TNPSC Group 2 2013 Preliminary Examination
General Tamil Questions 26 to 50
26.
'மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில் கிருமி செருவினில் பிழைத்தும்' என்ற உயிரியியல் தொழில்நுட்பத்தை அறிவுறுத்தும் நூல்
Answer:
B.
திருவாசகம்
27.
"ஆர்பரவை அணிதிகழும் மணிமுறுவல் அரும்பரவை" - இப்பாடலடியில் அமைந்துள்ளவாறு பின்வருவனவற்றுள் எது தவறானது?
Answer:
B.
சீர் முரண் அமைந்துள்ளது
28.
தனிவாக்கியம் குறித்து கீழ்க்கண்டவற்றுள் சரியானது எது?
Answer:
B.
ஓர் எழுவாய் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட எழுவாய்கள் ஒரு பயனிலையைக் கொண்டு முடியும்
29.
"திருவள்ளுவர் தோன்றிராவிட்டால் தமிழன் என்னும் ஓர் இனம் இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது. திருக் குறள் என்னும் ஒரு நூல் தோன்றிராவிட்டால், தமிழ்மொழி என்னும் ஒரு மொழி இருப்பதாக உலகத்தார்க்குத் தெரிந்திருக்காது" எனக் கூறியவர்
Answer:
B.
கி.ஆ.பெ.வி.
30.
“தெண்டன் இட்டது வள்ளுகிர் திண்டிறல் புலியே” - இத்தொடரில் 'திண்டிறல்' என்னும் சொல்லிற்கு பொருள்
Answer:
D.
உறுதியான
31.
துரைமாணிக்கம் என்ற இயற்பெயரைக் கொண்டவர்
Answer:
D.
பெருஞ்சித்திரனார்
32.
'ஏற்பாடு' என்பதன் பொருள்
Answer:
D.
சூரியன் மறையும் நேரம்
33.
'க' - என்ற ஓரெழுத்து ஒரு மொழிக்கு தவறான பொருள் எது?
Answer:
D.
காத்தல்
34.
‘சலவரைச் சாரா விடுதல் இனிதே’
'சலவர்'- என்றச் சொல்லின் ஆங்கிலச்சொல்
'சலவர்'- என்றச் சொல்லின் ஆங்கிலச்சொல்
Answer:
D.
Deceit full person
35.
அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.
Answer:
A.
சீராட்டு தாலாட்டு நீராட்டு பாராட்டு
36.
செயப்பபாட்டு வினைச்சொற்றொடரைக் கண்டறிக.
Answer:
A.
நாற்காலி தச்சனால் செய்யப்பட்டது
37.
கனி முன் நேர் வருவதும் கனி முன் நிரை வருவதும்
Answer:
B.
வஞ்சித்தளை
38.
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பி தேரினும் அஃதே துணை - கீழ்க்காணும் சொற்களுள் எதிர்ச்சொல்லைக் கண்டறிக:
Answer:
A.
பரிந்து X வெறுத்து
39.
'மூதூர்' எத்திணைக்குரிய ஊர்?
Answer:
A.
மருதம்
40.
பின்வருவனவற்றுள் 'ஈறு போதல்', 'இனமிகல்' என்னும் விதிகளின்படி புணராதது
Answer:
B.
செங்கடல்
41.
பொருந்தாத இணையைக் கண்டறிக:
Answer:
D.
பெருஞ்சித்திரனார் – தமிழ்ச்சோலை
42.
பின்வருவனவற்றுள் பொருந்தும் இணையைத் தேர்ந்தெடு:
செரு — செறு
செரு — செறு
Answer:
A.
சண்டை — வயல்
43.
'அழுது அடியடைந்த அன்பர்' - என்னும் தொடர் யாரைக் குறிக்கிறது?
Answer:
D.
மாணிக்கவாசகர்
44.
'என்றுமுள தென்தமிழ்' - என்னும் தொடரை இயம்பியவர் யார்?
Answer:
A.
கம்பர்
45.
பதிதொறு புயல்பொழி தருமணி பணைதரு
பருமணி பகராநெற் -இத்தொடரில் 'புயல்' - என்னும் சொல்லிற்கு பொருள்
பருமணி பகராநெற் -இத்தொடரில் 'புயல்' - என்னும் சொல்லிற்கு பொருள்
Answer:
C.
மேகம்
46.
கீழ்க்காணும் விடைகளில் எது சரியானது?
Answer:
D.
மா - விலங்கு
47.
'ஷெல்லிதாசன்' என்று தன்னைக் கூறிக் கொண்டவர் யார்?
Answer:
A.
சுப்பிரமணிய பாரதியார்
48.
குண்டலகேசிக்கு எதிராக எழுந்த வாதநூல் எது?
Answer:
D.
நீலகேசி
49.
விடைத்தேர்க: இலக்கியச் செய்திகளோடு அறிவியல் துறைப்பொருள்களையும் முதன் முதலாகச் சேர்த்து விளக்கம் தந்த நூல் எது?
Answer:
B.
அபிதான சிந்தாமணி
50.
"திலகர் விதைத்த விதை பாரதியாக முளைத்தது" - என்று கூறியவர் யார்?
Answer:
C.
இராஜாஜி