன் ஏற்ற எண் குரோமியத்திற்கு +2 லிருந்து +3 ஆகவும், இரும்பிற்கு +6 லிருந்து +3 ஆகவும் மாறுகிறது
Answer: C.  ஆக்ஸிஜன் ஏற்ற எண் குரோமியத்திற்கு +6 லிருந்து +3 ஆகவும், இரும்பிற்கு +2 லிருந்து +3 ஆகவும் மாறுகிறது
16.  கீழ்க்காணும் வாக்கியங்களை கவனி
கூற்று (A) : செம்பு முக்கியமாக மின் தொழில்நுட்ப ஆலைகளில் பயன்படுத்தப்படுகிறது.
காரணம் (R) : செம்பு வெப்பத்தினை அதிகமாக கடத்தும் குணம் கொண்டது.
A.   (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
B.   (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல.
C.   (A) சரி ஆனால் (R) தவறு.
D.   (A) தவறு ஆனால் (R) சரி.
Answer: A.  (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கம்.
17.  பின்வரும் தாவர வகைகளை அவை வளரும் இடங்களின் உயரத்தைக் கொண்டு இறங்கு வரிசையில் அடுக்குக.
A.   ஜுனைப்பர்கள் — தியோடர் — மேபில் — தேக்கு
B.   தியோடர் — ஜுனைப்பர்கள் — மேபில் — தேக்கு
C.   ஜுனைப்பர்கள் — தேக்கு — தியோடர் — மேபில்
D.   தியோடர் — ஜுனைப்பர்கள் — தேக்கு — மேபில்
Answer: A.  ஜுனைப்பர்கள் — தியோடர் — மேபில் — தேக்கு
18.  கூற்று (A) : அடிப்படை கடமைகளுக்கு சட்டப்பூர்வமான அங்கீகாரம் கிடையாது
காரணம் (R) : நீதிமன்றங்கள் அடிப்படை கடமைகள் செயல்படுத்தப்படுமாறு நிர்பந்திக்கவியலாது
A.   (A) மற்றும் (R) FRANKLIN இரண்டுமே சரி, மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம்
B.   (A) மற்றும் (R) இரண்டும் சரி, மேலும் (R) என்பது (A) விற்கு சரியான விளக்கமல்ல
C.   (A) சரி, ஆனால் (R) தவறு
D.   (A) தவறு ஆனால் (R) சரி
Answer: A.  (A) மற்றும் (R) FRANKLIN இரண்டுமே சரி, மேலும் (R) என்பது (A)விற்கு சரியான விளக்கம்
19.  கீழ்க்கண்ட வாக்கியங்களை கவனிக்கவும்:
(a) 73வது அரசியலமைப்பு சட்டத் திருத்தம் இந்திய அரசியல் சாசனத்தின் பகுதி IX-ல் சில அம்சங்களை சேர்த்தது.
(b) இதன் மூலம் மாநில அரசுக்கு கிராம நிலையில் பஞ்சாயத்து நிறுவனங்களையும், மாவட்டங்களில் உயர்நிலை பஞ்சாயத்து அமைக்கவும் அதிகாரம் வழங்கப்பட்டது.
கீழ்க்கொடுக்கப்பட்டதிலிருந்து சரியான விடையை தெரிவு செய்யவும்.
A.   (a) மற்றும் (b) இரண்டுமே சரி
B.   (a) சரி ஆனால் (b) தவறு
C.   (a) மட்டும் சரியானது
D.   (b) மட்டும் சரியானது
Answer: A.  (a) மற்றும் (b) இரண்டுமே சரி
20.  முதல் தனிநபர் சத்தியாக்கிரகி என்ற பெருமைக்குரியவர்
A.   காந்திஜி
B.   வினோபாபாவே
C.   ராஜாஜி
D.   முகமது அலி ஜின்னா
Answer: B.  வினோபாபாவே
21.  கீழ்க்கண்டவற்றுள் எந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாடு ஐரீஷ் உறுப்பினர், ஆல்பிரெட் வெப் தலைமையில் நடைபெற்றது?
A.   முதலாம் மாநாடு 1885
B.   நான்காம் மாநாடு 1888
C.   ஏழாவது மாநாடு 1891
D.   பத்தாம் மாநாடு 1894
Answer: D.  பத்தாம் மாநாடு 1894
22.  “வந்தே மாதரம்” என்ற இதழின் முதல் பதிப்பாசிரியர் ஆவார்.
A.   பக்கிம் சந்திர சட்டர்ஜி
B.   ஸ்ரீ அரவிந்த் கோஷ்
C.   ரவீந்திரநாத் தாகூர்
D.   டாக்டர் அன்னிபெசன்ட்
Answer: B.  ஸ்ரீ அரவிந்த் கோஷ்
23.  சுகதாகுமாரி என்பவர் 2012 ஆம் ஆண்டிற்கான சரஸ்வதி சம்மான் விருது பெற மார்ச் 2013 திங்கள் தேர்வு செய்யப்பட்டார். இவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்?
A.   தமிழ்நாடு
B.   ஆந்திரப்பிரதேசம்
C.   கேரளா
D.   கர்நாடகம்
Answer: C.  கேரளா
24.  கீழ்க்கண்ட அனைத்து இணைகளும் 2013 உச்சிமாநாடு சார்ந்தவை. இதில் எது தவறான இணை?
A.   ஆசியான் — நோம் பென்
B.   ஜி 20 — பீட்டர்ஸ்பெர்க்
C.   ஜி 8 — வடக்கு அயர்லாந்து
D.   கிழக்கு ஆசிய உச்சிமாநாடு — பிரேசில்
Answer: D.  கிழக்கு ஆசிய உச்சிமாநாடு — பிரேசில்
25.  நேரம் 't' ஐப் பொருத்து, கிளிசரீன் கொண்ட நெடிய ஜாடி ஒன்றில் போடப்பட்ட எஃகு பந்து ஒன்றின் திசைவேக 'v' வேறுபாட்டினைக் காட்டும் வரைபடம்
A.   எஃகு பந்தின் திசைவேக-நேர வரைபடம் (A)
B.   எஃகு பந்தின் திசைவேக-நேர வரைபடம் (B)
C.   எஃகு பந்தின் திசைவேக-நேர வரைபடம் (C)
D.   எஃகு பந்தின் திசைவேக-நேர வரைபடம் (D)
Answer: B.  எஃகு பந்தின் திசைவேக-நேர வரைபடம் (B)
;